#2021தேர்தல்களம் மாறும் உதிரிகள்! மாறுமா கூட்டணிக் கணக்குகள்?

சாணக்யா தளத்தில் ரவீந்திரன் துரைசாமி ஆவேசமாகப் பேசுகிற வீடியோ ஒன்றை இப்போது பார்த்தேன் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் முகம் தெரியாத பல வலைப்பதிவர்களுடன் அரசியல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் காரசாரமாகவே நிறைய நடந்திருக்கின்றன. ஒன்றிரண்டு  திமுக சார்பு ஆபாச வசைப்பதிவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனேகமாக எல்லாமே கண்ணியமாக இருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.. அதில் தஞ்சாவூர்க்காரர் ஒருவர் டெக்சாஸில் (USA ) ஜமீன்தார் போல வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிறவர், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன ஜாதிக்கு எத்தனை சதவீத ஓட்டு என்கிற தரவுகளை வைத்துக்கொண்டு, அரசியலை அடிக்கவராத குறையாகப் பேசுகிறவர். இப்போது கூகிள் பஸ் கூகிள் ப்ளஸ் என்றெதுவும் இல்லாத நிலையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போனவர். (அவரைப்போல நிறைய வலைப்பதிவர்கள் இன்றைக்குத் தொடர்பில் இல்லாமல் போனார்கள்) 


கொஞ்சம் மூச்சுவாங்க ரவீந்திரன் துரைசாமி பேசுவதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர் இந்த 27 நிமிடப் பேச்சில் சொல்கிற கள யதார்த்தம் நன்றாகவே புரியக் கூடியதுதான்! தமிழ்நாட்டில் ஒருசில அபூர்வமான சந்தர்ப்பங்களைத் தவிர மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பேச்சுதான் என்பதை நாமும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். அப்படியானால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரோடு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய IJK (இப்படி ஒரு உதிரிக் கட்சி இருப்பது தெரியுமா? புதிய தலைமுறை சேனலை நடத்துகிறவர் கட்சி!) சேர்ந்தாயிற்று. கமல் காசரை சரத் குமார் பார்த்துப்பேசிவிட்டு வந்திருக்கிறார். கமல் காசர் என்ன சொன்னார் என்பது இன்னமும் வெளியே  தெரியவில்லை.


பழ. கருப்பையாவுக்கு கமல் காசர் கட்சியில் அட்மிஷன் கிடைத்து MLA வேட்பாளராகவும் உறுதிசெய்யப் பட்டு விட்டார் என்கிற அதிரடிச்செய்தியை முடிந்தவரை காமெடிச் செய்தியாக்கிய 2 நிமிட வீடியோ.

தினமலர் இந்த ஒருநிமிட வீடியோவிலேயே ரவீந்திரன் துரைசாமி மாதிரி ஜாதிக்கணக்குப் போட்டுச் சொல்கிறது. ஆனால் வாக்குகள் பதிவாகி, எண்ணும் போதல்லவா இதெல்லாம்  நிஜக்கணக்கா அல்லது வெறும் மனக்கணக்கா என்பது புரியவரும்! கருணாநிதி போடாத சாதிக்கணக்கா? எத்தனைமுறை பலித்ததாம்?

சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற முப்பெரும் தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு, தமிழ் உள்ளங்களில் பட்டொளி வீசி பறக்கும் இ.ம.மு.க-வின் கொடி, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வடிவம் கொண்டது. தமிழ் இளைஞர்களின் கனவுகளை சுமந்து இனி களமாடும் எமது கொடி #IMMK #VoteForIMMK
Image

4:02 PM · Feb 27, 2021Twitter for iPad 


கமல் காசர், சீமான் போன்றவர்கள் எல்லாம் என்ன நோக்கம், நம்பிக்கையில் அரசியல் கட்சியைத் தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பது கொஞ்சம் ஆய்வுக்குட்படுத்தப் படவேண்டிய விஷயம். 

கொஞ்சம் யோசித்து என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.  

  

      

#ராயல்அக்கப்போர் பிரிட்டிஷ் மீடியாவை கதற விடும் இளவரசர் ஹாரி!

#ராயல்அக்கப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப் படுத்துகிறதாம்! என்று இன்னொரு பக்கத்தில் எழுதி ஒருவாரம் கூட ஆகவில்லை! ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஹாரி புதியதொரு அதிர்ச்சியை பிரிட்டிஷ் மீடியாவுக்கும் அரசகுடும்பத்தினருக்கும் படு கேஷுவலாகக் கொடுத்து இருக்கிறார் Oprah Winfrey உடனான நேர்காணலில் என்னென்ன சொல்லப் போகிறார்களோ என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் #ராயல்அக்கப்போர் ரசிகர்களுக்கு, சற்றே முந்திக் கொண்டு, ஒரு 17 நிமிட ஷோவை ஹாரியுடன் நடத்தி இருக்கிறார்.    


பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தினருக்கு நெஞ்சுவலியே வந்துவிடுகிற அளவுக்கு, இளவரசர் ஹாரி  படு கேஷுவலாக, டபிள் டெக்கர் பஸ்ஸில் பயணிக்கிறார், சொந்த விஷயங்களையும் குறித்துத் தயக்கமில்லாமல் ஜேம்ஸ் கார்டெனுடன் உரையாடுகிறார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரிடம் காணமுடியாத மிகவும் இயல்பான down to earth யதார்த்தத்துடன் பேசுகிறார். ஒரு டிவி ஷோவுக்கு உண்டான கிறுக்குத்தனங்களை (tasks) முகம் சுளிக்காமல் செய்கிறார். Harry and Meghan have faced severe criticism from British Media. He admitted that he decided to take his family away from the U.K. because of the British press and how it was affecting his mental health back then. He said he did not want his family to be in that "toxic" environment and did what "any husband and father would do." பைத்தியம் பிடிக்கவைக்கும் பிரிட்டிஷ் மீடியாவின் நச்சுத் தனங்களிலிருந்து விலகியிருக்கவே ஒரு கணவனாக, தந்தையாக பிரிட்டனிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாக மிகவும் தெளிவாகச் சொல்கிறார்.

இங்கே இந்த ஷோவில் வெளிப்பட்ட 15 சுவாரசியமான விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். 


இதுமாதிரியான அக்கப்போர் செய்திகளுக்கு உலக மீடியாக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது உங்களுடைய கற்பனையையும் மீறிய விஷயம் என்பதைச் சொல்லி இந்தப்பதிவை முடிக்கிறேன்.

