நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும் விஷயம் இது!
செய்தித் தாட்களில் ஒரு வாரகாலமாகவே பரவலாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அங்கே ஒருவர் கைது, இரண்டு பேரைத் தேடுகிறார்கள், ஒரு கடைக்கு சீல் வைத்து விட்டார்கள்....! இப்படி!
செய்தித் தாட்களில் ஒரு வாரகாலமாகவே பரவலாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அங்கே ஒருவர் கைது, இரண்டு பேரைத் தேடுகிறார்கள், ஒரு கடைக்கு சீல் வைத்து விட்டார்கள்....! இப்படி!
நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை மாய்ந்து மாய்ந்து எழுதிய பதிவர்கள் எவரேனும் இதைத் தொட்டு எழுதினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை! நித்தியானந்தாவைக் கைது செய், சொத்துக்களைப் பறிமுதல் செய் என்று ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள் எவராவது, இதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா என்பதும் தெரியவில்லை! மருத்துவப் பணியில் இருந்து கொண்டே, பதிவர்களாகவும் இருக்கும் சிலராவது, ஒரு சமூகப் பொறுப்புடன் இதைப் பற்றிய பதிவுகள் ஏதாவது எழுதினார்களா? வாசகர்கள் நீங்கள்தான், தகவல் தெரிந்தால் எனக்கு சொல்ல வேண்டும்!
ஐந்து நாட்களுக்கு முந்தைய தினமணி நாளிதழின் தலையங்கம் இது! உள்ளது உள்ளபடி செய்தியைச் சொன்னதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுக்களையும் சொல்வதாக இருந்தது.
ஐந்து நாட்களுக்கு முந்தைய தினமணி நாளிதழின் தலையங்கம் இது! உள்ளது உள்ளபடி செய்தியைச் சொன்னதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுக்களையும் சொல்வதாக இருந்தது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வழக்க முறை பற்றிக் குறிப்பிடுகையில், கொடுங்கையூர் அருகே குப்பைமேட்டில் கொட்டப்படும் மருந்து மாத்திரைகளை எடுத்துவந்து அதன் மீது புதிதாகத் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகளை அச்சிட்டு, புத்தம் புதிதாக (அதாவது, மருந்துக் கடைக்காரர்களே ஏமாறுகிறவிதத்தில்) மருந்துக் கடைகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் மாநிலங்களைக் கடந்து செயல்படும் கும்பல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதைப் போல மாத்திரைகள் தனியார் மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டிகளில்கூட கிடைப்பதில்லை என்கிறபோது, இந்த மோசடிப் பேர்வழிகளுக்காக மட்டும் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது என்பது முதல் தகவல் அறிக்கைக்கு வேண்டுமானால் வலு சேர்க்குமே தவிர, வெறும் வாதத்திற்குக் கூட எடுபடாது.
இத்தகைய மாத்திரை, மருந்து, டானிக்குகளை குறிப்பிட்ட கும்பல் ஒவ்வொரு மருந்துக்கடைக்கும் சென்று, சேகரித்து வந்து, குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வைத்து, இவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதிகளை மாற்றி அச்சிடுதல் அல்லது புதிய லேபிள் ஒட்டுதல் ஆகிய பணிகளைச் செய்து, மீண்டும் மறுசுழற்சிக்காக மருந்துக்கடைகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் என்பதும்கூட, செலவுமிக்க நடைமுறைதான். மோசடி செய்பவர்களுக்கு இதில் அதிக லாபம் கிடைக்காது.
காலாவதியான மருந்துகளை மீண்டும் சந்தைக்கு அனுப்புவதை, மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்துக்கான மாநில அளவில் அல்லது தென்னிந்திய விற்பனை உரிமை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமே செய்ய முடியும்.
அவர்களை அடையாளம் காண்பதும் அரசுக்கு எளிது. அத்தகைய நபர்கள் யார் என்று கண்டறிவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்தான் இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீர்வாக அமையுமே தவிர, வெறுமனே எல்லா மருந்துக்கடைகள் மீதும் சந்தேகத்தின் பலனைத் திருப்பிவிடுவதால் பயனில்லை.
