இங்கே இசுடாலின்! அங்கே காங்கிரஸ்! அவசியம் தானா?


துக்ளக் அட்டைப்பட நையாண்டியில் சொல்லி இருப்பது சரிதானா? ஸ்டாலின் அரசியல் எப்படி? கொஞ்சம் சாம்பிள் பார்த்து விடலாமா?
காமெடி தர்பார் என்று இங்கே  இவர்கள் வருணிப்பதில் தவறேதுமில்லை என்றுதான் உறுதிப் படுகிறது. விசிகவின் வன்னியரசு துரைமுருகனுக்குச் சொன்னமாதிரி இவருக்கும் ஒரு திருக்குறள் சொல்லிக் கொடுப்பாரா?ஆட்சியில் இல்லாதபோதே என்னமாய்க் கோபம்,அலட்சியம் எல்லாம்  வருகிறது?  
  
இங்கே தினமலர் வீடியோவில் ஸ்டாலின் நடத்திவரும் கிராமசபைக் கூட்டம் ஒன்றில் பேச முனைந்த பெண்களிடம் அம்மா, எல்லாரும் பேசுனீங்கன்னா விடிஞ்சிரும் என்று குறுக்கே பேசி மறிக்கிறார். இவரே தான் சிலநாட்களுக்கு முன்புவரை ஊர் ஊராகப் போய் விடியட்டும்! முடியட்டும் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

யாருக்கு அட்வைஸ் செய்யவேண்டுமென்று தேவி மாதிரி தூக்கணாங்குருவிகள் தெரிந்துகொள்வது எப்போது என்ற கேள்விகள் முன்னுக்குவந்து நிற்கின்றன.
விசிக பாமக இருகட்சிகளுக்கும் முட்டல் மோதல் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! ஆனால் கூட்டணி பேச்சு வரும்போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி கோஷமெல்லாம் பின்னுக்குப் போய்விடும்! இது பாமக உள்ளிட்ட எல்லா உதிரிக் கட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான்! இப்போதெல்லாம் கூட்டணி சேர டிமாண்டே, எத்தனை சீட் என்பது மட்டுமில்லை, செலவுக்கு எவ்வளவு டப்பு கொடுப்பீங்க என்பதும் சேர்ந்ததுதான்!
    
தமிழ்நாடு விவகாரம் மட்டும்தான் இப்படி என்று நினைத்துவிடாதீர்கள்!
அடுத்தவீடு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுநாள் வரை செல்வாக்கு, பசையுள்ள பக்கமே  ஒட்டிக்கொண்டு அரசியல் ஆதாயம் பார்த்தவர். இப்போதும் பழைய நினைப்புகளிலேயே   மோடியுடன் முறுக்கிக் கொண்டு வெளியே வந்து அல்லாடிக் கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரண்டு ரயில்  நிறைய ஆதரவாளர்களுடன் டில்லி வந்து ஆந்திரபவனில் தர்ம போராட்ட தீட்சை நடத்தினார், நேற்றும் டில்லியில் தங்கி ஜந்தர் மந்தர் வரை கண்டனப்பேரணி என்று கிளம்பியிருக்கிறார்.

இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்! தேர்தலுக்குப் பிறகு, அவசியப்பட்டால் YSR காங்கிரஸ் கட்சியோடு கூடக் கூட்டணி சேரலாம்! அதிலென்ன தவறு என்றும் கேட்டிருக்கிறார் பாருங்கள், அங்கே தான் நாயுடு சாயம் வெளுக்கிறது.
இவ்வளவு சொல்லிவிட்டு, இந்திய அரசியலின் ஆதிகாலப் பாவம் காங்கிரஸ் கட்சி பற்றி சொல்லாமல் விட்டுவிட முடியுமா? 

பொண்டாட்டிக்காக உருகும் சோனியா மாப்பிள்ளை, அமலாக்கத்துறை விசாரணைக்குக் கொண்டுவந்து விடவும் மனைவியையே   நம்பியிருப்பது, வாரிசுகள் பெருமைப்பட்டுக்கொள்கிற விஷயமில்லை.

காங்கிரசையும், இங்கே திமுகவையும் தோற்கடிப்பது ஒன்றைத் தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா? இந்தக் கேள்வியை நான் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்னாலிருந்தே எழுப்பிவருகிறேன்!

