காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்!


பட்டுக்கோட்டையார் பாட்டினில் சொன்னதிது! காடுதிருத்திக் கழனிகளாக்கிப்
பாடுபட்டவன் வாழ்க்கையிலே ஒளி பிறந்தால் அது பொங்கல்! அது திருநாள்!
காடுவெளஞ்சென்ன நாடு இருந்தென்ன நமக்குக் கைகால்தானே  மிச்சமென்று
மாட்டுக்கும் புல் மிஞ்சாத நிலையிருந்தால் அங்கே பொங்க வேண்டியதே  வேறு!



பெண்:
சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு

அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தானே மிச்சம்
கையும் காலும்தானே மிச்சம்

ஆண்:
இப்போ காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
காலம் இருக்குது பின்னே

மண்ணைப் பொளந்து சுரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே

பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்

பெண்:
அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்

பெண்:
மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்
ஆண்:
அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!

பெண்:
பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
ஆண்:
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண்:
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்க செய்வது மோசமன்றோ

ஆண்:
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண்:
நல்லவர்கள் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்
ஆண்:
நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண்:
அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்




பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளோடு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!


4 comments:

  1. அருமையான அர்த்தமுள்ள . பாடல் ( இப்பவும வருதே , ஹு ம் ! ) .பள்ளி வயதில் இந்த பாட்டை பாடி திரிந்தது ஞாபகம் வருகிறது. இங்கே பொங்கலை சங்கராந்தி என்கிறார்கள். அன்று எல்லோரும் பட்டம் விடுகிறார்கள். இனிய பொங்கல் நல் வணக்கங்கள்.

    ReplyDelete
  2. நல்ல பாடலோடு இனைந்து படித்து, கமென்ட்'டுகிறேன்....

    இனிய தைத் திரு நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. எங்க ஊர்க்காரர் வரிகளோடு நானும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு / பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.

    ReplyDelete
  4. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் எல்லாமே சிந்தனையை தூண்டக்கூடியவையே..

    பொங்கலுக்கு பொருத்தமாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!