ஒரு புதன்கிழமை! கரோனா வைரஸ்! சேகர் குப்தா! V P சிங்!

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் ஆரம்பித்து விட்டது என்பது கவலைதரும் செய்திதான் என்றாலும் ராகுல் காண்டி மாதிரியான உளறுவாயர்கள் அலறுவது போல அச்சத்தை உண்டாக்குகிற விதத்தில் அல்ல! இங்கே பிரிட்டிஷ் அமெரிக்கரான ஜான் ஆலிவர் இந்த 20 நிமிட நிகழ்ச்சியில் கரோனா வைரஸ் குறித்தான அச்சங்களை, தனக்கேயுரித்தான பகடியுடன் சொல்வதில் பிப்ரவரி மாதம் 23 அம தேதி யூட்யூபில் வலையேற்றப்பட்டு இன்று வரை ஒரு கோடியே எழுபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து இருக்கிற ஒரு வியட்நாமியப் பாடலுக்கு ஆடுகிறார். அமெரிக்க அரசியல்வாதிகளை பகடி செய்கிறார். mask முதலான பொருட்களை பதுக்காதீர்கள் என்றெல்லாம் விவரமாகத்தான் சொல்கிறார். ஜான் ஆலிவர் பகடிக்கு மேலே சுட்டி இருக்கிறது. ஆனாலும்  நம்பிக்கையூட்டும் அந்த 3 நிமிட வியட்நாமியப் பாடலை இங்கேயும்  பார்க்கலாமா? ஆங்கிலத்தில்  subtitle  இருக்கிறது.


கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது முதல் என்ன என்ன முன்னெச்சரிக்கைகள் வேண்டியிருக்கும் என்று சொல்கிற பாடலாக இருக்கிறது. அச்சப்படத் தேவையில்லை, எச்சரிக்கையாக இருப்பதுதான் இப்போது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.

    
சேகர் குப்தா இந்த சப்ஜெக்டைக் கூட விடாமல் பேசி இருப்பது ஆச்சரியம் அல்ல! இந்த 19 நிமிட வீடியோவுக்கு வந்த பின்னூட்டத்தில் ஒருவர் கொஞ்சம் நக்கலாகவே சொல்கிற மாதிரி சேகர் குப்தாவுக்குக் கூடத்   தெரியாத சப்ஜெக்ட் இருக்கிறதா என்று எனக்கும் கூட என்னதான் சொல்லவருகிறார் என்பதே குழப்பமாக ஒரு ஆச்சரியம்! ஒன்றும் உருப்படியாகப் பேசத்தேரியாத சமயங்களில், பேசாமல் இருந்து விடுவது மிகவும்  உத்தமம்! ஆனால் The Print தளத்தில் வேறொரு 10 நிமிட வீடியோ கொஞ்சம் உருப்படியான தகவல்களைச் சொல்கிறது.  ஆனால் ஊடகங்களில் வரும் பொறுப்பற்ற செய்திகள் உருப்படியாகவா இருக்கும்?
A cat suspected to be infected with coronavirus is at the centre of a controversy as PETA India has demanded the release of the cat which faces deportation from the Chennai port to China, where cats are killed for meat and fur. A stowaway cat, which arrived in a container from China more than 20 days ago, has been held at the Chennai port and is now facing deportation to China -- where it is unlikely to survive -- all because of ignorance over the coronavirus.     
இப்போது படித்ததில் சுளீரென்று தெறித்தது: 

