அராஜகம் செய்வோம்! ஆனால் ஜனநாயகம் காப்போம் என்றேதான் கூவுவோம்!

இந்தப் பதிவைப் புரிந்துகொள்ள அருள்கூர்ந்து முந்தைய பதிவையும் வாசித்து விடுங்கள்! நேற்று கொல்கத்தா வீதிகளில் மம்தா பானெர்ஜி, தனது தேர்தல் பரப்புரையாக ஒரு குழாயடிச் சண்டை நடத்தி ஆரம்பித்து வைத்திருக்கிறார். அரசே பந்த் நடத்துவது இடதுசாரிகள் ஆரம்பித்துவைத்த, இங்கே கழகங்களும் தொடரும் அரசியல் கலாசாரம்! மார்க்சிஸ்டுகள் ஆரம்பித்து வைத்த அரசியல் அராஜகத்தை, அவர்களைவிட பலமடங்கு வேகத்தோடு செய்து வருகிறவர் மம்தா பானெர்ஜி!

மம்தா பானர்ஜியின் இந்தக் குழாயடிச்சண்டை ஸ்டண்ட் பின்னணியில் நேற்று கொல்கத்தா பிரிகேட் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிய கூட்டம் இருந்திருக்கலாமோ? ஜனவரி 19 அன்று மம்தா இதே இடத்தில் கூட்டிய கூட்டத்தை விட  இருமடங்காக  இருக்கலாம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!       

Earlier today at Brigade, the vast sea of people and red flags have sent a scare in the hearts of TMC and BJP. People came out in vast numbers today despite the heavily funded PR campaigns of BJP and the threat posed by TMC goons.
39.1K views,
0:31 / 0:50
9:53 AM - 3 Feb 2019   
என்று சீதாராம் யெச்சூரி பெருமிதப்பட்டுக் கொண்ட  நிகழ்ச்சி கூட மம்தா பானெர்ஜியின் திடீர் ஸ்டன்டுக்கு காரணமாக இருந்திருக்கலாம்! 

“Seeing the sea of humanity here, it is evident that the people will evict Modi from Delhi and Mamata Banerjee from Bengal,” Yechury said and threatened of an “inferno of resistance” if people were prevented from exercising their franchise by TMC workers in the state. “Last month, we had seen the opposition rally here where they called for removing the Modi government at the Centre. But it is the TMC which brought the saffron brigade to Bengal,” Yechury alleged. கூட்டத்தை வைத்து ஓட்டு விழாது என்ற கசப்பான உண்மையை கருணாநிதி இங்கே அனுபவபூர்வமாக உணர்ந்ததை இங்கே தமிழக காம்ரேடுகள் எவரும் யெச்சூரிக்குச் சொன்னதில்லையோ?     

இப்படி பிஜேபியை மேற்கு வங்கத்துக்கு அழைத்து வந்ததே திரிணமுல் தான் என்று சொன்னால்? மம்தா பொறுப்பாரா? மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கையில் வைத்திருப்பது, அவருடைய பிரதமர் கனவுக்கு, 2019 இல் முடியா விட்டாலும், பின்னால் உதவும் என்கிற ரீதியில் கிடைத்த சான்சை மம்தா தீதி நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு விட்டார்! 

சாரதா குழும ஊழல்! ரோஸ் வாலி ஊழல்! இந்த இரண்டுமாக சேர்ந்து, முன்னது 40000 கோடி, பின்னது 60000 கோடிரூபாய் என்று சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை Ponzi Schemes வகையில், மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஒரிசா, பிஹார், என்று சுற்றுப்புறம் முழுதும், ஏழை எளிய மக்களிடமிருந்து மோசடி செய்த நிறுவனங்கள்! செயல்பட்டவிதம் மிகவும் சிம்பிள்! சதுரங்க வேட்டை திரைப்படத்தில், மனிதனுடைய பேராசையைக் கிளர்ந்தெழுகிற மாதிரி, கவர்ச்சி கரமான முதலீட்டுத்திட்டம் என்று ஆரம்பிப்பது! குறைந்தபட்சம் நூறு ரூபாய்! அதிகத்தொகைக்கு உச்ச வரம்பில்லை! முதலீட்டுக்கு 15% முதல் 50% வரை வட்டி கிடைக்குமென்றால், ஏமாறாதவர்கள் யார்? சாரதா குழுமம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் தொடங்கி, முதலீடு செய்தவர்களுடைய பணத்தோடு காணாமல் போனதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!