காரணம், இந்த ராயல் அக்கப்போரை விட முக்கியம் இங்கே சட்டசபைத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது தான்! தேர்தல் களம் தயாரென்ற அறிவிப்பும் வந்தாகி விட்டது! கூட்டணிகள் தயாராகி விட்டனவா?       

மீண்டும் சந்திப்போம்.           

#கண்டுகொள்வோம்கழகங்களை மாற்று அரசியலை யோசிக்க வேண்டிய தருணம் இது!

இன்றைக்கு எங்கே திரும்பினாலும் அம்மாபுராணம், அம்மா பெயரால் சூளுரைகள் என்றே காதைக்கிழிக்கும் அளவுக்குத் தம்பட்டங்கள் இருக்கும் என்பதால் காலை முதல் உள்ளூர் சேனல் எதன்பக்கமும் போகாமல் தவிர்த்து வந்தேன். இதற்கு முன்னாலும் கூட மாநில அரசின் இடைக்கால பட்ஜெட் செய்திகளையும் தவிர்த்தேன். மாநில அரசின் பட்ஜெட் வெறும் காகித அறிக்கையாக மட்டுமே இருக்கும் என்பதே காரணம். 


ஆனால் இன்று வெளிநடப்பு செய்யும் நாங்கள் அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் மீண்டும் இந்த சபைக்குள் நுழைவோம் என்று திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரைமுருகன் தெரிவித்ததாக இந்துதமிழ் திசை செய்தியைப்பார்த்ததும்  சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. வெளிநடப்புக்கு முன்னால் என்ன நடந்ததாம்? பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்கிறது அதே நாளிதழில் இன்னொரு செய்தி. நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நிதியமைச்சரை சபாநாயகர் அழைத்தபிறகு, நாங்கள் தான் முதலில் பேசுவோம் என்று வாக்குவாதம் செய்வது என்ன நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை? வெளிநடப்பு செய்வதற்கென்றே சபைக்கு வருகிற திமுகவினருக்கு தாங்கள் முதலில் பேச அனுமதிக்கப்படவேண்டும் என்று அமளி செய்ததெல்லாம் வெறும் சால்ஜாப்பு மட்டுமே.  .

என்னுடைய கேள்வியெல்லாம், இப்படி சவடாலாக வெளிநடப்பு செய்கிறோமென்று பெஞ்சைத் தேய்த்து விட்டு வரும் திமுகவினருக்கு சட்டசபைக்குள் மறுபடி நுழைகிற வாய்ப்பைத் தந்தே ஆகவேண்டுமென்கிற தலையெழுத்து வாக்காளர்களுக்கு இருக்கிறதா?  

அதேபோல இலவசங்கள் என்கிற மாயையிலேயே மக்களை வைத்திருப்பதற்குக் கடன்சுமையை ஏற்றிக் கொண்டே வருகிற அதிமுகவுக்கும் கூட இன்னொரு வாய்ப்பைத் தந்தேயாகவேண்டுமென்கிற அவலம், தலையெழுத்து வாக்காளர்களுக்கு இருக்கிறதா? 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்புமுறை உள் ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பாமக இதற்கு ஆட்சேபணையைத் தெரிவித்தாலும்,அதைத்தாண்டி எதையும் செய்யமுடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. முகத்தையும் காப்பாற்றிக் கொண்டு, அதிக சீட்டும் அதிமுகவிடம் கேட்கலாம் என்கிற மருத்துவரின் நினைப்பிலும் மண்விழுந்து விடும்போல இருக்கிறது.  


பாண்டிச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்து வரலாறு படைத்த நாராயணசாமி திமுகவுடன் சேர்ந்து கெட்டது போதாதென்று இப்போது விசிகவின் திருமாவுடன் வேறு சேர்ந்து போராட்டம் நடத்துகிறாராம்! வேடிக்கை தான்! 

இப்படிக் கழகங்களுடன் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டு காசுபார்ப்பதற்காகவே கட்சி நடத்தும் பாமக, விசிக, இடதுசாரிகள் முதலான உதிரிகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டியது முன்னெப்போதையும் விட இப்போது அவசரமும் அவசியமுமாகி இருப்பது புரிகிறதா? இப்படி எல்லோரையும் நிராகரித்து விட்டு யாரைத்தான் தேர்ந்தெடுப்பதாம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

தாராளமாகக் கேளுங்கள்! இதுவரை உருப்படியாக எதுவுமே செய்திராத கட்சிகள், வேட்பாளர்களை முழுதாய் நிராகரிப்பதிலிருந்து, ஒரு மாற்று அரசியலைத் தேடி முன்னெடுப்போம். சேர்ந்தே செய்வோமா?

மீண்டும் சந்திப்போம். 

#அரசியல் யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே!

தினமலர் நாளிதழுக்கும் மு.க.அழகிரிக்கும் அந்த நாட்களில் இருந்தே அப்படி ஒரு ஏழாம் பொருத்தம்! அஞ்சா நெஞ்சனாக அழகிரி அந்தநாட்களில் மிரட்டி வந்த காலத்தில்,மதுரையில் தினமலரும் ஒரு பாடம் படிக்க வேண்டி வந்தது நிறையப்பேருக்கு மறந்து போனாலும் தினமலர் மறந்த மாதிரித் தெரியவில்லை.  


இந்த 3 நிமிட வீடியோவில் தினமலர் சற்றே எகத்தாளமாக நாங்க அப்போவே சொன்னோமில்ல ராகம்போட்டு மு.க.அழகிரி சைலண்டாகி விட்டதை கொஞ்சம் கண் மூக்கு காது வைத்துச் சொல்கிற வேடிக்கையில் என்ன தெரிகிறது?  தினமலர் இன்றைக்கு சொன்ன விஷயத்தை போன சனிக்கிழமைப் பதிவில் நண்பர் பந்துவுக்கு எழுதிய பின்னூட்டத்தில் அழகிரி அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்பதையும் சேர்த்தே தெளிவாகச் சொல்லியிருந்தேன். ஒவ்வொரு அரசியலுக்கும் பின்னால் உள்முரண்பாடுகள் இருப்பது புதிதல்ல! இங்கே நான் கேள்வி எழுப்புவது தினமலர் செய்தியின் கொக்கரிப்புக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைத்தான்!

