மண்டேன்னா ஒண்ணே போதும்! சசி தரூர் பாகம் 2

 
 சுனந்தா ஒரு கிறிஸ்த்மஸ் பார்டியில்  ..!

நியாயமாக இதற்கு சுனந்தா புஷ்கர் என்று தான் தலைப்புக்  கொடுத்திருக்க வேண்டும்! ஆனால் தலைக்கே தலைப்புக் கொடுத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று ஊகிக்க முடியாததால், இது சசி தரூர் பாகம் இரண்டு!
புனிதப் பசுக்களோடு ஒற்றுமையாக..! இப்போது தான் அர்த்தம் என்னவென்று புரிகிறது!
 
ஐபிஎல் கொச்சி அணியை உருவாக்குவதற்கு சசிதரூர் ரொம்பவுமே மெனக்கெட்டார்! கொச்சி அணியின் mentor என்று அவரை சொல்கிறார்கள்! ஏன் என்று இப்போது வெளி வரும் செய்திகளைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது. 

கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு 1533 கோடி ரூபாய்கள் கொட்டப் பட்டிருக்கிறது!  என்றைக்குமில்லாத திருநாளாக ட்விட்டர் பக்கம் போய்ப் பார்த்தபோது, லலித் மோடிக்கு  கொச்சி ஐபில் அணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்ற தகவலை சற்று நேரத்துக்கு முன் தான் படித்துத் தெரிந்து கொண்டேன்!

ஏனாம்?

கொச்சி ஐபிஎல் அணியின் உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டு விட்டாராம்! கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் எடுத்ததில்   இருபத்தைந்து சதவீத உரிமையை வைத்திருக்கும் Rendezvous என்ற நிறுவனத்தில் சுனந்தா புஷ்கர் என்றகாஷ்மீரிப் பெண்மணிக்குப் பதினெட்டு சதவீதப் பங்குகள் இருக்கிறது.

இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறீர்களா?

இந்த சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணியைப் பற்றி எந்த விவரமும் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டாம் என்று ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து  ஐபிஎல் நிறுவனத்தை நடத்தும் அதிகாரிக்குத் தொலைபேசியில் சொல்லப் பட்டிருக்கிறது!  அப்புறம் இந்தப் பெண்மணி மத்திய அமைச்சர் சசிதரூருக்கு "வேணுங்கப் பட்டவங்க" என்றும் சொல்லப் பட்டதாம்!





“I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” wondered IPL chairman Lalit Modi on Twitter. The request has been minuted in the records of the meeting. 

சென்ற சனிக்கிழமை பெங்களூரில், பிரான்சைஸ் ஒப்பந்தம் கையெழுத்தான தருணத்தில் தான் இத்தனையும் நடந்திருப்பதாக இந்த செய்தி கொஞ்சம் விவரமாகவே சொல்கிறது. சுனந்தா புஷ்கர் என்ற இந்தப் பெண்மணி, ஏற்கெனெவே திருமணமானவர், அவரது கணவர் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை நடத்துகிறார். அழகுக் கலையில் பட்டயப் படிப்பை முடித்திருக்கும் சுனந்தா, சொந்தமாக ஸ்பா- ஒரு அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் துபாயில் இருந்ததாகவும் இந்த செய்தி மேலும் சொல்கிறது. இந்தப் பெண்மணியை சசிதரூர், மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக, செய்திகள் கசிந்து கொண்டிருப்பதை நேற்றுத் தான் பார்த்தோம் இல்லையா!

Media reports have said that Tharoor proposed to marry Sunanda Pushkar, a Kashmiri girl. Trained as a beautician, she runs a spa and has lived in Dubai.

இந்தச் செய்தி  Rendezvous நிறுவனத்தின் கூட்டாளிகள் யார் யார், பிரான்சைஸ் உரிமையாளர்கள் யார்   என்பதை லலித் மோடி டிவிட்டரில் சொன்னதை இப்படிப் பட்டியல் இடுகிறது!

