மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி#8

திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்! 1981 இல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. திண்டுக்கல்லில் தண்ணீருக்காகப் பெண்கள் நடத்திய அந்தப்போராட்டத்தின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது இன்றைக்கு பலருக்கும் மறந்து போன அல்லது மறக்கடிக்கப்பட்ட செய்தியாகக் கூட இருக்கலாம்! 

 தண்ணீர் தண்ணீர் படப் பாடல்கள் அனைத்தும் நேரமிருந்தால் 
கேட்டுப்பாருங்கள்!

கே பாலச்சந்தர் மாதிரி மிடில் கிளாஸ் மக்களை வைத்து மட்டும்  கதைகள் எழுதிப்படமாக்கியவரையே, ஒரு சமூகப்பிரச்சினையை  அதுவும் வேறொருவர் எழுதி இயக்கிப் பிரபலமான நாடகம், அதைத் தான் இயக்கிப் படமாக்க வேண்டுமென்று ஆசைப்பட  வைத்தது மிகவும் சுவாரசியமான விஷயம்.  

சென்னையின் தற்காலிக நிவாரணமாக வேலூரிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தால் போராட்டம் வெடிக்கும் என்று கூறிவிட்டு...இன்னொரு பக்கம் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்த்து மாபெரும் போராட்டமாம்!
ஒவ்வொரு மாவட்டத்தையும் .. தனி நாடு போல... எங்கள் தண்ணீர் எங்கள் உரிமை என்று பேச வைப்பதே இத்தகைய அரசியல் ஏற்படுத்தும் சீரழிவு.
சரி..தண்ணீருக்கான போராட்டம் என்றான பிறகு...காவிரி ஆணையத்தின் உத்தரவை மீறி காவிரி நீரை தர மறுத்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை எதிர்த்தும் அப்படியே சில பல கோஷங்களை போடுவார்களா என்றால்..மாட்டார்கள் !!
.மக்கள் கவனிக்க வேண்டியது இது போன்ற இரட்டை நிலைகளை தான்.


திமுக எப்போதுமே இரட்டைவேடம் இரட்டைநாக்கில் 
வீரவசனம் பேசுகிற ட்ராமா பார்ட்டி தான்! 


இது பிபிசி தமிழ் : திமுக அதிமுக இரண்டு ஆட்சிகளிலும் தண்ணீருக்காகச் செய்ததென்ன? 

இன்று சிறுகூடற்பட்டியில் முத்துவாகப்பிறந்து கவிஞர் கண்ணதாசனாக ஆனவருடைய பிறந்த நாள்..  திமு கழகம் அங்கிருந்து ஸ்தாபன காங்கிரஸ் அப்புறம் இந்திரா காங்கிரஸ் என்று பயணித்த அரசியல் ஒருபக்கம்! உள்ளுக்குள்ளே உறையும் பரமனைத் தேடியலைந்த  ஆன்மீகத் தேட்டம் இன்னொருபக்கம் என்று வாழ்ந்தவர் தன்னுடைய அரசியல் பயணத்தைக் குறித்து  எழுதியது  வனவாசம்.


வனவாசம் ஆடியோ புத்தகத்தின் சாம்பிள் இது. கேட்டுக் கொண்டே பதிவை மேலே வாசிக்கலாமே. கருணாநிதி அண்ணாதுரை அகியோரைப்பற்றிக்கொஞ்சம் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய புத்தகமும் கூட! .  கவிஞரை நினைவு கூரும் வண்ணமாக இந்தப்புத்தகத்தை இன்றைக்கு வாசித்துப் பார்க்கலாமே!  
  
இப்படி சொல்லிட்டுப்போன மவராசன் யாரோ தெரியாது! ஆனால் இந்திராவோட மருமகளாக்கும் நான் என்று மார்தட்டின சோனியாG க்கு அச்சு அசலாய்ப் பொருந்துதே!

மீண்டும் சந்திப்போம்.    

5 comments:

  1. தண்ணீர் தெண்ணீர் படம் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டு வரும்போதே எனக்கு அந்தப் படத்தின் பாடல்கள்தான் நினைவுக்கு வந்தன. நீங்களும் அதையே சொல்லி விட்டீர்கள். வனவாசம் ஆடியோ புக்கா? கேட்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஆடியோ புத்தகத்தின் ஒரு சிறுபகுதிதான் சாம்பிளாக இருக்கிறது ஸ்ரீராம்! என்னிடம் வனவாசம் புத்தகம் இருந்தது, எங்கே என்று தேட முடியவில்லை.

      Delete
  2. தண்ணீர் தண்ணீர் படத்தில்

    கீழே கிடக்கும் ரஜினி படத்தை எடுக்க முயன்று தண்ணீர் பானையைப் போட்டு உடைப்பது போல் ஒரு காட்சி இருக்கும்...

    அதைப் போல ஏதோ ஒரு மாயையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்...

    ReplyDelete
    Replies
    1. ரஜனி மாயையை இன்னமும் நம்பினால் நீங்கள் சொன்ன மாதிரி, இருப்பதையும் தோற்றுவிட்டுத்தான் போகவேண்டும் துரை செல்வராஜூ சார்! அது ஏனோ இங்குள்ள சில பிஜேபி புள்ளிகளுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வகையறாக்களுக்கு புரியமாட்டேனென்கிறது?

      Delete
  3. ரஜனி மாயையை இன்னமும் நம்பினால் நீங்கள் சொன்ன மாதிரி, இருப்பதையும் தோற்றுவிட்டுத்தான் போகவேண்டும்......... என் மனதில் இருப்பதும் இது தான்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!