ஊடகங்கள் காசுக்குக் கூவுகிற கூட்டம் தான்! அதனால் அப்படியே 100% அந்தக்கொள்கைப் பிடிப்பிலேயே இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது அவர்களுக்கு சௌகரியப்படுகிற வரையில் இந்தப்பக்கமாகக் கூவல்! சௌகரியங்கள் கொஞ்சம் மாறும்போது அந்தப் பக்கமாகவும் கூவுவார்கள்! மாறுவதற்கும் கூட அதிகக் காசு, சொந்த விரோதங்கள் காரணமாக இருக்கலாம், விவி மினெரல்ஸ் வைகுண்டராஜன் மீது சிபிஐ தொடுத்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை எனத்தீர்ப்பு  வந்திருக்கிற இந்தநேரத்தில் அவர் நடத்தும் நியூஸ் 7 சேனலில் அதைச் சொல்வார்களா? வேறு எவராவது இப்படி சிபிஐ விசாரணைக்குள்ளாகிற செய்தியை என்ன மாதிரித்திரித்து presenணை  செய்வார்கள்? FB யில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய விரிவான பகிர்வு இங்கே 
 

இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். கபில் சிபல் புகழ்பெற்ற வழக்கறிஞர். காங்கிரசுக்கு வாதாடுவதில் நிறையக்காசும் பார்த்தவர் என்பது தனியாகச் சொல்ல அவசியமே இல்லாத செய்தி. HTN திரங்கா டிவி என்று ஒரு செய்திச் சேனலை நடத்தி மோடி எதிர்ப்பை வைத்துக் காலம் தள்ளிவந்தார். பர்கா தத், கரண் தாப்பர் போன்ற உலகப்புகழ் பெற்ற மோடி எதிர்ப்பாளர்களை வைத்து நடந்த அந்த சேனல் சரியாக போணியாகாததால் இழுத்து மூடப்பட்டது. லட்சியப்பிடிப்பும் விசுவாசமும் மிகுந்த காங்கிரஸ்காரராக கபில் சிபல் இருந்திருந்தால் லாபநட்டக்கணக்கைப் பார்த்து ,சேனலை மூடியிருக்க மாட்டார்! சேனல் ஆரம்பித்ததும், மோடியை எதிர்த்ததும் காசுக்காக என்பதால் போணியாகாத மோடி எதிர்ப்பு, சேனலை மூடுவதில் முடிந்தது. அதுதான் பெரும்பாலான ஊடகங்களின் பக்கச்சாய்வுக்கு முதற்காரணமாக இருப்பது புரிகிறதா?  

.

கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் நிறையப் பட்டும் கையைச் சுட்டுக்கொண்டும் கற்றுக்கொண்ட அந்த  அனுபவமே இந்தப்பாடலில் வெளிப்பட்டிருக்கிதென்று சொல்வார்கள்.

இந்திய வாக்காளர்களாகிய நாமும் கூடத் தேர்தலுக்குத் தேர்தல் நிறையப்பட்டும் கெட்டும் கையைச் சுட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா? இனியாவது கற்றுக்கொள்ள முயற்சி செய்யப்போகிறோமா?

வருகிற சட்டசபைத் தேர்தல்களில் எங்களை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு கதியே இல்லை என்கிற மிதப்பில் இருக்கிற இரண்டு கழகங்களுக்கும் மப்பைக் குறைத்தாக வேண்டும் கூட்டணி என்!ற பெயரில் சேர்ந்து கூத்தடிக்கும் உதிரிக்கட்சிகளை அறவே நிராகரிப்பது முதற்படி! மைனாரிட்டிகளைக் குளிர்விக்கிற சாக்கில் பெரும்பான்மையை அவமதிக்கும் எவருக்கும் வாக்கு இல்லை என்ற உறுதியோடு இருப்பது இரண்டாவது படி 

தொகுதியின் வேட்பாளருடைய தகுதி, கடந்தகாலப் பின்னணி, இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறார், இனி என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் கேள்விகேளுங்கள்

நீங்கள் மட்டும் இப்படி ஒரு மாற்றத்துக்குத் தயாரானால் போதுமா? நண்பர்களிடமும் எடுத்துச் சொல்லித் தயார் செய்யுங்கள்! அவர்களையும் அதேமாதிரி நண்பர்கள் வட்டத்தை விரிவு படுத்த உற்சாகப்படுத்துங்கள்.

மாற்றத்துக்குத் தயாராவது, மாற்றத்துக்கான கருவியாக இருப்பது இவை இரண்டும் இந்த நேரத்தின் அவசரமும் அவசியமும்!

மீண்டும் சந்திப்போம்.     
   
       

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் புதுச்சேரி கச்சேரி பாட்டு ஒண்ணு படிச்சேன்!

புதுச்சேரி சட்டசபையில் வி, நாராயணசாமி புதிய சாதனை ஒன்றைப்படைத்திருக்கிறார்! நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஒன்றரை மணிநேரம் பேசியவர், தீர்மானத்தை அப்படியே அம்போவென விட்டுவிட்டு வெளிநடப்பு செய்ததோடு, துணைநிலை ஆளுநரைச் சந்தித்துத் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.இனி  ஆளுநர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்கிற அங்கலாய்ப்பு வேறு! புதுச்சேரி சபாநாயகர், ஆளும் தரப்பு மெஜாரிட்டியை நிரூபிக்காமல், தீர்மானம் தோற்று விட்டதாக மங்களம் பாடிவிட்டார் என்ற நிலையில் துணைநிலை ஆளுநர் என்னசெய்யப் போகிறார்? சாதாரணமாக, மாற்று ஏற்பாடு செய்கிற வரை, ஒரு காபந்து அரசாகச் செயல்பட முதல்வரை வேண்டிக்கொள்கிற வழக்கம் இங்கேயும் நடந்ததா? 



சபாநாயகரின் முடிவு தவறு என்று வெளியே வந்து பேட்டி அளித்த நாராயணசாமி, தனது எதிர்ப்பை அங்கேயே பதிவு செய்யாமல் வெளிநடப்பு செய்தது ஏன்? உடனே ஓடிப்போய் துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தது ஏன்? நாசா அதற்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை. மாற்று அரசு அமைக்கிற எண்ணம் இல்லை என பிஜேபி அறிவித்திருக்கிற நிலையில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது


இத்தாலிய மாமியா அந்தோனியோ மைனோ பிரதமர் மோடிக்கு  பெட்ரோல் விலை உயர்வு குறித்துக் கடிதம் எழுதுகிற நாடகம் நடத்தினார். மச்சான் ராகுல் காண்டி வயநாடு தொகுதியில்  ட்ராக்டர் ஓட்டி ஷோ நடத்திக்  காட்டுகிறார். மாப்பிள்ளை வாத்ரா மட்டும் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு சைக்கிளில் ஆபீசுக்குப் போகிற டிராமாவை (தொர ஆபீசுக்கெல்லாம் போவுதா?) நடத்தினார் என்று ஹிந்து நாளிதழ் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறது. தொர சைக்கிள் ஓட்டிப்போன நாடகத்தில் முன்னும் பின்னும் எத்தனை கார்கள் அணிவகுத்துப் போயின என்பதையும் எண்ணிச் சொல்லி இருக்கலாம்!   
  

