சண்டேன்னா மூணு! எல்லாமே அரசியல் தானையா!

ருவனுக்குக் கெட்ட நேரம் ஆரம்பித்தால் அது  என்னென்ன வகையில் எல்லாம் ஆட்டுவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ராகுல் காண்டியின் தலைமையில் இரண்டாம் முறையும் தேர்தல்களில் பரிதாபமாகத் தோற்று எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் காங்கிரஸ் கட்சியில் நடந்து கொண்டிருக்கிற தொடர் நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும். அந்தக் கொடுமையைக் காணச் சகிக்கவில்லையா? அசாதுதீன் ஒவைசி மாதிரிச் சில்லறைகள் கூடக் காங்கிரசை எப்படிக் குத்திக் கிழிக்கிறார்கள் என்று பார்த்தால் கூடப் போதும்!  


ராஜஸ்தான் முஸ்லிம்களை காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வரைக்  கண்டனம் செய்து சொல்கிறார். என்ன நடந்ததாம்?


பசுக்காவலர்களால் கொல்லப்பட்டார் என்று காங்கிரசும் கூட்டாளிகளும்  ஆட்சிக்கு வருமுன் தம்பட்டமடித்து, ஆட்சிக்கு வந்தபிறகு அந்த  பெஹ்லு கான் என்பவர் மாடுதிருடர் தான் என்று ராஜஸ்தான் காவல்துறை சார்ஜ்ஷீட் போட்டிருக்கிறது   அவர் மகன்களையும் மாடுதிருடிய குற்றத்திற்காக குற்றப் பத்திரிகையில் சேர்த்திருக்கிறார்கள் என்பதில் தான் ஒவைசி இப்படிக் கொந்தளித்திருக்கிறார். 


இறந்தவர் மீதும்கூட  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிற புத்திசாலித்தனம் காங்கிரஸ்காரனுக்கு மட்டும்தான் இருக்கும் போல! அசோக் கெலாட் இறந்தவர் மீது குற்றப்பத்திரிகையா, இல்லையே என்று சமாளித்தது எடுபடவில்லை என்பது இந்தக் கார்டூனை விடப் பெரிய சோகம்! ஒவைசி வேறு இடையே  புகுந்து குத்துகிறார்! 

நுஸ்ரத் ஜஹான் ஜெயின்! 29 வயதே ஆகும் இந்த இளம்பெண் மேற்கு வங்கத்தில் ஒரு சினிமா நட்சத்திரம். அதற்குமுன்னால் மாடலிங் செய்திருக்கிறார்.  இன்றைக்கு பஷீர்ஹாட் தொகுதியிலிருந்து  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் முறை எம்பியும் கூட! நிகில் ஜெயின் என்கிற ஹிந்து இளைஞரைத்  திருமணம் செய்து கொண்டு சற்றுத்தாமதமாக எம்பியாகப் பதவியேற்றுக் கொண்டவர். அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள்!      


இந்தப் பதினாறு நிமிட வீடியோவைப் பார்க்கப் பொறுமை இருக்கிறவர்கள் பார்த்துவிட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்! தனிப்பதிவாகவே விவாதிக்கலாம்!


து பொருளோ அதைப்பேசுவோம்! இந்தப்பக்கங்களில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய செய்திகளாகக் கொஞ்சம் பார்த்துக் கொண்டுவருகிறோம் . அமெரிக்காவுடன் ஆன இந்திய உறவுகள் குறித்து கரண் தாப்பர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த நவ் தேஜ் சர்னா, ஹிந்து நாளிதழின் வர்கீஸ் ஜார்ஜ் இருவருடன் விவாதிக்கிறார். 27 நிமிடங்கள் தான்! பார்க்க நேரமிருப்பவர்கள் பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
    

     

6 comments:

  1. //பார்த்துவிட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்! தனிப்பதிவாகவே விவாதிக்கலாம்!// - அவங்க கற்காலத்துல இருக்காங்க என்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மம்தா இந்த சிறுபான்மையினர் சார்பாக இருப்பதால் ஆட்சி இழப்பாங்கன்னும் நினைக்கிறேன் (அல்லது பாஜக பெரிய வளர்ச்சியை மேற்கு வங்காளத்தில் பெறும்)

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கற்காலத்தில் அல்லது அதற்கும் முந்தைய காலத்தில் இருப்பதைப்பற்றி நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாமலிருக்கலாம்! நம்மையும் கூடச்சேர்ந்து கற்காலத்துக்கு இழுக்கிறார்களே, அதற்கு என்ன செய்வதாம்?

      பிரச்சினை மம்தா அல்லது மேற்குவங்கத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லையே, நெ.த. !

      Delete
  2. நான் கல்ஃப் தேசங்களில் இருந்தபோது இரண்டு நிகழ்ச்சிகள் நடந்தன (பத்திரிகையில் வந்திருந்தது).

    1. சவுதி அரேபியாவில் ஒரு அராப் கான்ஃப்ரன்ஸ் நடைபெற்றது. அதற்காக வந்திருந்த மூன்று எமராத்திகள் (எமிரேட்ஸ் அரபிக்கள்) திரும்பி அனுப்பப்பட்டார்கள். காரணம், அந்த மூன்று ஆண்களும் ரொம்ப அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதாலும், அரபிப் பெண்கள் மனம் சஞ்சலமடையலாம் என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டார்கள். You can google and check for this. I read it when it happened.

    2. சவுதியில் ஒரு கிளெரிக், சூப்பர் மார்க்கெட்டில் கேரட், வாழைப்பழம், வெள்ளரி ஆகியவை வெளிப்படையாக விற்பனை செய்யக்கூடாது, அது பெண்களுக்கு ஆண்கள் பற்றிய நினைவைத் தூண்டும், அதனால் வாழைப்பழத்தை மறைவாக விற்பனை செய்யணும். கேரட் வெள்ளரியை துண்டுகளாக்கி மட்டும்தான் விற்பனை செய்யணும் என்றார். இதற்கு ஆதரவு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இதுவும் பத்திரிகையில் வந்த செய்திதான்.

    ReplyDelete
    Replies
    1. நான் இங்கே உள்ளூரில் உட்கார்ந்துகொண்டே இதைவிட மோசமான செய்திகளை வீடியோவாகவும் செய்திகளாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! 9/11 க்குப் பிறகு இந்த மாதிரியான expose மிக அதிகமாக வெளியாகிக் கொண்டிருப்பது தற்செயலானது அல்ல.

      Delete
  3. >>> கேரட், வாழைப்பழம், வெள்ளரி ஆகியவை பெண்களுக்கு ஆண்கள் பற்றிய நினைவைத் தூண்டும்.. <<<

    என்றால் இவற்றைப் பூமியில் படைத்து விட்டது யார்?...

    நமக்கு எதுக்கு ஊர் வம்பு!...

    ReplyDelete
    Replies
    1. வம்பைக்கிளப்பியாயிற்று! அப்புறம் நமக்கு எதுக்கு சார் வம்பு என்று ஒதுங்கினால் எப்படி, துரை செல்வராஜூ சார்? :)))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!