சண்டேன்னா மூணு! பானாசீனா! தமிழிசை! திருமாவளவன்!

ப.சிதம்பரம் மாதிரியான அரசியல்வியாதி அரசியலில் தலைதூக்கிவிடக் கூடாதென்பது என் உறுதியான கருத்து. இந்த செட்டிநாட்டு ஜாமீன் ஆசாமி இதுவரை, என்ன சாதித்தார்? மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் முதல் குடும்பம், கருணாநிதி வகையறா தேடிக் கொண்ட சம்பாத்தியத்தை விட சற்று அதிகமாகவே சம்பாதித்துவிட்டார் என்றொரு தகவல் பொதுவெளியில் உண்டு என்பதைத் தவிர சாதித்தது என்ன?  மூப்பனாரோடு ஒட்டிக் கொண்டு ரஜனி வாய்ஸில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பானாசீனா, எப்படிப் பட்டவர் என்பதை வேறு எவரையும் விட திமுகவினர் நன்கு அறிவார்கள். அவர்களால் உள்ளுக்குள் முனகுவதைத் தவிர வேறென்ன செய்து விடமுடியும்?

நிகழ்ச்சியின் பெயர் அக்னிப்பரீட்சை! உண்மையில்  அக்னிப்பரீட்சை யாருக்கு? யோசித்துப் பார்த்தால் அது  வாக்களிக்கப்போகும் ஜனங்களுக்குத் தான் என்பதைப் புரிந்துகொண்டால், அதுவே மாற்றத்துக்கான முதல் படி! இங்கே யாரை எதற்காக நிராகரிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வந்தால் அதுவே பானாசீனா மாதிரியானவர்கள் களையப்படுவதற்கு உந்துதலாக இருக்கும்!  வாய்ப்பந்தல் போடுகிறவர்களை இனம் கண்டு நிராகரிக்காவிட்டால், அடுத்த தலைமுறைக்குப் பெரும் தீங்கு செய்தவர்களாகிவிடுவோம் 
  
******* 

டாக்டர் யக்கோவ் தமிழிசை பற்றி என்னத்த சொல்ல?

வார்த்தை விளையாட்டு விளையாடுகிற இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் ....?   

சமரசம், சமாதானம் பற்றிப் பேசுகிற தருணங்களில் மட்டுமல்ல கேள்விக்கு பதில் சொல்கிற எல்லாத் தருணங்களிலும்  குமரி அனந்தன் மகளாக மட்டுமே தெரிகிறாரே தவிர, பிஜேபி மாநிலத் தலைவராக வெளிப்படவில்லை என்பது தமிழக பிஜேபியின் தலைவிதி! அஞ்சு சீட்டுக்கே வாயெல்லாம் பல்லா?   

*******
திருமாவளவன் மட்டும் குறைந்தவரா என்ன?

பாமகவைத் தொடர்ந்து சீண்டுவதால் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்ற நினைப்பா? பாஜக பாரம் பாமக பலவீனம் என்று அதிமுக கூட்டணி பற்றி ஏற்கெனெவே சொல்லி விட்டார்! விசிக மதிமுக வுடன் திமுக கூட்டணி எப்படியென்பதை ஜனங்கள் சொல்லத்தானே போகிறார்கள்?!  நிச்சயம் நிராகரித்துச் சொல்ல வேண்டும்! 

உண்மையில் கவனிக்கப்படவேண்டிய செய்தியாக! 

இன்றைக்கு  தேதிமுக சார்பில் செய்தியாளர்களிடம் திருமதி பிரேமலதா பேசியதுதான்! அரை சதவீதமா அதற்கும் குறைவா என்றுகூடத் தெரியாத விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகளே வீராப்புடன் பேசும்போது, எதிரிகளே குறைத்து மதிப்பிடும் போது கூட இரண்டரை சதவீத வாக்குவங்கி வைத்திருக்கும் தேதிமுக கொஞ்சம் தெனாவட்டாகப் பேசுவதில் என்ன குற்றம் சொல்லிவிடமுடியும்? 


   

2 comments:

  1. என்ன சொன்னாலும் கடந்த ஐந்து வருடத்தில் பசி மேல் துரும்பு கூட பட முடியாத அளவுக்கு எத்தனைசாமர்த்தியமாக இருந்துள்ளார்?

    ReplyDelete
    Replies
    1. செட்டியாருடைய சாமர்த்தியம் எத்தனை நாளைக்கு என்பதுதான் இப்போது கேள்வியே! நீங்கள் கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்தீர்கள், இப்போது தொடரலாமே ஜோதிஜி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!