அக்னிப் பரீட்சை என்பது நிகழ்ச்சியின் பெயர். அது  யாருக்கு என்பதை இந்த 36 நிமிட வீடியோவில் பார்த்து ரசியுங்களேன்!

Stanley Rajan  9ம.  முகநூலில் பகிர்ந்தது 
 · 
தவளையும் ஓணானும் பிடித்து கொண்டு தன்னை மாவீரன் என கருதி கொண்டவன் சிங்கத்திடம் சிக்கினால் எப்படி இருக்கும்? அப்படித்தான்  மு.க ஸ்டாலினையோ சீமானையோ பேட்டி எடுப்பது போல் நிர்மலா சீதாராமனிடம் பேட்டி எடுக்க சென்று கதற கதற அடி வாங்குகின்றார் கார்த்திகை செல்வன்
நிதியமைச்சரின் செவிட்டில் அடிக்கும் பதிலுக்கு அவரிடம் பதில் இல்லை, அம்மையாரின் தீர்க்கமான பதிலில் இன்னொரு கன்னத்தையும் காட்டி கொண்டு அவர் நிற்பது பரிதாபமாக இருக்கின்றது
"ஊறுகாய் மாமி" என திராவிட கும்பலால் பட்டம் சூட்டபட்ட நிர்மலா கார்த்திகை செல்வனை ஊற போட்டு அடித்து துவைத்துவிட்டார் 

தமிழ்நாட்டில் இப்போதைக்கு நிர்மலாவிடம் பேட்டி எடுத்து தப்பிவிட ஒரு பத்திரிகையாளனும் இல்லை, ஆண்மை இருந்தால் எவனாவது முயற்சித்து பார்க்கட்டும்! மிக துல்லியமான தரவுகள், குழப்பமே இல்லாத பதில்கள், தன் நேர்மையினை மட்டுமல்ல தன் அமைச்சரவை நேர்மையினையே நிரூபித்து நிற்கும் ஆளுமை, பதற்றமே இல்லாத வாதம் என விஸ்வரூபமெடுத்து நின்றார் நிர்மலா

அவரிடம் கேட்க எந்த கேள்வியுமில்லை என்ற பரிதாப நிலைக்கு தள்ளபட்டார் கார்த்திகை செல்வனார்.
திராவிட பத்திரிகா தர்மம் இப்படித்தான் இருக்கின்றது, இவர்கள் வளர்த்த பத்திரிகை சுதந்திரம் இதுதான்
ராம்சாமி, திராவிடம், சமூகநீதி என குண்டு சட்டிக்குள் கழுதை ஓட்டி அதை தாண்டி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி பத்திரிகை சமூகத்தை உருவாக்கியதுதான் இவர்கள் சாதனை!

நல்ல வேளையாக மோடிக்கு தமிழ் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இந்நேரம் தமிழக மீடியா கோஷ்டியெல்லாம் இலங்கைக்கு தப்பி ஓடியிருக்கும்! நிர்மலா ஏன் மத்திய அமைச்சரானார், இப்பொழுது ஏன் களத்தில் இறக்கபடுகின்றார் என்பதற்கான விடைகள் ஒன்றும் கடினமானதல்ல‌. இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்பதுதான் விஷயம்  

ஆனாலும் நிர்மலா சீதாராமனை குறை சொல்ல வேண்டுமே என்பதற்காகவே குறை சொல்கிற போக்கு இங்கே தமிழ்ச்சாதியின் விதி போல 


மீண்டும் சந்திப்போம். 

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்! பிப்ரவரி 21, தரிசன நாள்!

பிப்ரவரி 21, பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் மிகச் சிறப்பான தரிசன நாட்களுள் ஒன்று! இந்த நாள் ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாள் என்பதுதான் விசேஷம்! ஸ்ரீ அரவிந்தராலே, சாதகர்களுக்கும் யே அன்னை என்று சாதகர்களுக்கு அறிவிக்கப்பட்டவர், பெற்ற தாயாகவே இவனைப்போன்ற பலருக்கும், அணுக்கமாக இருந்த ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கும் இன்றும் அருள்பாலிப்பவர்!   ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் என்று உருவானதில் அன்னையின் பங்கே அதிகம்.. 


ஸ்ரீ அரவிந்த அன்னை என்று சொல்லும் போதே, இன்றும் ஆசிரமத்தில் வழங்கப்படும் தரிசன நாள் செய்தி, மலர் பிரசாதம், மலர் வழிபாடு இப்படி ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், பால்கனி தரிசனம் என்பதும் மிகவும் விசேஷமானது. அது எப்படி ஆரம்பித்தது என்று சில சுவாரசியமான தகவல்களுடன் அரவிந்த் என்கிற ஆசிரமவாசி, நேற்றைக்கு இந்த 19 நிமிட வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.

இது இன்றைய  தரிசனநாள் செய்தியின் முகப்பு. 


இது இன்றைய தரிசன நாள் செய்தி.


 
ISTM குழு அன்பர் ஒருவர் அன்னைக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இந்தப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலே வீடியோவுக்கும், இந்தப் படத்துக்கும் ISTM குழுவுக்கு மிகுந்த நன்றி.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே    

இது ஸ்ரீஅரவிந்தர் அன்னையைத் தியானிக்க அருளிய மந்திரம்! ஸ்ரீ அரவிந்த அன்னை என்றென்றைக்கும் நம்மோடு துணையிருப்பாளாக! பிரார்த்தனைகளுடன்! 

    

இட்லி வடை பொங்கல்! #75 IPAC பிரசாந்த் கிஷோர்! சவுக்கு சங்கர்! கோட்டைவாய் #நாசா !

தமிழகத் தேர்தல்களம் ஏன் இப்படி டல்லடித்துக் கிடக்கிறது? "வேற லெவல்".. ஒரேடியாக எகிறிய இமேஜ்! ஃபார்முக்கு வந்த ராகுல்.. அண்ணனாக, மகனாக.. பொங்கும் பாசம்! என்று ஒன் இந்தியா தமிழில் உருகுகிறார்கள் என்றால் H ராஜாவும் கோலாகல ஸ்ரீனிவாசும் இந்த 44 நிமிட நேர்காணலில் காங். தலைமையில் 3வது அணி’: ஹெச். ராஜா பகீர்! என்று செம காமெடி செய்கிறார்கள்!  இதனால் மட்டும்  தமிழகத் தேர்தல் களம் சூடான பதத்துக்கு வந்து விட்டதாகச் சொல்ல முடியாதே! 