தமிழ்நாட்டில் 42,000 மருந்துக் கடைகள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் குறிப்பிடுகிறார். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் நகர்ப்புறங்களில் இருப்பவை.
நகர்ப்புறங்களில் இருக்கும் 90 விழுக்காடு கடைகள் கணினி மூலம் ரசீதுகள் வழங்குபவை. கணினி திரையில் மருந்துகளின் இருப்பு மட்டுமன்றி, அவற்றின் காலாவதி தேதிகளும் தெரியும் வகையில் மென்பொருள் உள்ளன.
காலாவதியான மாத்திரைகளை மருந்துக்கடைக்காரர்கள் தனியே பிரித்து வைப்பதும், அவற்றை தமக்கு விநியோகம் செய்த மொத்தக் கொள்முதல் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து அதற்கான தொகையைப் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.
மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக் கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும் மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.
மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்?
நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன? பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?
ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?
எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின்பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.
மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப்படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத்துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்? 42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே? அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?"
மதுரை சோமசுந்தரம் காலனியில், ஸ்டேட் வங்கி எதிரே இருக்கும் மருந்துக் கடை ஒன்றில், எனக்குத் தெரிந்த பெண்மணி மருந்து வாங்கப் போனார். காலாவதியாகிப் போன தேதியுடன் இருந்த ஒரு மருந்து அட்டையைக் கடையில் இருந்த இளைஞர் கொடுத்தார்.
தற்செயலாக, எக்ஸ்பைரி தேதியைக் கவனித்த அந்தப் பெண்மணி கடைப் பையனிடம் கேட்டபோது , சர்வ அலட்சியமாக "அதனால் என்ன?" என்று அலட்சியமாகக் கேட்ட படியே, அட்டையை மாற்றிக் கொடுத்த சம்பவம் மிக சமீபத்தில் தான் நடந்தது, என்னுடைய கவனத்திற்கும் வந்தது.
என்டிடிவி செய்தி இது!
இப்போதைய நிலவரம், டாக்டர்களுக்கும் இதில் பங்குண்டு எனத் தெரிய வந்துள்ளதாக தினமணியின் இன்றைய செய்தி சொல்கிறது.
"மருந்து மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனம், அதிக பிரபலம் இல்லாத பல சிறிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஸ்டாக்கிஸ்ட் உரிமையைப் பெற்றுள்ளது.இந்த நிறுவனம், காலாவதியான மருந்துகளை கடைகளுக்கு மட்டுமின்றி டாக்டர்கள் பலருக்கும் விநியோகித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மருந்து மோசடியில் மருந்து விற்பனையாளர்களை மட்டும் குறி வைக்காமல், சிறிய அளவிலான மருத்துவமனைகளையும், டாக்டர்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று மருந்து விற்பனையாளர்கள் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். "
உயிர்காக்கும் மருந்துகள் என்று நம்பித் தான் வாங்குகிறோம்! எச்சரிக்கையோடு இல்லாவிட்டால், மருந்தே எமனாகிவிடுவதை, இங்கே உள்ள அரசோ, அதிகாரிகளோ பொறுப்பாகச் செயல் பட்டுத் தடுத்து விடுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
புள்ளிராசா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம், அண்ணாச்சி இந்தப் பதிவை வலையேற்றும் போது பின்னால் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கேட்டார்!
"அதெல்லாம் சரி! காலாவதியாகிப் போன மருந்தைப் புடிக்கிறதெல்லாம் சரி! இங்கே இந்தியாவில் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், அங்கே தடை செய்யப் பட்ட பல மருந்துகளை, சர்வ சாதாரணமாக விற்பனை செய்ய இந்திய அரசு அனுமதித்திருக்கிறதே, அதைக் கேட்க வேண்டாமோ? உதாரணமாக, பெட்டி கடைகளில் கூட சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் விக்ஸ் ஆக்ஷன் 500 வெளிநாட்டில் தடைசெய்யப் பாட்ட மருந்து, இதயத்தை பாதிக்கும் என்பதால்! அதே மாதிரி nimusilide என்ற பெயரில் வரும் வலி நிவாரணி கூட நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் வெளிநாடுகளில் தடை செய்யப் பட்ட ஒன்று.தெரியுமோ?"
