இட்லி வடை பொங்கல்! #77 தேர்தல் களமும் #கூட்டணி கோமாளித்தனங்களும்!

பிரசாந்த் கிஷோர் கொடுக்கிற தெம்பிலோ என்னவோ, திமுக,கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பதில் சோனியா காங்கிரஸ் உள்ளிட்ட உதிரிக்கட்சிகள் அத்தனையுமே விரக்தியின் உச்சத்தில் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. Pseudo Seculars சாயத்தை வெளுக்க அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சிவேறு தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டி என அறிவித்து, சிறு பான்மைக் காவலர்கள் வயிற்றில் புளி கரைத்திருக்கிறது.    

பானாசீனா இந்தத் தேர்தல் முக்கியமானது, இதில் கோட்டைவிட்டால் பாஜக காங்கிரசின் இடத்தைப் பிடித்து விடும் என்று எச்சரித்திருப்பதாக செய்தி! இதற்கு பொழிப்புரை மிக எளிது:: பேசாமல் திமுக கொடுக்கிற தொகுதிகளை காங்கிரஸ் வாங்கி கொண்டுவிட வேண்டும் என்பதற்கு மேல் செட்டியார் எச்சரிக்கையில் சாரம் எதுவுமில்லை.


விசிக, CPI இரண்டுமே அதிருப்தியில் இருந்தாலும், 6 சீட் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டன. இப்போது வைகோவின் மதிமுகவுக்கும் 6, மார்க்சிஸ்டுகள் ஒத்து வந்தால் அதே 6 என்று முடிவாகலாம். சரியென்றால் வா இல்லையென்றால் போ என்று சொல்லாமல் சொல்லி காங்கிரசுக்கு, ஆறுதலாக அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு 20 தொகுதிகள் என்று கொடுத்திருப்பதுபோல அதிகபட்சம் 20 கிடைக்கலாம். போனால் போகிறதென்று கன்யாகுமரி லோக்சபா தொகுதியும்! (இடைத்தேர்தல்)


சேகர் குப்தா இந்த 20 நிமிட வீடியோவில் நரேந்திர மோடி அரசை /அரசியலைத் தடுத்து நிறுத்த, வெட்டி ஜம்பங்கள் காட்டும் ராகுல் கரண்டியால் முடியவே முடியாது என்று விவரித்துச் சொல்கிறார். சோனியா காங்கிரசுக்கே அது தான் நிலைமை என்றால், சனாதனத்தை வேரறுக்கவே குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம் என்று சொல்லும் திருமாவளவன், அதையே கொஞ்சம் பாலிஷ் போட்டு எச்சரிக்கும் பானாசீனா இவர்களெல்லாம் எந்த மூலைக்கு?!  


கமல் காசர் தலைமையில் மூன்றாவது அணி அமைத்தே தீருவோம் என்று சரத்குமார் அயராது உழைக்கிறாராம்! கமல் காசரோ காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கிறார்         , தம்பி  திருமா வந்துசேர வேண்டிய இடம் இது என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார். செட்டியார் ஏன் காங்கிரஸ் அழிவுப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று எச்சரித்தார், நல்லவேளையாக திருமா கமலுக்கு நன்றி சொன்னதோடு ஒதுங்கி கொண்டார்  என்று சேர்த்தே புரிந்து கொள்ள முடிகிறதா? 

திமுக கூட்டணி நிலவரத்தைவிட அதிமுக கூட்டணி கள நிலவரம் சற்றே தேவலை! பாமக, பாஜக என இரண்டு விடாக்கண்டர்களைச் சமாளித்து உடன்பாடு கண்டாகி விட்டது. ரொம்பவுமே முறுக்கிக் கொள்கிற தேமுதிகவுக்கு இன்னமும் கதவைத் திறந்தே வைத்திருக்கிறது. இதைத்தவிர தமாக, உள்ளிட்ட 5 சிறு கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்வதில் பிரச்சினைகள் பெரிதாக இல்லை.

இந்தத் தேர்தலில், கூட்டணிக்கணக்குகளில் பரிதாபமாக தொங்கிப்போய் நிற்பது வைகோவும் இன்னமும் அவரை நம்பி இருக்கிற மதிமுக என்கிற கட்சியின் கொஞ்சநஞ்ச எச்சமும் தான்! 6 சீட் மட்டும் தான் என்பதைவிட, திமுக சின்னத்தில் தான் போட்டி என்றாகி  நிற்பது ஆகப்பெரும் பரிதாபம்!