மேலே வீடியோ 33 நிமிடம் ரெட்பிக்ஸ் தளத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் , சவுக்கு சங்கர் இருவரையும்  தரமான, நம்பகமான ஊடகக்காரர்களாக நான் எப்போதுமே நினைத்ததில்லை, ஆனாலும் தேர்தல் நேரம் எப்போதும்  காமெடி நேரமாகவே இருப்பதால் எல்லாக் கோமாளிகளையும் வேடிக்கை பார்த்துவிடுவது எனக்கு வாடிக்கை இந்த வீடியோவில் சவுக்கு சங்கர் பிரசாந்த் கிஷோர் பற்றியும் psephology, data schience என்ற பெயரில் இங்கே சில இந்திய நிறுவனங்கள் பற்றியும் மேலோட்டமாகப் பேசுவதை, வேறு எவரும் தொடாத சப்ஜெக்ட் என்பதால் இங்கே இந்தப்பதிவிலும்! திமுகவுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி நிழல் யுத்தமாகத் தொடர்வதைப்பற்றி வேறு யாராவது பேசியிருக்கிறார்களா என்ன?         

திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?  இப்படித் தலைப்பிட்டு BBC தமிழ் செய்தித் தளத்தில் ஜூனியர் விகடன் ரேஞ்சுக்கு நன்றாகக் கதைத்திருக்கிறார்கள்! மோதல் இருப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் 2021 இல் எப்படியாவது CM ஆகியே தீருவது என்று றெக்க கட்டிப்பறக்காத குறையாக இசுடாலின் பிரசாந்த் கிஷோரை முழுமையாக நம்பிக் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் போது கட்சிக் காரர்கள் பொருமலையெல்லாம் சட்டை செய்வாரா என்ன? ஆக, பிரசாந்த் கிஷோரை நம்பிக்கெட்டவர்கள் லிஸ்டில் இசுடாயினும், இலவுகாத்தகிளியாக சேரப் போகிறார் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல? நண்பர் நெல்லைத்தமிழன் முரளி இந்த அனுமானத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்தான்! அதனால் சொல்லாமல் விட்டு விட முடியுமா?😃😄 


வருகிற திங்கட்கிழமை கோட்டைவாய் நாசாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது! இந்த 5 நிமிட வீடியோவில் மத்திய அமைச்சராக இருந்த சமயம் அமைதியாக இருந்த நாராயணசாமி என்று சொல்கிறார்களே! இந்தக் கொடுமையை, தலை சுற்றலோடு  எந்த விதமான காமெடியில் சேர்ப்பது என்று புரியாமல் பதிவை முடிக்கிறேன்!  

மீண்டும் சந்திப்போம். 

#பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது! ஆனால் தமிழ்நாடு?

Dr.தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டவுடனேயே, தனது கடமையை செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பது காங்கிரஸ் மற்றும்  திமுகவுக்கு கலக்கத்தை உண்டுபண்ணி இருக்கிறது


நாராயணசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதா இல்லையா என்பதை சட்டமன்றத்தில் தான்  நிரூபிக்க வேண்டும் என்பதை S.R. பொம்மை வழக்கு அதன் பின்னர் வேறு சில வழக்குகளிலும் நீதிமன்றம் தெளிவாக்கிய பிறகு, துணை நிலை ஆளுநர் உத்தரவு மீது குறை சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசியல் களம் சூடாவதற்கு முன்னாலேயே புதுச்சேரி அரசியல் களம் சூடேறிவிட்டது. கோட்டைவாய் நாசாவுக்கு இப்போது இரண்டே வழிகள் தான் முன்னால் இருக்கின்றன ஒன்று  கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அவை கூடுவதற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்திப்பது அல்லது திங்கட்கிழமை அவையைக் கூட்டி அங்கே பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நிமிடம் வரை முயற்சி செய்வது. இந்த இரண்டில் எதைச் செய்தாலும் நாசாவுடைய அரசியலுக்கு அஸ்தமன காலம்தான் என்பது மட்டும் நிச்சயம்! 


புதுச்சேரி விவகாரத்தில் என்னநடக்கப்போகிறது? திமுக சார்பு ஊடகங்கள் இதைப்பற்றிப் பேசுவார்களா, என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் இனிமேல் தான் தேடிப்
பார்க்கவேண்டும்.கோலாகல  ஸ்ரீனிவாஸ் போன்ற சிலர் இந்த நேரத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருப்பது என்னவோ நிஜம்.

தேதிமுகவை அதிமுக கழற்றிவிடப்போகிறது என்கிற மாதிரி நிறைய ஆரூடங்கள் உலாவருவதை நான் நம்பவில்லை. அதேபோல காங்கிரசுக்கு ரோஷம் வந்து கமல் காசர், மற்றும் சில உதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்பதும் கூட அப்படித்தான்! எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்பதை இரண்டு கழகங்களும் வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே தமிழக அரசியல் களமும் தேர்தல் களமும் சூடேறும் என்பதை நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன!

மீண்டும் சந்திப்போம்  

#1300 உடைந்து நொறுங்கும் பிம்பங்கள்! #திராவிடமாயை #இந்தோசீனிபாய்பாய்

பொய்களால் கட்டமைக்கப்பட்ட பிம்ப, ங்கள் எத்தனை நாள் தாக்குப்பிடிக்குமென்று நினைக்கிறீர்கள்? ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி இப்படி திராவிட மாயைகள் தொடர்ந்து பரப்புரை பில்டப் கொடுத்தே கட்டமைத்த பிம்பங்கள் ஒவ்வொன்றாகச் சரிந்து, கரைந்துவரும் காலம் இது சற்று முன் மாரிதாஸ் வலையேற்றிய இந்தக் காணொளி இன்னும் விளக்கமாகச் சொல்கிறது.


