பதிவுகள் எழுதுவதில் பிரயோசனம் ஏதாவது இருக்கிறதா?

பதிவுகள் எழுதுவதில் பிரயோசனம் ஏதாவது இருக்கிறதா? சுமார் பத்தேமுக்கால் வருடங்களுக்கு முன் எழுதிய பதிவு இது: எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?  கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய பதிவு இது. எழுதிய நேரத்தில் ஒவ்வொரு எழுத்திலும் பூரண விசுவாசத்தோடு எழுதிய பதிவு தான்! ஆனால் இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள் வேறுவிதமான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்று காலை நானே எழுதி மறந்தும் போன் இந்தப்பதிவுக்கு ஒரு பின்னூட்டம், ஒரு சிறு உதவியைக் கேட்டு வந்திருக்கிறது என்றால் என்ன சொல்வது?  



   
1987 ஆம் ஆண்டு இரு நண்பர்களோடு சிவகங்கை சோழபுரத்தில் கவியோகியை நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாரத சக்தி காவியம் என்னும் அவரது படைப்பை மீள்பதிப்புச் செய்ய வேண்டுமென்கிற அவாவினை என்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பாஷணையை இப்போதுகூட நினைவில் வைத்திருக்கிறேன். அதற்குப்பின்னால் நான் 1992 இல் மறுபடி சோழபுரத்துக்கு நான் போன சமயம் அவர் சமாதி நிலைக்கு ஏகி விட்டார். சமாதியில் சிறிதுநேரம் தியானம் செய்துவிட்டு, சோழபுரத்தில் சுத்தானந்த பாரதியார் நிறுவிய பள்ளியை நிர்வகித்துவரும் அவரது உறவினரை மரியாதை நிமித்தம் சந்தித்து வந்தேன். அதே உறவினர்/பள்ளி நிர்வாகியை மறுபடி மதுரையில் அவரது மகள் வீட்டில் சந்தித்துவிட்டு வந்த அனுபவம் மிகக் கசப்பானது. சுத்தானந்த பாரதியாருடைய படைப்புக்களை தேடிக் கண்டுபிடித்து மீள்பிரசுரம் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை அவரிடம் சொன்னதற்குக் கிடைத்த பதில் மிக அலட்சியமானது மட்டுமல்ல. அதற்குமேல் அந்த சம்பாஷணையை இங்கே நினைவுபடுத்திக்கொள்வதே மிகவும் அவமான கரமானதும் கூட.  10% ராயல்டியை அவர்களுக்குக் கப்பம் கட்டிவிட்டு மீள்பிரசுரம் செய்துகொள் அல்லது செய்யாமலே போ என்பது மட்டும்தான் அவர்களுடைய அணுகுமுறையாக இருந்ததைக்கண்டு கசந்துபோய், அந்த விஷயத்தில் மேற்கொண்டு இறங்காமல் ஒதுங்கிக் கொண்டுவிட்டேன் என்பதில் பின்தொடர்ச்சி என்று இதுநாள்வரை ஏதுமில்லாமல் இருந்தது. இன்று காலை இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது? 

sir,
I spent one full year to search the place and see whether he has left any MS which are not published. NO one knew about him, even in the lane adjoining IIT, chennai. At last, a makeshift shopkeeper pointed out his finger at a space and told me 'look sir, this is the place where he was staying.Now the Trustees have sold it and flats have come up .'I saw the flats. After further search I contacted a gentleman at oneof the flats opposite to Tiruvanmiyur bus stand. He didn't know much, but gave me the book in english "Experiences of a Pilgrims soul '. Then I contacted another gentleman at Sivaganga who could not give me any material but the photograph of Sri SBharathi with Swami Gnananandagiri of Thapovanam. I am interested in reading the Sivagiri Padalam of Bharatha Mahasakthi kavyam, where he has given a description of Swami Gnanananda. For your information, they were together in Kolli hills, Sendamangalam, Vadalur and other places doing tapas. Can you help me , by sending a snapshot of this portion if you have the book ? Thanks and regards, N.R.Ranganathan, Editor, Gnana Oli, Thapovanam. 605756. 9380288980. Email id nrpatanjali@yahoo.com

சோழபுரம்  ஆசாமிகளுக்கு பணம் மட்டும் வேண்டும். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட மாட்டார்கள். சுத்தானந்தர் புத்தகத்துக்கு ராயல்டியை அட்வான்சாகக் கப்பம் கட்டிவிட வேண்டும். ஆனால் எந்தப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது, விவரம் வேண்டுவோருக்கு எடுத்துத் தரக்கூட அவர்களுக்கு விவரமும் போதாது , உதவுகிற மனமும் கிடையாதென்றால் சுத்தானந்த பாரதியாருடைய அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொள்ளாமல் வேறு என்ன செய்வது?      

பாரத சக்தி மஹாகாவியம் புத்தகம் என்னிடம் இருக்கிறது என்பதால் குறிப்பிட்ட பகுதியைத் தேடி ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்புவதில் பெரிய சிரமம் என்று எதுவுமில்லை. அனுப்பிவிடலாம்.

மீண்டும் சந்திப்போம்.


         

2 comments:

  1. இன்று காலை வீட்டுக்கு ஆப்ரிகாவில் பணிபுரியும் பெண்மணி தன் கணவருடன் வீட்டுக்கு வந்தார். திருப்பூரில் பத்து வருடங்கள் இதே தொழிலில் இருந்தவர். இப்போது அங்கே கணவரும் மனைவியும் பணிபுரிகின்றார்கள். என் எழுத்து தான் அவர்களை ஊரில் இருப்பது போலவே உணர்த்துகின்றது. உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் (தேனி) ஊருக்குப் போவதற்கு முன்பு உங்களை சந்திக்க வந்தோம் என்றார்கள். 2014 முதல் வாசிப்பதாகச் சொன்னார். உங்களைத் தேடியும் வரக்கூடும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பதிவின் கேள்வியே வேறு ஜோதி ஜி! ஒரு சராசரி விஷயத்தை எடுத்துக் கொண்டு நான் எப்படி எழுதவில்லையோ அதுபோலவே கிட்டத்தட்ட பத்தே முக்கால் வருடங்கள் கழித்து அதை படித்துவிட்டு நண்பர் என்னிடம் கேட்ட விஷயமும் வேறு. அவர் கேட்டதென்ன என்பது அவருடைய வார்த்தைகளிலேயே இருக்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!