Even countries such as Bangladesh have banned Nimesulide for both adults and children, but the Indian government has turned a blind eye to the entire issue
Some of banned drugs available in India
DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA . The most common ones are D cold, action 500 &
Nimulid.
ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name : Novalgin
____________ _________ _________ _________ _________ _________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________ _________ _________ _________ _________ _________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
____________ _________ _________ _________ _________ _________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. . Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
___________ _________ _________ _________ _________ _________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
____________ _________ _________ _________ _________ _________
NITROFURAZONE:
Antibacterial cream.
Reason for ban :
Cancer..
Brand name : Furacin
____________ _________ _________ _________ _________ _________
PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
____________ _________ _________ _________ _________ _________
PHENYLPROPANOLAMINE :
cold and cough. Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
____________ _________ _________ _________ _________ _________
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
____________ _________ _________ _________ _________ _________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
____________ _________ _________ _________ _________ _________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name : Enteroquinol
Nimulid.
ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name : Novalgin
____________ _________ _________ _________ _________ _________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________ _________ _________ _________ _________ _________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
____________ _________ _________ _________ _________ _________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. . Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
___________ _________ _________ _________ _________ _________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
____________ _________ _________ _________ _________ _________
NITROFURAZONE:
Antibacterial cream.
Reason for ban :
Cancer..
Brand name : Furacin
____________ _________ _________ _________ _________ _________
PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
____________ _________ _________ _________ _________ _________
PHENYLPROPANOLAMINE :
cold and cough. Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
____________ _________ _________ _________ _________ _________
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
____________ _________ _________ _________ _________ _________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
____________ _________ _________ _________ _________ _________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name : Enteroquinol
கலக்கறீங்க.......ஒவ்வொரு பதிவிலும்...
ReplyDeleteதினமணி தலையங்கம் படிச்சிட்டு தானே நீங்களே ஜல்லி அடிக்கிறிங்க.. என்னவோ செய்தி கேட்ட உடனே கொதிச்சிப் போய் எழுதி கிழிச்சிட்ட மாதிரி மத்தவனை குறை சொல்றிங்க? நீங்க வயசாகியும் திருந்தலையா சார்? என்னவோ போங்க?
ReplyDeleteதிரு சஞ்சய்!
ReplyDeleteநானாவது படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்! பேசப்பட்ட விஷயத்தில் இருக்கும் நியாயத்தில் பங்குகொள்வது படிப்பதோடு நின்றுவிடாமல், அடுத்து என்ன என்ற சிந்தனையைத் தூண்டப் பதிவு எழுதுகிறேன்!
நீங்கள்...?
பிடித்ததுக்கு மூன்றுகாலா, அல்லது அதுவுமில்லையா என்று ஒன்று இரண்டு எண்ணக் கூடத் தெரியாமல் அல்லவா தவிக்கிறீர்கள்?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!
சகவாச தோஷம், தேசீயம் பேசுவதில் இருந்து குறுகி, சாதீயத்தில் வந்து நிற்கிறது!
நீங்கள் நினைப்பதுபோல ஹிந்து, தினமலர், தினமணி மூன்றையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது.
ஹிந்து நாளிதழோடு பலவிஷயங்களில் ஒத்துப்போக முடியவில்லை என்றாலுமே கூட, அதன் செய்திகளின் நம்பகத் தன்மையை வெறும் சாதியைமட்டுமே வைத்து மசையர்கள் தான் நிராகரிப்பார்கள்!
அதே மாதிரி, தினமணியும் கூட, விற்பனையில் பின்தங்கிப் போனாலும், செய்திகளின் தரத்தில், கண்ணியத்தில் தரம் தாழ்ந்து போனதில்லை!