Sunanda Pushkar, a friend of union minister Sashi Tharoor holds 18% free equity in Rendezvous Sport Limited, Narendra Modi Tweeted “I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” IPL chairman Lalit Modi had tweeted on Twitter reports DNA

Lalit modi has named the stake holders in Kerala IPL team.

The complete list of partners of IPL Kerala team as per reports are Rendezvous (25% free), Rendezvous (1% purchased), Anchor (27%), Parinee (26%), Film Waves (12%), Anand Shyam (8%) and Vivek Venugopal (1%). Rendezvous free equity is held by Kisan, Shailender and Pushpa Gaikwad, Sunanda Pushkar, Puja Gulathi, Jayant Kotalwar, Vishnu Prasad, Sundip Agarwal.


 

வாயைப் பிளந்து நல்லா வேடிக்கை பாருங்க! கட்டியிருக்கும் துணியும் கூடக்  காணாமப் போகும்!
 
கிரிக்கெட் என்பது இருபத்திரண்டு முட்டாள்கள் விளையாடுவதை இருபத்திரண்டாயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்ப்பது என்பதாகச் சொல்வார்! இங்கே கிரிக்கெட் என்பது சூதாடிகளின் சொர்கமாக இருப்பது நாளுக்கு நாள் மெருகேறி வருவதையே இந்த மாதிரிச் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன!

கிரிக்கெட் சூதாடிகளுக்குப் பின்னால், துபாயும் இருப்பது தெரிந்தது தானே!


இந்தச் செய்தியின் தற்போதைய நிலை! அப்டேட்! 13/04/2010 12.15PM

இங்கே சசி தரூருக்குக் கிளம்பியிருக்கும் புதுத் தலைவலியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்!

சசி தரூர், எல்லா அரசியல்வாதிகளையும் போல, தன் மீது சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மறுத்து இன்றைக்கு ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  
இங்கே பார்க்கலாம்!

இதிலும் கூட முக்கியமாக இரண்டு விஷயங்கள், அந்த அறிக்கையின் வார்த்தைகளுக்கு நடுவே தெளிவாக வெளிப்படுகிறது.


Rendezvous Sports World என்ற அமைப்பு, ஐபிஎல் கொச்சி அணியின் பிரான்சைஸ் உரிமையாளர்களில் ஒன்று! 1533 கோடி ரூபாய் முதலீடு செய்து பிரான்சைஸ் உரிமைய வாங்கியவர்களில் இருபத்தைந்து சதவீதப் பங்கை வைத்திருக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம்! அதில் பதினெட்டு சதவீதம் பங்கு, சுனந்தாவுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதாம்!

ஒன்று சுனந்தா புஷ்கருடனான உறவு குறித்து. அதைத் தன் சொந்த விஷயம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார். இரண்டு தனி நபர்களுக்கிடையேயான உறவு சொந்த விஷயம் தான்! யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அந்த நபர்களில் ஒருவர் மத்திய அமைச்சராகவும், இன்னொருவர் ஒரு வணிக பேரத்தில் சம்பந்தப் பட்டவராகவும் இருக்கும்போது, அமைச்சர் அந்த பேரத்தில் காட்டிய அதீத அக்கறை! அதைத் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு, பொது வாழ்வில் இருக்கும் ஒருவருக்குத் தார்மீகமான கடமையாகவும் இருக்கிறது.

இரண்டாவதாக, லலித் மோடியுடன் சனிக்கிழமை பேசியதை அமைச்சரால் மறுக்க முடியவில்லை. அதற்கு வேறு மாதிரியான சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கருத இடம் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கே இந்திய அரசின் ராணுவ ரகசியங்கள் சீன ஹாக்கர்களால் களவாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி வெளி நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டு இங்கேயும் செய்திகளாக வந்தது தான். 
கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு  1533 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டிருக்கிறது என்ற நிலையில், அதன் உரிமையாளர்கள் யார் எவர் என்று தகவலை வெளியிட்டதற்காக, லலித் மோடிக்கு வக்கீல் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிறதே, அது ஏன்?