*வி.பி. சிங் செய்த மாபெறும் தவறு*
“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.
ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த *மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்*
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.
காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன. “காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.
இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.
இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.
சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள் என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.
தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் கட்டவிழ்த்துவிட்டார். அதனை உபயோகித்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த பல காஷ்மீரி தீவிரவாதிகளை (நான்கு) விடுதலை செய்ய உபயோகித்துக் கொண்டார் முஃப்தி. அவருக்கு இருந்த தீவிரவாதி பாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் மதத்தைக் குறித்து, அவர்களின் மதக் கொள்கைகளைக் குறித்து, தீவிரவாதக் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு இருக்கும் பிடிமானத்தைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இங்கு நான் வலியுறுத்துவது.
இது சாதாரண விஷயமில்லை. அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.
திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்! எவ்வளவு பெரிய அதிசயம்!!
இவர்களின் துல்லியமான திட்டமிடல் காரணமாக, ஒன்றின் பின் ஒன்றாக இடைவெளியில்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டே இருந்தன.
குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் 'சைஃபுதின் சோஸ்' இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி. மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!! இவை அனைத்தும் நடந்து விட்ட வரலாறு.
நண்பர்களே, மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான் என நான் உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.
அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.
அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.
அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த இடத்திலிருந்து அகதிகளாக விரட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கதறி அழுவதைக் குறித்து அதே ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், இந்த தேசமும் கவலைப் படவில்லை.
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த காஷ்மீரி பண்டிட்கள் தங்களின் உடமைகளை இழந்து தில்லியின் பிளாட்பாரங்களில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இன்றுவரை அதற்கான ஊர்வலங்கள் நடக்கவில்லை. கண்டனங்கள் தெரிவிக்கப் படவில்லை.
அதேசமயம், ஒரு விவசாயின் வாழ்வாதாரமான மாட்டைத் திருடித் தின்ற அக்லாக் என்கிற முஸ்லிமையோ அல்லது வேறொரு முஸ்லிமையோ யாரேனும் கொன்றுவிட்டால் இந்த தேசத்தில் எழுப்பப்பட்ட கூக்குரல்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இவையெல்லாம் இந்தியா போன்றதொரு பெரிய தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கிற சம்பவங்கள்.
ஆனால் அந்தச் சம்பவங்கள் பெரிதுபடுத்தப் பட்டன. அதற்காக இந்த தேசத்தின் பிரதம மந்திரி மன்னிப்புக் கேட்கிறதொரு சூழலை இங்கு உருவாக்கினார்கள்.
இந்திய சுப்ரம் கோர்ட் “இந்தப் படுகொலைகளை (mob lynching) ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்திய அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூக்குரலிட்டது.
இந்த தேசத்தில், இந்திரா காந்தி மரணத்திற்குப் பின்னர், புது தில்லியில், பிரதம மந்திரி, லுட்டியன்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவை இருக்கும் இதே புதுதில்லியில் 3500 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சாலைகளில் சீக்கியர்களை ஓடவிட்டுக் கொன்றார்கள். கழுத்தில் டயர்களை மாட்டி எரித்துக் கொலை செய்தார்கள். சீக்கியக் குழந்தைகளை உயரத்தில் தூக்கி வீசிக் கொன்றார்கள். கொலை காரர்களுக்கு அஞ்சி பெட்டிக்குள் ஒளிந்த சீக்கியர்களை அந்தப் பெட்டியை எரித்துக் கொன்றார்கள்.
சகோதரர்களே, இந்த தேசத்தில் நடந்த முதலாவது mob lynching அதுதான். அதனைக் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்றுவரை ஏதேனும் சொல்லியிருக்கிறதா? இல்லை. ஏறக்குறைய ஐந்தரை இலட்சம் காஷ்மீரி பண்டிட்கள் முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்டது கூட சுப்ரீம் கோர்ட்டின் பார்வையில் ஒன்றுமேயில்லை.
ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை சொல்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன், பாகிஸ்தானிய ராணுவத்துடனும் போராடிக் கொண்டிருக்கும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து காயப்படுத்தும் காஷ்மீரிகளைத் திருப்பித் தாக்கக் கூடாது என்று அவர்களுக்கு டைரக்‌ஷன் கொடுக்கிறது இந்திய சுப்ரீம் கோர்ட்!
அதாகப்பட்டது கல்லெறிபவர்களைச் சுடக்கூடாதாம். அவர்களைச் சுடுவதென்றால் அவர்கள் மீது ப்ளாஸ்டிக் புல்லட்டுகள் உபயோகிக்க வேண்டுமாம். சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.
தீவிரவாதியுடன் சண்டை செய்கிற ராணுவத்தினன் அவனது துப்பாக்கிக் குண்டைக் கழற்றி வைத்துவிட்டு ப்ளாஸ்டிக் குண்டைப் போட்டு கல்லெறிபவர்கள் மீது சுடவேண்டுமாம்.
அப்படிச் செய்வது சாத்தியமில்லை என்று சொன்னால் கல்லெறிபவர்கள் மீது சுடுதண்ணீரை ஊற்றச் சொன்னது சுப்ரீம் கோர்ட்.
இந்திய ராணுவத்தினன் ஒவ்வொருவனும் துப்பாக்கியுடன் சுடுதண்ணீரையும் தூக்கிக் கொண்டு திரியவேண்டுமாம். இந்திய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்துகிறது!
(முதல் ஏழு நிமிடங்களின் மொழிபெயர்ப்பு இது…)
வழக்கம் போல கூட்டம் கூடி முஸ்லிம்கள் நடத்தும் Citizens Amendment Act (CAA) எதிர்ப்பு என்கிற கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் ஒருத்தனுக்காவது இந்தச் சட்டம் குறித்துத் தெரியுமா என்கிற சந்தேகமே மேலிடுகிறது. அறிவுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். அல்லாவின் இஸ்லாமில் அறிவு இருக்கும்; முல்லாவின் இஸ்லாமில் மூடத்தனம்தானே இருக்கும்?
அதில் சில வீடியோக்கள் அச்சமூட்டுபவை. “தேரே மேரே ரிஷ்த்தா க்யா? லா இல்லாஹா இல்லல்லா” (உனக்கும் எனக்கும் என்ன உறவு. அல்லாவே பெரியவன்) போன்ற கோஷங்கள் இந்திய தேசப் பிரிவினையின்போது எழுப்பப்பட்டவை. அதே கோஷம் மீண்டும் எழுப்பபடுவது இஸ்லாமிய சமூகத்திற்குப் பெரும் சேதத்தையே விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும், ஹிந்துக்களும் வலிகளைத் தாங்கும் மனவலிமை உடையவர்கள்.
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

