எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? யாரிடம் கேட்பது?


எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி தர்மம் என்ற பெயருடன் கூட்டணியாகச் சேர்ந்திருக்கிற திமுகவின் இசுடாலினிடமும் கேட்டுப் பாருங்களேன்! மம்தாவுக்கு 2019 நாடாளுமன்றத்தேர்தலில் வாங்கிய அடி, 2021 சட்டமன்றத் தேர்தலில் இன்னமும் பலமாக விழுமோ என்ற பயம், கவலையில் கடந்த 5 ஆண்டுகளில் சூப்பர் எமெர்ஜென்சி இருந்ததே என்று வாய் கூசாமல் உளறி இருக்கிறார்! 

1974 இல் பீஹார் இயக்கம் என்று இந்திரா காண்டிக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய ஜனநாயகப் போராட்டத்திற்கு  ஜெயப்ரகாஷ் நாராயணனை தலைமை தாங்க அழைத்துவந்த லல்லு பிரசாத் யாதவ் ஊழல் செய்ததற்காக இன்றைக்குச் சிறையில் இருக்கிறார். அவரைக் கேட்டால்  மம்தா பானெர்ஜியை விட அதிகம் கூவுவார். ஆக, ஆக என்றே வாய்க்கு வாய் சொல்லி  ஆரம்பிக்கிற இசுடாலின் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறார்? 

2011 இல் எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட அந்த இருண்ட நாட்களைப் பற்றி எழுதிய பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் கேள்வியாக வந்தது.

  1. நேரு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. நீங்க என்ன வேண்டுமானாலும் நேரு, இந்திரா காந்தியை குறை சொன்னாலும் இப்போதுள்ள காங்கிரஸ் மக்கள் ஒப்பிடும் போது இவரை குறை சொல்ல என்னால் முடியவில்லை.
    ReplyDelete
  2. *இதுக்கு அதுவே தேவலைங்கிறது மாதிரி* இப்போதுள்ள காங்கிரஸ்காரனுக்கு நேரு எவ்வளவோ தேவலை என்று சொல்கிறீர்களா ஜோதிஜி? நேருவை நேரு காலகட்டத்தோடு தான் ஒப்பிட வேண்டும்.தவிர ரஷ்ய எழுத்தாளர்கள் பார்வையைவைத்து, நேரு, இந்திரா பற்றி எந்த உண்மையையுமே அறிந்து கொள்ள முடியாது.

    ஒருவகையில் காங்கிரஸ் நேரு அபிமானிதான்! என்றாலும் ராமச்சந்திர குகாவின் இந்தியா: காந்திக்குப் பின் புத்தகத்தை, ஆங்கில மூலத்திலேயே படித்துப் பாருங்களேன்!

  



இன்றைக்கு ஜெயலலிதாவைக் கேலி செய்கிறார்களே! அன்றைக்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது, இந்திரா எதிரே உட்கார தைரியம் இருந்ததா? 
 
INDIRA Gandhi suspended constitutional guarantees and imposed Emergency at midnight on June 25, 1975. This will be discussed yet again on Saturday in seminar halls across India. However, the equally important international context of the landmark event is not viewed as seriously.

Seen from the perspective of India’s internal dynamics, the day marks the 36th year since she put many of her opponents in jail. To heighten the irony or to perhaps flaunt feigned even handedness, she also incarcerated members of smuggling and assorted underworld syndicates.

Some newspapers held their ground for a while by leaving yawning white spaces instead of accepting censored news. But by large the media “crawled when they were asked to bend”. Mrs Gandhi’s political targets included ideologues of the Hindu, Sikh, Muslim right as well as Gandhian socialists. Some communists were jailed but several others supported her short-lived and miscalculated authoritarianism.

2011 இல் இப்படி சொல்லியிருப்பது டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் டில்லி நிருபர்! ஜாவேத் நக்வி என்று பெயர்.

