சிறிசும் பெரிசும்! ஒரு விமரிசனப் பார்வை!



"கொஞ்சம் சிறுசா பதிவு போட்டதுக்காக ஒரு தடவை படிச்சேன்!" ன்னுட்டு வந்தாரு வால் பையன்! பெருசாப் போட்டப்பல்லாம் ஸ்பீட் ப்ரேகர் மாதிரி இத்தை அஞ்சு பதிவாப் போட்டிருக்கலாம்,  அத்தை ஆறு பதிவாப் போட்டிருக்கலாம்னே சொல்லிட்டிருந்தவரு மொதத் தடவையா ஒரு தபா படிச்சேன்னு சொல்லியிருக்கார் பாருங்க, ரொம்பவே  ஃபீலிங்க்ஸ்  ஆகிப் போச்சு!

படிச்சேன்னு சொன்னதுக்காகவான்னு மட்டும் கேட்டுராதீங்க ப்ளீஸ்!

"வலைப்பதிவு எழுதறவங்க எல்லாம் ஏதோ தெரிஞ்சுக்கணும்னு தேடி வர்றவங்க இல்ல. ச்சும்மா, டைம் பாஸ் பண்றதுக்காக வர்றவங்க, அப்படியே நல்ல மூடுல இருந்தால், விஷயத்தைத் தெரிஞ்சுக்கவும் கொஞ்சம் படிப்பாங்க. அவ்வளவு தான்! இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க?"

இப்படி இங்கே இப்போதைக்கு இது போதும்னு முன்னாலேயே எழுதிப் பாத்தது தான்!

"அடிக்கடி வாசிப்பு அனுபவத்தைத் தொட்டு எழுதியிருக்கே இல்லியா? லிடரேச்சர் கிளாசா நடக்குது இங்க?

இணையத்துல வர்றவங்க பெரும்பாலும் வாசிக்கறதுக்காக்ன்னு வரல, பொழுது போக்கத் தான் வர்றாங்க! உண்மையான வாசிப்பு அனுபவம், இன்னும் கூடப் புத்தகங்களில் தான் கிடைக்கிறது. பொழுதுபோக்க இணையத்துக்கு வர்றவங்க, சுவாரசியமா இருந்தா அங்கே இங்கேன்னு கொஞ்சம் வாசிக்கவும் செய்யறாங்கங்கறது உண்மைதான், ஆனாலும் இன்னும் பரவலாகவில்லை."

இதுவும் அங்கேயே சொன்னது தான்! சிறுசா எழுதினப்பக் கண்டுக்காதவங்க, பெருசா உண்மைத் தமிழன் ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சப்பத் தான் கவனிக்கவே ஆரம்பிச்சாங்க! நம்ம சந்ரு இருக்கார் பாருங்க, இவரு  விவாதம் பண்ணலாம்  வாங்கன்னு ஒரு பதிவுல கூப்பிட்டதுமே "இதோ வந்துட்டன்"ன்னு வந்து குதிச்சாருங்க! கமென்ட் மாடரேஷன் இருக்குன்னதும், அப்புறம் இந்தப் பக்கம் வந்து கருத்து எதுவும் சொல்றது இல்லை!

அப்புறம் வேறொரு பதிவுல, வால் பையன் வந்து ஒரு பின்னூட்டமிட்டார்.அதற்கும் அங்கே பதில் சொன்னேன்

னக்கு பள்ளி நாட்களில் ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார்.

கஷ்டப்பட்டு, நெட்டுருப் போட்டுப் படித்ததைத் தேர்வில் யோசித்து யோசித்து விடையாக எழுதினால், பாவி வாத்தியான் என்ன எழுதியிருந்தது, சரியா தவறா என்று கூடப் பார்க்காமல், விரற்கடையால் அளந்து குத்து மதிப்பாக மார்க் போடுவார் என்ற ரகசியம் பின்னாட்களில் தெரிந்தது. ஒருக்கால் அந்த தமிழ் வாத்தியாருடைய பாதிப்பாகக் கூட இருக்கலாம்!

