இட்லி வடை பொங்கல்! அரசியல் இன்று! #32

தெலுங்கு சினிமாப்படங்களைப் பார்த்திருந்தீர்களே ஆனால் ஒரே மாதிரியான டெம்பிளேட், வில்லனால் மிகவும் கொடுமைக்கு ஆளாகிற கதாநாயகன் தனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் போது வில்லனைப்  பலமடங்கு கொடுமைக்கு ஆளாக்கிப் பழிதீர்ப்பான், இப்படி நிறையப்படங்கள்!  ஜனங்களும் ஆரவாரித்துக் கை தட்டி ஆர்ப்பரிப்பார்கள். எதுசரி,என்ன நியாயம் என்றெல்லாம் யாரும் லாஜிக், ரீசனிங்  பார்ப்பதில்லை.இப்போது ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடு தான் முன்னால் விதைத்தது எல்லாவற்றிற்கும் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்! அப்படியானால் ஜெகன் கதாநாயகன், நாயுடு வில்லனா? இப்போதுள்ள அரசியல் வாதிகள் எவருமே நாயகன் இல்லை! எல்லோருமே ஜனங்களைப்பொறுத்த வரை வில்லன்கள் தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?

   
நேற்றைக்கு சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த இந்தக் கார்டூனைப் பகிர்ந்து கொண்டபோது கூட ஒருசில வார்த்தைகள் மட்டுமே என்னுடைய கருத்தாகச் சொல்லியிருந்தேன். 


ஆனால் இன்று காலை செய்திகளைப் பார்த்தபிறகுதான் ஜெகன் மோகன் ரெட்டி, எப்படிச் சொல்லிச் சொல்லி சந்திரபாபு நாயுடுவை வரிசைகட்டி அடித்து வருகிறார் என்பது இன்னும் தெளிவாகப் புரிந்தது. இங்கே நாயுடுவை வரிசைகட்டி அடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு 9 மணிநேர இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புக்களையும் வெளியிட்டு ஜனங்களுடைய கவனமோ ஆதரவோ நாயுடு பக்கம் திரும்பிவிடாமல் வெகு கவனமாக பழி தீர்த்துக் கொண்டு வருகிறார்  இப்போது கேள்வி இங்கே யார் சூப்பர் வில்லன்? சந்திரபாபு நாயுடுவா? ஜெகன் மோகன் ரெட்டியா? எது உங்கள் பதிலானாலும், மற்றவர் கதாநாயகன் மட்டும் இல்லை என்பதை  மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! 


  • More buildings to be demolished in Andhra? Govt Notice pasted outside Naidu’s residence to vacate his house. AP Govt says it violates environmental norms as it is built less than 100 metres from River Krishna. Following norms or Vindictive politics?
    10:13 AM · Jun 28, 2019 · Twitter for iPhone


    இங்கே தமிழ் சேனல்கள் ஊடகங்கள் தம்பட்டமடிக்கிற மாதிரி திமுக எம்பிக்கள் அல்ல,  இந்த நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் அனேகமாக எல்லாத் தரப்பினர் கவனத்தையும் ஈர்த்தது காங்கிரசோ அதன் கூட்டாளிகளோ கூட அல்ல!  முதல் முறை எம்பியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய மஹுவா மொய்த்ராவின் கன்னிப் பேச்சு மட்டுமே  கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத்தயக்கமும் இல்லை. அதேநேரம் அவர் பேசியது முழுக்கச் சரி என்று ஒப்புக்கொள்வதாகவும் அர்த்தமில்லை. பாசிசம் பாசிஸ்ட் என்று எதிரிகள் மீது முத்திரை குத்துவது இடதுசாரிகளின் பழைய பாணி! NDTVயில்     அவர் பேசியதன் மீதான ஒரு  சிறு விவாதம், கொஞ்சம் பாருங்களேன்! நாடாளுமன்றத்தில் அவர் பேசியதை முழுதும் கேட்க. 

    நம்மூர் சேனல்களில் த,தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியம் ஆனதைப் பற்றி மட்டும்தான்  கவலைப்படுவார்கள்! பன்னீர் தரப்பு அதிமுகவுக்குள் நுழைய தடைவிதித்ததால் தான் அரசியலில் போக்கத்தவர்கள் அடைக்கலமாகும் கட்சியான திமுகவில் வந்து சேர்ந்தார் என்பதை பற்றிப்பேசவே மாட்டார்கள். இங்கே வித்தியாசமாக கராத்தே தியாகராஜன் பேசுவதை ஒளிபரப்பு செய்வது செய்திப்பஞ்சத்தினால்தான் என்று அவர்கள் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!