இந்திரா காண்டி 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு,நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி,அரசியல் சாசனம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகளை ரத்து செய்தார். அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல,எதிர்ப்பவர்கள் என்று கைகாட்டப் பட்டவர்களும் சேர்ந்தே நள்ளிரவுக் கைது நடவடிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
  
வேடிக்கை என்ன என்றால்இங்கே மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்! திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்தகொச்சையாகஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான்தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர்இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கொண்ட கதையாகிப் போனாரேநினைவுக்கு வருகிறதா?)

மதுரையைச் சேர்ந்த ஆர் வி சாமிநாதன் என்று ஒரு மத்திய இணை அமைச்சர்! அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள்ஐயாஇந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று! அவ்வளவுதான்! உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட  மிசாவின் (Maintenance of Internal Security Act)  கீழ் தீப்பொறி ஆறுமுகத்தைப் பிடித்து உள்ளே போட்டார்கள். தீப்பொறி ஆறுமுகத்தோடு கூடவேதிமுகவில் இன்னொருத்தர்! பாண்டியன் என்கிற தெருச் சண்டியர்!அவரையும் மிசாவில் பிடித்துப் போட்டார்கள்வெளியே வந்ததும் அவர் "மிசா" பாண்டியனாகிப் போனார்! 

ஆகமிசாஎஸ்மாஅது  இது என்று ஏகதடபுடல்களுடன் தம்பட்டம்டிக்கப்பட்ட சட்டங்கள் கேணத்தனமாகத்தான் பயன் படுத்தப் பட்டன.கேவலம் தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆசாமிகளால் உள்நாட்டுப் பாதுகாப்பு குலைந்துவிடும் பிடித்துப் போடு உள்ளே என்று ஒரு அரசு செயல்படுமானால்,அது ஒன்று கோழையிலும் கேடுகெட்ட கோழைத்தனம் உள்ளதாக இருக்கவேண்டும்! 

அல்லது கேணைகள்கிறுக்கு மாய்க்கான்களால் நடத்தப் படுவதாக இருக்க வேண்டும்! எமெர்ஜென்சியில் இரண்டு விதமாகவும் இருந்தது என்பதுதான் வரலாறு!

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்! நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல! பலவிதக் குழப்பம்! கலப்படம்!
 
திமுக என்னமோ மிசாவை எதிர்த்துப் பெரிதாகக் கிளர்ச்சி நடத்தியதாகக் கதை சொல்லுவார்கள். சென்னையில் முக ஸ்டாலின்சிட்டி பாபு இருவர் மீதும்அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. மற்றப்படி எமெர்ஜென்சியின் முழுவீச்சையும்வெறித் தனமான ஆட்டத்தையும் தமிழ்நாடு முழுமையாகத்தெரிந்து கொள்கிற மாதிரி பெரிதாக இல்லை. பத்திரிகைகளின் வாய்க்குப் பெரிதாகப் பூட்டுப் போடப்பட்டது. தணிக்கை அதிகாரிகள்அரசையும் இந்திராவையும் எவராவது விமரிசிக்கத் துணிகிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதணிக்கை செய்தார்கள். 

அந்தத் தணிக்கையையும் தனக்கே உரித்தான துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே பத்திரிக்கை சோ நடத்திய துக்ளக் ஒன்று தான். அடுத்துதிரு ராம்நாத் கோயங்காவின் வழிநடத்தலில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைக் குழுமம் எமெர்ஜென்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தது. குல்தீப் நய்யார் சொல்கிறபடி,கொஞ்சம் வளைந்துகொடு என்று இந்திரா சொன்னவுடன்ஜனநாயகத்தின்நான்காவது தூண் என்று தங்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும்பத்திரிகைகள்,மண்டியிட்டுத் தவழ ஆரம்பித்த விநோதத்தை என்னவென்று சொல்வது?