தினமலர், உங்களுக்கேற்ற ரகம்!
காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற, எவரோடு வேண்டுமானாலும் கூட்டுச் சேரத் தயாராக இருக்கிற காங்கிரஸ் ரகம்!
/ஹிண்டு, தினமணி(யாட்டி), தினமலம் வகையறாக்கள் எல்லாம் அவ்வாறுதானே.. சாதி வெறியர்கள்.. உங்காத்துல எல்லாரும் ஷேமமா சார்? :)/
ReplyDeleteஇப்படி ஒரு பின்னூட்டத்தை சஞ்சய் காந்தி, இதற்கு முந்தைய பதிவில் கேட்டிருந்ததற்கு பதில் இங்கேயே பதில் சொல்லப் பட்டது!
//திரு சஞ்சய்!//
ReplyDeleteஅட பார்ரா.. நம்ம கிஸ்னமூர்த்தி சாரெல்லாம் நாகரிகமா பேச ஆரம்பிச்சிட்டார்.. ஹ்ம்ம்.. மழை வரப் போகுது..
//நானாவது படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்! பேசப்பட்ட விஷயத்தில் இருக்கும் நியாயத்தில் பங்குகொள்வது படிப்பதோடு நின்றுவிடாமல், அடுத்து என்ன என்ற சிந்தனையைத் தூண்டப் பதிவு எழுதுகிறேன்!//
என்னாது சிந்தனையைத் தூண்ட்றிங்களா? போங்க சார்.. உங்களுக்கு எப்போவும் இதே டமாசு தான்.. பட் ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்.. ;))
//நீங்கள்...?
பிடித்ததுக்கு மூன்றுகாலா, அல்லது அதுவுமில்லையா என்று ஒன்று இரண்டு எண்ணக் கூடத் தெரியாமல் அல்லவா தவிக்கிறீர்கள்?//
நேக்கு படிப்பறிவு கம்மி சார்.. படிப்பறிவு மட்டும் தானான்னு கேட்காதிங்க.. அறிவும் தான்.. இல்லைனா உங்க பதிவெல்லாம் படிக்க வேண்டிய கொடுமை இருக்குமா சொல்லுங்க? :(
//உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!
சகவாச தோஷம், தேசீயம் பேசுவதில் இருந்து குறுகி, சாதீயத்தில் வந்து நிற்கிறது!//
உங்கள எல்லாம் படிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் வெறும் தேசியம் தான் சார்.. அல்லா புகழும் உங்களுக்கே..
//நீங்கள் நினைப்பதுபோல ஹிந்து, தினமலர், தினமணி மூன்றையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது.//
வேற வேற தட்டுல வச்சாலும் மலத்துக்குப் பேர் மலம் தானே சார்.. :)
//ஹிந்து நாளிதழோடு பலவிஷயங்களில் ஒத்துப்போக முடியவில்லை என்றாலுமே கூட, அதன் செய்திகளின் நம்பகத் தன்மையை வெறும் சாதியைமட்டுமே வைத்து மசையர்கள் தான் நிராகரிப்பார்கள்!//
சொன்னாங்க... சந்திரிகா, ராஜபக்ஷே எல்லாம் ஹிண்டுவை தான் ஆதாரமா ஐநா சபைல கூட முன் வைக்கிறாங்களாம் சார்.. பிராமணா இல்லாதவாளுக்கு மட்டும் தான் அவா பத்திரிக்கைல வேலைக் கூட தராளாம்னா பார்த்துக்கோங்களேன்..
