அரசியல் இன்று ! செய்திகள், தாக்கங்கள், யோசனைகள்!

சேகர் குப்தா! முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர். இப்போது The Print தளத்தின் தலைமை ஆசிரியராக. முழுக்க முழுக்க காங்கிரஸ் சார்புள்ள, அனுபவமுள்ள பத்திரிகையாளர். மாற்றுக்  கருத்துடையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதற்காகவே இவரையும் தொடர்ந்து பார்த்து வருவதில்,  டொனால்ட் ட்ரம்ப் வருகையை ஒட்டி இன்று அவருடைய தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ இது. 13 நிமிடங்கள் தான்!  மன்மோகன் சிங் பிரதமராக இருந்த சமயத்தில் போடப்பட்ட ஒரு அணு ஒப்பந்தம், எப்படி சந்தோஷப்படுகிற மாதிரி ஆறுவிதமான பயன்களை அளித்தது என்பதை அவர் பார்வையில் விவரிக்கிறார். அதில் ஆறாவதாக அவர் சொல்லும் பயன், (வரட்டுப் பிடிவாதத்தால்) இடதுசாரிகளின் வீழ்ச்சி! கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது.  ஐமுகூ வெர்ஷன் 1 இல் இடதுசாரிகளுடைய நாடாளுமன்ற பலம் 60+ வெளியில் இருந்து ஆதரவளித்தார்கள், சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகராக இருந்தார். அணு ஒப்பந்தத்தில் அமெரிக்க நிறுவனங்களின் Liability விபத்து ஏற்பட்டால் நஷ்டஈடு கொடுப்பதில் வரம்பு விதிக்கப்பட்டது என்பதை வைத்து இடதுசாரிகளும் பிஜேபியும் குதியோகுதியென்று குதித்தார்கள். இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். வெறும் 18 எம்பிக்களை மட்டும் வைத்திருந்த திமுக ஐகுகூ 1 ஐ ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஆனதுதான் மிச்சம். அமெரிக்க அணு உலை ஒன்று கூட இன்று வரை வரவில்லை என்பது அனாவசியம்.
.

இங்கே சில விவாதங்களை யூட்யூப் தளத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளும்போது, அது எத்தனை முறை பார்க்கப் பட்டிருக்கிறது, எத்தனை கமென்டுகள் என்ன மாதிரி வந்திருக்கின்றன முதலான விவரங்களோடு சேர்த்துப் பார்ப்பதையும்  ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். தமிழக ஊடகங்களின் யூட்யூப் வீடியோக்களுக்கு வரும் கமெண்டுகள் பெரும்பாலும் 200 ரூபாய் உபித்தனமானவை, ஆபாசமானவை. இங்கே சேகர் குப்தா வீடியோவை எடுத்துக் கொண்டால் இதுவரை 2500+  பார்வைகள் 70 கமென்டுகள் என்பதில்  சேகர் குப்தா சொல்வதில் இருந்த தவறுகளைச் சுட்டிக் காட்டிய கமென்டுகளும் இருந்தன. இதுமாதிரி அரசியல் வீடியோக்களைப் பார்க்கிறவர்களில் விஷயம் தெரிந்து விவாதிக்கக் கூடிய பார்வையாளர்களும் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே புலப்படுகிறது.


கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம் - 4  பதிவில் திருப்பூர் ஜோதிஜி அமெரிக்கர்களைக் குறித்து சில தவறான புரிதல்களோடு இருக்கிற மாதிரி பின்னூட்டம் இருந்தது. அவருக்காகவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகை குறித்து சில விஷயங்களைச் சொல்வதாக ஒரு 11 நிமிட வீடியோ. 


டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகை 

சிலமுக்கியமான விஷயங்கள் 
வீடியோ 39 நிமிடம் 

அமெரிக்க அரசியலில் டெமாக்ரட்டுகள் எப்போதுமே பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுப்பவர்கள். ஒபாமா சிலவிஷயங்களில் கொஞ்சம் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தமாதிரி ஒரு பிம்பம் உண்டு. ரிபப்லிக்கன் கட்சி பொதுவாக இந்திய உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்தது இல்லை. ட்ரம்ப் பேச்சளவில் முயற்சிக்கிறார் அவ்வளவுதான்!தவிர ராஜீய உறவு விவகாரங்களில் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது அவரவர் உள்நாட்டு நலன்கள் சார்ந்தே எடுக்கப்படுபவை. இன்றைய சூழலில் பெரும்பாலும் வர்த்தக உறவுகளே ஆதரவு / எதிர்ப்பு நிலையெடுக்கக் காரணிகளாக இருக்கின்றன. இங்கே இந்தியாவில், சில இடதுசாரி உதிரிகள் குதிப்பதை எல்லாம் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 