நீதித்துறைக்கு மட்டும் முதுகெலும்பு  இருந்ததாஇந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை! எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிரஅரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை! அரசு அதிகாரிகள் கூழைக் கும்பிடுபோட்டுஜனங்களை இன்னமும் கசக்கிப் பிழிந்தார்கள். முதுகெலும்போ சுயசிந்தனையோ இல்லாத அரசியல்அதிகார வர்க்கம் இந்திராவின் துதிபாடிகளாக இருப்பது மட்டுமே பிழைக்கும் வழி என்பதைக்கண்டுகொண்டார்கள். காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் கட்சியாக மாறிக் கொண்டே வந்தது. 

அன்றைக்கு தேவ காந்த பரூவா என்ற ஒருத்தர் மட்டுமே அறியப்பட்ட காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானாக இருந்தார்! இன்றைக்குப் பரிணாமவளர்ச்சியில் திக் விஜய்சிங்அபிஷேக் மனு சிங்விகபில் சிபல் என்று ஒருபெரிய பட்டாளமே உருவாகிக் குழப்பிக் கொண்டிருக்கிறது!

கேரளாவைப் பொறுத்தவரைஎமெர்ஜென்சி தருணத்தில் அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் தான்! அதையும் மீறி நடந்த ஒரே ஒரு  விஷயம் ராஜன் என்ற மாணவரை போலீசார் தீவீரவாதி என்று கைதுசெய்து சித்திரவதை செய்ததில் அந்த இளைஞன் இறந்தே போனான்.அவனுடைய தந்தைஈச்சரவாரியர் நடத்திய தனிமனிதப் போராட்டம்எமெர்ஜென்சி நேரத்து அத்துமீறலைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது;கேரளாவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தஇந்திரா காந்திக்கே சவால் விடக்கூடியவர் என்று  சொல்லப்பட்ட கருணாகரனுக்கு மட்டுமே ஏழரை பிடித்தது.

எமெர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க ஷா கமிஷன் என்று ஒரு விசாரணைக் கமிஷன்! தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும்ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம்காங்கிரசுடையது! கூட்டணி தர்மத்தை ஒட்டி, திமுக தலைவர் தன் மீது குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும் காணாமல் போகச் செய்த மாயமும் இங்கே நடந்தது.

எமெர்ஜென்சியின் கடுமை ஹிந்தி பெல்டில் மட்டுமே அதிகமாக பாதித்தது என்று சொன்னால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. எமெர்ஜென்சி அடக்கு முறை அதிகமாக வெளிச்சம் போடப்படாத பகுதிகளில் காங்கிரஸ் 1977 தேர்தலில் அதிக சரிவை சந்திக்கவில்லை என்பதை சேர்த்துப் பார்த்தால் நிலவரம் புரிய வரும்.

ஜாவேத் நக்வி இந்தியர்களாகிய நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்கிறார். எமெர்ஜென்சி ஆட்டங்களை நினைவு வைத்திருக்க வேண்டியவர்கள் மறந்தே போய் விட்டோம்!வழிநடத்த வேண்டியவர்கள் தடம் மாறிப் போய் விட்டார்கள்! 

ஆகதெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்று இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட நாசகார பூதத்திடமே தலையைக் கொடுத்துவிட்டுஅதன் கருணைக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

ஜார்ஜ் ஆர்வெல் என்பவர்  அனிமல் பார்ம் என்று ஒரு அரசியல் நையாண்டிக் கதையை எழுதினார்.  பல மிருகங்களும் கூடி வாழ்கிற ஒரு பண்ணையில்,பன்றிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றன. அதிகாரத்துக்கு வந்ததும்பன்றிகள் ஒரு பிரகடனம் செய்கின்றன. "எல்லாப் பன்றிகளும் சமம்! ஆனாலும்சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம்!" கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் எழுதப்பட்ட இந்தக் கதைகம்யூனிஸ்டுகளுக்குப் பொருந்தியதை விடஇந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகப் பொருந்துகிறது என்பதை இந்திரா காண்டி ஆள ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இன்று வரை தொடர்கிற அவலம்.

ஜாவேத் நக்வி தன்னுடைய நக்கலை மறுபடிஅனிமல் பார்ம் நாவலில்,ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிற ஒரு வரியை வைத்தே முடிக்கிறார்.

