#ராயல்அக்கப்போர் பிரிட்டிஷ் மீடியாவை கதற விடும் இளவரசர் ஹாரி!

#ராயல்அக்கப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப் படுத்துகிறதாம்! என்று இன்னொரு பக்கத்தில் எழுதி ஒருவாரம் கூட ஆகவில்லை! ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஹாரி புதியதொரு அதிர்ச்சியை பிரிட்டிஷ் மீடியாவுக்கும் அரசகுடும்பத்தினருக்கும் படு கேஷுவலாகக் கொடுத்து இருக்கிறார் Oprah Winfrey உடனான நேர்காணலில் என்னென்ன சொல்லப் போகிறார்களோ என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் #ராயல்அக்கப்போர் ரசிகர்களுக்கு, சற்றே முந்திக் கொண்டு, ஒரு 17 நிமிட ஷோவை ஹாரியுடன் நடத்தி இருக்கிறார்.    


பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தினருக்கு நெஞ்சுவலியே வந்துவிடுகிற அளவுக்கு, இளவரசர் ஹாரி  படு கேஷுவலாக, டபிள் டெக்கர் பஸ்ஸில் பயணிக்கிறார், சொந்த விஷயங்களையும் குறித்துத் தயக்கமில்லாமல் ஜேம்ஸ் கார்டெனுடன் உரையாடுகிறார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரிடம் காணமுடியாத மிகவும் இயல்பான down to earth யதார்த்தத்துடன் பேசுகிறார். ஒரு டிவி ஷோவுக்கு உண்டான கிறுக்குத்தனங்களை (tasks) முகம் சுளிக்காமல் செய்கிறார். Harry and Meghan have faced severe criticism from British Media. He admitted that he decided to take his family away from the U.K. because of the British press and how it was affecting his mental health back then. He said he did not want his family to be in that "toxic" environment and did what "any husband and father would do." பைத்தியம் பிடிக்கவைக்கும் பிரிட்டிஷ் மீடியாவின் நச்சுத் தனங்களிலிருந்து விலகியிருக்கவே ஒரு கணவனாக, தந்தையாக பிரிட்டனிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாக மிகவும் தெளிவாகச் சொல்கிறார்.

இங்கே இந்த ஷோவில் வெளிப்பட்ட 15 சுவாரசியமான விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். 


இதுமாதிரியான அக்கப்போர் செய்திகளுக்கு உலக மீடியாக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது உங்களுடைய கற்பனையையும் மீறிய விஷயம் என்பதைச் சொல்லி இந்தப்பதிவை முடிக்கிறேன்.

காரணம், இந்த ராயல் அக்கப்போரை விட முக்கியம் இங்கே சட்டசபைத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது தான்! தேர்தல் களம் தயாரென்ற அறிவிப்பும் வந்தாகி விட்டது! கூட்டணிகள் தயாராகி விட்டனவா?       

மீண்டும் சந்திப்போம்.           

4 comments:

  1. Replies
    1. பிரிட்டிஷ் சரித்திரமே இதுமாதிரி நிறைய அக்கப்போர்களால் ஆனதுதான் அம்மா!

      Delete
  2. கட்டறுக்கும் காளை?    கூண்டைவிட்டு வெளியேறும் கிளி?!!!

    ReplyDelete
    Replies
    1. வீடியோவையோ அல்லது கடைசியாகக் கொடுத்திருக்கிற லிங்கிலோ பார்த்தால் இளவரசர் ஹாரி தான் கட்டறுத்துக்கொண்டு ஓடவில்லை என்று சொன்னதைப் பாத்திருக்கலாமே ஸ்ரீராம்!

      பிரிட்டிஷ் அரசகுடும்பம் தன்னுடைய கெத்தைக் கொஞ்சம் அதிகமாகக் காண்பிக்கிற கூட்டம்! பிரிட்டிஷ் வரலாறே அதீதக்கற்பனைகளால், செயற்கையான பிம்பங்களால் ஆனது என்பதைச் சற்று யோசிப்பதற்காகவே இதுமாதிரி அக்கப்போர்களையும் நண்பர்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!