யாரிவர் என்று தெரியாது. இதற்குமுன் இவர் எழுதிய எந்தப் பகிர்வையும் வாசித்ததில்லை. ஆனாலும், VP சிங் இந்திய அரசியலுக்குச் செய்த /விளைவித்த சேதாரம் மிகப்பெரிது. கிடைக்கும் பழைய தகவல்கள், நினைவுகளில் இருந்து இந்தச் செய்தியின் உண்மை என்னவென்று பார்க்க வேண்டும் என்ற தகிப்பை உண்டாக்கியிருக்கிற பகிர்வு என்பது மட்டும் இப்போதைக்கு.

மீண்டும் சந்திப்போம்.          

3 comments:

  1. விபி சிங் குறித்து எந்த இடத்தில் தேதியில் எழுதி உள்ளார். 2018 வரைக்கும் பார்த்தேன். காணல.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      இந்திய அரசியல்வாதிகள், அவர்களுடைய தடுமாற்றங்களை சொல்கிற single source எதுவுமே இல்லை என்பதை முதலில் மனதில் வைத்துக்கொண்டு தேடவேண்டும். ருபையா சயீத் என்கிற 23 வயது மருத்துவ மாணவி கடத்தப் பட்டதில் Mufti Mohammad Sayeed was 53 years old, and just days into his tenure as India’s first Muslim home minister when his daughter Rubaiya, a 23-year-old medical intern, was abducted from Srinagar on 8 December 1989.Her abductors, members of the Jammu & Kashmir Liberation Front (JKLF), wanted five fellow militants released from prison in exchange for her release. Against the advice of the then chief minister Farooq Abdullah, Sayeed managed to get the five militants released.

      This decision is said to have helped catalyse the Kashmir militancy’s bloody 1990s chapter, and remains one of the defining points of Sayeed’s legacy.

      இப்படிச் சொல்வது காங்கிரஸ் ஆதரவு ஊடகமான The Print

      https://theprint.in/politics/mufti-mohammad-sayeed-indias-first-muslim-home-minister-lover-of-gardens-and-golf/173991/

      காஷ்மீர் அரசியல்வாதிகள் ஒவ்வொருவர் மீதும் பின்னணியிலும் ரத்தக்கறை, ஊழலை விட மிக அதிகமாகப் படிந்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மாவுராகவன்கள் காஷ்மீர் வரலாற்றைப் பூசி மெழுகி எழுதியமாதிரி அல்ல.

      Delete
    2. நீங்கள் தேடியது இந்த ஒரு முகநூல் பகிர்வைத்தான் என்றால் அது Cho Fans Club முகநூல் குழுவில் மார்ச் 4 ஆம் தேதி முற்பகல் 11.32 மணிக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. அவருடைய சொந்தப்பக்கங்களில் அல்ல.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!