Reminds you of the famous lines from George Orwell’s Animal Farm? 

“The creatures outside looked from pig to man, and from man to pig, and from pig to man again; but already it was impossible to say which was which.”

வெளியே இருந்து பன்றிகளிடமிருந்து மனிதனைமனிதனிடமிருந்து பன்றிகளை,மறுபடியும் பன்றிகளிடமிருந்து மனிதன்-மனிதனிடமிருந்து பன்றிகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதேஎது (பன்றி) எது (மனிதன்) என்று பிரித்துப் பார்க்க இயலாமலே போய் விட்டது! ஆம்! 

ஜெயப்ரகாஷ் நாராயணன் என்ற பழுத்த காந்தீயவாதி நடத்திய சம்பூர்ண கிராந்தி என்ற ஊழலுக்கெதிரான போராட்டம்இரண்டாவது விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்ததில் கவரப் பட்டுஅதில் முன்னணி வகித்ததுடிப்பான இளைஞர்களாக உருவான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ராம் விலாஸ் பாஸ்வான்நிதீஷ் குமார் இப்படி எவருமேஜெயப்ரகாஷ் நாராயணன் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. அது மட்டுமல்லஊழலுக்கெதிரான ஜேபியின் போராட்டக் களத்தில் உருவான இவர்களேபின்னாட்களில் பதவி சுகத்தைப் பார்த்ததும்ஊழல்வாதிகளாகவும் ஆனார்கள் என்பது கசப்பான படிப்பினை.

ஒன்று சொல்ல மறந்துபோய் விட்டேனே! எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள்! வேலை செய்தார்களா என்று மட்டும் கேட்காதீர்கள்! 
எமெர்ஜென்சி தருணங்களில் நெஞ்சம் நிறைய அச்சத்தோடு வேலைக்கு வந்த ஒரே பிரிவு அரசு ஊழியர்கள் தான்! 

எமெர்ஜென்சிக்கு முன்னாலும் சரிஅதற்குப் பின்னாலும் சரி,அரசு ஊழியர்கள் அப்படி பன்க்சுவலாக அலுவலகம் வந்ததும் இல்லை! ஏதோ தேறினவரைக்கும் சரி என்று  லஞ்சத்தைஇப்போது கறாராகக் கசக்கி வாங்குவது போல அல்லாமல் கொஞ்சம் தணிந்தே வாங்கினார்கள் என்பது எமெர்ஜென்சியின் ஒரே நல்ல அம்சம்.

அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தாறாவது நினைவு ஆண்டான இன்றைய தினத்தை மறக்க முடியுமாமறந்து இருந்து விட முடியுமா?

எமெர்ஜென்சிஅதன் தழும்புகள்கற்றுக் கொள்ளத்தவறிய பாடங்கள் என்று தொடர்ந்து பேசுவோம்!

தொடர்புடைய பதிவு ஒன்று இங்கே 

*மீள்பதிவுதான்! முன்னுரையாக நடப்பு அரசியலோடு சேர்த்து எழுதப்பட்டது  சமீபத்தைய வரலாறு கூடத்  தெரியாமல் இருக்கிற தமிழ் சமூகத்துக்கு  சமர்ப்பணம். 


2 comments:

  1. அரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள், நடிகர்கள், நடிகைகளின் வாரிசுகள் (மட்டும்) நாம் வளரும் போது நமக்கு குழந்தைகளாகத் தெரிகின்றார்கள். நம் குழந்தைகள் வளரும் போது நம் குழந்தைகளின் வாழ்க்கையையும் தீர்மானிப்பவர்களாகவும் மாறுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதிலிருந்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறதே, ஜோதிஜி! இப்படித் தகுதியில்லாதவர்களை ஆதர்சமாகவோ தலைவர்களாகவோ ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு காரணகாரியங்களோடு எடுத்துச் சொல்கிறோமா? அல்லது தவறியிருக்கிறோமா?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!