பதிவுலகிலும் அந்த மாதிரி பதிவைப் படிப்பதற்கு முன்னால், அது எத்தனை மீட்டர் நீளம் என்று பார்த்து, அதற்குப் பின்னால் படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்கிற வாத்தியார்கள் நிறைய இருக்கிறார்கள் போல!

மேலே வால்பையனுடைய பின்னூட்டத்திற்கும், இங்கே சொல்லப்பட்ட பாவி வாத்தியான் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை! சம்பந்தம் இல்லை!! சம்பந்தம் இல்லை!!!


இப்போதும் கூட போன பதிவுக்கு வால்பையன் வந்து போட்ட சுருக்கப் பின்னூட்டத்திற்கும் இந்தப் பதிவுக்குமே கூட உண்மையிலேயே சம்பந்தம் இல்லை! இப்படியெல்லாம் பழைய கதையைக் கிளறுவதற்கு என்ன காரணம்? என்ன அவசியம் என்கிறீர்களா?

சேத் கோடின் எனக்குப் பிடித்த பதிவர் என்பதை முன்னமேயே  ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்! இன்றைக்கு ஒரு பதிவில் "நறுக்'கென்று நாலே நாலு வரியில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

இப்போதெல்லாம் பதிவுகளையும், புத்தகங்களையும்  நிறையப் பேர் வந்து படிக்கிறார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஆவலோடு இருக்கிறார்கள். அறிந்துகொள்ளும் தாகத்தோடு இருக்கிறார்கள். புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், முக்கியமானவேலையைச் செய்யவும் முற்படுகிறார்கள்.

எது முந்தி வருகிறது? ஆவல்? அல்லது வெற்றி?

சேத் கோடினுக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள்  கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரிப் புத்தகங்களை, பதிவுகளைப் படிக்க வரும், சிந்திக்கத் தயாராகவும், புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடனும் இருக்கும் வாசகர்களைத் தமிழ்  வலைப் பதிவுலகம் 
எப்போது சந்திக்கும்?

அப்படிப் பட்ட வாசகர்களை உருவாக்கும் பதிவுகளும் புத்தகங்களும் எப்போது வரும்?

இந்த சிந்தனை இப்போது மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது!

உங்களுக்கு ஏற்கெனெவே இதுபற்றி இன்னும் அதிகமான, பயனுள்ள விவரங்கள் தெரிந்திருந்தால், பகிர்ந்துகொள்ளலாமே!

அப்புறம் சேத் கோடின் எழுப்பியிருந்த கேள்வி எது  முந்தி வரும் -ஆவல்? வெற்றி?  இதற்கு இங்கே இன்னும் ஒரு அழகான பதில் இருக்கிறது.


ஆவல் கொள்வது மட்டுமே வெற்றியாகி விடுவதில்லை! ஆவலுக்கும் வெற்றிக்கும் நடுவில் நடைமுறைக்குக் கொண்டு  வருவது என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது! பின்னூட்டங்களில், யோசிக்கும், கருத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான விவாதமும் இருக்கிறது. இந்தப் பக்கங்களிலும் அந்த நாள் எப்போவரும் ?


oooOooo



மும்பை மீது தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து ஓராண்டாகிறது!

அரசு, அரசியல்வாதிகள் ஏன் ஜனங்களுமே கூட இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. ஓட்டுக்காக, எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் சிறுமதி கொண்டவர்கள் நாட்டின் தலைவர்களாம்!தாஜ்  ஹோட்டலுக்கு 167 கோடி ரூபாய்கள் நஷ்ட ஈடாக இன்ஷ்யூரன்ஸ் கிடைத்து விட்டது. சத்ரபதி சிவாஜி டெர்மினலில் கொல்லப் பட்ட  சாதாரண ஜனங்களுடைய உயிர்களுக்கு எந்த மதிப்புமே இல்லாமல் போய் விட்டது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்ட போது, அந்த வெடி விபத்தில் பலியான காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இன்னமும் உரிய கௌரவமோ, நஷ்ட ஈடோ கொடுக்கப் படவில்லை. கல்லடி பட்ட பஸ் டிரைவருக்குக் கூடப் பத்து லட்சம் நிவாரணம் வேண்டும் என்று கூவும் சங்கங்கள் உண்டு. ஆனால், கடமையில் உயிர் துறந்த வீரர்களுக்கும், தீவீர வாதத்தில் பலியாகிக் கொண்டே இருக்கும் சாதாரண ஜனங்களுக்கும் எந்த மரியாதையும்கிடையாது!




