மீண்டும் திருமாவளவன் சர்ச்சை! ஏன் #விசிக #பாமக #இடதுசாரிகள் போன்ற உதிரிகளை நிராகரிக்கவேண்டும்?

விசிகவின்  தலைவர் திருமாவளவன் மீண்டும் மீண்டும் ஹிந்து மதக் கோட்பாடுகளை மனம்போனபோக்கில் திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அடிக்கடி அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்துவார். ஆனால் இஸ்லாம், கிறித்தவம் பற்றி அம்பேத்கர் என்னமாதிரி அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்பதைப் பேசவே மாட்டார். ஈவெரா படத்தைப் பயன்படுத்துவார். ஆனால் ஈவெராவின் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகிற    #வெங்காயநாத்திகம் கூட அவரது பேச்சில் இருக்காது. 




இந்த 43 நிமிட வீடியோவில், திருமா எத்தனை விஷயங்களை தெரிந்தே திரித்துப் பேசுகிறார் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கிறிஸ்தவப் பெருவிழா நடத்துகிறார், கிறித்தவத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்பதா விஷயம்? இல்லை! ஹிந்து மதத்தின் மீது விஷத்தைக் கக்குகிறார். நிறையத் திரித்துப் பேசுகிறார்.

இவரை மாதிரி இஸ்லாமும் கிறித்தவமும்  பேசுகிற சமத்துவமும் சகோதரத்துவமும் நடைமுறையில் காணோமே, பதில் சொல்வாரா? படைக்கப்பட்ட அனைத்தும் சமமாகவா இருக்கிறது? கிருஷ்ணன் பிறந்த இந்த பாரதத்தை விடுங்கள், இவர் கொண்டாடுகிற இஸ்லாமிய நாடுகளில் எதிலாவது உயர்வு தாழ்ச்சி இல்லாத சமத்துவ சமூகம் இருக்கிறதா?

இங்கே கிறித்தவம் மனிதநேயம் உள்ளது, ஜெப ஊழியங்கள் மதம் மாற்றுவதற்காக அல்ல என்கிறாரே, ஜெப ஊழியம் என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வருமானம் ஈட்டுகிற தொழில்தான் என்பது தெரியாதா? DGS தினகரன் குடும்பம் ஜெபகோபுரம். இயேசு அழைக்கிறார் என்று கூவிக்கூவியே பலநூறு கோடிகள் ஆண்டுவருமானம் பெறுகிற கதை தெரியுமா தெரியாதா?காருண்யம் பெயரளவுக்குத்தான்! எல்லாம் காசுபார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிற வெற்று வார்த்தைகள் தான் என்பது திருமா என்கிற தலித்தீயம் பேசுகிற வியாபாரிக்குத் தெரியாதா?

அவர் பேசுவதில் உண்மை இருந்தால் இஸ்லாமும் கிறித்தவமும் நடைமுறையில் சமத்துவம், சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றன என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவுபடுத்தி விட்டுப் போக வேண்டியது தானே! அதைச் செய்யாமல் கிருஷ்ணன் தான் மனிதர்களில் சாதிப்பாகுபாடுகளை ஏற்படுத்தினார் என்று புரளி பேசுவானேன்? சைவர்கள் கிருஷ்ணனை, ஏற்றுக் கொண்டதில்லை என்கிறாரே, அதற்கென்ன ஆதாரம் காட்ட முடிந்ததாம்?

மதன் டயரியில் நவம்பரிலேயே திருமாவைக் குருமா வைத்து விட்டார் வீடியோ 22 நிமிடம் தான்!  

ஆனால் திருமா மாதிரியான உதிரிக் கட்சிகளின் உண்மையான அஜெண்டாவே வேறு! நரேந்திர மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, மோடி மீதான வெறுப்பை விதைப்பதற்காக, சிறுபான்மை இனத்தவர் வாக்குகளைப் பெறுவதற்காக, ஹிந்து மதத்தைப் பழித்துப் பேசவேண்டும்! தலித் மக்களின் ஏகோபித்த தலைவராகத் தன்னை project செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்! தலித் மக்களில் மிகக்குறைந்த சதவீதம் மட்டுமே இவரை ஆதரிக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்! உங்களுக்குத் தெரியாதா என்ன?!

பேச்சு வியாபாரிகளாக மட்டுமே அரசியல்களத்தில் உலாவரும் உதிரிக்கட்சிகளில், விசிக, மதிமுக, பாமக, இடதுசாரிகள் இன்னும் கமல் சீமான் ரஜனி விஜய் என்று கிளம்பியிருக்கும் புற்றீசல்களை தேர்தல்களில் முழுதாக நிராகரிப்பதிலிருந்தே நம்முடைய ஜனநாயகக் கடமை தொடங்குகிறது. 

இதில் காங்கிரசை விட்டுவிட்டேனே என்று அதிசயப்படுகிறீர்களா? காங்கிரசும் கூட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், இங்கே தமிழகத்திலும்  உதிரிதான்! ஆனால் என்ன, மேலே சொன்ன உதிரிகளை விட இன்றும் கூட 5% முதல் 6% வரை வாக்குகள் பெற முடிகிற கட்சி ( உண்மை நிலவரம் தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே தெரியும்! ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் அந்தக் கட்சியில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்!

ஜனநாயகம் என்பது தகுதியில்லாதவர்களைக் கழித்துக் கட்டுவதில் ஆரம்பித்து, மிஞ்சுகிறவர்களில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது!

ஜனநாயகக் கடமையைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

மீண்டும் சந்திப்போம்.   

2 comments:

  1. இந்தச் சீர்கேடுகள் எப்போது ஒழியுமோ.

    ReplyDelete
    Replies
    1. சீர்கேடுகளைக் க்ளைவது நம்முடைய கைகளில் தான் இருக்கிறது அம்மா! விசிக போன்ற உதிரிகளை அடியோடு நிராகரிப்பது ஒரு ஆரம்பம்தான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!