Saturday, August 06, 2011

தி மு கழகத்தின் முன்னோடிகள்! ஒரு சோறு பதம்!


'' ஓ... மை காட்! கலைஞர் குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

பிரதமரை மிரளவைத்த ஃபெர்னாண்டஸ் பத்திரிகை!


ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!

'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

நன்றி : விகடன் செய்திகள்

தலைவர் எவ்வழி, முன்னோடிகளும் அவ்வழி!

பாத்ரூமில் பதுங்கிய ரங்கநாதன்!

அதிர்ச்சி தரும் 154 புகார்கள்..

 
டன்பிறப்புகளின் கைதுகளுக்காக உச்சுக் கொட்டும் தி.மு.க-வினர்கூட, சென்னையில் வில்லிவாக்கம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது செய்யப்பட்ட விவகாரத் துக்கு 'சபாஷ்!’ போடுகிறார்கள். அந்த அளவுக்கு டார்ச்சர் பார்ட்டியாமே ரங்கநாதன்! 


வடி அருகே நொளம்பூரில் 120 பேரின் நிலம் மற்றும் வீடுகளை அபகரித்தது தொடர்பாக, ரங்க நாதனையும் அவரது உதவியாளர் கவுரி சங்கரையும் கைது செய்து இருக்கிறது போலீஸ். வெளியே தடாலடி ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரங்கநாதன், போலீஸ் வருவதை அறிந்ததும் படுக்கை அறைக்குள் இருந்த பாத்ரூமில் பம்மிப் பதுங்கித் தப்பிக்க முயன்றதைச் சொல்லிச் சிரிக்கிறார்கள் ஏரியா ஆட்கள்.


ங்கநாதன் மீது புகார்கள் ஒன்று, இரண்டு அல்ல... ஆவடி அருகில் மோரை கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் சுமார் 300 பேர் வீடு கட்டிக் குடியிருந்தார்கள். இந்த சொத்து, 'பண்டைய மன்னன் ராஜேந்திர ராஜா என்பவருக்குச் சொந்தமானது, அந்த சொத்துக்கான மூலப் பத்திரம் என்னிடம் உள்ளது!’ என்று ஏமாற்றினார் ரங்கநாதன். காலி செய்ய மறுத்தவர்களின் வீடுகளை ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர், பொக்லைன் கொண்டுவந்து இடித்தது பெரும் கொடுமை. இது குறித்து அப்போதே ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத் தார்கள், ஆனால் பலன் இல்லை.


விர, 2001-ம் ஆண்டு நில அபகரிப்புத் தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீஸாரைத் தாக்கியதாக கீழ்ப்பாக்கம் போலீஸார் ரங்கநாதன், கவுரிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 2002-ல் ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர் ஒரு தலைமறைவுக் குற்றவாளி. அப்போது மேடவாக்கத்தில் கவுரிசங்கர் இருப்பதாகத் தகவல் கிடைத்து, தலைமைச் செயலகக் குடியிருப்பு ஸ்டேஷனில் இருந்து மூன்று போலீஸார் அவரைப் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் மூன்று பேரையும் அரிவாளால் வெட்டி, துரத்தி அடித்ததாகச் சொல்கிறார்கள். இப்படி சென்னையில் இவர்கள் இருவர் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

டந்த தி.மு.க. ஆட்சியில் ரங்கநாதன் மீது போலீஸாரால் வாங்கப்பட்ட புகார்கள் மொத்தம் 154 என்கிறார்கள். ஆனால், எதுவும் வழக்காகப் பதிவு ஆகவிவில்லை.


ங்கநாதன் திருந்தவே மாட்டார் என்று, பழைய சம்பவம் ஒன்றைச் சொல் கிறார்கள். கடந்த 2003, செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம் ஒரு நூதனமான தீர்ப்பு கொடுத்தார். அதுவும் நில அபகரிப்பு வழக்குதான். நிலத்தை அபகரித்ததுடன் அந்த விவசாயியைக் கொலை செய்ய முயன்றதாகச் சொல்லப்பட்ட வழக்கு அது. அப்போது இவர் ப.சிதம்பரத்தின் கட்சியான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் புரசைவாக்கம் எம்.எல்.ஏ-வாக இருந்தார். 

வரது அதிரடிகளைக் கேட்டு அதிர்ந்துபோன நீதிபதி, 'மதுரை காந்தி மியூசியத்துக்குச் சென்று ஐந்து நாட்கள் காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தைப் படிக்க வேண்டும்; திரும்பி வந்ததும் சென்னை தக்கர் பாபா வித்யாலயா நூலகத்திலும் காந்தி புத்தகங்களைப் படிக்க வேண்டும்!’ என்று உத்தரவிட்டார். அப்படிப் படித்தும் திருந்தவில்லை ரங்கநாதன்.