ஆரிப் மொகமது கான்! ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முடியடிக்க ராஜீவ் காண்டி அவசரச் சட்டம் பிறப்பித்ததை, முத்தலாக் முறையை எதிர்த்தவர். ராஜீவ் அரசிலும், பின்னர் ஜனதா தல் அரசிலும் கேபினெட் அமைச்சராக இருந்தவர். இஸ்லாம் காலத்துக்கேற்ப சில மாறுதல்களை மேற்கொண்டாகவேண்டும் என்ற கருத்துடையவர். இப்போது கேரள மாநில ஆளுநராக இருக்கிறார். இந்த 3 நிமிட வீடியோவில் ஷாஹீன் பாக் போராட்டக் காரர்கள் ஒரு கும்பலாகச் சேர்ந்து தாங்கள் சொல்கிறபடி தான் கேட்டாகவேண்டும் என்று வலியுறுத்துவதே ஒருவகையில் பயங்கரவாதம் தான் என்று மிக அழுத்தமாகச் சொல்கிறார். என்னமோ இன்று பிஜேபி இவரை ஆளுநராக்கிவிட்டதற்காகச் சொல்வதாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே பூர்வகதையையும் முதலில் சொன்னேன்.  


மீண்டும் சந்திப்போம்.                

       

4 comments:

  1. Krishnamurthy Sir, I too follow international affairs closely. I'm writing in English because I'm comfortable that way. Please excuse me. But I cannot resist commenting. May Sri Sekhar Gupta's first point was true. The second one was a mere co-incidence. His argument for the third point is quite vague and superficial. His fourth point is true I feel. As for the fifth point, in two short words, it is a SWEEPING STATEMENT. If he feels that the Left wronged them by aligning with BJP in 2008 in opposing the Nuclear Deal and this was an act of hypocracy, what did they do now in 2019 in the politics of Maharashtra. Did the Congress not cross the line and ideology and hold hands with their so called arch rivals, Uddhav Thakeray of Shiv Sena to form Government in Maharashtra. Is this not hypocracy ? I have learnt one thing Sir. There are no permanent friends or enemies in politics. This is universally true of all parties. They go with the wind, the lucky wind.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!9

      சேகர் குப்தா அனுபவமுள்ள ஒரு பத்திரிகையாளர் என்பதால் தான் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் காது கொடுத்துக் கேட்கிறேன்,நண்பர்களுக்கும் கவனப்படுத்துகிறேன்..சொல்கிற அனைத்திலும் உடன்பாடு இல்லையென்றாலும் மாற்றுக கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.

      சேகர் குப்தா மன்மோகன் சிங்குக்குத் தேவையே இல்லாமல் credit கொடுக்க விரும்புவதில் அவருடைய சார்புநிலைதான் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் 2008 இல் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்களை இங்கே பாதிரிகளும் உதயகுமார் மாதிரி உதிரிகளும் நடத்தியதன் பின்னணியை அறிந்திருக்கிறீர்களா? இங்கே கட்சி அரசியலையும் தாண்டிப் பலதரப்பட்ட அரசியல் சித்து விளையாட்டுக்கள் தேச நலனைப்பின்னுக்குத் தள்ளிவிட்டு விதவிதமான அஜெண்டாக்களுடன் நடந்துகொண்டே இருக்கின்றன.

      Delete
  2. சார், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. //2008 இல் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்களை இங்கே பாதிரிகளும் உதயகுமார் மாதிரி உதிரிகளும் நடத்தியதன் பின்னணியை அறிந்திருக்கிறீர்களா? இங்கே கட்சி அரசியலையும் தாண்டிப் பலதரப்பட்ட அரசியல் சித்து விளையாட்டுக்கள் தேச நலனைப்பின்னுக்குத் தள்ளிவிட்டு விதவிதமான அஜெண்டாக்களுடன் நடந்துகொண்டே இருக்கின்றன // எவ்வளவு அழகாக உங்கள் கருத்தை வெளிப் படித்தியிருக்கின்றீர்கள் சார். இவர்கள் யாவருக்கும் ஒரு மறைக்கப் பட்ட உட்காரணம் இருக்கின்றது. ஏனெனில் இவர்கள் யாவரும் அரசியல்வாதிகள். நாம் ஒன்று செய்ய முடியும். நம் வாக்களிக்கும் திறனால் இவர்கள் யாவரையும் தூக்கி எரிந்து விட்டு ஒரு புதிய அரசை அமக்க எத்த்னித்தால், நாம் பிழைப்போம். ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      இதை எழுதும்போது இப்போது நடந்துகொண்டிருப்பவைகளை விவாதங்கள், செய்திகள், நேரலையில் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு முடிவோடு மோதிப்பார்த்துவிடுவது என்ற அசட்டுத் துணிச்சலுடன் ஒருதரப்பு களமிறங்கியிருப்பதாகவே தெரிகிறது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பதெல்லாம் வெறும்பேச்சுத்தான் என்பது நிரூபணமாகிக் கொண்டே வருகிறது.

      இங்கே வெளியே தெரிந்த அரசியல்வாதிகளைவிட, முகம் தெரியாத NGO க்கள், அறக்கட்டளைகள், கல்வித்தந்தைகள் செய்கிற திரிசமன்கள் மிகப்பெரியது. நாசத்தை ஏற்படுத்தக்கூடியது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!