மசையர்கள்னா இன்னா சார்? புரியற மாதிரியே திட்டுங்க.. தமிழின் மிக சில அநாகரிகப் பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்.. எதுக்கு வெக்கப் படறிங்க? :)
//அதே மாதிரி, தினமணியும் கூட, விற்பனையில் பின்தங்கிப் போனாலும், செய்திகளின் தரத்தில், கண்ணியத்தில் தரம் தாழ்ந்து போனதில்லை!//
இதையும் சொன்னாங்க... இம்புட்டு இருந்தும் ஏன் சார் விற்பனைல பின்தொங்கி இருக்காங்க? :)
//தினமலர், உங்களுக்கேற்ற ரகம்!///
இதப் பார்ரா.. சாரு எல்லாம் ரகம் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரு.. :)
//காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற, எவரோடு வேண்டுமானாலும் கூட்டுச் சேரத் தயாராக இருக்கிற காங்கிரஸ் ரகம்!//
காங்கிரஸ் பார்ப்பனக் கட்சியாய்டிச்சா சார்? நேக்கு தெரியவே தெரியாது பாருங்கோ.. அவ்வ்வ்.
//இப்படி ஒரு பின்னூட்டத்தை சஞ்சய் காந்தி, இதற்கு முந்தைய பதிவில் கேட்டிருந்ததற்கு பதில் இங்கேயே பதில் சொல்லப் பட்டது! /
ReplyDeleteஅது சரி.. யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குத் தான் டீ ஆத்துவீங்க? :))
திரு சஞ்சய்!
ReplyDeleteஇளைஞர் நீங்கள், உங்களுடைய வேகம் புரிகிறது.
அரசியலை, அரசியலாகப் பேசுவதென்றால், அது ஒரு விதம்! அரசியலை விடுத்து, மற்றவற்றைப் பேசுவது என்பது வேறு ரகம்.
தனிப்பட்ட முறையில், வார்த்தைக்கு வார்த்தை என்று பேசிக் கொண்டிருப்பதோ, நான் சொல்வதுதான் கடைசி வார்த்தையாக இருக்கவேண்டும் என்று நினைப்பதோ சிறுபிள்ளைத்தனமாகத் தான் இருக்கும். பதிவில் சொல்லப் பட்டிருக்கும் விஷயத்தை ஒட்டி, அதன் மீதான கருத்தைப் பேசினால், அது நல்லதொரு கருத்துக் களமாக இருக்கும்.
மாற்றுக் கருத்தை நீங்கள் சொன்னால், அதைக் கவனமாகக் கேட்டுக் கொள்கிற பக்குவமும், அனுபவமும் எனக்கிருக்கிறது. மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்ற அந்த சஞ்சய் காந்தியின் துர்க்மான் கேட் டைப் அடாவடித்தனத்தை சந்திக்கும் திறனும் இருக்கிறது!
யாருமில்லாத டீக்கடை....?
இருந்துவிட்டுப் போகட்டுமே! நான் எனக்காகவே டீ ஆற்றிக் கொள்கிறேன்! அதனால் எனக்கொன்றும் குறைவு ஏற்பட்டுவிடப் போவதில்லையே!
//பதிவில் சொல்லப் பட்டிருக்கும் விஷயத்தை ஒட்டி, அதன் மீதான கருத்தைப் பேசினால், அது நல்லதொரு கருத்துக் களமாக இருக்கும்.//
ReplyDeleteஇது உங்களுக்குப் புரியத் தான் அந்த விதண்டாவாதங்கள்.. எதாவ்து பின்னூட்டம் போட்டால் அதுக்கான பதிலை மட்டும் சொல்லனும்.. அதை விட்டு என் பின்னூட்டத்துக்கெல்லாம் காங்கிரஸை மட்டமாக பேசும் கீழத்தரமான செயலை ஆரம்பித்தது நீங்கள் தான்.. என்னோட எந்த பின்னூட்டத்துக்காவது நேரடியா பதில் சொல்லி இருக்கிங்களா? என் பேச்சுக்கு எதுக்கு காங்கிரசை இழுக்கறிங்க? இப்போ தெரியுதா நீங்க எவ்ளோ மோசமா நடந்துக்கறிங்கன்னு.. இது புரியத்தான் அந்த நக்கல் எல்லாம்.. பல் வலியும் வயித்து வலியும் அவரவர்க்கு வந்தா தான் தெரியும்.. இனியாவது நேரடியா பதில் சொல்ல கத்துக்கோங்க.. வயசான காலத்துல தேவை இல்லாம டென்ஷன் ஆக வேண்டியதில்லை பாருங்க.. :)
சஞ்சய்!
