கிறுக்கர்கள் கையில் அரசியல்! எப்படி மீட்கப் போகிறோம்?

வெள்ளைத்துரைமாருக்குப் பின்னால் நாங்கள் தான் ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையோடு சோனியா G வாரிசுகள் உளறித் திரிவதை நிறுத்துகிற வரை சோனியாG காங்கிரசுக்கு மீட்சி இல்லை. இவர்கள் ஒரு பொறுப்புள்ள அரசியல்கட்சியாக நடந்துகொள்வார்கள் என்கிற அறிகுறியோ நம்பிக்கையும் கொஞ்சம் கூட இல்லை.

   
ரேபரேலி தொகுதியில் ஜெயித்தது சோனியாG வால் மட்டுமே என்கிறார் பப்பி. அப்படியானால் அமேதியில் ராகுல் காண்டி   தோற்றதற்கு ராகுல் காண்டி மட்டுமே தான் காரணமென்று ஒப்புக் கொள்கிறாராமா? டில்லி பாதுஷாக்களாகத் தங்களை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிற இந்தக்கிறுக்குகள் ஜெயித்தால் அது பாதுஷா கணக்கு தோற்றால் அடிமைகள் கணக்கு என்று  நினைத்துக் கொண்டிருப்பது இந்திய அரசியலின் மிகப்பெரிய சோகம்! ஆகப்பெரிய காமெடியும் கூட!   கவனித்துக் கேட்க வேண்டிய 17 நிமிட விவாதம். 
    
*******
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்று ஒரு வழக்குச் சொல் உண்டு. முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருட்டல்  மிரட்டல்களுக்கும் அதே கேவலமான கதிதான் என்று கொல்கத்தாவில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.  


ஒருதரம் ரெண்டுதரம் மூன்றுதரம் என்றிருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம்! உருட்டல் மிரட்டல்களையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தால் என்ன மரியாதை கிடைக்குமாம்? டாக்டர்கள் பின்வாங்குவதாக இல்லை. மிரட்டலுக்குப் பதிலாக ராஜினாமாக் கடிதங்கள் என்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மமதைக்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இழப்பு என்று பார்த்தால் வாக்களித்துவிட்டு தீதி என்னமாச்சும் செய்வார் என்று நம்பிக்காத்திருக்கிற பாமர ஜனங்களுக்குத் தான்! அவர்களும் கொஞ்சம் பொறுத்துப்பார்த்துவிட்டு, தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்!  மமதை, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து மம்தாவின் கண்களை மறைக்கின்றன. சுத்தமாகக் கோட்டைவிட்டு நிராதரவாக நிற்கும் போதுதான் புரியும் போல!  
*******
ஆந்திராவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு தெலுகு தேசக் கட்சித் தொண்டர்களுக்கும் ஆளும் YSRCP தொண்டர்களுக்கும் அங்கங்கே மோதல்கள் நடந்து கொண்டே இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.


ஆந்திர அசெம்பிளியில் ஜெகன் மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவைக் கிழிகிழி என்று கிழிக்கிறார். புதிதாக ஏதும் இல்லை. ஜெயித்தவுடன் பேசிய அதே ஸ்க்ரிப்ட் தான். பதில் பேசவிடாமல் நாயுடுவை சபையில் கூச்சல்போட்டு அடக்க முயற்சிக்கிறார்கள். ஆந்திர ஜனங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பெருத்த ஏமாற்றத்தைத் தரப்போவதற்கான அறிகுறி இப்போதே தெரிகிறது. சந்தேகமிருந்தால் இங்கேயும்  பார்க்கலாம்             


இந்த வீடியோவில்  ஆவேசமாகப் பேசுகிற நபரைப்பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் மூச்சுக்கு மூச்சு அம்பேத்கர் அம்பேத்கர் என்று வாய் கிழியப் பேசுகிறாரே, அந்த அம்பேத்கர் வழித்தோன்றல்களே அம்பேத்கர் இன்றைய காலத்துக்குச் சரிப்பட்டுவரமாட்டார் என்று ஓரம் கட்டிவிட்டுப் புதுவழி தேடியலைய ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  


மீண்டும் சந்திப்போம்.


8 comments:

  1. ப்ரியங்கா காண்டி - வெற்றிபெற்றால் தங்களால். ..தோல்வியுற்றால் மற்றவர்களால்.... இவரைத்தான் அடுத்த தலைவர் என்று காங்கிரஸ் காரங்க காவடி தூக்கறாங்க. காலக் கொடுமைதான்.

    ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியுறுவார் என்றுதான் நான் நினைக்கிறேன். இது பாஜக வளர்ச்சியில்போய் முடியலாம். சந்திரபாபு நாயுடுக்கு வயதாகிவிட்டதுன்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே நடக்கக் கூடிய உண்மைதான் நெல்லைத்தமிழன் சார்!

      Delete
  2. மம்தா பானர்ஜி - சரி...இப்போவே ஒரு கணிப்பை நோட் பண்ணிக்கோங்க. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜிதான் மீண்டும் வருவார்னு நான் கணிக்கிறேன். எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் போகும், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பெரும்பாலும் அவங்க கட்சிக்கே வாக்களிப்பாங்க. அதுனால, 50% இடங்கள் மம்தாவுக்கு, 25, 25% கம்யூனிஸ்டுக்கு, பாஜகவுக்கு வரும்னு எனக்குத் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. இப்போது கேள்வியே சட்டசபைத்தேர்தல் நடக்கிறவரை மம்தா தாக்குப்பிடிப்பாரா என்பதுதானே சார்!

      Delete
  3. திரு அம்பேத்கார் படத்தை வியாபாரமாக்குபவர்கள் பற்றி மரியதாஸ் நன்றாகவே சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஈவெரா, அம்பேத்கர் பற்றி பிலிம் காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கே அது காலாவதியாகிப்போன சரக்கு, வீரியமிழந்து போனதென்று தெரியாது ஸ்ரீராம்!

      Delete
  4. அம்பேத்கார், காந்தி, படேல்,வாரிசுகள் (மகன்கள்,மகள்கள், பேரன்கள், பேத்திகள்) பற்றி வாய்ப்பு இருந்தால் அவர்களின் தற்போதைய வாழ்க்கைப் பற்றி எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. என்னை #வாரிசுஸ்பெஷலிஸ்ட் ஆக்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே ஜோதிஜி! ஒரிஜினல் காந்தியின் வாரிசுகளில் கோபால்தாஸ் காந்தி எவருமே தவிர அரசியலில் சோபிக்கவில்லை.கொள்ளுப்பேரன் துஷார் காந்தி அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்.

      அம்பேத்கருடைய பேரன் பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கர் தனியாக ஒரு அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் 2019 தேர்தலில் அசாதுதீன் ஒவைசியுடன் கூட்டு வைத்து மஹாராஷ்ட்ராவில் NCP CONgress பல வேட்பாளர்களை மண்ணைக்கவ்வ வைத்ததைத்தவிர வேறொன்றும் இல்லை, ஜூன் 8 ஆம்தெதி அவரைப்பற்றிய செய்தி ஒன்றுக்குப் பதிவின் கடைசியிலேயே லிங்க் இருக்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!