ராணுவ ரகசியத்தை விட, ஒரு வியாபாரத்தின் உரிமையாளர்  பற்றிய தகவல் அவ்வளவு பெரிய ரகசியமா?

இந்த விவகாரத்தை டிவிட்டரில் லலித் மோடி சொன்னபோது அவருக்கு அங்கே வந்து பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒருத்தர், இதே மாதிரி, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் யார் எவர் என்பதையும் வெளியிடுவாரா என்று கேட்டிருக்கிறாரே, அதுவும் ஏன்?

கிரிக்கெட் சூதாடிகளின் கைகளில் சிக்கி இருக்கிறதென்பதற்கு இதை விட வேறென்ன prima facie வேண்டும்?





 

9 comments:

  1. thats why i already told to write about gambling IPL .

    another news - to make chennai team into semi - lot of backoffice work going on.

    poor / pathatic / idiot - criket fans -

    nobody worried about kabadi wins by india

    ReplyDelete
  2. வாருங்கள் பாலு!

    கிரிக்கெட் மீது எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. தவிர, திரை மறைவில் நடக்கும் நிறைய விஷயங்கள், சாமானிய ஜனங்களுக்குப் பிடிபடுவதே இல்லை என்பதால் எனக்குத் தெரியாத, அல்லது மனதுக்குத் திருப்தி தராத செய்திகளைத் தொட்டு எழுதுவதில்லை.

    இரண்டு நாட்களுக்கு முன்னாள் வேறு ஒரு செய்தி, இன்னமும் என் குறிப்பில் தான் இருக்கிறது! அது நிஜமா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்க்க வழி இல்லாததால், அதைப் பற்றிப் பதிவில் சொல்லவேண்டும் என்று நினைத்தவன், அப்படியே பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போதுதான், அந்தச் செய்தி ஊர்ஜிதமாகாதது என்று கூட்டாளியின் பதிவில் படித்தேன்.

    இப்போது வேறுமாதிரியான சித்திரம் கிடைத்திருக்கிறது. இதை எழுதப் போகிறேன்.

    அது மாதிரித் தான், டிவிட்டரில் நான் பார்த்த தகவல், அப்படியே பெருகி, இன்றைக்கு அமைச்சர் வழவழகொழகொழவென்ற மாதிரி ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிடுகிற மாதிரி ஆகியிருக்கிறது.

    Communiations என்னென்னவெல்லாம் சாதிக்கிறது!

    ReplyDelete
  3. இது கிசுகிசு வகையில் வருமா!?

    ReplyDelete
  4. நான் இணையத்தில் எத்தனையோ ப்ளாக் படித்து கொண்டு இருந்தாலும் உங்களுடைய ப்ளாக் ஒரு அதிசய ப்ளாக் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன். தங்கள் சேவையை விருப்பு வெறுப்பு இன்றி தொடரவும்.......

    ReplyDelete
  5. /இது கிசுகிசு வகையில் வருமா!?/

    கிரிக்கெட், சசி தரூர், சூதாட்டம், டிவிட்டுக் குருவி, டுபாக்கூர், துபாய் இத்தனை வகைகளிலும் வருமென்று லேபில் கொடுத்துச் சொல்லியிருக்கிறேனே! பார்க்கக்வில்லையா?

    :-((

    கூகிள் நியூஸ் தளத்துக்குப் போய் சசிதரூர், லலித் மோடி, சுனந்தா புஷ்கர் இப்படித் தேடித் பாருங்கள்!
    இன்னும் என்னென்ன வகையில் எல்லாம் வரும் என்று தெரியும்!

    ReplyDelete
  6. வாருங்கள் ராஜேந்திரன்!

    வித்தியாசம், வித்தியாசமில்லை என்பதெல்லாம் நாமாகக் கற்பித்துக் கொள்வது தான்!

