வெள்ளிக் கிழமைக் கேள்விகள்....!

இந்தப் படத்தைப் பாத்ததும் என்ன தெரிஞ்சதுன்னு உடனே சொல்லுங்க பாப்போம்!

.............................
தட்டுல ஒரு மீன் இருப்பது மாதிரித் தெரிஞ்சா, உங்களுக்குப் பசி ஜாஸ்தி! காஞ்சு போய்க் கிடக்கீங்க!

கண்ணாடியில்  முகம் தெரிகிற மாதிரித் தெரிஞ்சா,...............நீங்களே பூர்த்தி பண்ணிக்கோங்க! நான் ஏதாவது சொல்லப் போய்ப் பின்னூட்டப் புயல்கள் எல்லாம் காணாமப் போயிடப் போகுது!


கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!


எம்ஜியார் பாட்டுப் பாடிசொல்றதுக்கு முன்னாடியே தெரிஞ்ச விஷயம் தான் இது! ஆனாலும் தெரிஞ்சே ஏமாறுவது தமிழனின் தனிப்பெரும் குணம் இல்லையா!

படத்துல அந்த ஆள் தரைக்கு மேல ஒரு அடி  பறந்து நிற்கிறமாதிரித் தெரியுதில்லே?!

இன்னொருக்கா, அப்புறம் இன்னொருக்கா, சந்தேகம் தெளியும் வரை பாத்துக்கிட்டே இருங்க! இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் வர்றப்ப  இன்னொருக்கா, அப்புறம் இன்னொருக்கா கவர் கிடைக்குமான்னு கேட்டு வாங்கறதில்லே, அதே மாதிரி!
வர்ர்ட்டா....!


படங்கள் , கருத்துக்கு  நன்றியுடன்    
21 comments:

 1. முதல் படத்தில் எனக்கு மீன் தான் தெரிந்தது!(இன்னும் சாப்பிடல)

  இரண்டாவது படத்தில் அந்தரத்தில் நிற்பது போல் தெரியவில்லை! அவனுக்கு முன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறது என்று தான் தோன்றியது!

  நான் நாத்திகனாக்கும்!

  ReplyDelete
 2. நாத்திகனாய் இருப்பதால் சரியாகப் பார்க்கத் தெரியும் என்று என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது! சரியாகப் பார்க்கத் தெரிகிற வரை, பார்த்துக் கொண்டே இருங்கள்!

  அப்புறம் வால்ஸ்!நாத்திகம் என்றால் என்ன?!

  ReplyDelete
 3. //வால்ஸ்!நாத்திகம் என்றால் என்ன?!//


  சாத்தியகூறுகள் அற்ற எதையும் நான் நம்ப மாட்டேன், நான் பகுத்தறிவுவாதின்னு சொன்னா இப்படி கேட்டிருக்க மாட்டிங்க தானே!

  இதெல்லாம் வியாபார தந்திரம்! என் கடையில் எப்படி கல்லா கட்டுதுன்னு பார்த்திருக்கிங்க தானே!

  ReplyDelete
 4. சரி வால்ஸ்! கேள்வியை இப்படிக் கேட்டுப் பார்ப்போம்.

  சாத்தியக் கூறுகள் அற்றது, உற்றது இவைகளைத் தீர்மானிப்பது எந்த அளவு கோலை வைத்து?

  பகுத்தறிவுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?

  ReplyDelete
 5. எனக்கு ஒரு பெண் கண் அடிக்கறா மாதிரியும்,
  அவர் சாதாரணமாக நின்று, சாலையில் ஒரு கறை தெரிவது போலவும் தெரிந்தது.
  பாதி கிணறா?

  ReplyDelete
 6. //சாத்தியக் கூறுகள் அற்றது, உற்றது இவைகளைத் தீர்மானிப்பது எந்த அளவு கோலை வைத்து?

  பகுத்தறிவுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்? //


  அவர் குதிக்கும் போது எடுத்த படம் என்பது சாத்தியம்! அவர் அந்தரத்திரத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் என்பது சாத்தியமற்றது! அளவுகோல் என்னான்னு தெரியல, அந்த அளவுக்கு நான் இன்னும் வளரலைன்னு நினைக்கிறேன்!

