சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்காலஅரசியல் #முடிவேஇல்லாதகாமெடி

2021 தேர்தல் களத்தில் தமிழ்நாட்டின் தனித்துவம் இப்படி ஆக இருக்கிறது::: நாம் தமிழர் கட்சிக்குள் RSS புகுந்து விட்டதாக அமீர் கூறியதை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியில் ஹிந்து முன்னனி புகுந்து விட்டதாக தினகரனும் மக்கள் நீதி மய்யத்தில் பஜ்ரங் தள் புகுந்து விட்டதாக திருமா வளவனும், வைகோவுக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத் புகுந்து விட்டதாக சீமானும் கூறினார்கள்.தொடர்ந்து அதிமுகவுக்குள் சங் பரிவார் அமைப்புகள் புகுந்து விட்டதாக ஸ்டாலினும், திமுகவுக்குள் பாஜக புகுந்து விட்டதாக சவுக்கு சங்கரும் கூறினார்கள்.ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் என்ன புகுந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று அறிவாலய வாசலில் கையில் பட்டியலுடன் நின்று கொண்டிருந்த KS அழகிரி கண்ணீர் மல்க கூறினார்! நிஜந்தானோ என மயங்க வைக்கிற ஒரு பகடியுடன் சண்டேன்னா மூணு பக்கங்களில் தொடரலாமா? நன்றி சிவா! via FB


சீமானின் நாம் தமிழர் கட்சி ஒன்றைத்தவிர, தனிக்கட்சி ஆரம்பித்து போணியாகாத சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தலைமுறை சேனலின் ரவி பச்சமுத்து நடத்தும் IJK , அப்புறம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், கலாம் பெயரை வைத்துக் கட்சி ஆரம்பித்து நடத்த முடியாத பொன்ராஜ் என்று ஒரு சிறுகும்பல் கமல் காசரோடு கைகோர்த்துக் கொண்டு, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்துவிட்டார்கள் என்பது நிகழ் நேரக்காமெடி! இவர்களோடு இன்னும் சில உதிரிகள் வந்து சேரலாம் என்கிறார்கள்! இந்த லட்சணத்தில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என கமல் காசர் ட்விட்டரில் கொதித்து எழுந்தாராம்!  காலக்கொடுமை! வேறு சொல்வது?


பிரதமர் நரேந்திர மோடி கொல்கொத்தா பிரிகேட் மைதானத்தில் இன்றைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருக்கிறார். சினிமா நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் MPயாக இருந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி பிஜேபியில் சேர்ந்து விட்டார்.நரேந்திர மோடி இங்கே பேசிக் கொண்டிருக்குவிலை உயர்வுக்கு ம் அதேவேளையில் சிலிகுரியில் மம்தா பானெர்ஜி, சமையல் கேஸ் விலாய் உயர்வுக்கு எதிராக பாதயாத்திரை ஸ்டன்ட் நடத்திக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், மம்தா பானெர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும்.இடையிலான தேர்தல் யுத்தம் களைகட்டுகிறது என்று யாரோ சொன்னார்கள்! இங்கே தமிழகம் மாதிரி அழுது வடியவில்லை!

'தங்கக் கடத்தலில் கேரள முதலமைச்சர், அவருடைய மூன்று கேபினட் சகாவுகள், சட்டசபை சபாநாயகர் அன்றைய தனிச் செயலாளர் ஆகியவர்கள் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள்."சொப்னா சுரேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலம். கேரள அரசியலில் நிறைய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலே வீடியோ 21 நிமிடம்.
கேரளத்தில் கூட தேர்தல்களம் சூடேறிவிட்டது.

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

  1. பாவம் அழகிரி. வயல் பக்கமே காலெடுத்து வைக்காமல், அறுவடை சமயத்தில் என் வயலில் நெற்பயிர்களை யாரும் நடவில்லையே என்று அழுதுவடிகிறார்.

    கமலஹாசனுக்கு வந்த போதாத நேரம். சரத், பச்சமுத்து இவர்களையெல்லாம் கூட்டு சேர்த்துக்கொண்டோம்னு சொல்ல வேண்டியிருக்கு. இதுக்கு அந்த முந்நூறு வாக்குகளும் வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்

    பினரயி விஜயனின் ஆரம்ப கால வாழ்க்கை என்ன என்று தேடிப் பாருங்கள். விடை கிடைத்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. அழகிரி மாதிரி ஷோக்குப்பேர்வஸ்ழிகளை நம்பி இங்கே புதுச்சேரி, தமிழ்நாட்டுக்கு வந்து டான்ஸ் ஆடினாரே ராகுல் காண்டி, அவர் நிலைமை எத்தனை பரிதாபகரமானது என்பதைப்பற்றி கொஞ்சமாவது கவலைப்பட்டீர்களா நெல்லைத்தமிழன் சார்?! :-))))

      கமல் காசனுக்குப் போதாத காலமா அல்லது அவரையும் ஒருபொருட்டாக மதித்து ஒன்றுக்கும் உதவாத மூன்றாவது அணி என்று சொல்லிக்கொள்கிறவர்ர்களுடைய போதாத காலமா என்று யாருக்குத்தான் உச்சுக்கொட்டுவது?

      பினராயி ஆரம்பகால வாழ்க்கை!!! இவர்களைப்பற்றி முப்பது வருடங்களுக்கும் மேலாகவே தெரிந்து வைத்திருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      Delete
  2. கமலின் கட்சி கூட்டணிகளால் வலுவடைந்துகொண்டே வருவது கவனிக்கத்தக்கது.  திமுக அதிமுக கவனித்துக் கொண்டேதான் இருக்கும் என்று நம்பலாம்!

    ReplyDelete
    Replies
    1. புதிய கூட்டாளிகளால் தொகுதிக்கு 300 வாக்குகள் கூடக் கிடைக்காது என்று நெல்லைத்தமிழன் அபிப்பிராயப்படுகிறார். எனக்கு அதுவே அதிகம் என்று தோன்றுகிறது. சரத்குமாருக்கு கைநழுவிப்போன நாடார் சமுதாய வாக்குகள் கொஞ்சமாவது கிடைத்தால், அந்த 300, சில தொகுதிகளில் மட்டும் கூடலாம் ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!