ஈவெரா உண்மையிலேயே பாவம்! தாடிக்கார நாயக்கர் அவர் பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் தனக்குப்பட்டதை வாய்விட்டு உளறிக்கொண்டிருந்தார். எப்போதுமே ஒரே நிலையில் நின்றதில்லை. முன்னுக்குப்பின் முரணாக விளங்கிக் கொள்ளமுடியாதவராகவே கடைசி வரை வாழ்ந்தார், இறந்தார். அவ்வளவுதான்! அதற்குமேல் அவரைப்பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே  இல்லாதபோது ஈவெராவே நினைத்துப்பாராதவிதமாக அவருடைய பிம்பம் இங்கே தொடர்பொய்கள், பரப்புரைகள் வழியாகக் கட்டமைக்கப்பட்டதன் பின்னணி கொஞ்சம் விபரீதமான விஷயம் தான்!  வீடியோ 21 நிமிடம் தான்! அவசியம் பார்க்கவேண்டுமென பரிந்துரைக்கிறேன். 

இந்த 25 நிமிட வீடியோவில் சேகர் குப்தா, சீன ராணுவம் (PLA) இந்தியாவின் ( யுத்த)) தந்திரோபாயங்களை எப்படிப் புரிந்துகொள்கிறது, (அதன் மீது தன்னுடைய தந்திரோபாயங்களை எப்படித் தீர்மானிக்கிறது என்று சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்) என்பதை  2013 இல் வெளியான ஒரு ஆவணத்தை வைத்து சுருக்கமாகச்  சொல்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவேண்டிய காணொளியாகப்  பரிந்துரை செய்கிறேன். 

இந்தப்பக்கங்களில் இது #1300 வது பதிவு.  

 மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல்படுத்தும்பாடு

உள்ளூர் அரசியல் தான் படுத்துகிறது என்று பார்த்தால் அங்கே அமெரிக்க அரசியல் அதற்குமேல் அபத்தக் களஞ்சியமாக இருப்பதை யாரேனும் கவனிக்கிறீர்களா? பல வருடங்களுக்கு முன்னால் இர்விங் வாலஸ் எழுதிய The Man என்கிற நாவலைப் பற்றி இந்தப் பக்கங்களில் விரிவாக பகிர்ந்ததுண்டு. ஒரு அரசின்  உயர்பொறுப்பில் இருப்பவர்களைத் தகுதி நீக்கம் Impeach செய்வது பற்றி என்னுடைய மாணவப்பருவத்தில் முதன்முதலாக அறிந்து கொண்டது அந்த நாவலில் தான்! நம்முடைய அரசியல் சாசனத்திலும் அதேபோல ஷரத்துக்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் அப்புறம் தான்! அரசியல் என்னென்னமாதிரி பாடுபடுத்தும் என்பதை ஒரு சின்னக் காணொளியாக: 


டொனால்ட் ட்ரம்புக்கு முன்னால் இரு அதிபர்கள் ஆன்ரூ ஜான்சன், பில் க்ளின்டன் இப்படி அமெரிக்க காங்கிரசால் (நம்மூர் மக்களவை மாதிரி) தகுதி நீக்கம் செய்யப்பட சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார்கள் ரிச்சர்ட் நிக்சன் காங்கிரஸ் impeach  செய்வதற்கு முன்னாலேயே ராஜினாமா செய்துவிட்டார் ஆனால் டொனால்ட்  ட்ரம்ப் ஒருவர் மட்டுமே அமெரிக்க சரித்திரத்திலேயே இரண்டு முறை காங்கிரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமையை அல்ல, டெமாக்ரட்டுகளின் சிறுமையை வெளிப்படுத்துவதாக இருப்பதை மேலே 10  நிமிட வீடியோவில் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்க அரசியல் சாசனம் மிகத்தெளிவாக பதவியில் இருப்பவர்களைத் தகுதிநீக்கம் செய்வதைப் பற்றி மட்டுமே பேசுகிறது அமெரிக்க டெமாக்ரட்டுகள் ஒருபடி மேலே போய், பதவிக்காலம் முடிந்து, இப்போது முன்னாள் அதிபர் என்ற அடைமொழி மட்டுமே இருக்கிறவரையும் தகுதி நீக்கம் செய்யப் போகிறார்களாம்! நாளை 9/2/21 அன்று அமெரிக்க செனெட்டில் விசாரணை ஆரம்பம். எப்படியிருக்கும் என்பதை நேரலையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.(தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை காங்கிரசில் மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு இருந்தால் போதும். தகுதி நீக்கம் குறித்த விசாரணை செனெட்டில் தான் நடந்தாகவேண்டும்) அதிக விவரங்களுக்கு இங்கே

விதியே விதியே! என் தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்? என நொந்து கொள்ள வைத்த இரண்டு நேர்காணல்கள் ஒன்று டாக்டர் தமிழிசை 31 நிமிடம் மற்றொன்று இசுடாலின்  38 நிமிடம்  அரசியல் பார்வையாளனாக இருப்பது எத்தனை கொடுமை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அதிலுள்ள  தமாஷையும் அனுபவிக்க வேண்டுமே, அதற்காகவும் தான்!  


ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மாலை, கும்பிடு போட்டதாகச் செய்தி வந்ததெல்லாம் சரிதான்!  

ஜெயிலுக்குப்போவதற்கு முன்னால் செத்தாலும் விட மாட்டேன் பாணியில் மூன்று முறை ஜெ. சமாதியில் ஓங்கி அறைந்து சபதம் போட்ட மாதிரி ஏதாவது இன்றைக்கும் நடந்ததா? 

மீண்டும் சந்திப்போம்.    


#துக்ளக் ரமேஷ்! #ரஜனிகாந்த் மறுபடியும் முதல்லேருந்தா? #சினிமா என்றால் சீரழிவு!

அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதன்மீது நேர்மையாகத் தனது விமரிசனங்கள், கருத்தைப் பதிவு செய்வது தமிழக ஊடகச் சூழலில் அரிதிலும் அரிது ஆனால் ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பது உண்மை. துக்ளக் வார இதழின் தலைமைச் செய்தியாளராக இருக்கும் திரு.ரமேஷ், அப்படி ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர் என்பது என்னுடைய கருத்து சொல்லவந்ததைப் பூசி மெழுகாமல், பொய்க்கலப்பில்லாமல் ஆணித்தரமாக எடுத்து வைப்பது துக்ளக் ரமேஷுடைய பாணி! 


