தமிழக அரசியலை நச்சுக்காடாக்கி நாசம் செய்த இரண்டு தி. கழகங்களும் தனித்தனியாக, தங்களுடைய அரசியல் பரப்புரையை ஒரு சுற்றுக்கும் மேலேயே நடத்தி முடித்து விட்டன என்பதில் கூட்டணிக்கட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது இன்றைய தமிழக அரசியல் கள நிலவரம்! கூட்டணிக்கட்சிகளில் அந்தப்பக்கம் காங்கிரசும், இந்தப்பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியும் தங்களுடைய தனி ஆவர்த்தனத்தை நடத்திக் காண்பித்து விட்டன. தனி ஆவர்த்தனம் செய்து காட்டியதில் என்ன கிடைத்தது என்பது வெளியே வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்!
இந்த 54 நிமிட நேர்காணல் தமாஷாவைப் பார்க்க இங்கே இசுடாலினுக்குப் பதில் சொல்கிற மாதிரியே எங்களுக்கும் கூட்டம் வருமில்ல என்பதாக ராகுல் காண்டியைக் காட்சிப்பொருளாக்கி மூன்றுநாட்கள் ரீல் ஓட்டிய மிதப்பில் கே எஸ் அழகிரி இருப்பதைக் காண மிகவும் தமாஷாக இருக்கிறது. ஒரு பொய்யான கனவுலகில் இருந்து கொண்டு சோனியா காங்கிரசின் தமிழ்நாடு பிரான்ச் தலைவர் ரங்கராஜ் பாண்டே எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியான பதிலைச் சொல்வதைத் தவிர்க்கிறார். ஒரு அருமையான காமெடி என்பதால் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
பாமக ஒருபுறம், தேமுதிக ஒருபுறம்,இன்றைக்கு அவரவர் கட்சிக் கூட்டங்களை நடத்தி, அதிமுகவுடன் பேரம் பேச முனைந்திருக்கிறார்கள். கடுமையாகப் பேரம் பேசுகிற வலிமையோ தெம்போ இரு கட்சிகளுக்குமே இல்லை என்பதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். 1989 களில் வன்னியர் இட ஒதுக்கீடு என டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்தபோது கருணாநிதி பணிந்து கொடுத்து பாமகவை வளர்த்துவிட்டதுபோல,இன்றைக்கும் ராமதாசை அரசியல் ஆதாயம், புதுவாழ்வு பெறச்செய்ய வேண்டிய கட்டாயமோ அவசியமோ அதிமுகவுக்கு இல்லை! இதைப்பற்றிய ஒரு விரிவான செய்தி இங்கே! தவிர பாமகவுக்கு அதிக இடம் கொடுத்தால் பிஜேபிக்கும் அதே அளவு இடம் கொடுக்க வேண்டி வரும். அதற்கடுத்து தேமுதிகவுக்கு எத்தனை கொடுக்க முடியும்? கருணாஸ் மாதிரி உதிரிகள் இப்போதே வேறுமாதிரி துண்டு போடுகிறார்கள். அதிமுகவும் கூட ஒரு தெளிவான முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இது தேமுதிக defacto தலைவி பிரேமலதா இன்றைக்கு அளித்திருக்கிற நேர்காணல். விஜயகாந்த் ஒருவர்தான் தேமுதிகவின் பலமாக ஜனங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். ஜெயலலிதாவையே நேரடியாக எதிர்க்கிறவராகவும் இருந்தார் என்பது நினைவுக்.கு வரும்போது உண்மையிலேயே மனவருத்தம் மட்டுமே மிச்சம்.