கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! மாறும் தேர்தல்களம்!

ரஜனிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிக்க ஜனவரியில் நாள் குறித்து விட்டதாக நேற்றைக்கு அறிவித்ததில் தமிழக ஊடகங்கள் கலவரம் அடைந்திருக்கிற அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகள் எதுவும் கிளம்பக் காணோம்! 


ரஜனிகாந்த் இந்த 12 நிமிட வீடியோவில் என்னதான் சொன்னார் என்பதை விட இந்தப் பேட்டியைக் கவரேஜ் செய்ய வந்திருந்த ஊடகக்காரர்கள் எத்தனை கலவரம் அடைந்திருந்தார்கள் என்பதை பின்னால் கேட்கும் கூச்சல் குழப்பங்கள் காட்டியது மிக சுவாரசியமாக இருந்தது என்பது என்னுடைய கருத்து. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்பதெல்லாம் சுத்தமான ரஜனிகாந்த் அபத்தம்!


பன்னீர்செல்வத்துக்கு இது வேண்டாத வேலை! இதனால் எப்படி கார்த்தி சிதம்பரம் தப்புத் தப்பாக அரசியல் கணிப்பு செய்கிறார் பாருங்கள்! 

இது எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் மகன் கீச்சியது. அறிவுக்கொழுந்துகளுடைய கீச்சுக்கெல்லாம் எதிர் வினை அவசியமில்லை என்பதால் விட்டுவிடலாம். ஆனால் இன்னொரு எல்லாம்தெரிந்த ஏகாம்பரம் சுமந்த் சி ராமன் எதிர்க்கீச்சு போடாமல் இருப்பாரா?

 


  

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜனிகாந்த் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருப்பவர். அதிகமாக முட்டுக் கொடுப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை! ஆனால் எப்போதுமே வாக்களிக்க வராத 30% to  40%  வாக்காளர்களை வாக்களிக்க வைத்தால் ஒழிய, ரஜனி ஒரு அரசியல் மாற்றத்துக்கான சக்தியாக  உருவாக வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய கருத்து.

#மாற்றுஅரசியல் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப் பக்கங்களில் தேடினால் புரிந்து கொள்ளவும் யோசிக்க உதவியாகவும் பல பதிவுகள் கிடைக்கும். மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜனியால் ஒருபோதும் முடியாது.     

ரஜனி கட்சியின் மேஸ்திரியாக (சூபர்வைசர்)  நியமனம் செய்யப் பட்டிருக்கும் தமிழருவி மணியனுக்கு என்ன மனத்தாங்கலோ தெரியவில்லை! முதல்வர் வேட்பாளராக  மாட்டேன் என்பதில் ரஜனி உறுதியாக இருக்கிறார். ஆனால் மக்கள் அவர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் ரஜனியிடமிருந்து  என்னைப்பிரிக்க சதி நடக்கிறது என்றும் சொல்லியிருப்பது உச்சபட்ச தமாஷ்!  காந்திய மக்கள் இயக்கம் நடத்தியவர் அல்லவா!   



ஹைதராபாத் பெருநகரக் குழுமத்துக்கான தேர்தலை தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி முன்கூட்டியே நடத்தியிருப்பதில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டே இருப்பதில் முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை. இரவு ஏழுமணிக்கு மேலும் ஆகலாம் என்று சொன்னதால், அதை முதலில் அடுத்த வீடு பகுதிக்காக எழுதலாம் என்று நிநினைத்திருந்தபடி முடியவில்லை. மேலே படத்தில் காணும் எண்ணிக்கை மாறலாம் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.


குஷ்புவை ஒரு சீரியசான அரசியல்வாதியாக நான் எப்போதும் நினைத்ததில்லை. அதேநேரம் அவர் ஒரு sharp wit என்பதில் சந்தேகமிருந்ததுமில்லை! அவரிடம் வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட நபரை வலைப்பதிவுகளில் நண்பர்கள் சந்தித்திருக்கலாம்! நினைவிருக்கிறதா? 

மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. நினைவு இருக்கிறது. அவருக்குப் பின்னால் பல விசயங்கள் உள்ளது. எழுத விருப்பம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!

      எனக்கும் சில நினைவுகள் இருக்கின்றன. பழைய குப்பையைக் கிளற விரும்பாததால் சும்மா ஒரு கோடிகாட்டி விட்டு நிறுத்திக்கொண்டேன்.

      Delete
  2. 'வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்'னு வசனம் மட்டும் பேசிய ரஜினிக்கு வரவேண்டிய நேரம் எது என்று குழப்பம் தீரவில்லை போல!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பது அடுத்தவர் எழுதிக்கொடுத்த பன்ச் வசனம். அரசியலிலும் அப்படித்தான் இருக்கப் போகிறாரா? ரஜனி முதல்வர் வேட்பாளர் இல்லை. மெத்தச்சரி! ஆனால் அவரது மனைவி, மகள்கள், மருமகன்கள் அப்படியிருக்க விடுவார்களா? குடும்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அரசியல் செய்ய ரஜனியால் முடியுமா? விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்துக் கொண்டு ஒரு திடமில்லாத
      amorphous/loosely knit அமைப்பை அரசியல் கட்சி யாக நடத்துகிற தைரியம் எம்ஜியார் ஒருவருக்கு மட்டுமே இருந்தது.

      அதுபோக அரசியல் தொடர்பாக நிறையக் கேள்விகளுக்கும் ரஜனி தெளிவான பதிலைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!