      
    மீண்டும் சந்திப்போம்.

    6 comments:

    1. மோசமான அரசியல் சூழல்.

      ReplyDelete
      Replies
      1. வாருங்கள் அம்மா! அரசியல் சூழல் மோசமாக இருப்பதற்கு நாமும் ஒரு காரணம் இல்லையோ?

        Delete
    2. இந்த ஸ்டைல் அரசியல் மாறவே மாறாதா என்கிற ஆதங்கம்...

      ReplyDelete
      Replies
      1. மாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்குமே இருக்கிறது ஸ்ரீராம்! வெறும் ஆதங்கம் உதவாது!

        Delete
    3. எனக்கு இதில் ஒரே ஒரு சந்தேகம்தான். சட்டம் என்று ஒன்று இருக்கும்போது, அதிகாரிகள், தலைமைச் செயலர் முதற்கொண்டு, என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? கட்டடத்தை இடிப்பது மட்டுமே தீர்வா இல்லை, அதிகாரிகளையும் பணியிடைநீக்கம் செய்ய வேண்டாமா?

      இந்த முறை திருப்பதியில் ஆட்டோ ஓட்டுபவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர் சொன்னது,
      1. நாயுடு, தான் மட்டும் அறிவியல்ரீதியா நிறைய கொள்ளையடிப்பாரு. கணக்குல கரெக்டா எழுதிவச்சுடுவாரு. அதனால் அவர் திருடுவதைப் பிடிக்கமுடியாது.
      2. வேற எவனையும் காசு அடிக்க விடமாட்டார். தன் கட்சிக்காரன் அரசியல் ரீதியா போலீஸ் அதிகாரிகள்ட போறதை அனுமதிக்கமாட்டார். அதனால கட்சிக்காரனுக்கு இவர்மேல ஆர்வம் இல்லை.
      3. அரசு அதிகாரிகளை இன்னும் இன்னும் என்று ரொம்ப வேலை வாங்குவாரு. அவங்க காசு அடிக்கவும் விடமாட்டாரு. அதுனால அரசு அதிகாரிகள் நாயுடு எப்படா இடத்தைக் காலி பண்ணுவார்னு காத்துக்கிட்டிருந்தாங்க.
      4. மக்களுக்கும் நேரடியா நல்லது நடக்கலை.
      அதுனாலதான் இப்படி நாயுடு கவுந்தது என்றார்.

      ReplyDelete
      Replies
      1. இங்கே சட்டம் ஒழுங்கு தர்மம் நியாயம் எல்லாம் பாமர ஜனங்களுக்கு சும்மா லுலுலாயிக்குச் சொல்வதுதான் நெ.த. சார்! இங்கே கருணாநிதி விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்தார் என்றால் அதில் அதிகாரிகள் கூட்டுக களவாணித்தனம் இல்லாமலா? தங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தால் எந்த அதிகாரி விதிமீறல் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்? அப்புறம் எங்கே என்ன நடவடிக்கையை எதிர்பார்க்கிறீர்கள்?

        திருப்பதி ஆட்டோ டிரைவர் திராவிட அரசியலைக் கொஞ்சம் உல்ட்டாவாகப் புரிந்து கொண்டு பேசியிருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. சந்திரபாபு செய்ததெல்லாம் ஹைடெக் விஷயங்களிலான ஊழல் என்பதால் ரொம்ப அறிவியல்பூர்வமாகச் செய்துவிட்டார் என்று அர்த்தமா? இங்கே அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்யக் கற்றுக் கொடுப்பதும், கூட்டுக்களவாணிகளாக இருப்பதும் அரசு அதிகாரிகள், மற்றும் அரசு ஊழியர்களே என்பதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

        நாயுடு கவிழ்ந்தது எப்படி என்று இங்கே யாத்ரா திரைப்பட விமரிசனத்திலேயே சொல்லியிருக்கிறேன். பெத்த விஷயங்களில் நாயுடு புகுந்து விளையாடிக் கொண்டிருந்த காலத்தில், ராஜசேகர ரெட்டி சாதாரண மனிதர்களின் சின்ன விஷயங்களை வைத்து பாதயாத்திரை நடத்தி 2004 மற்றும் 2009 தேர்தல்களில் நாயுடுவைத் தோற்கடித்தார். அதே சின்ன விஷயங்களை வைத்தே மிகப்பெரிய ஊழலைச் செய்து சம்பாதித்தார்.

        Delete

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!