வரும் ஆனா வராது என்கிற சினிமா காமெடி மாதிரி இரு நாட்களாக இழுத்துக் கொண்டே போன ஊரடங்கு நீட்டிப்பா இல்லையா என்கிற விஷயம் இன்றைக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம்!
ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஏன் இவ்வளவு இழுபறி / தயக்கம் என்பது புரியவே இல்லை. அனுபவமுள்ள அதிகாரிகள் சரியான ஆலோசனை தருவதற்குத் தயங்குகிறார்களா? அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் தயங்குகிறார்களா?
கோவிட் தடுப்பூசி போட சென்னை அரசு மருத்துவ மனைகளில் நீண்ட வரிசை. 200+ நபர்கள் வரிசையில் நிற்கிறார்கள், காலை 6 மணிக்கே வந்து வரிசையில் இடம் பிடிக்கின்றனர். இவர்கள் சாப்பிடாமலேயே ஊசி போட்டுக் கொள்கிறார்களா என்று கவலை.ஆனால் அரசு தெருவோர ஊசி முகாம்கள் பல கடைசி நேரத்தில் கான்சல் ஆகின்றன. இங்கே ஃ பேஸ்புக்கில் ஊசி போட மக்கள் வருவதே இல்லை என்று பதிவுகள். இந்த நிலையில் இன்று சில தனியார் மருத்துவமனை விளம்பரங்கள். ரூ 1250 கட்டினால் கோவாக்சின் ஊசி செலுத்திக் கொள்ளலாம் என்று!.அரசிடம் குறைந்த ஸ்டாக், தனியாரிடம் போதுமான ஸ்டாக் எப்படி என்ற குழப்பம் தான் மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குகிறது என்று மேலே பார்த்த விளம்பரத்தோடு முகநூலில் விசனப் படுகிறார் ராம்ஜி யாஹூ மகாதேவன் இந்த அழகில் செங்கல்பட்டில் உள்ள தடடுப்பூசி தயாரிப்பு மையத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் அல்லது லீசுக்காவது கொடுங்கள், நாங்களே தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றால் எத்தால் சிரிப்பது என்ற சந்தேகமும் சேர்ந்து வருமா வராதா?
அதிமுக என்றொரு அரசியல் கட்சிஇருக்கிறதா? செயல் படுகிறதா? ஐயம் தீர்த்த 38 நிமிட காணொளி. கடந்த 10 ஆண்டுகளில் அப்படிப் பொறுப்பான எதிர்க்கட்சி என இருந்ததில்லை என்கிற நிலையில் எடப்பாடி திரு K பழனிச்சாமி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என்கிற நம்பிக்கையும் துளிர்க்கிறது.
இன்றைக்குப் பார்த்த செய்திகளில் கொஞ்சம் நல்ல செய்தியும் செம தமாஷாகிப் போனதுமான விஷயம் வைரமுத்தானுக்கு ONV கல்சுரல் அகாடெமி வழங்க உத்தேசித்திருந்த விருதை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருப்பதுதான்! கேரளத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இப்படி ஒரு முடிவு. இந்த கல்சுரல் சொசைட்டியின் சேர்மன் அடூர் கோபால கிருஷ்ணன் முன்னதாக, விருது வழங்குவது எழுத்து வன்மைக்காகத்தானே தவிர நடத்தைக்காக அல்ல என்று முட்டுக் கொடுத்தும் கூட, அது செல்லுபடியாகவில்லை ரன்பது சுவாரசியத்தைக் கூட்டுகிற விஷயம்.
#MeToo பிரச்சினையில், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளான வைரமுத்துவின் போக்கில் எந்தவொரு நல்ல மாற்றமும் இல்லை என்பதற்குச் சான்றாக, அவர் எழுதிய மேற்கண்ட பாடலே இருப்பதை, கட்டம்கட்டிக் காட்டப் பட்டிருக்கிற வரிகளே போதும். The Tamil poet-lyricist Vairamuthu, who has been accused of sexual harassment by many women had been chosen for the fifth ONV Literary Prize. The award, which is given to poets from Malayalam and other Indian languages by the ONV Cultural Academy here, comprises a cash prize of Rs 3,00,000 and citation. The award this time was decided by a jury consisting of poet Prabha Varma, Malayalam University Vice-Chancellor Anil Vallathol and writer Alankode Leelakrishnan. The academy is headed by filmmaker Adoor Gopalakrishnan. The patrons include Chief Minister Pinarayi Vijayan, MT Vasudevan Nair and KJ Yesudas, and many other distinguished personalities like MA Baby, Prabha Varma, RS Babu, MK Muneer and Benoy Viswam are part of the Academy என்கிற செய்தி விருது வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு அரசியல் இருந்ததாலேயே அடூர் கோபாலகிருஷ்ணன் முட்டுக் கொடுத்ததும், மலையாளத்திரையுலகின் பெண் நட்சத்திரங்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பவே ஜகாவாங்க வேண்டிவந்ததும் நடந்திருக்கிறது. ஆனால் இங்கே பாடகி சின்மயி தொடர்ந்து புகார் கொடுத்தும் கூட தமிழ்த்திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது முதல் மேலும் சில இழப்புக்களை பாடகி சின்மயி இன்றும் சந்தித்து வருவது தமிழ்தேசத்தின் அசமந்தத்தனம்,அவமானம் என்பதான கோபம் மல்லுதேசத்தைப் பார்க்கையில் எழுகிறதே, என்ன செய்யப்போகிறோம்?