சண்டேன்னா மூணு! உபியும் பீஹாரும்! மருத்துவமும் அரசியலும்!

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் அங்கே மருத்துவ வசதிகளின்  போதாமை,  நோயாளிகளுடைய பரிதாபமான நிலைமை இவைகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்! மேற்கு வங்கம் மட்டுமல்ல, உபி பீஹார் போன்ற வட இந்திய மாநிலங்களில் இந்த அவலம் இன்னமும் நீடிப்பதைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? 2017 இல் கோரக்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயில் 500+ குழந்தைகள் இறந்ததை இங்குள்ள ஊடகங்கள் யோகி ஆதித்ய நாத் அரசுக்கு எதிரான பிரசாரமாக மட்டுமே முன்னெடுத்தன. குழந்தைகள் சாவு என்பது 2014 இல் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு பலவருடங்கள் முன்னாலும் தொடர்கதையாகத் தான் இருந்தது என்பது மறைக்கப்பட்டு ஊடகத்தம்பட்டங்கள் பிஜேபிக்கு எதிரான கூவலாக மட்டுமே இருந்தது என்பது இந்திய அரசியலில், ஊடகத்துறையில்  புரையோடிப்போன ஒரு சாபக்கேடு.

 

இந்த வருடம் பீகாரில் இந்த மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 167  குழந்தைகள், அதிலும் 127 குழந்தைகள் முசாபர்பூர் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே என்பது செய்தியாக வாசிக்கும் நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சி தருவதாக இருக்கலாம், ஆனால் மாநிலத்தில் ஆளுவோருக்கு இல்லை என்பதுதான் உண்மையில் அதிர்ச்சியளிக்க வேண்டிய செய்தி. இந்தப்பிரச்சினை குறித்து விவாதிக்கக் கூட்டப்பட்ட கூட்டத்திலேயே பீஹார் மாநில அமைச்சர் ஒருவர் எத்தனை விக்கெட் விழுந்தது என்று கிரிக்கெட் ஸ்கோரில் கவனமாக இருந்ததும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்டதும் மேலே வீடியோவிலேயே இருக்கிறது.  
                                                         
  
இப்போது ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்ட, அவதூறு பரப்பும் செய்திகளுக்காளான  யோகி ஆதித்ய நாத் அரசு,    உத்தர பிரதேசத்தில் இந்தப்பிரச்சினையை எப்படி சமாளித்தது என்பதையும் கொஞ்சம் பார்க்கவேண்டும்.குற்றம் சொல்லுவது எளிது, தீர்வு காண்பது ஒரு தொடர் முயற்சியால் மட்டுமே சாத்தியப்படுவது என்பதை யோகி ஆதித்யநாத்  அரசு சாதித்துக் காட்டியிருக்கிறது.
In a big achievement for the Yogi Adityanath dispensation, UNICEF India has lauded his government for successfully immunising all children of the state against Japanese Encephalitis and Acute Encephalitis Syndrome. ''DASTAK'' campaign is part of a comprehensive social and behaviour change communication strategy embraced by the state government to contain encephalitis.
As part of the campaign, the entire state machinery with help of UNICEF went door to door in 38 districts affected by JE and AES. என்கிறது NDTV,  இதன் பலனாக 2017 ஆகஸ்டில் 511 ஐத் தொட்ட உயிரிழப்புக்கள் 2018 இல் 166ஆகக்  குறைந்து, 2019 இல் 20 என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் தான் இந்த நோய் தாக்கும் காலம் என்றாலும் UNICEF உதவியுடன் பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து கொடுக்கப் படுகிறது. மிகச்சமீபத்தைய நிகழ்வுதான்! ஆனால் நிதீஷ் குமார்  உபி அரசிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதோடு, அங்கேயுள்ள மருத்துவர்களுமே கூட முயற்சிக்கவில்லை என்பது கூடுதல் பரிதாபம்.  


சோனியா மற்றும் வாரிசுகளுடைய செயல்திறனற்ற, சுயநல அரசியலைப்பற்றி நிறையவே பேசியாகிவிட்டது. அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டுமானால் கொஞ்சம் பேசலாம்! இப்போது ஒரு மாறுதல், பாசிட்டிவான செய்தியைப் பார்க்கலாம்!  


மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி! 2014 இல் அமேதியில் ராகுல் காண்டியை எதிர்த்துப் போட்டியிட்டது தோற்றாலும், அமேதி மக்களை மறந்துவிடவில்லை. இத்தனை ஆண்டுகளில் தொகுதி மக்கள் பார்த்திராத அபிவிருத்தித் திட்டங்கள், தொழிற்சாலைகள் என்று பலவிதமாகவும் உதவியதோடு தொகுதி மக்களை அடிக்கடி சந்தித்ததன் விளைவாகத்தான் இந்திரா குடும்பச்  சொத்தாகப் பார்க்கப்பட்ட அமேதி தொகுதியிலேயே ராகுலைத் தோற்கடிக்க முடிந்தது. 

ஜெயித்ததோடு தொகுதியை மறந்து விடுகிற சராசரி இந்திய அரசியல்வாதியைப் போல அல்லாமல், ஸ்ம்ருதி ஈரானி இன்னும் ஒரு படி மேலே போய், அமேதி தொகுதியிலேயே வசிப்பதற்காக ஒரு வீட்டையும் கட்டிக்க கொள்ள உத்தேசித்து இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அமேதி ரா பரேலி தொகுதிகளில்  ஜெயித்த சோனியாவோ ராகுல் காண்டியோ செய்யாதது இது. ஆளப்பிறந்தவர்கள் என்ற மிதப்பில் தேர்தலில் நிற்கிற சமயம் மட்டும் தொகுதிக்குள் வருவது, அப்புறம் மறந்துவிடுவது அவர்களுடைய வழக்கம்.   

Smriti Irani Does What Rahul Did Not for 15 Years, Decides to Build Her House in Amethi என்று தலைப்பிட்டே சொல்கிறது News18  

At her first visit after an emphatic victory in Amethi, Union Minister for Women and Child Development Smriti Irani announced on Saturday that she will construct her own house in her constituency. She has already identified a plot in Gauriganj.The announcement was made in the presence of UP deputy CM and PWD minister Keshav Prasad Maurya at the inauguration of a Rs 30-crore road project. At the end of the programme, keys of houses under Pradhan Mantri Awas Yojan were distributed among residents of Amethi.   

சும்மாத்தான் சொன்னாரோ, சீரியசாகச் சொன்னாரோ தெரியாது, சென்ற செவ்வாய்க்கிழமை மம்தா பானெர்ஜி தன் கட்சிக்காரர்களுக்கு, அரசுத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஜனங்களிடம் காசு வாங்கியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சொன்னதும்....... 

அங்கங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளூர்த்தலைகளை ஜனங்கள் கெரோ செய்வதும் எங்கள் காசைத்திருப்பிக்கொடு என்று கேட்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதாம்! நசிகேதா என்கிற பாடகர் இந்த cut money  பற்றிப்பாடிய பாடல் இப்போது வைரலாகப் பரவிக் கொண்டிருப்பது இன்றைய சிறப்பு! 
மீண்டும் சந்திப்போம்.
            
    

2 comments:

  1. சோனியா எப்படி வென்றார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. உத்தரப்பிரதேச பாமரமக்களை நேரு இந்திரா, காந்தி வாரிசுகள் என்ற போர்வையில் நம்பவைப்பது எளிதாக இருந்ததுதான் காரணம் ஜோதிஜி! பரம்பரை பெயரை மட்டும் சொல்லி வளர்ச்சிப்பணிகள் எதையுமே செய்யாமல் பாமரமக்களை ஏமாற்றவும் முடிந்தது தவிர இங்கே அரசியல்கட்சித்தலைவர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளரை எந்தக்கட்சியும்ம் நிறுத்துவதில்லை என்பதும் ஒரு கூடுதல் காரணம்! இந்த இரண்டையும் பிஜேபி 2014, 2019 தேர்தல்களில் மாற்ற முயன்றது அமேதியில் மட்டுமே! ரே பரேலியிலும் இதே மாதிரி முயற்சி செய்திருந்தால் சோனியாவுமே தோற்கடிக்கப்பட்டிருப்பார்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!