இவ்வளவு மோசடியும் அரசியல்வாதிகளுடைய கூட்டில் வெகுநாட்களாகவே நடந்து கொண்டிருந்ததுதான்! காசு புழங்குகிற இடம் என்றால் களவாணிகளும் கூடவே இருப்பார்கள்தானே? கூடவே ஜாமீன் அப்பச்சிகளும்!

சாரதா குழுமம் மம்தா பானெர்ஜிக்கு மிகவும் வேணுங்கப் பட்டவர்களால் நடத்தப்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை, சாரதா குழுமம் நல்ல விலைக்கு வாங்கியது. TMC யின் நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் சாரதா மீடியாவுக்குத் தலைவராக இருந்தார்! இன்னொரு எம்பி சதாப்தி ராய் சாரதா விளம்பரங்களில் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருந்தார்!மூக்கில் வியர்த்ததும், திருமதி சீனாதானா சட்ட ஆலோசகர் போர்வையில் உள்ளே நுழைந்தார்!

ஏழை உழைப்பாளிகள் அழுத கண்ணீர், இவர்களை இன்னமும் எரிக்காமல் விட்டுவைத்திருக்கிறது!
     
சகாரா குழுமத்தின் சுப்ரதா ராய் ஒருவர் மட்டும்தான் இதுவரை நீதிமன்றத்தின் கண்டிப்பினால், மலையை  விழுங்கி இப்போது சிறுகச் சிறுகத் திரும்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்! அங்கே கூட துணையாக இருந்து, உருவிக்கொண்ட முலாயம் சிங் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது இந்த தேசத்தில் மட்டுமே நடக்கும் அரசியல்! ஜனநாயகம் காப்போம் என்று கூவிக்கொண்டே அராஜகம் செய்கிற அரசியல்!பாசிஸ்ட் என்று அடுத்தவருக்கு முத்திரை குத்தி மட்டுமே, தாங்கள் உத்தமர்கள் என்று காட்டிக் கொள்கிற அரசியல்!    

இன்னும் இவர்களிடம் ஏமாந்துகொண்டே இருக்கப் போகிறோமா என்பதுதான் 2019 தேர்தல் களம் நமக்கு முன்னால் எழுப்புகிற கேள்வி!             

                         

9 comments:

  1. மே.வங்கத்தில் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பிருப்பது இயல்பு தானே?

    ReplyDelete
  2. போகிற போக்கைப் பார்த்தால் 4 முனைப் போட்டி கூட இருக்கும் போலிருக்கே!..

    ReplyDelete
    Replies
    1. தோழர் ப்ரமோத் தாஸ் குப்தா இடது ஜனநாயக முன்னணியை அமைத்த விதத்திலிருந்து மார்க்சிஸ்டுகள் முத்தண்ணன் மனோ பாவத்தோடு செயல்பட்டு, அதன் வீரியத்தைக் குறைத்தார்கள். லும்பன்களுடைய ஆதிக்கம் கட்சியில் அதிகரித்தது. அப்போது கூட LDF வெர்சஸ் காங்கிரஸ் என்றுதான் இருந்தது. காங்கிரசில் இருந்து பிரிந்தும் கூட, மம்தா பானெர்ஜி காங்கிரசை எதிர்க்கவில்லை. மார்க்சிஸ்டுகளை மட்டுமே முறி வைத்ததில் ஆட்சியையும் பிடித்தார். இப்போது அதே பழைய லும்பன்கள் திரிணமுல் காங்கிரசில்! காற்று பிஜேபி பக்கம் வீசினால் லும்பன்கள் பிஜேபிக்குள்ளும் இன்னும் அதிகமாக நுழைவார்கள்!

      ஒன்லைனராக பரம்பரை வங்காளிகள் காங்கிரஸ் சார்பில் தான் இருந்தார்கள். அகதிகளாக வந்தவர்கள் இடதுசாரிகளை ஆதரித்தார்கள் என்பது மாறிக்கொண்டு வருகிறது. வங்காளம் இந்தியாவுக்கு காட்டுகிற வழி இன்றைக்கு மிகவும் குழப்பமாகத் தான் வெளிப்படுகிறது.

      Delete
  3. மேற்கு வங்கத்தில் இரு முனை போட்டி தான். காங்கிரஸ் செத்த பாம்பு. அவர்கள் ஒட்டு தான் முழுக்க மம்தாவுக்கு போய்விட்டதே! பி ஜே பி பொறுத்த வரை வந்த வரை லாபம் என்ற அளவுதான் என நினைக்கிறேன். மிக வித்யாசமான நிலை! இரண்டு கட்சிகளுக்கும் பொது எதிரி மோடி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து! வங்காள அரசியல் இப்போது லும்பன்கள் கையில்! தேர்தல் தேதி நெருங்க நெருங்க என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியவில்லை. 2014 இல் மம்தாவுக்கு கிடைத்தமாதிரி 2019 cake walk ஆக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்!

      Delete
  4. காங்கிரஸ், மம்தா, இடது என்று மெகா கூட்டணி அமைந்தால் தான் இருமுனைப் போட்டி. (சீட்டைப் பகிர்ந்து கொள்வதற்குள் ஒரு வழியாகி விடும்.) இருமுனைப் போட்டிக்கு சான்ஸே இல்லை என்று தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே மொகலாயர்கள் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் பாளையக்காரன், ஜமீன்களை வளர்த்து விட்டதுபோல , மாநிலக்கட்சியாகத் தொடங்கி அதிகார ருசியைப் பார்த்தவர் மம்தா பானெர்ஜி என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் , தமிழ்நாட்டில் காங்கிரசைக் காலடியில் வைத்திருப்பது போலத்தான் வங்காளத்திலும் வைப்பார் என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், விளங்கிக் கொள்ளக்கூடியதுதானே ஜீவி சார்! இது மேற்குவங்கத்தைப் பொறுத்த நிலவரம். இடதுசாரிகள் நேரடி எதிரிகள், பிஜேபி வளர்ந்து வரும் எதிரி. .

      மெகாகூட்டணி என்பது வேறுவிஷயம் ! காங்கிரஸ், பிஜேபி இரண்டுக்கும் தனி மெஜாரிடி கிடைக்காத சூழலில் பிரதமர் பதவிக்கு குறிவைத்து நகர்த்தப்படும் முயற்சிகள்! ஆனால் 2019 இல் அந்த வாய்ப்பு மாநிலக் கட்சித்தலைவர் எவருக்காவது கிடைக்குமா என்றால், சந்தேகமே!

      Delete
  5. வெளியுலகத்தை விட்டு வங்காளத்தை துண்டித்தே வைத்திருப்போம் என்று கடந்த 25 வருடங்களாக கங்கணம் கட்டி செயல்பட்டார்கள். அது இன்று வரையிலும் தொடர்கின்றது. என் பார்வையில் ப சி குடும்பத்தை மோடியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! மாமல்லன் பகிர்வில், உங்கள் டாலர் நகரம் அமேசான் கிண்டில் வெளியீடாக வந்திருப்பதைப் பார்த்தேன். வாழ்த்துகள்!

      வங்காளம் மட்டுமில்லை, இங்கே மாநிலக்கட்சிகள் எல்லாமே தங்கள் மாநிலத்தைத் தனித்தீவாக வைத்திருக்கவே விரும்புகின்றன.காங்கிரஸ் கட்சி மாநிலப்பிரச்சினைகளை ஆரம்பகாலத்தில் புறக்கணித்து வந்ததில் எழுந்த இந்தப்போக்கு, மாநிலக்கட்சிகள் ஒவ்வொன்றும் பாளையத்துக்காரர்களாக மாற வெகுவாக உதவியது.

      இப்போது பிஜேபியின் வளர்ச்சி, மாநிலக்கட்சிகளுடைய தனித்தீவு கனவுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதால் தான் மோடிக்கு எதிராக இவர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள்!

      பானாசீனா, KDbrothers தொடர்ந்து தப்பித்து வருவது வேறு கதை. அதைக் கொஞ்சம் பேச வேண்டும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!