  பகுதறிவின் பாலபாடம் கேள்வி கேட்பது, வெளியே கேட்காட்டியும் தனக்குள்ளாவது கேள்வி கேட்டு கொள்ள வேண்டும் ஏன் இதை நான் செய்கிறேன் என்று! எங்க அப்பத்தா சொன்னா ஆயா சொன்னான்னு நம்புறது பகுத்தறிவு அற்ற செயல்!

  ReplyDelete
 7. ஸ்ரீராம்! அது தான் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று முதல் வரியிலேயே சொன்னேனே!

  பாதிக் கிணறு, முழுக்கிணறு இரண்டும் இல்லை, optical illusion என்பதே இல்லாத கிணறு இருப்பதாகத் தெரிவது தான்!

  கேள்வி கேட்பது பால பாடம் சரி! அப்புறம் ஏன் இந்த நாத்திக பகுத்தறிவு வாதிகள், கேள்விக்கான பதிலில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை?

  கேள்விகளாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது தான் பகுத்தறிவா?

  இதை எங்க அம்மா, அம்மம்மா, அப்பா அப்பப்பா யாரும் சொன்னார்கள் என்று கேட்கவில்லை :-))

  ReplyDelete
 8. //ஏன் இந்த நாத்திக பகுத்தறிவு வாதிகள், கேள்விக்கான பதிலில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை?//

  நாத்திக பகுத்தறிவு வாதிகளுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும், பதில் சொல்லத்தெரியாது!

  :)

  ReplyDelete
 9. ஆற்காட்டார் குறுக்கே வந்து ஒரு இடை வேளை விட்ட பிறகு மறுபடியும் கேள்விகள்!

  /நாத்திக பகுத்தறிவு வாதிகளுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்/

  அது தான் ஊருக்கே தெரியுமே! பதில் சொல்லத் தனக்குத் தான் தெரியாது, சரி! பிறர் சொன்னாலும் ஏன் காதில் ஏற மாட்டேன் என்கிறது?

  ReplyDelete
 10. //அது தான் ஊருக்கே தெரியுமே! பதில் சொல்லத் தனக்குத் தான் தெரியாது, சரி! பிறர் சொன்னாலும் ஏன் காதில் ஏற மாட்டேன் என்கிறது? //


  நல்ல விசயமாக இருந்தால் ஏற்றி கொள்வோம்!
  உண்மையில் இரு தரப்பினருமே காதை மூடி வைத்து கொள்பவர்கள் தான்!
  முக்கியமாக அடுத்தருக்கு அறிவுரை வழுங்குவது என்றால் சோறு தண்ணியே வேண்டாம்!

  ReplyDelete
 11. /உண்மையில் இரு தரப்பினருமே காதை மூடி வைத்து கொள்பவர்கள் தான்!

  முக்கியமாக அடுத்தருக்கு அறிவுரை வழுங்குவது என்றால் சோறு தண்ணியே வேண்டாம்!/

  முழு உண்மை! ஒப்புக் கொண்டதற்கு நன்றி! சரி, நீங்களும் ஏன் கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு ஒடிவிடுகிறீர்கள்?

  ஓடினால், காதைப் பொத்திக் கொள்ள வேண்டாம் என்ற ஐடியா உங்களுக்கே வந்ததா, அல்லது மண்டபத்தில் யாராவது சொல்லிக் கொடுத்ததா?

  ReplyDelete
 12. //ஓடினால், காதைப் பொத்திக் கொள்ள வேண்டாம் என்ற ஐடியா உங்களுக்கே வந்ததா, அல்லது மண்டபத்தில் யாராவது சொல்லிக் கொடுத்ததா? //

  எதையும் கேட்டவுடன் நம்ப(ஒத்துகொள்ள) மாட்டேனே தவிர காதை பொத்தி கொள்ளும் பழக்கம் இல்லை! விசயத்தின் சாத்தியகூறுகளின் அளவை பொறுத்து இருக்கிறது!

  ReplyDelete
 13. ஒரு விஷயத்தை நம்புவதற்கான சாத்தியக் கூறுகள்! கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது!

  ஆனால், இந்த சாத்தியக் கூறுகளின் அளவைத் தீர்மானிப்பது யார்?