ங்கநாதன் வளர்ந்த விதமே அலாதியானது. பெற்றோர் ஆதரவு இல்லாத ரங்கநாதனை வளர்த்தது புரசையைச் சேர்ந்த அவரது அண்ணன். வாலிப வயசுச் சேட்டைகளால் அண்ணன் இவரை வீட்டை விட்டுத் துரத்திவிடவே, அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையின் காலிப் படுக்கைகளில் தஞ்சம் அடைந்தார் ரங்கநாதன். அப்போது காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் தொடர்பு கிடைக்க... அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.1970-களில் மத்திய அரசு வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு 5,000 கடன் உதவித் திட்டத்தை அறிவித்தது. அதில் கொஞ்சம் காசு பார்த்தாராம். அப்புறம் பரோட்டோ கடை நடத்தியது, ஏலச் சீட்டு எனப் பல தொழில்களில் இறங்கி, வழக்குகளும் குவிந்தன.1989-ல் முதல் முறையாக ப.சிதம்பரம் மூலம் ஸீட் வாங்கி புரசைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். திரும்பவும் 1991-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராஜீவ்காந்தி அனுதாப அலையில் வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் த.மா.கா-விலும் சிதம்பரத்தின் தனிக் கட்சியிலும் தொடர்ந்து புரசை எம்.எல்.ஏ. ஆனார். 2005-ல் தி.மு.க-வுக்குத் தாவி, 2006-ல் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ஆனார். இதற்குள்ளாக, ஆவடி, அம்பத்தூர் எனப் புறநகரில் ஏகப்பட்ட நிலங்களையும் பங்களாக்களையும் வளைத்துவிட்டாராம்.


மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்றாலும் கடந்த ஆட்சியில் இவரது அராஜகம் உச்சத்துக்குப் போனது என்று உடன்பிறப்புகளே வருந்துகிறார்கள்.  

குறிப்பாக, ஒரு நிதிப் புள்ளி மற்றும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஸ்ட்ராங்கான நபருடன்  சேர்ந்துகொண்டு கூட்டாகச் செயல் பட்டதாகச் சொல்கிறார்கள். 

த்தனை பிரச்னைகள் வரிசை கட்டி நின்றபோதும், கடந்த தேர்தலில் ரங்கநாதனுக்கு அம்பத்தூர் தொகுதியில் ஸீட் கொடுத்தார் கருணாநிதி.


வேலூர் சிறையில் இருக்கும் ரங்கநாதன் மற்றும் கவுரி சங்கரை விரைவில் குண்டாஸ் ஆக்ட்டில் போடுவதில் போலீஸ் தீவிரமாக இருக்கிறதாம்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்  நன்றி : ஜூனியர் விகடன்

சாதனை சாதனை என்று திமுகவினர் அடிக்கடி சொல்லிக் கொள்வார்களே, அது இதுதான் போல !

இதுவரை உள்ளே போனவர்களில் மிக அதிகமான புகார்களுக்குக் காரணமானவர் என்ற சாதனையாளரும் ரங்கநாதன் தான் போலிருக்கிறது!

இந்த மாதிரி சாதனையாளர்கள் தான் திமு கழகத்தின் "முன்னோடிகள்"!

இவர்களைத் தான், சமூகத்தில் மதிப்பு மிக்கவர்கள்,அஞ்சா நெஞ்சர்கள், ஜெயலலிதா அரசு (இவர்களது சாதனைகளுக்கு விருது வழங்காமல்) வழக்குப் போடுகிறது, சிறையில் தள்ளுகிறது என்று மனித உரிமை ஆணையத்திடம் மனுக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் கருணாநிதி! 

மத்திய மந்திரிகளிடம் காவடி, மனித உரிமை ஆணைத்திடம் மனு கொடுப்பது, பிரணாப்குமார் முகர்ஜி மாதிரி பிரதமர் பதவியின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்களிடம் பேரம், ஒருவேளை பலிக்காவிட்டால், அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்கிற கதையாக பிஜேபி உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகள், இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்கிற வேலை என்று திமுக என்னென்னவோ முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

மனு நீதிச் சோழன் பரம்பரை என்று சொல்லிக் கொள்வார்கள்! அதற்கு உண்மையான அர்த்தம் இப்படி மண்டியிட்டு மனுக் கொடுப்பதுதான் என்று இப்போது தான் புரிகிறது!!

  
பிடித்திருக்கிறதா? அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails