இட்லி வடை பொங்கல்! #68 கொரோனா களேபரங்கள்! மம்தா! சீனப்பூச்சாண்டி! பானாசீனா!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதில் மேற்கு வங்க அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்து போய்க் கிடப்பது அம்பலமாகியிருக்கிறது. இதுவரை கொரோனாவுக்காக சோதனை செய்யப்பட்டது ஏழாயிரத்துச் சொச்சம் நபர்களிடம் தான் என்பது இந்தியாவிலேயே ஆகக்குறைந்த எண்ணிக்கை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. குழாயடிச் சண்டைக்காரியாக எதற்கெடுத்தாலும் கலகக் குரல்  எழுப்பும் மம்தா பானெர்ஜி நெருக்கடி, பிரச்சினை என்று வரும்போது தனது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். டைம்ஸ்  நவ் டிவியின் 26 நிமிட விவாத வீடியோ இங்கே   யூட்யூப் தள வீடியோக்களை இணைக்க முடியவில்லை என்பது ப்ளாக்கர் தளம் விட்டுவிட்டு எனக்கு கொடுத்துவரும் குடைச்சல்.  


#FCC #FederalCommunicationsCommission  #ChinaMobile #ChinaUnicomAmericas #ChinaTelecomAmericas #PacificNetworksCorp #ComNet  


அமெரிக்காவின் FCC...அமெரிக்க தொலைத்தொடர்புக்கான நிர்வாக அமைப்பு.  கடந்த வருடம் மே மாதம், சீன கம்யூனிச அரசுக்கு சொந்தமான China Mobile நிறுவனம் ...அமெரிக்காவில் இயங்குவதற்கு அனுமதி மறுத்தது FCC. காரணம்...அதன் மூலம், அமெரிக்காவிற்குள்... சீனா தன்னுடைய உளவு வேலையை நிகழ்த்தும் என்று கூறியது.கடந்த மாதம்...அமெரிக்க நீதித்துறை ...சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்குள் இயங்க அனுமதிப்பதை தடை செய்யும்படி சிபாரிசு செய்தது.

இந்த நிலையில்...அமெரிக்காவில் இயங்கி கொண்டிருக்கும் China Telecom Americas , China Unicom Americas, Pacific Networks Corp, இதன் துணை நிறுவனமான ComNet [USA] LLC ஆகிய சீன அரசு நிறுவனங்களை ...தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்காவிட்டால்..தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது..FCC.

சீன அரசு நிறுவனத்திற்கு எப்படி சீன தொடர்பு இல்லாமல் இருக்கும் ? பின் ஏன் இப்படியான அறிவிப்பு ? என்று அபத்தம் போல தோன்றினாலும் தகுந்த காரணம் உண்டு.

உலகமயமாக்கலுக்கு பின்...உலக வியாபார ஒப்பந்தங்களின் படி ...அனுமதி அளிக்கப்பட்ட பிற நாட்டு நிறுவனத்தை வெளியற்றவோ..தடை செய்யவோ ..தகுந்த காரணங்களை கூற வேண்டும்.

அந்த சீன அரசு நிறுவனங்களால்..தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்க இயலாது என்பதால் தான் அப்படியொரு கேள்வி.



தாமதமாகவேனும் அமெரிக்காவும், இந்தியாவும், இதர உலக நாடுகளும் விழித்துக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன.இதற்கான எதிர்வினைகள் தான்...'உள்நாட்டு குழப்பங்கள்' உட்பட வேறு வகைகளில்...வேறு வடிவங்களில் ..வெளிப்படுகிறது.



அருண் ஜெயிட்லியையே குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் மேலே போய்ச்சேர்ந்து விட்டார்.  பானாசீனா மீதான வழக்குகள், விசாரணையின் நிலையென்ன? யாருக்காவது தெரியுமா?  


மீண்டும் சந்திப்போம்.

இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த 110 ஆண்டுகள் நிறைவாக இருந்தது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய நூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

இன்றைய தரிசன நாள் செய்தி 


ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்து  110ஆண்டுகள்  இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

19 வருடங்களுக்கு முன் இதே நாளுக்காக எழுதியதன் மீள்பதிவு. தேவையான இடங்களில் கொஞ்சம் திருத்தங்களுடன்   

ஆர்னாப் கோஸ்வாமி மீது CONகிரஸ் குண்டர்கள் தாக்குதல்!

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் ஆர்னாப் கோஸ்வாமி சோனியாவுக்கு நேரடியான சில கேள்விகளை எழுப்பியதற்காக CONகிரஸ் குண்டர்களால் தாக்கப் பட்டிருக்கிறார். கட்சி சொல்லித்தான் தாக்கினோம் என்று அந்தகுண்டர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.  ஆர்னாப் கோஸ்வாமி அப்படி என்ன கேட்டு விட்டார் என்பதை இங்கே கேட்கலாம். வீடியோ 54 நிமிடம்  

\

அர்னாப் கோஸ்வாமி....தன் மீது.. நேற்று இரவு..தாக்குதல் முயற்சி நடந்ததாக புகார் அளித்திருக்கிறார்.

பிரச்சினையின் மையப்புள்ளி ..மஹாராஷ்டிரா Palghar-ல் காவல்துறையினர் முன்னிலையில் வெறி பிடித்த கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட இந்து துறவிகள் & அவர்களது கொலைக்கான நியாயம் கேட்டல்.சோனியா...இவர்களின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து.. ஏன் அறிக்கை கொடுக்கவில்லை ? என்று கேட்டார் அர்னாப்.

இதற்கு தான் இத்தனை அடிதடி.

சோனியா நேரடி அரசியலுக்கு வந்த பின்னரும் கூட..இந்திய ஊடகங்கள் எதுவும் அவரை நேரடியாக கேள்விகள் கேட்டதில்லை. சேகர் குப்தா ..சோனியாவை ஒரு பேட்டி எடுத்திருந்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகள்...'உங்கள் மாமியார் இந்திரா காந்திக்கு பிடித்த உணவு என்ன ?' 'நீங்கள் அவருக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்திருக்கிறார்களா ?' என்பது போன்ற கேள்விகள் மட்டுமே. 130 கோடி பெரும் மக்கள் திரளை கொண்ட இந்திய நாட்டின் அரசியலின் மையத்தில் ..உயர்ந்த அதிகார பீடத்தில் இருக்கும் சோனியாவிடம்.. அரசியல் பேட்டிகள் எடுக்கவோ ...அரசியல் கேள்விகள் கேட்கவோ ...இந்திய ஊடகங்கள், இந்திய பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் முயலவில்லை. அவ்வாறு முயன்ற வெகு சிலரும் அமைதியாகி விட்டனர்.

இந்த நிலையில்...அர்னாப்.. 'துறவிகள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ?' என்று 'நேரடியாக சோனியாவை நோக்கி' .. கேள்வி கேட்டு...இந்திய மக்களுக்கு...கவனப்படுத்துகிறார்.

He is breaking the Ivory Tower. He is breaching the unbreachable.

துறவிகள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு சோனியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்க தக்கது.

நேரடியான சண்டை துவங்கி இருக்கிறது.

இதன் போக்கும், முடிவும்...இந்திய பொதுமக்களுக்கு அரசியலின் ஆச்சரியமான பல கோணங்களை வெளிப்படுத்த கூடும் 


இதுவரை பிரதமர் மோடியின் மீது தூக்கி வீசிய விமர்சனங்களுக்கு,பேசிய வசைகளுக்கு சர்வ அதிகாரத்தில் இருக்கும் பாஜகவால் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்களா?

இன்று அர்னாப் கோஸ்வாமி அவருடைய மனைவியுடன் தாக்கப்பட்டிருப்பதை எந்த பத்திரிக்கையாளனும் கண்டித்ததாக தெரியவில்லை.இதுதான் இவர்களின் ஜனநாயகம்.ஆனால் எங்கேயோ காவி கட்டிக்கொண்டு ஒருவன் பொறிக்கித்தனத்தில் ஈடுபட்டால் அவன் நேரடி மோடி கண்காணிப்பில் அதை செய்ததாக பேசுவார்கள்..

நமக்கு காங்கிரஸ்,திமுக கதையாவது தெரிந்தது.ஜனநாயக வகுப்பெடுக்கும் கோமாளிஹாசன் போன்ற காந்தியவாதிகள் ஏன் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்? இவர்களுக்கு இனி மற்றவற்றை பேச என்ன தகுதி உள்ளது?

கருத்துரிமை,ஜனநாயகம் என்று வாய்கிழிய பேசுபவன் நம்மை சரியான நேரத்தில் அறுத்து கூறு கட்டி விற்க காத்திருக்கும் கசாப்புக் கடைக்காரன் என்பதை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்..நம்மை கொலை செய்ய ஆயுதத்தோடு வருபவனைக் கூட நம்பலாம் ஆனால் ஒரு போதும் இவர்களை நம்பக்கூடாது நண்பர்களே..

இவர்கள் அஹிம்சை,ஜனநாயகம் என்பதையெல்லாம் விரும்பி ஏற்றவர்கள் இல்லை.வேறு வழியில்லாமல் ஏற்று நிற்பவர்கள்..


மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரடியாக குற்றம்சாட்டி பேசி அவதூறு செய்த ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வழக்குப் பதிவு ெசய்யப்பட்டுள்ளது ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளி்ட்ட பல்வேறு  மாநிலங்களிலும் காங்கிரஸார் அர்னாபுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் கடந்த 16ம்தேதி இரு சாதுக்கள் உள்ளிட்ட 3 பேர் சில்வாசாவுக்கு வந்து கொண்டிருந்த போது கடாக்சின்சாலை கிராமத்தில் ஒரு கும்பலால் திருடர்கள் என நிைனத்து அடித்துக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாதர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு குற்றம்சாட்டிப் பேசினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் போலீஸ் நிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம், ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளித்தார். அந்த புகாரில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அர்னாப் பேசியுள்ளார். சமூகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், மதநம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி மீது சுமத்தியுள்ளார்” எனத் தெரவித்துள்ளனர். இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி மீது ராய்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்னாப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரையடுத்து, அர்னாப் மீது ஐபிசி 117, 120(பி), 153(ஏ),(பி), 295(ஏ),290(ஏ), 500, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியுள்ளனர். மாநில உள்துறை அமைச்சர் பாலசகேப் தோரட் ட்விட்டரில் கூறுகையில், “ பால்கர் தாக்குதலை வகுப்புவாதத்தோடு தொடர்புபடுத்தும் அர்னாப் கோஸ்வாமியின் செயலைக் கண்டிக்கிறேன். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அவதூறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. முதல்வரிடம் பேசியுள்ளேன் அர்னாப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை செய்தி. 

காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக ஒழிந்தால் மட்டுமே இந்த நாட்டில் அரசியல் நாகரிகம், ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்பதை  நினைவூட்டுகிற சம்பவம் இது.

மீண்டும் சந்திப்போம்.

கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! #ரத்தத்தீவு

ஐமுகூட்டணிக்குழப்பம் ஆட்சியில் இருந்த தருணங்களில் தினமணி நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களை இந்தப்பக்கங்களில் அப்படியே எடுத்துப்போடுவதுண்டு. காரணம் அதன் முக்கியத்துவம், ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கவனப்படுத்த வேண்டிய இதழியல் தர்மம் என்பதுதான் என்பதை ஆரம்பநாட்களிலிருந்தே வாசித்து வரும் நண்பர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். நேற்றைய தினமணியில் வெளியாகியிருக்கும் தலையங்கமும் கூட  அந்தவகையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இந்தத் தலையங்கம் சாடியிருக்கிற எதிர்க்கட்சிகளின் முகம் சுழிக்க வைக்கிற, பொறுப்பற்ற விதத்திலான பேச்சும் செயலும் மாறிவிடப்போவதில்லை என்றாலும் அரசியிலில் ஒதுக்கித்தள்ள வேண்டியவர்கள் யார் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறதே! அதுவே இந்தத்தலையங்கத்தின் முக்கியத்துவம்.

       
சவுக்கு இணையதளம் போய்வாசிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகளாகிறது என்றாலும் கூட, ஒரு மீம் சன் டிவியில் வேலைபார்த்த பலரை  வேலையைவிட்டே தூக்கப்படுகிற அளவுக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதான இந்தப்படம் KDbrothers   யோக்கியதை என்ன என்பதை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது. இந்தக்கூட்டம் தான் அடடே! மதி வரைந்த ஒரு கார்டூனுக்காக வேலைநீக்கம் செய்யப்படுகிற நிலைக்கும் காரணமாக இருந்தது.


தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இப்படி ட்வீட்டர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்! சன் டிவிக்கே உபதேசம்! குரங்குக்குப் புத்திசொன்ன தூக்கணாங்குருவி கதை தெரியாது போலிருக்கிறது!   


அந்தர்பல்டி அடிப்பதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஈடு இணையே இல்லை என்பதை மம்தா பானெர்ஜி தெளிவாகவே மீண்டும் நிரூபித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புவரை கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் கண்காணிக்க அனுப்பப்பட்ட மத்தியக்குழுவுடன் ஒத்துழைக்க மறுத்து மாநில விவகாரங்களில் குறுக்கீடு, சாகச சுற்றுப்பயணம், அனுமதிக்க முடியாது என்று முழங்கிக் கொண்டிருந்த மம்தா பானெர்ஜி நேற்றே பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டார். மேற்குவங்கத்தின் தலைமைச் செயலாளர் மிகவும் பவ்வியமாக மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். The West Bengal government has said "it is not a fact" that there was no cooperation with the Central team deputed to assess the Covid-19 situation in the state and gave an assurance that it will abide by all Union government orders on lockdown. The assurance came hours after the Centre accused the Mamata Banerjee-led West Bengal government of obstructing a Central team deputed to assess the coronavirus ground situation. அமித் ஷா உள்துறை அமைச்சராக இருப்பது அடிவயிற்றைக் கலக்கிவிட்டது போல! 


மரீச்சபி படுகொலைகள்! 1979 வாக்கில் மார்க்சிஸ்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்டுகொண்டிருந்த நேரத்தில்  நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நாற்பதாண்டுகள் கழித்து சில புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. மார்க்சிஸ்டுகளால் இத்தனைவருடங்கள் மூடி மறைக்கப்பட்ட படுகொலைகளைப் பற்றி வாயமொழி சாட்சியங்கள், விவரங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனெவே இது குறித்து B R  மஹாதேவன் எழுதிய ஒரு புத்தக அறிமுகக்குறிப்பை  இந்தப்பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறேன். Blood Island: An Oral History of the Marichjhapi Massacre is the story of our forgotten history. It is the story of the stateless clashing with the state. And the devastation thereafter. It may remind the listener of the Jallianwala Bagh killings. Except that this one, despite taking place in independent India, was never investigated. Not even shoddily. No one, therefore, knows how many people died in those 72 hours of savagery, organised and orchestrated by the state government of the day.
 
Though the official figure says less than 10 people died, locals and survivors put the number as high as 10,000. And those who escaped the bullets were forced to leave for what was “more like a concentration camp or a prison”, as Amitava Ghosh writes in The Hungry Tide. Thousands more perished in transit and at these camps.  வீடியோ 46 நிமிடம். மறக்கடிக்கப்பட்ட அந்தப் பழைய கதையைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுத்தான்   பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்   

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் அரசியல் செய்திகள்!

மம்தா பானெர்ஜி இரண்டு நாட்களாகஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருக்கிறார்! கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் தீதியின் அரசு மிக மெத்தனமான போக்கைக் கையாள்வதில்  மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி நிலைமையைப் பார்த்து அறிக்கை தர அனுப்பியிருப்பதை மேற்கு வங்க அரசு ஒத்துழைக்க மறுத்து தடுத்து நிறுத்தியிருப்பதில்  மம்தா பானெர்ஜியின் மமதை மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சகம் கொஞ்சம் கடுமை காட்டியபிறகே, மாநில அரசு மத்தியக்குழு தன்வேலையைச் செய்ய அனுமதித்திருக்கிறது என்பது இந்திய அரசியலின் விசித்திரங்களில் ஒன்று.  டைம்ஸ் நவ் வீடியோ செய்தி இங்கே 


மத்திய அரசோடு மாநில அரசும் சேர்ந்து செயல்படவேண்டிய தருணம் இது. தன்னுடைய பிடிவாதம் அரசியல் சுயநலத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும், தனிநபரும் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய தருணம் இது என்பதை மம்தா பானெர்ஜி போன்ற கலகக் குரல்களுக்கும் புரியவைக்க வேண்டியவிதத்தில் மத்திய அரசு சொல்லிவிட்டது என்பதுதான் லேடஸ்ட் நிலவரம். "We are not getting support from West Bengal, we are not being permitted to do our job. We have written to West Bengal again and have told them they have to assist otherwise action may be initiated. We are getting assistance from Madhya Pradesh , Rajasthan and Maharashtra. Our decision to send teams was based on multiple inputs, not only from the health ministry," said Home Ministry's Punya Salila Srivastava in a media briefing என்கிறது NDTV செய்தி. 


ஆர்னாப் கோஸ்வாமி  எடிட்டர்ஸ் கில்டிலிருந்து ராஜினாமா செய்துவிட்டாராம்! நேற்று டிவி விவாதம் ஒன்றில் அதை அறிவித்ததன் சிறுபகுதியை இங்கே பார்க்கலாம். I resign from the Editors Guild of India for its absolute compromise on editorial ethics, for being an organisation that is only operating in self-interest.’ என்று ராஜினாமா முடிவு, அதற்கான காரணங்களை விவாத நேரலையிலேயே தெரிவித்ததை  இன்றைய செய்திகளில் தான் தெரிந்துகொள்ள முடிந்தது. வரவர சோம்பேறித்தனம் எனக்கு அதிகமாகிக் கொண்டு வருகிறதோ?


S R சேகருக்கென்ன, அவர்பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்! படியளக்கும் கழகத்தைப் பகைத்துக்கொள்ள ஆதித்தன் வகையறா பைத்தியக்காரர்களா என்ன? தினத்தந்தி மாதிரி ஒரு பச்சோந்தி ஊடகத்தில் வேலைசெய்யப்போனது கார்டூனிஸ்ட் அடடே! மதி செய்த தவறு.  

அமெரிக்கா கச்சா எண்ணை தேவையில் ...ஏறக்குறைய தற்சார்பை உறுதி செய்து கொண்டிருக்கிற நாடு. எண்ணெய் வள நாடுகளை [OPEC] நம்பி இருக்கவில்லை.

ஏற்கனவே சவுதியும், ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு எண்ணை உற்பத்தியை அதிகரித்து சந்தை படுத்தியிருக்கும் நிலையில்..சர்வதேச கச்சா எண்ணை விலை வீழ்ந்தது.

இப்போது ....அமெரிக்கா..தன்னுடைய எண்ணை இருப்பை திறந்துவிட்டிருக்கிறது.

கச்சா எண்ணை விலை அதலபாதாளத்திற்கு சென்று ...அமெரிக்காவின் எண்ணை அரசியலையும், பதிலடியையும் வெளிப்படுத்துகிறது. எண்ணைக்காக மத்திய கிழக்கு OPEC நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை பல உலக நாடுகளும் குறைத்துக் கொண்டே வருகின்றன.

இதனால் இந்தியாவிற்கு என்ன நன்மை ?

நன்மை உண்டு. ஊரடங்கிற்கு பின்..வரும் நாட்களில் தெரியவரும்.

இந்த நேரத்தில் ...

இந்தியாவும்..உள்நாட்டில் ... தன்னுடைய கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ..திட்டமிட்டு போராட்டங்கள் மூலம் தடுக்கப்படுகின்றன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. 

நம்பிக்கைகள் வாழ்க! மீண்டும் சந்திப்போம்.

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! வரணே அவஸ்யமுண்டு

மலையாளத்திரைப்படங்களின் மிகப்பெரிய பலமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்துவிட முடிவதுதான்! ஏதோ ஒருகதை! அதையே கொஞ்சம் வித்தியாசமாகப் படமாக்குகிற வித்தை மலையாளிகளுக்கு இயல்பாகவே தெரிந்திருக்கிறது. சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைத் தகவலாகத் தருகிற ஒருதளத்தில் இருந்து தான், வெறும் நாலரைக்கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட வரணே அவஸ்யமுண்டு படம் கடந்த இருமாதங்களில் 32 கோடி ரூபாய்அளவுக்கு வசூலைக் குவித்திருக்கிறது என்ற தகவலைத் தெரிந்து கொண்டேன். படத்தைப்பார்க்கிற ஆவலையும் தூண்டிவிட்டது.


துல்கர் சல்மான் இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் முதன்முறையாக ஆகி இருக்கிறார் என்பது தவிர கொஞ்ச வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் சுரேஷ் கோபியும், ஷோபனாவும் இந்தப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருப்பது கூடுதல் விசேஷம். கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகநடிகையாகவே தெரியாதபடி அப்படி ஒரு இயல்பான நடிப்பு! அது போக மீரா கிருஷ்ணன், ஊர்வசி, என்று பரிச்சயமான முகங்கள். சத்யன் அந்திக்காடின் மகன் அனூப் சத்யன் இந்தப்படத்தின் வழியாக இயக்குனராக ஆகியிருக்கிறார். ஒரு நல்ல டீம் ஒன்றுசேர்ந்து இருப்பதில் ஒரு சுமாரான கதையையும், சுவாரசியமாகக் காட்சிப்படுத்தி இருப்பதில் சுமார் இரண்டரை மணிநேரம் அலுப்புத்தட்டாமல் படம் நகர்கிறது.


சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டைவீட்டுக்காரர்களாக கதாபாத்திரங்கள் ஒவ்வொரு செட்டாக அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். பிபீஷ் என்கிற   fraud ஆக துல்கர் சல்மான்,  சென்னையில் தன்னுடைய நிகிதா என்கிற மகளுடன் (கல்யாணி ப்ரியதர்ஷன்)  குடியேறும் ஆசிரியை நீனா (ஷோபனா), அதே குடியிருப்பில் திருமணமாகாத பட்டாளக்காரராக (சுரேஷ் கோபி) மேஜர் உன்னிகிருஷ்ணன் இவர்கள் தான் கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். மற்றவர்கள் இந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவு காதலாக முகிழ்ப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது கதைச்சுருக்கம். காட்சிகளைக் கோர்வையாகச் சொல்லிக்கொண்டே போகிற விதம் இந்த அரதப்பழசான கதையைக் கூட மிக நேர்த்தியான கதைக்களமாக மாற்றிவிடுகிறது. 


துல்கர் சல்மானுக்கு இது ஒரு வெற்றிப்படமாகவும் ஆகியிருக்கிறது. கதையைத் தேடாமல், லாஜிக் மீறல்கள் இருக்கிறதா என்ற நோண்டல்கள் இல்லாமல் இருந்தால், பொழுதுபோக்க ஒரு நல்ல படம் என்றே சொல்லலாம். Netlix இல் கிடைக்கிறது. 

என்னுடைய ரேட்டிங் 7.5 / 10 

மீண்டும் சந்திப்போம்.  
      

இட்லி வடை பொங்கல்! #67 உண்மையைக் கையாளுவது! ஊடகப்பொய்கள்! மீண்டும் பப்பு!

கொரோனா தொற்றைக் கையாளுவதை விட கொரோனா வைரஸ் பற்றி ராகுல் காண்டி மாதிரியான திடீர் மேதாவிகள் வெளியிடும் அறிக்கைகள், அரசுக்கு ஆலோசனைகள் இவற்றைக் கையாளுவது எப்படி என்பதுதான் உண்மையிலேயே இப்போது தலையாய பிரச்சினை என்றால் நம்புவீர்களா?  ஊடக விவாதங்களைக் கொஞ்சநாள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கழித்துவிட்டு இப்போது மறுபடியும் கேட்க ஆரம்பித்ததில் எனக்கு எழுந்த பிரச்சினை அதுதான்!

 

சேகர் குப்தாவுக்கும் என்னைப்போலவே கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கும் போல .இந்த 13 நிமிட வீடியோவில் செய்திகளை எப்படிப்புரிந்து கொள்வது என்பதை 
 டாம் க்ரூஸ் படமொன்றில் வருகிற You Can't handle the Truth  வசனத்தை வைத்து விளக்க முயற்சி செய்திருந்தது கொஞ்சம் சுவாரசியம்! யாருமே உண்மையை நம்புவதற்குத் தயாராக இல்லை, ஆனால் மோசமான செய்தியை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என்ற ரீதியில் சேகர் குப்தா கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் பற்றிச் சொல்கிறார் . சின்ன வீடியோதான், கொஞ்சம் பாருங்களேன்! 

Elon Musk [ Tesla ] 1000 வென்டிலேட்டர்கள் வாங்கி இருப்பதாகவும்..அவற்றை ..காலிஃபோர்னியா மருத்துவமனைக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்து..3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் வென்டிலேட்டர்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று மருத்துவமனை சொன்னதாக...CNN செய்தி வெயிட்டிருந்தது .

இதை பார்த்த Elon Musk..உடனடியாக... '' நீங்கள் அனுப்பியிருந்த வென்டிலேட்டர்கள் நன்றாக இயங்குகின்றன. உதவியதற்கு நன்றி'' என்று .மருத்துவமனையிலிருந்து தனக்கு வந்த e mail-ஐ ட்விட்டரில் வெளியிட்டதோடு..இன்னும் CNN எல்லாம் செய்தி ஊடகமாக இயங்குவது ஆச்சரியமளிக்கிறது ! என்றும் கூறி இருக்கிறார். உண்மை தான்.

இதில் ..வேடிக்கை என்னவென்றால்...Twitter-ரே பெரிய பொய் சொல்லி தான். Twitter செய்கிற அரசியலுக்கும், அதன் அப்பட்டமான அரசியல் சார்புகளுக்கும் ...அதனை.. CNN-ன் பெரியண்ணன் என்று கூட சொல்லலாம் 

சீன வைரஸ் பேரிடர் ..பலவற்றையும் / பலரையும் வெளிப்படுத்தி புரியவைத்துக் கொண்டிருக்கிறது.
#ElonMusk #Tesla #CNN #ChineseVirus

CNN கிடக்கட்டும்! சாதாரண செய்திகளைக் கூட இங்கே நம்மூர் சேனல்கள் எப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டு மோடி எதிர்ப்பு செய்திகளாக மாற்றலாம் என்று 24 மணிநேரமும் பாடுபடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்! ஊடகங்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவை என்பது தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? !!


  

நீலம் பாண்டே இன்றைய The Print தளத்தில் இப்படிப்படம் போட்டுச் சொல்வது ஒன்லைனராகச் சொல்வதானால் பப்பு ரிடர்ன்ஸ் என்பதுதான்! எந்தச் செய்தித்தாளிலும் பார்க்கவில்லையே என்று பிராண்டிக் கொள்ளாதீர்கள்! நேரு மற்றும் வாரிசுகளின் செயல்பாடுகளே கொஞ்சம் விசித்திரமானவை பலநேரங்களில் மிகவும் விபரீதமானவை என்பதை நேரு குடும்ப வரலாறே சொல்லும். அந்தவகையில் சோனியாG இன்றைக்கு டம்மிப்பீஸ் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். ராகுல் காண்டி இடம்பெற்றிருக்கிறார். வழக்கமாக எல்லா விஷயங்களிலும் இடம் பிடிக்கும் A K அந்தோணி, அஇந்தக்குழுவில் கமது படேல் மற்றும் குலாம் நபி ஆசாத் இவர்களுக்கு இதில் இடமில்லை. பணப்பசி பானாசீனா, ஜெய்ராம் ரமேஷ்  இந்தக்குழுவில் இடம் பெற்றிருப்பது சும்மா லுலுலாயிக்கு! மன்மோகன் சிங் சேர்மனாம்! அடுத்த இடம் ராகுல் காண்டிக்கு!   Though former Prime Minister Manmohan Singh has been appointed chairman of the committee, with Rahul’s name coming after him on the list, Congress leaders didn’t miss the message — that Rahul has virtually taken direct control of the party affairs after sidelining veterans who were close to Sonia Gandhi since her entry in politics in 1998. என்னாது? ராகுல் காண்டி கட்சியை மீண்டும்  கைப்பற்றி விட்டாரா என்றெல்லாம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடாதீர்கள்! செய்தியின் முக்கியமான அம்சம் அகமது படேலைக் கழற்றிவிட்டது, ராகுல் காண்டியின் விசுவாசிகளை வைத்து நிரப்பியிருப்பது என்பது மட்டும்தான்!  The Consultative group is full of members from Rahul Gandhi’s team, including Randeep Singh Surjewala, K. C. Venugopal, Jairam Ramesh, Manish Tewari, Praveen Chakravarty, Gaurav Vallabh, Supriya Shrinate and Rohan Gupta.

        

காங்கிரஸ் கட்சி இனிமேலும் உயிர்த்தெழும், பிழைத்துவிடும் என்று இதற்கு மேலும் கூட  நம்புகிற அப்பாவிகள், நம்புவதற்கான காரணம் ஏதாவது இருந்தால் வந்து சொல்லலாம். தடையில்லை!

மீண்டும் சந்திப்போம்.     

சீனத்தரத்துக்குக் குறைந்ததல்ல நம்மூர் காங்கிரஸ், கழகங்களின் தரம்!

இந்தியாவுக்கு சீனா சமீபத்தில் சுமார்  1,70,000 PPE எனப்படும் தற்காப்பு உடைகளை வழங்கியது. இந்த உடைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரொனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட இருந்த நிலையில் இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன FDA/CE தரச்சான்றிதழ் பெறாத இந்தத் தற்காப்பு உடைகள் இந்தியாவில் சோதனை செய்யப்படும். இதன்படி குவாலியிரில் அமைந்துள்ள (DRDO) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் 1,70,000 உடைகளில் சுமார் 50,000 உடைகள் தோல்வி அடைந்துள்ளன. மேலும்,இதை தவிர தனித்தனியாக இரண்டு சிறிய தொகுதிகளாக வந்த 40,000 உடைகளும தரச்சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.


பிரம்ம  செலானி சொல்வது உண்மையென்றால் தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர வேறுவழி இருக்கிறதா என்ன?!!
 

நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலை காரணமாக சுமார் 10லட்சம் தற்காப்பு உடைகள் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மே முதல் வாரத்தில் நாம் இந்த உடைகளை நம் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது 20லட்சம் பாதுகாப்பு உடைகள் இருந்தால் நம்மால் நிலைமையை சமாளிக்க முடியும் என்கின்றனர்.நமது நாட்டில் DRDO தயாரித்துள்ள உடைகள் ஒரு நாளைக்கு சுமார் 30,000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது என்று இந்தத்தளத்தில் தகவல் சொல்கிறார்கள். தைவான் நாட்டு விஞ்ஞானிகள் பாதுகாப்பு கவசங்களை கிருமிகளை சுத்தம் செய்து மறுபடி மறுபடி பயன்படுத்தும் உத்தியைக் கண்டுபிடித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

DRDO விஞ்ஞானிகள் சுமார் 5 அடுக்குகளை கொண்ட N99 முக கவசத்தை தயாரித்துள்ளனர், இதில் 2 அடுக்கு நானோ வலைகளை கொண்டது. இது சுமார் 99% பாதுகாப்பு அளிக்கும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலை 70ருபாய் ஆகும்.


வழக்கமான N95 முக கவசங்கள் 95% பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் இவை பன்மடங்கு அதிக விலைக்கு (300 ருபாயக்கும் அதிகம்) விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இங்கே தமிழகத்துக்கு இசுடாலின் அங்கே CONகிரசுக்கு ராகுல் காண்டி என இரு அதிமேதாவிகள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியாமல் அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் எதையாவது உளறிக் கொண்டே இருப்பதில் எரிச்சலானாரோ என்னவோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார். ராகுல் காண்டி உளறிக்கொட்டியதை வீடியோவாக எடுத்துப் போட எனக்கும் ஆசைதான்! ஆனால் ப்ளாக்கர் ஒத்துழைக்க மறுக்கிறது;  

ரங்கராஜ் பாண்டே  தன்னுடைய பங்குக்கு ராகுல் காண்டிதான் அடுத்த மன்மோகன்சிங் என்று ஒரு விசித்திரமான தலைப்பு வைத்து,சாணக்யா தளத்தில் நேயர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் இசுடாலின், பப்பு இருவரையும் கலந்துகட்டி லந்தடிக்கிறமாதிரி சில பதில்களைக் கேட்க முடிந்தது. நேரலையில் சுட்டி இங்கே 

மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா #காமெடி #அரசியல்

இன்று தமிழ்வருடப்பிறப்பு. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறையருள் நம்மோடு எப்போதும் துணையிருப்பதாக. 



தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினசரி வாசிக்கும் கொரோனா அறிவிப்புகள் வரவர செம காமெடியாக மாறிக் கொண்டிருக்கிறது. முழுப்பூசணிக்காயை மூடிமறைக்க இன்றைக்கு அவர் உபயோகித்திருக்கும் புதிய வார்த்தை #ஒரேதனித்தொற்று  இப்படி சமாளிக்க முடியாத அரைகுறை தினசரி அறிக்கைகள் வாசிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத்  தோன்றுகிறது.
 

இங்கே தமிழகத்தில் மட்டும்தான் இப்படி கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி  என்றில்லாமல் வேறுசில மாநிலங்களிலும் இதேகூத்துதான்! ஆனால் வேறுவேறு பெயர்கள் வைத்துச் சொல்கிற கொடுமையை மிக சிம்பிளாக ஒரே கார்டூனில் சொன்னதை PGurus தளத்தில் இன்றைக்குப் பார்த்தேன். 
 
 

நோய்த்தொற்றை எப்படிச் சமாளிக்கிறார்களோ, அது வேறு விஷயம்!  உண்மையைச் சொல்வதனால் தங்களுக்கு வாக்குவங்கி
யில் பாதிப்பு வந்துவிடக்கூடாதே  என்ற கவலை ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைப்பதை இதைவிட சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது என்பது ஒருபுறம்! என்னதான் மறைக்கப் பார்த்தாலும் உண்மைநிலவரம் ஏதோவொரு வகையில் அம்பலப்பட்டுக் கொண்டே வருகிறது. அப்புறம் எதற்காக இதுமாதிரிச் செய்தியாளர் சந்திப்பு, அது இது என்று நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டும்? இன்று தமிழக அரசின் அறிவிப்புக்களில் lockdown என்கிற சுய ஊரடங்கை இந்தமாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்திருப்பது ஒன்றே உருப்படியானது. ஆனால் அதுவரைக்கும் பீலா ராஜேஷ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டுமே என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து! கழகங்கள் இல்லாத தமிழகம் என்றானால் விடிவுகாலமும் பிறக்கும். பிறந்திருக்கிற தமிழ்ப்புத்தாண்டில் அதற்கான வலுவான அடித்தளம் அமைய இறையருளை வேண்டிப் பிரார்த்தனை செய்வோம்!

 

சமீபகாலங்களில் எந்த தமிழக சேனல் விவாதங்களையும் பார்ப்பதில்லை என்பதிலேயே நிறைய விஷயங்களைத் தேடிப்படிக்கவும், புத்தகங்கள் வாசிக்கவும், Money Heist வெப் சீரீஸின் 4 பாகங்களை பார்க்கவும் போதுமான அவகாசம் கிடைத்தது என்றால் நம்புவீர்களா? அப்படிப் பார்க்க மு டிந்ததில் டேனியல் டிமார்டினோ பூத் என்கிற பொருளாதார வல்லுனரின் 93நிமிட நேர்காணலும் ஒன்று. மேலே அதன் சுருக்கப்பட்ட 6 நிமிட வடிவம். முழு நேர்காணலையும பார்க்க  About  Danielle: As Founder & CEO of Quill Intelligence, DiMartino Booth set out to launch a #ResearchRevolution, redefining how markets intelligence is conceived and delivered. To build QI, she brought together a core team of investing veterans to analyze the trends and provide critical analysis on what is driving the markets – both in the United States and globally. A global thought leader on monetary policy, economics and finance, DiMartino Booth founded Quill Intelligence in 2018. She is the author of FED UP: An Insider’s Take on Why the Federal Reserve is Bad for America (Portfolio, Feb 2017), has a column on Bloomberg View, is a business speaker, and a commentator frequently featured on CNBC, Bloomberg, Fox News, Fox Business News, BNN Bloomberg, Yahoo Finance and other major media outlets என்று யூட்யூப் தளத்தில் ஒரு சிறு அறிமுகம் கிடைக்கிறது.

கொரோனா வைரசை சீனா தொடுத்த யுத்தமாகவே இவர் கருதுகிறார், காரணகாரியங்களோடு விளக்குகிறார். நேரமிருந்தால் என்ன சொல்கிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேளுங்களேன்! எத்தனை நாளைக்குத்தான் உள்ளூர் ஊடகச்சொத்தைகளையே பார்த்துக் கொண்டிருப்பதாம்?

மீண்டும் சந்திப்போம். இன்னொரு முறையும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளுடன்.