இன்னொரு மூணு! வலம்புரி ஜான்! ஜெயகாந்தன்! துக்ளக் சோ!

சதா அக்கப்போர் அரசியலையே கவனித்துக் கொண்டு இருப்பதில் ஏற்படுகிற அலுப்பை சிலரது பேச்சு மாற்றி விடும் என்பதற்கு அவ்வப்போது நான் தேடிப் பார்க்கும் வலம்புரி ஜான் அவர்களுடைய   தமிழ் உரை வீச்சு ஒரு சரியான உதாரணம். வீடியோ 75 நிமிடம்.

  
2001வீடியோ. தரம் அவ்வளவு சரியில்லை என்றாலும் ஆடியோ நன்றாக இருக்கிறது. கொஞ்சம் அனுபவித்துக் கேளுங்கள்! வார்த்தைச் சித்தர், எழுத்துச் சித்தர் என்று கொண்டாடக் கூடிய தமிழ், விஷய ஞானம் இத்தனையும் கூடியிருந்த வலம்புரி ஜான் இந்த மண்ணில் வாழ்ந்ததென்னவோ வெறும் 59 ஆண்டுகள் தான்! இந்த உரை சிங்கப்பூரில் நிகழ்த்தப்பட்டது என்பதைத் தவிர வேறு விவரங்கள் இல்லை .

எழுத்தாளர் ஜெயகாந்தனைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். அவருடைய எழுத்தை இன்றைக்கும் ரசிப்பவன் என்றாலும் கூட அவரிடம் இருந்த முரண் பாடுகளைக் கவனிக்கவும் தவறியதில்லை. கலைஞனின் உடல்மொழி என்று ரவி சுப்ரமணியம் தயாரித்திருக்கிற இந்த ஆவணப்படத்துக்கு புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் உட்பட  நிறையப்பேர் தகவல்கள் தந்து உதவியிருக்கிறார்கள், இளையராஜா இசையமைத்து இருக்கிறார் என்பது டைட்டில் கார்ட் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.


மிகப்பெரிய ஆளுமைகளைக் கூட ஜெயகாந்தன் எப்படி சர்வசாதாரணமாகக்  கடந்துபோனார் என்பதை இந்தப் பதினான்கு நிமிட ஒளித்துண்டில் காணலாம். இதன் கடைசிப்பகுதி இங்கே     


துக்ளக் இதழ் வருகிற தைப்பொங்கல் இதழுடன் 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்றும் கூட வேறெந்த பத்திரிகையும் செய்யாத விதமாக, வாசகர்களை அழைத்துக் கேள்விகேட்கச் செய்து ஆசிரியர் பதில் சொல்வது என்ற வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் சோ. 2013 ஆம் ஆண்டு துக்ளக் 43வது ஆண்டுவிழா நிகழ்ச்சி வீடியோ 103 நிமிடம். சோ என்கிற ஆளுமையை அனுபவிக்க முடிகிற தருணம். கொஞ்சம் நேரம் ஒதுக்கிப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.     .    

2 comments:

  1. கண்டிப்பாகஇன்றைய பதிவின் காணொளிகளை தவறவிடக்கூடாது.   ஆனால் எப்போது நேரம் வாய்க்குமோதெரியவில்லை.  உயிர்ப்புடன் இந்தப் பக்கத்தை வைத்துக்கொள்ள ஒரு பின்னூட்டம் இட்டு வைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! இந்தப்பக்கத்தை புக்மார்க் செய்துகொள்வது இன்னொரு சுருக்கமான நல்ல வழி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!