  அப்புறம், உங்களுக்கு சாத்தியப் படக்கூடியதாகத் தெரியாத ஒன்று இன்னொருவருக்கு சாத்தியப் பாடலாமே!


  பிலாத்து மன்னன் கேட்ட மாதிரி, எந்த உண்மை? உங்களுடையதா, அல்லது என்னுடையதா?

  எதை வைத்து உண்மையை அறிவது?

  ReplyDelete
 14. எனக்கு என் உண்மையை பற்றி மட்டுமே அக்கறை!

  ReplyDelete
 15. /எனக்கு என் உண்மையை பற்றி மட்டுமே அக்கறை!/

  உண்மை என்பது இரண்டு தரப்புக்கும் பொதுவாக இருப்பது. அதனால்,
  "என்னுடைய உண்மை" என்பது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை!

  உங்களுக்கு உங்கல் உண்மையின் மீது அக்கறை இருப்பது போலவே மற்றவர்களுக்கும் அவர்களுடைய உண்மை மேல் அக்கறை இருப்பதும் நியாயம் தானே!

  அப்புறம் எதற்காக, எந்தக் கம்முனாட்டியோ, எதன்மீதோ உட்கார்ந்து இருப்பதைப் படம் போட்டுக் கவலைப் படுகிறீர்கள்?

  ReplyDelete
 16. /பொழுது போகனுமே!/

  இந்த அரிப்பைத் தான் பொழுதுபோக்கு நாத்திகம் என்று சொல்கிறேன்!

  இந்த அரிப்பு நிறையப் பேருக்கு இருக்கும் போல இருக்கிறது!

  /இதெல்லாம் வியாபார தந்திரம்! என் கடையில் எப்படி கல்லா கட்டுதுன்னு பார்த்திருக்கிங்க தானே!/

  இந்தப்பக்கங்களில் நான் எந்த வியாபாரமும் செய்ய நினைக்காததால், கல்லாக் கட்டுவதைப் பற்றியோ, கல்லடி விழுமே என்றோ கவலைப் பட்டதில்லை!

  ReplyDelete
 17. //இந்த அரிப்பைத் தான் பொழுதுபோக்கு நாத்திகம் என்று சொல்கிறேன்!

  இந்த அரிப்பு நிறையப் பேருக்கு இருக்கும் போல இருக்கிறது! //

  அரிப்பு எல்லாருக்கும் பொது! சிலருக்கு பொழுதுபோக்கு நாத்திகம், சிலருக்கு அறிவுற்ரை வழங்கும் அரிப்பு! சிலருக்கு கருத்து சொல்லும் அரிப்பு!

  ஒரே வித்தியாசம் என்னான்னா, கல்லா கட்ட தெரிந்தவர்களுக்கு மற்றவர்கள் வந்து சொறிஞ்சி விடுவாங்க! கல்லா கட்டத்தெரியாதவங்க தானே சொறிஞ்சிக்கனும்!

  ReplyDelete
 18. வியாபாரம் இல்லை என்ற போதே, கல்லாக் கட்டுவது, குல்லாப் போடுவது இரண்டு வேலைக்கும் இடமே இல்லையே! அதே மாதிரி, கருத்து கந்தசாமியாகவோ, அரிப்பு அரங்கசாமியாகவோ கூட ஆவதற்கு வாய்ப்பு இல்லை!

  அரிப்பு எதுவும் இல்லாததால், சொரிந்து கொள்வதற்கு சுய உதவிதானா அல்லது ஆள் கிடைப்பார்களா என்ற ஆராய்ச்சிக்குள்ளும் இதுவரை ஈடுபடவில்லை!

  ReplyDelete
 19. //அரிப்பு எதுவும் இல்லாததால், சொரிந்து கொள்வதற்கு சுய உதவிதானா அல்லது ஆள் கிடைப்பார்களா என்ற ஆராய்ச்சிக்குள்ளும் இதுவரை ஈடுபடவில்லை! //

  நமது முதுகு நமக்கு தெரியாதுன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க!

  ReplyDelete
 20. நம்ம முதுகு நமக்குத் தெரியாதுங்கறதைப் பாட்டிகள் வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு!

  பாட்டிகள் வாழ்க! முதுகுகளும் வாழ்க!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!