இந்த 26 நிமிட வீடியோவில் முதல் 3 நிமிடங்களை FF செய்துவிடலாம்! ஒரிஜினல் பேட்டி 23 நிமிடம் இதில் TTV தினகரனின் அமமுக (உண்மையில் VK சசிகலா) என்ன மாதிரியான தாக்கம், அதாவது அதிமுகவுக்கு எவ்வளவு சேதம் என்று இதர ஊடகங்கள் ஆவலோடு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிற சப்ஜெக்ட் மீது சிம்பிளாகச் சொல்லிவிடுகிறார் (சசிகலாவின் நோக்கம் என்னவாக இருந்தாலும் தீயசக்தி திமுகவை எதிர்ப்பது என்பதிலிருந்து விலகமுடியாது;விலகினால் அது  அரசியல் தற்கொலை என்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்றா என்ன?) அப்படியே திமுகவின் வேல்பிடித்து போஸ் கொடுக்கிற அரசியலின் போலித்தனம், தேமுதிக கொஞ்சம் அதிக சீட் எதிர்பார்க்கிற விவகாரம், திமுக கூட்டணியில் இன்னும் தொடர்கிற குழப்பங்கள் என்று தமிழக அரசியல் களநிலவரங்களை, நேரடியாகவே சொல்லிவிடுகிறார் என்பது நான் இந்த நேர்காணலைப் பரிந்துரை செய்வதற்கான காரணம். பாருங்களேன்!


வீடியோ 3 நிமிடத்துக்கும் குறைவு, மறுபடியும் முதலில் இருந்தா? இப்படி அயர்ச்சி எல்லாம் எனக்கு இல்லவே இல்லை! நாயைஆட்டுவிக்கும் வாலாக இருப்பது யார்?சினிமா  KD brothers மட்டுமே தானா? அர்ஜுன மூர்த்தி, அப்புறம் லதா ரஜனிகாந்த், இப்போது இந்த RMM ராஜா. இன்னும் எத்தனைபேர் அந்த மனிதர்  பெயரைச் சொல்லிக்கொண்டு  யாரைக்குழப்ப அல்லது பயமுறுத்த நினைக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா? 

தமிழக அரசியலில் சினிமா புகுந்து எப்படி இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்! ஆனால் இதைக்குறித்து என்ன செய்வது என்று யாருக்குமே, (சினிமாத்துறையில் சிக்கிச் சீரழிந்தவர்களையும் சேர்த்துத்தான்) தெரியவில்லை! 


7th சேனல் மாணிக்கம் நாராயணனுடன் சித்ரா லட்சுமணன் உரையாடல் 27 நிமிடம். வெள்ளித்திரைக்கு பின்னால் இருக்கும் அவலங்கள், துயரங்களை, இந்த வீடியோவை வைத்து முகநூலில் சிவகாசிக்காரன் வலைப்பதிவர் ராம்குமார் அருமையான பகிர்வை நேற்றைக்கு எழுதியிருக்கிறார்

மீண்டும் சந்திப்போம்.

ஒரு புதன் கிழமை! #பழ.கருப்பையா #தராசுஷ்யாம் #பொதுத்துறை

பழ.கருப்பையா பழைய காங்கிரஸ்காரர். அங்கிருந்து  அதிமுகவுக்குப் போனார், அங்கிருந்தும் வெளியேறி திமுகவை ஆதரிக்க ஆரம்பித்தார். அப்புறம் அதையும் மாற்றிக் கொண்டார். பல இடங்களுக்கு மாறினாலும், காமராஜர் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் ஞாபகம் அவ்வப்போது வந்து விடுவதைத் தவிர்க்க முடியாமல் கொஞ்சம் நியாயமாகவும் பேசி விடுகிறார் என்பது செட்டியாருடைய தனிப்பட்ட சோகம்.


இந்த 19 நிமிட வீடியோவை இன்றுதான் பார்த்தேன். ஏதோ ஒரு புதுக்கட்சியின் கூட்டத்தில் பேசுகிறார், ஆனால் எங்கே, எப்போது, பேசிய மொத்தமும் இவ்வளவு தானா என்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காமராஜர் அந்தநாட்களில் சொன்னதுதான்! திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்! அதையே இன்றைய அரசியல் சூழலோடு பொருத்தி, திமுக, அதிமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும், அதிமுக, திமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும் எத்தனை போலித்தனமானது என்று பழ.கருப்பையா  எழுப்புகிற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறதா? இந்தக்கேள்விக்கு  நண்பர்கள்தான் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல வேண்டும். 


தராசு ஷ்யாம்! இன்றைய தலைமுறைக்கு, அவ்வப்போது தமிழ் ஊடகங்களில் அரசியல் கருத்துக்களை சொல்கிற நபராக மட்டும் தான் தெரிந்திருக்கும்! Investigative  Journalism என்பதைத் தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாக்கியவர். தராசு என்ற வார இதழின் ஆசிரியராக இருந்து, செய்திகளை வைத்தே  காசு பறிக்கும் வித்தையின் முன்னோடி. நக்கீரன் கோபால் இவருடைய தராசில் இருந்து உருவானவர்தான் என்பது நிறையப்பேருக்குத் தெரியுமோ தெரியாதோ? இந்த 6 நிமிட வீடியோவில் கேள்வியே சசிகலா வருவதால் அதிமுகவில் பிளவு, பின்னடைவு வருமா என்பதுதான். புலனாய்வுப் பத்திரிகையாளர் தெளிவாக எதையாவது சொன்னாரா என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! தேர்தல்களம் சூடாகும்போது இவர்போல இன்னும் நூறுபேர் கிளம்பி ஊடகங்களில் நம்மைக் குழப்புவதற்காகவே வருவார்கள் என்று எச்சரிக்கை செய்வதற்காகத்தான் ஒரு சின்ன சாம்பிள்.

பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றிரண்டை தவிர மற்றவை...மக்கள் வரிப்பணத்தை ஏராளமாக விழுங்கிக் கொண்டும், ஏராளமான அசையா சொத்துகளைக் கொண்டிருந்தும்...நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது தான் கள எதார்த்தம்.
இவை ஏன் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குகின்றன?
''நஷ்டத்தில் இயங்கும்'' பொதுத்துறை நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவையில் துரிதமாக/ வேகமாக இயங்குகின்றனவா என்றால் இல்லை.
பொதுமக்களுக்கான சேவையில் இழுத்தடிப்புகள்,தாமதங்கள் இன்றி..குறிப்பிட்ட காலவரையறைக்குள் சேவையை அளிக்கின்றனவா என்றால் இல்லை.
பணியாளர்களையும் ஓரளவிற்கு மேல் கேள்வி கேட்கவோ...பணியில் சிறப்பாக முனைப்புடன் பணியாற்றுமாறு வலியுறுத்தவோ முடியாது. யூனியன்,போராட்டம் என்று பிரச்சினைகள் திசை மாற்றப்பட்டுவிடும்.
உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளோ...இன்ன பிற நியமனங்களோ .. அரசியல் அழுத்தமின்றி நடப்பதில்லை. அரசியலுக்கான தளமாக இருக்கிறது என்பதைத்தவிர மக்கள் பெறும் பயன் என்ன ?
அனைத்திற்கும் மேலாக....பொதுத்துறை நிறுவனங்களில்.. ஊழலின் சதவிகிதம் என்ன ??????????????
மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றாமல், அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தையும் ஏராளமாய் விழுங்கிக் கொண்டு இருக்கும் ..''நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் என்ன தவறு ? என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
தனியார் ஏற்படுத்தும் போட்டியில்...மக்களுக்கு.. 'குறைந்த விலையில் சேவைகளை பெறுவது' என்கிற பயன் கிடைக்கிறது...என்பது களம் உணர்த்தும் எதார்த்தம். மக்கள் உணரும் எதார்த்தம்.
இன்னொரு கோணத்தில்..
பணிப்பாதுகாப்பு, நஷ்டத்தில் இயங்கினாலும் இயற்கை & செயற்கை பேரிடர் காலங்களில் ..துரிதமான , இலவசமான சேவைக்கு அரசுக்கு பயன்படுவது பொதுத்துறை என்பதும் கள எதார்த்தம்.
இருப்பினும்...மக்களிடம் ஆதரவில்லை. ஏன் ?
அடிப்படையில்...அரசியல் நுழைந்து... யூனியன், போராட்டம், அரசுக்கு நெருக்கடி தருவது, ஊழல்... போன்ற சுயநல அரசியல் செயல்பாடுகளால் வீணாகிப் போய் ....பொதுமக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றன பொதுத்துறை நிறுவனங்கள் என்பதே உண்மை. ஜனநாயக நாட்டு மக்களின் அடிப்படையான இக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல்...வெறுமனே தனியார் மயம் கூடாது என்கிற அரசியல் கோஷங்கள் ...வேடிக்கையானவை. தனியார் மயத்தை எதிர்த்து கோஷமிடுவது... ஆகப்பெரும் முதலாளிகளாக / தொழிலதிபர்களாக இருக்கும் 'அரசியல்வாதிகள்' என்பது இன்னுமொரு வேடிக்கை.      
   
பொதுத்துறை இங்கே யாருக்காக? பொதுத்துறை பற்றி இந்தப்பக்கங்களில் நிறையப்பேசி இருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்தி ......

மீண்டும் சந்திப்போம்.

#2021பட்ஜெட் #சுப்ரமணியன்சுவாமி ஒரு பஞ்ச்சுடன் தமிழ்நாடு #ஆளுநர்உரை

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம், டில்லிக்குள் ட்ராக்டர் பேரணி அத்துமீறி வன்முறையில் இறங்கியதில், மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.பிப்ரவரி 1 (நேற்று) அன்று நாடாளு மன்றத்தை நோக்கிப் பேரணி என்று அறிவித்திருந்ததுமே பிசுபிசுத்ததில் ஜகா வாங்குகிற மாதிரியாகிப் போனதில், காங்கிரஸ், இடது சாரிகள் முதலான துண்டு துக்காணிக் கட்சிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்! அடி! நேற்றைக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை நேரலையில் பார்த்துக் கொண்டு, ஊடகங்களில் கருத்து கந்தசாமிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுது ஒருவாறாகக் கடந்தும் போய்விட்டது. உள்ளூர் சேனல்கள் என்னமாதிரிப் புலம்பிக் கொண்டிருந்தன, திமுக+ என்ன எதிர்மறையாகச் சொல்லின என்பதை இன்றுதான் கொஞ்சம் ஆற அமரப் பார்த்தேன்.

சேகர் குப்தாவின் ஒருபக்கச் சார்பு தெரிந்த விஷயம்! ஆனாலும் இங்கே லயோலாத்தனமான ஊடங்களைப் போல முழுப்பூசணிக்காயை ஒருசில சோற்றுப் பருக்கைக்குள் மறைக்கிற வேலை அவ..ரிடம் இல்லை. (லயோலா கல்லூரியில் திரிக்கிற வேலை படிக்காதவர் என்பதால் கூட இருக்கலாம்!) எதிர்க்கட்சிகளிடம் இருந்து வராத ஒரு பட்ஜெட் மதிப்பீட்டை, அவர்கள் இடத்தில் இருந்து சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில் சொல்வதை பார்க்கலாம்.


இது ஹிந்து ஆங்கில நாளிதழின் 6 நிமிட ஹைலைட்ஸ். பட்ஜெட்டை லாலிபாப் என்று சொன்ன இசுடாலின், ஆட்சி முடிவதற்குள் பொதுத்துறையை விற்று விடுவார்கள் என்று பொருமுவதையே பொருளாதார மேதைமையாகக் கருதும் பானாசீனா போன்றவர்களை இடது கையால் புறந்தள்ளிவிடலாம்! 


டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! பொருளாதாரம் தெரிந்த, போதித்த ஒருவர்.அவரிடம் வெறும் 6 மாதம் மாணவராய் இருந்ததாலேயே பானாசீனா பொருளாதார மேதை ஆகிவிடுவாரா என்ன?


சோனியா வகையறாவை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற்றிய சாதனை ஒன்று தான் இன்னமும் இவர் என்ன சொல்கிறார் என்று அவ்வப்போது  கொண்டிருப்பது! அதற்காக சுவாமி சொல்கிற எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமா? மேலே அவர் சொன்னது உண்மையிலேயே சரியான தீர்வுதானா? எந்தவொரு சித்தாந்தப் பின்னணியும், எந்தவொரு உறுதியான நிலைப்பாடும், தன்னிஷ்டம்போல கருத்துக்களைப் பொதுவெளியில் அள்ளியிறைப்பதுமே இவரை வெறும் Loose Cannon (நம்பமுடியாத பீரங்கி) ஆக வைத்திருக்கிறது. நரேந்திர மோடி இவரை ராஜ்யசபா எம்பி ஆக்கினதோடு  சரி, சுவாமி எதிர்பார்த்த நிதி அமைச்சர் பதவி கொடுக்கவேயில்லை! சரிதானென்று இப்போது புரிகிறதா? போதாக்குறைக்கு சுவாமிக்கு இப்போது 82 வயதாகிவிட்டது.


  
ஒரு பஞ்ச்சுடன் தமிழ்நாடு #ஆளுநர்உரை 😎😍  எங்கே வெளிநடப்பு வாடிக்கையை மறந்துவிடுவார்களோ என்கிற அக்கறையில் சொன்னதற்கு அதிர்ச்சி அடைவானேன்? !! இந்த பஞ்ச் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

மீண்டும் சந்திப்போம்.