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். வைகோ மீது திமுக பழிசுமத்தியபோது அதை தாங்காமல் உணர்வுகொண்டு தீ குளித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று வைகோ திமுகவிடம் பெற்ற சீட்டு குறைவு.. அந்த தீக்குளித்தவர்களின் ஆத்மா இன்று வைகோவை மனதார வாழ்த்தும்.. #சுயநலசகுனி
Image

தொடர்புடைய பழைய பதிவு::

வைகோ முடிவு--ஒரு அரசியல் தற்கொலை.....?

மீண்டும் சந்திப்போம்.

5 comments:

  1. // ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட...//

    என்ன தேவை?  ஆனால் இது, இந்த பாணி  ஜெ கற்றுத்தந்தது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. திருமா ஜெ கூட்டணியில் வெற்றி பெற்று திமுக கூட்டணி வெற்றி என்று தெரிந்தவுடன் கட்சி மாறினாரே... இந்த மாதிரி பச்சோந்தித் தனத்தினால்தான் அவங்களுக்கு எங்க சின்னத்துலயே நில்லு... இல்லைனா உன் கீச செலவழி, இவ்வளவுதீன் பிச்சை என்று ட்ரீட்மென்ட்

      Delete
    2. என்ன தேவை என்றா கேட்கிறீர்கள் ஸ்ரீராம்?!!

      மதிமுக என்றொரு கட்சியை திமுக விழுங்கிவிட்டது என்பது ஒரு காரணம். கலீஞரே என்ன குற்றம் செயதேன் நான்? ஏன் என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றீனீர்கள் என்று கண்ணீர்விட்ட வைகோவை நம்பி அவரோடு திமுகவை விட்டு வெளியே வந்த தொண்டர்களை வைகோ சுத்தமாகக் கைகழுவிவிட்டார் என்பது இன்னொரு காரணம். திமுகவின் பணபலத்துக்கு முன்னால் வைகோவின் வாய்ச்சவடால் நிற்க முடியவில்லை என்பது புரியவில்லையா? வைகோவுக்கும் பெட்டிகள் முக்கியம்.

      நெல்லைத்தமிழன் சார்!

      ஆரம்பநாட்களில் இருந்தே தலித் விடுதலை என்ற ஒற்றைப்புள்ளியில் கொஞ்சம் ஆவேசத்தோடு இயங்கிய திருமாவளவனை கவனித்து வருகிறேன். ஒரு சமூக இயக்கமாக மட்டும் இருந்திருந்தால் விசிக மதிக்கப்படக்கூடிய ஒன்றாகக் கூட ஆகியிருக்கலாம். தேர்தல் அரசியல் என்று இறங்கியபிறகு காசுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கிறவராக ஆகிப்போனதில் திருமாவளவன் முதல் நபரல்ல. இன்னும் நிறைய விஷயங்களைப் பேசமுடியும். பேசி என்ன ஆகப்போகிறது என்ற அலுப்பு கூடவே வருகிறது.


      Delete
  2. மயிர் நீப்பின் உயிர் வாழா --- பிச்சைக்கார்ர்களுக்கெல்லாம் இந்த உதாரணம் தேவையா? சீனா கடன் கொடுத்து கழுத்தை நெறிப்பதுபோல இந்த லெட்டர்பளட் கட்சிகள் யார்கிட்டயோ கட்சி நடத்த பணம் வாங்கிவிட்டு, அவங்களுக்கு ஏத்தபடி சனாதனம் திராவிடம்னு கூவறாங்க.

    ReplyDelete
    Replies
    1. நெ.த . சார்! திருக்குறளை மேற்கோள்காட்டியது மதன் ரவிச்சந்திரன்! நானல்ல.

      /இந்த லெட்டர்பளட் கட்சிகள் யார்கிட்டயோ கட்சி நடத்த பணம் வாங்கிவிட்டு/ கட்சி நடத்தப பணம் வாங்கவேண்டிய அவசியமே இல்லாத சோனியா காங்கிரசு கூட , கிடைத்த சீட்டை வாங்கி கொண்டு திருமா மாதிரியே கா!ரணம் சொன்ன கூத்தை இன்று காலை செய்திகளில் பார்த்தீர்களா?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!