ஒரு புதன்கிழமை! கொறிக்கலாம்! சிரிக்கலாம்!

#Idiot என்று கூகிளில் தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் படம் வருகிறதே! எப்படி? எப்படி?

கூகிள் நிறுவனத்தின் #CEO சுந்தர் பிச்சையிடம் அமெரிக்க காங்கிரஷனல் விசாரணைக்குழு  
(நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாதிரி) நடத்திய விசாரணையில் கேட்கப்பட்ட கேள்வி இது!

அல்கோரிதம், keyword search என்று பல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் Google கொஞ்சமல்ல நிறையவே குசும்பு பிடித்த நிறுவனம் என்பதைச் சொல்லத்தேவையே இல்லை! கூகிள் பயனர்களுடைய தனிப்பட்ட விவரங்கள், தேடுதல்கள், தெரிவுகள் இப்படி எல்லாவற்றையும் கண்காணிக்கிறது என்பது தெரியும் தானே!   

கோபம் வருகிறதா? கோபம் தீர ஒரு குட்டிக் கதையைப் பார்க்கலாமா? 

ஸ்டாலினுக்குப் பிந்தைய நாட்கள்  மாஸ்கோ வீதியில் ஒரு ஆசாமி திடீரென்று குருஷேவ் ஒரு முட்டாள்! குருஷேவ் ஒரு முட்டாள்! என்று கூவிக்கொண்டே ஓடினான். ஆளைப்பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்தார்கள். கூவினது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்ட பிறகு நீதிபதி இப்படித் தீர்ப்புச் சொன்னாராம்: "தெருவில் அநாகரீகமாகக் கூவிக் கொண்டு ஓடியதற்காக ஒருவாரம் சிறை! அரசாங்க ரகசியத்தை பகிரங்கப் படுத்தியதற்காக ஏழு வருடக் கடுங்காவல்!"  

*****
#கேள்விக்கென்னபதில் நிகழ்ச்சியில் கேள்விக்கு அசட்டையாக பதில் சொன்னதில் ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளானதையும் மீண்டு வர தந்திடிவி நிர்வாகத்திடம் பேசி தொடர் நேர்காணல்களுக்கு ஏற்பாடு செய்து உதவியதும் ரங்கராஜ் பாண்டே என்று நெகிழ்கிறார் நாஞ்சில் சம்பத். நல்ல பேச்சாளர். அதிமுகவில் ஐக்கியமான பிறகு இன்னோவா சம்பத் என்ற அடைமொழியுடன் காமெடிப்பீசாகிப் போனது காலம் செய்கிற கோமாளித்தனங்களில் ஒன்று. 

*****   
ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காமெடி செய்வதுண்டு. சமயங்களில் தாங்களே காமெடிப் பீசாகி நிற்கிற தருணங்களும் உண்டு. நடிகர் விஜய் சேதுபதியை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த நிருபர் பல்பு வாங்குவதை பாருங்கள்!  

அடுத்த புதனன்று கூடுதல் கொறிப்புகளுடன் சந்திக்கலாம்!   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!