அம்மா! தம்பி என் விரலைக் கடிச்சுட்டான்......!

கொஞ்சம் மாறுதலுக்குப் படம் காட்டப் போறேன்!

பாராட்டு விழா,  சினிமாவில் வீர வசனம் மேடையில் மண்டிபோட்டுக் கிடப்பது எல்லாம் இல்லை! நிஜமாகவே சூப்பர் வீடியோக்கள்!

இந்த மாதம் பதினைந்தாம் தேதி, யூட்யூப் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த தருணத்தை ஒட்டி, கார்டியன் பத்திரிகை, மிக அதிகமாகப் பார்க்கப் பட்ட யூட்யூப் வீடியோக்கள் ஐந்தை , வாழ்த்துக்களோடு வெளியிட்டிருக்கிறது.

அதில் நம்பர் ஒன்!ஒரு பொடியன், தனது தம்பி கடித்து விட்டான் என்று குதூகலமாகக் கத்துகிற இந்த வீடியோ தான் முதல் இடம்! வெளியிட்ட தருணம் வரை பதினாறு கோடியே ஒருலட்சத்து ஐமபதாயிரத்து ஐம்பத்திரண்டு தடவை பார்க்கப் பட்டதாம்! 

இப்போது 161,473,299 தரம் பார்வை இடப்பட்டதாகத்  தகவல் சொல்கிறது!

*******
குழந்தைகள் சிரிக்கும்போது இதயம் மலர்ந்து ரசிக்க முடிகிற அதே நேரம், நம்மூர் அரசியல்வாதிகள் அமைச்சுவியாதிகள் அடிக்கிற கூத்துக்களைப்  பார்த்தால் எரிச்சலும் வருகிறது! எரிச்சலோடு சிரிப்பும் வருகிறது!


ஏ கே அந்தோணி, அவ்வளவாக ஊழல் வதந்திகளுள் சிக்கிக் கொள்ளாத பாதுகாப்புத் தரை அமைச்சர்! பாகிஸ்தானில் 42 தீவீரவாதிகளுக்குப்  பயிற்சி அளிக்கிற முகாம்கள் இருப்பது அரசுக்குத் தெரியுமாம்! இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது!


தெரிந்து என்ன பண்ணிக் கிழிச்சீங்க அமைச்சரே! என்ன பண்ணிக் கிழிச்சீங்க?


கண்டனூர் பானா சீனா! பொருளாதார மேதையாகக் கிழிச்சுத் தொங்கவிட்டது போதும்னு உள்துறை அமைச்சர் பதவிக்கு மாற்றப்பட்டவர்! முத்தமிழ்வித்தகர் டாக்டர் கலைஞர் முன்பொரு சமயம் சிவகங்கைச் சின்னப் பையன் என்று குறிப்பிட்டதை, சொன்னவரே  கூட மறந்துபோன பிறகும் கூட நினைவு வைத்திருந்து செயல்படுகிறவர்!


பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்! எந்த முன் நிபந்தனையும் கிடையாது! அதெல்லாம் சரி! 


சும்மா டீக்  குடிக்கிற மாதிரி,  தம்மடிக்க  ஒதுங்கி வர்ற  மாதிரி, அங்கே இருந்து சுதந்திரமாத் தீவீர வாதிகள் இந்தியாவுக்குள் உலா வருவாங்களாம்! ஒத்தைப் பயல் காசாப், அவனைச் சிறையில் வைத்துப் பாதுகாப்பதற்கு முப்பத்தைந்து கோடி ரூப்பாய்க்கு மேல் செலவு செய்வாங்களாம்! அவனும் அவன் கூட்டாளிகளும் கொன்னு குவிச்ச ஜனங்களுக்கு மட்டும் அரசு அறிவிச்ச நிவாரணம் இன்னமும் போய்ச் சேராதாம்!  


இதெல்லாம் கிடக்கட்டும், வெளியூர்த் தீவீரவாதிகளுக்கு, பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் விதிக்காத அரசு சொல்வது, உள்ளூர் மாவோயிஸ்ட் தீவீர வாதிகள் விஷயத்தில் மட்டும், பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆனாக்க ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வர வேண்டுமாம்!


முன்னால் போனாக்க கடிக்கும், பின்னாடி வந்தாக்க உதைக்கும்னுட்டு எதையோ சொல்ற மாதிரி, முரண்பாடாத் தெரியலை?


கண்டனூர்க்  கண்டங்களில் இருந்து தேசத்தைக் காப்பாற்றவேண்டும், தேச முத்து மாரி! 


*******

இங்கே இந்தக் கூத்தையும் பாருங்க! துபாய்ல, ஹமாஸ் தீவீரவாத இயக்கத்தின் முக்கியப் புள்ளி ஒருத்தனைப் போட்டுத் தள்ளிட்டாங்க! போட்டுத்தள்ளினவங்க பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வச்சிருந்ததை வச்சு ஏகக் களேபரம்! இஸ்ரேல் உளவுத் துறையான மொசாத் தான் இதைச் செஞ்சிருக்கனும்னு துபாய்ப் போலீஸ் சொல்லுது! இன்டர்போல் மூலமா, மொசாத் தலைவரைக் கைது செய்ய வேணுமின்னும் வேகமா இருக்காங்க!

இதே துபாய்ல, தாவூத் இப்ராஹிமும் அவன் கூட்டாளிங்களும் ராஜாங்கமா உலவிக்கிட்டிருந்தாங்க! மும்பையில் எந்தக் குற்றம் நடந்தாலும் பின்னால இருக்கும் தாதா துபாய்ல ராஜா!
கிரிக்கெட் சூதாட்டம்னாலும் சரி, ஹிந்தித் திரைப்படங்களின் பின்னால் உலாவும் கருப்புப்பணம், பேரம் எதுவானாலும் சரி இப்படி நிழல் உலகத் தாதாக்கள் பிடியிலதான்றதும் கூட எல்லோருக்கும் தெரியும்! அரசுக்கும் கூடத் தெரியும்!

துபாய்ப் போலீஸ், இப்பத் துடிச்ச மாதிரி, குற்றங்களுக்கு எதிரா அப்ப எல்லாம் துடிச்ச மாதிரித் தெரியலையே!

நம்ம அரசாங்கம் கூட, தும்பையும் விட்டு வாலையும் விட்டு, வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருப்பதாகத் தான் ஞாபகம்! 
'You will see fire, and bullets, and deeds': Hamas militants in front of a photograph of al-Mabhouh during the rally denouncing his killing

வெள்ளிக் கிழமைக் கேள்விகள் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?


2 comments:

 1. 161,473,299 தரம் பார்வை இடப்பட்டதாக//

  161,473,300 னு வச்சிக்கோங்க...ஹி..ஹி..நான் பார்த்ததைச் சொல்றேன்...

  ReplyDelete
 2. 1.pakistan dialogue- america pressure

  2.maovist talk - ambani, tata ,gindal
  pressure.

  for us- free tv, 3 film/day, 5000 rs/election. etc.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!