    அஞ்சு விரலும் ஒண்ணா இருந்தாக்க ஒண்ணும் பண்ண முடியாது. இப்படி ஒண்ணு, அப்படி ஒண்ணுன்னு இருந்தாத் தான், கைகளால் வேலை செய்யவே முடியும்! அது மாதிரி, கொஞ்சம் மாறுபட்டு இருந்தாத்தான் கொஞ்சம் உருப்படியா யோசித்துப் பார்க்கவே முடியும்!

    ReplyDelete
  7. //கிரிக்கெட், சசி தரூர், சூதாட்டம், டிவிட்டுக் குருவி, டுபாக்கூர், துபாய் இத்தனை வகைகளிலும் வருமென்று லேபில் கொடுத்துச் சொல்லியிருக்கிறேனே! பார்க்கக்வில்லையா? //

    இடையில் ”டுபாக்கூர்” வந்ததால் தான் அந்த கேள்வியே!

    ReplyDelete
  8. வால்ஸ்!

    ஈரோட்டுல இருக்கீங்க! டுபாக்கூர் எங்க வந்தது தெரியலேன்னு சொல்றீங்களே!

    இருக்கிற கிரிக்கெட் சூதாட்டக் கும்பல் போதாதுன்னு, இன்னும் ரெண்டு கும்பல் உள்ளே வருது! கொச்சிக் கும்பலுக்கு ஆதரவா ஒரு மத்திய அமைச்சர் செயல்படறார்.

    1533 கோடி ரூபாய் கொடுத்து கொச்சிக் கும்பலுக்கு ஐபிஎல் பிரான்சைஸ் கிடைக்குது.

    அது வரைக்கும் ஒகே. அமைச்சர் சொல்ற மாதிரி, நான் கிரிக்கெட் வளர்ப்பதற்காக, கொச்சி டீம் வர பாடு பட்டேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!

    ஆனா டுபாக்கூர் எங்கே வருதுன்னா, அமைச்சருக்கு வேணுக்பாப் பட்டவங்க, ஒரு பெண்மணி, அந்தம்மாவை இவரு மாநாந்தாரமாக் கட்டிக்கப் போறாருன்னு வேற பலமாக் காத்தடிக்குது, அந்தம்மாவுக்கு இனாமா, (gift என்பதை தமிழில்) ஒரு நாலரை பெர் சென்ட் பங்கு கெடைக்குது!

    அமைச்சரே லலித் மோடியை கூப்பிட்டு அவங்களைப் பத்தி விசாரிக்க வேணாம்னு வேற சொல்றாரு. இதை லலித் மோடி பகிரங்கமா டிவிட்டரில் செய்தியாப் போட, ரகசியமா வச்சுக்க வேண்டியதை ஏன் வெளியே சொன்னேன்னு அவருக்கு வக்கீல் நோட்டீஸ்! கடைசி நிலவரம் என்னன்னா, அமைச்சருடைய உதவியாளர், லலித் மோடி ஒரு போதை மருந்து வியாபாரம் பண்றவர், ஏற்கெனெவே மாட்டிக் கிட்டுத் தண்டனை அடைஞ்சவர்னு பேப்பருக்கு நியூஸ் கொடுக்கிறார்.

    காங்கிரஸ்காரர்கள் டுபாக்கூர் என்ற வார்த்தைக்குத் தினந்தினம் புதுப் புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, எதையென்று குறிப்பிட்டுச் சொல்ல?

    ReplyDelete
  9. //லலித் மோடி ஒரு போதை மருந்து வியாபாரம் பண்றவர், ஏற்கெனெவே மாட்டிக் கிட்டுத் தண்டனை அடைஞ்சவர்னு பேப்பருக்கு நியூஸ் கொடுக்கிறார்.//

    ஆஹா!

    இது புது மேட்டரா இருக்கே!
    இந்தியா இன்னும் தனி நாடாத்தான் இருக்கா!? இல்லை கூறு போட்டு வித்துட்டாங்களா!?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!