என்ன தேசம் இது?



இருளில் இருந்து இந்த தேசத்தை விடுவிப்பாய்!



5 comments:

  1. பெரிசாப் போட்டாலும் சிறிசாப் போட்டாலும் விஷயம் இருந்தா போதும். படிக்கறதுக்கு புத்தகங்கள்தான் சரி. என்னதான் பக்கங்கள் திருப்புவது போல புதிய மின்னிதழ்கள் வந்து விட்டாலும் உண்மையானப் புத்தக வாசிப்புக்கு ஈடாகாது.
    பொழுது போக்கிற்கு வந்தாலும் அங்கு ஒரு சிறிய விஷயம் தெரிந்து கொள்ளப் பட்டால் போதும். எங்கோ தவறவிட்டதை இங்கு தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக தாஜ் ஹோட்டல் காரர்களுக்கு இன்சூரன்ஸ் நஷ்ட ஈடு கிடைத்த விவரம் நான் அதன் ஒரிஜினல் இடத்தில் தவற விட்டு இங்கு தெரிந்து கொண்டேன்...!
    தஞ்சையில் எனக்கும் ஒரு தமிழ் வாத்யார் இருந்தார். நிஜமாகவே உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமல் அரையடி ஸ்கேல் வைத்து அளந்து மார்க் போட்டவர்!

    ReplyDelete
  2. பெரும்பாலான தமிழ் வாத்திமாருங்க இப்படி "அளந்து" மார்க் போடுகிறவர்களாக இருந்தது ஒரு பக்கம்!
    ஆனாவை அடுத்து ஆனா, கானாவை அடுத்துக் கானா என்று ஒரு மாதிரி ரைமிங்கில் மூக்கினால், கரகரத்த குரலில் பேசத் தெரிந்தால் மட்டுமே தமிழ் தெரிந்தவன், தமிழன் என்ற அடுத்த கட்ட கொடுமைக்கும் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் உண்டாக்கினார்களே, அதை என்ன சொல்ல! அதைவிடக் கொடுமை, இவர்கள் எழுதினாலே கவிதை, பேசினாலே உரைநடை, நடந்தாலே இசைத்தமிழ் என்று முத்தமிழும் ஆக்கினார்களே அதுதான்!

    இவர்களையும் மீறித் தமிழில், நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தூண்டு கோலாகவும், உதவியாகவும் இருந்த சில நல்ல ஆசிரியர்களையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்!

    ReplyDelete
  3. நீங்கள் முந்தய பதிவில் எழுதியிருந்த கதை ஏற்கனவே நான் படித்தது தான்! மறுபடி ஒருதடவை படிச்சதை தான் அவ்வாறு குறிப்பிட்டேன்!

    ReplyDelete
  4. சிறுசும், பெருசும் பதிவை ஆரம்பித்து மும்பை தாக்குதலை பற்றி எழுதியது ஏன்!?

    நாளை தனிபதிவாக போட இடமிருந்தாலும் அடக்க முடியாத ஆவல் தூண்டி விடுகிறது இல்லையா!?


    எந்த விசயத்தை சொல்ல வருகிறீர்கள் என்பதே புரிய மாட்டிங்குது!

    இது தான் நான் நெனக்கிறது!

    ReplyDelete
  5. /மும்பை மீது தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து ஓராண்டாகிறது!/

    அது தான் காரணம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!