கேள்வியும் பொய்யில்லை! காங்கிரசையும் அதன் ஊழல் கூட்டாளி திமுகவையும் தோற்கடிக்க வேண்டுமென்கிற அவசியமும் பொய்யில்லை!        
   
    
     

9 comments:

  1. கிண்டல் கேலி தவிர்த்து இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று துகளக்கிலாவது அனலைஸ் பண்ணுகிறவர்களா?

    ReplyDelete
    Replies
    1. துகளக்கில் அனலைஸ் பண்ணகிறார்களா என்பதற்கு இங்கே நான் என்ன சொல்லட்டும்? ஒரு பதிவராக என் வேலை, முக்கியமானவை என்று எனக்குப் படுகிற விஷயங்களை இங்கே பகிர்வது மட்டுமே!

      Delete
    2. துக்ளக்கில் இல்லையென்றால் நீங்களாவது நடுநிலையில் பிரச் னைகளைப் பிரச்னைகளாகப் பார்த்து எழுத ஆரம்பித்தால் வாசிப்பவருக்கும் அது பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் சொல்ல வந்தது. இன்றைய தேவை யார் பற்றியும் கேலி கிண்டல் இல்லாத நடுநிலை வாக்காளர்களுக்கு வழிகாட்டக் கூடிய ப்யூர் அரசியல் கட்டுரைகளே.

      Delete
    3. இந்த நடுநிலைமை என்கிற வார்த்தையே கூட secular secularism என்பவை விபரீதமான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிற மாதிரி கெட்ட வார்த்தையாகிவிட்டதே ஜீவி சார்! இதை யார் ஆரம்பித்து வைத்தது என்று பார்த்தால், அந்த ஆதி பாவத்தைச் செய்தது காங்கிரஸ் என்றும் சேர்த்துச் சொல்லாமலிருக்க முடியுமா?

      அப்படிச் சொல்ல ஆரம்பிக்கிறபோதே நீ காங்கிரஸ் வெறுப்பாளன் நடுநிலை கிடையாது என்றும் இங்கே ஆகிவிடுகிறதே! வழிகாட்டுகிற வேலை செய்வதற்கு நான் யார்? என்னுடைய எல்லை என்ன என்பதை உணர்ந்தே இந்தப் பக்கங்களில் அன்றாடச் செய்திகளை வைத்து, கொஞ்சம் யோசித்துப் பார்க்க விரும்புகிறவர்களுக்காக சிறு குறிப்புக்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்,அவ்வளவுதான்!

      இங்கே வருகிறவர்கள் யார், அவர்களுடைய மனவோட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு அவர்களாகவே முன்வந்து தங்களுடைய கருத்துஎன்னை என்று சொன்னால்தான் உண்டு. தவிர, வலைப்பதிவுகளில் வந்து படிக்கிறவர்கள் எண்ணிக்கை, பதிவை முழுதாகப் படித்தார்களா இல்லையா என்பதெல்லாம் முன்னைவிடக் குறைந்துபோய்க் கொண்டே இருக்கிற விஷயங்கள்.

      Delete
  2. பல வருடங்களாக காங்கிரஸ் ஊழலை பார்த்த பின்னும், இப்போது 'மதசார்பின்மைக்கு' வந்திருக்கும் மிகப் பெரிய ஆபத்தாய் மோடியை பார்ப்பதும், இதற்கு காங்கிரெஸ்ஸே பரவாயில்லை என்று சொல்வதையும் பார்த்தால் மிக வருத்தமாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. பந்து! உங்களுடைய வருத்தம் இன்னதென்று கொஞ்சம் விவரித்து எழுதினால், இங்கே guest post ஆகப் பதிவிட நான் ரெடி!

      Delete
  3. தலைப்புக் கேள்விககான பதில் அவசியமே.

    இசுடாலின் மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடு -- மம்தா கூட்டணியும் அவசியமே.

    ReplyDelete
    Replies
    1. Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist, அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இப்படி ஆரம்பித்து http://suvasikkapporenga.blogspot.com/2010/04/blog-post.html இங்கே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய விமரிசனம் உங்களுடைய இந்தப் பின்னூட்டத்தைப் படித்தபிறகு நினைவுக்கு வருகிறது ஜீவி சார்!

      There is no shortchut for happiness. politics as wwell!

      Delete
    2. இந்த உங்கள் பதில் அடுத்த பதிவான 'லெப்ட், ரைட், லெப்ட்-ரைட் உடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அங்காவது விளக்கமாகச் சொல்ல முயற்சிக்கலாம்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!