ReplyDeleteகாங்கிரஸ்காரர்கள் எப்படிப் பட்டவர்கள், வெட்டி விதண்டாவாதக்காரர்கள், வெட்டிப் பேச்சு மட்டுமே பேசத் தெரிந்த விருதாக்கள் என்பதைத் தொடர்ந்து உங்களுடைய பின்னூட்டங்களில் நீங்களே வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
காங்கிரசின் கையாலாகாத்தனத்தைப் பேசும்போது நீங்கள் அல்லவா டென்ஷன் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!
கோவி கண்ணன் உங்களை அடிக்கடி "பொடியன்" என்று அழைப்பது ஏன் என்று எனக்குத் தெரியுமே! தனியாகவேறு நிரூபித்துக் காட்ட வேண்டுமா என்ன:-))
பெட்டி கடைகளில் கூட சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் விக்ஸ் ஆக்ஷன் 500 வெளிநாட்டில் தடைசெய்யப் பாட்ட மருந்து, இதயத்தை பாதிக்கும் என்பதால்! அதே மாதிரி nimusilide என்ற பெயரில் வரும் வலி நிவாரணி கூட நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் வெளிநாடுகளில் தடை செய்யப் பட்ட ஒன்று
ReplyDelete- where will get like these baned medicine list./
- everybody wants faster money. ourself and govt do the corrective steps against all likethis
என் பெயர் சஞ்சய்காந்தி.. நான் பேசும் போது எனக்கு பதில் சொல்லுங்க.. இப்போதும் காங்கிரஸை தான் இழுக்கறிங்க. உங்க கிட்ட பாவ புண்ணியம் பாக்கறது தப்பு.. நடக்க வேண்டியதை பார்க்க வேண்டியது தான்..
ReplyDelete//கோவி கண்ணன் உங்களை அடிக்கடி "பொடியன்" என்று அழைப்பது ஏன் என்று எனக்குத் தெரியுமே! தனியாகவேறு நிரூபித்துக் காட்ட வேண்டுமா என்ன:-))
//
நீங்கள் ஒரு அரைகுறை என்பதை மணிக்கொருமுறை நிரூபிக்கிறீர்கள். அவர் எதற்கு அப்ப்டி அழைக்கிறார் என்று தெரியாமலே வழக்கம் போல் உளறுகிறீர்கள்.. வயசு போல் கொஞ்சம் அறிவும் வளர்ந்திருக்கலாம் உங்களுக்கு.. பாவமா இருக்கு எனக்கு..:((
வாருங்கள் பாலு!
ReplyDeleteஒரு சிறு பட்டியலை பதிவிலேயே, உங்களது கேள்விக்குப் பதிலாக இணைத்து விட்டேன்.
அலோபதி மருத்துவத்தில், அறுவை சிகிச்சை ஒன்று மட்டுமே உடனடியான பலனையும், உயிர் காப்பதாகவும் நடைமுறையில் இருக்கிறது. மருந்துகளைப் பொறுத்தவரை, அளவு தெரிந்து உபயோகிக்கவில்லை என்றால், எல்லா மருந்துமே நஞ்சுதான்.
இங்கே மருத்துவர்கள், ஒரு குறைந்த சதவிகிதத்தைத் தவிர, பெரும்பாலானோர், ஓவர்டோஸ் பரிந்துரை செய்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். நோய் நாடி நோய் முதல் நாடி, நாடி பிடிக்கத் தெரிந்து, நோயின் அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிந்து, அதற்கு மருத்துவம் செய்யத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அரிதான ஒன்றாகக் குறைந்து கொண்டே இருக்கிறது.
இப்படி நோயின் தன்மையச் சரியாக நாடி பிடித்துப் பார்க்கத் தெரியாதவர்கள், எப்போதுமே கொசுவை அடிக்க பீரங்கி குண்டுகளை உபயோகிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.
என்னாது மிரட்டலா? உங்கள் வயதாக ப்ரொஃபைலில் இருப்பது நிஜமா இல்லை யாராவது பளி சிறுவனின் வலைப்பூவா இது?.. உங்கள் பாஷயிலேயே உங்களுக்கு பதில் சொல்வதை தான் சொல்லி இருக்கிறேன்.. மிரட்டலாம்ல.. ரொம்ப பயப்படாதிங்க சார்.. நான் அப்டி எல்லாம் எதும் மிரட்டல.. சும்மா தைரியமா இருங்க.. :))
ReplyDelete// SanjaiGandhi™ said...
ReplyDeleteதினமணி தலையங்கம் படிச்சிட்டு தானே நீங்களே ஜல்லி அடிக்கிறிங்க.. என்னவோ செய்தி கேட்ட உடனே கொதிச்சிப் போய் எழுதி கிழிச்சிட்ட மாதிரி மத்தவனை குறை சொல்றிங்க? நீங்க வயசாகியும் திருந்தலையா சார்? என்னவோ போங்க?//
இது தான் இந்தப் பதிவுக்கான என்னோட பின்னூட்டம்.. இதுல தேவை இல்லாம காங்கிரஸ் ரகம் புடலங்காய் என்றெல்லாம் உளறியது கொழுப்பா இல்லையா? உங்களிடம் இதே ரீதியில் தொடர்பில்லாமல் பேசினால் உங்களுக்கு கண்ட இடத்தில் எரிகிறதல்லவா? முட்டாள்தனமான வாதத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு, இப்போ,, அய்யோ.. ஒருத்தன் என்னை மாதிரியே லூசா இருக்கானேன்னு புலம்பறிங்க.. உங்கள மாதியே அரைகுறையா பதில் சொல்லப் போறேன்னு சொன்னா அது கூட புரிஞ்சிக்க புத்தி இல்லாம மிரட்டறேன்னு அழறிங்க.. என்ன சார் உங்க பிரச்சனை.. ஒணு நீங்க ஒழுங்கா இருந்து அடுத்தவை நொட்டை சொல்லுங்க.. இல்லைனா, உலகமே நம்மள மாதிரி தான் போலன்னு நெனைச்சி எஞ்சாய் பண்ணுங்க.. ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ.. உங்களுக்கு க்ளாஸ் எடுத்தே என் எனர்ஜி வீணாகுது சார்.. இருங்க சாப்ட்டாவது வரேன்.. :(((
நன்றி கிருஷ்ணமூர்த்தி நண்பரே. ...... நானும் யோசிக்காததை, செய்தித்தாளை பார்க்காததை சுட்டி கட்டியடர்க்கு நன்றி.........
ReplyDeleteதங்கள் கூறிய இவை அனைத்தும் உண்மை.
திரு. சஞ்சய்காந்தி அவர்களுக்கு.......தங்கலுக்கு ஒரு வேண்டுகோள்.... நீங்கள் உங்களுக்கே இதுவரை ஏதாவது நன்மை செய்து இருப்பிர்களா என்று யோசித்து பாருங்கள். நண்பர் கிருஷ்ணமூர்த்தி கூறியதை மதிக்க வில்லை என்றல் கூட ஏளனம் செய்யாதிர்கள் நண்பனே... என்னடா இவன் புத்தி சொல்லுறான்னு நினைக்காதிங்க.. நானும் உங்களை போல் இருந்தவன்.....ஆனால் இப்போது இல்லை.... நல்ல யோசித்து பாருங்கள் நீங்களோ அல்லது உங்களை சார்ந்த உங்கள் அம்மா, அப்பா அல்லது உங்கள் உறவினர் எவராலும் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு அந்த வலி தெரியும். அப்படி பாதிக்கப்பட்டு இருந்தாலும் உங்களுக்கு எந்த கவலையும் பட மாட்டீர்கள். அது உங்களுடைய இயல்பு.... இருக்கட்டும்....... பரவாஇல்லை... இருந்தாலும் நீங்கள் ஒரு படித்தவர் என்பதை மனதில் வைத்துகொண்டு கூறுங்கள்.....தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்......நண்பரே.....