ஒருவனுக்குக் கெட்ட நேரம் ஆரம்பித்தால் அது என்னென்ன வகையில் எல்லாம் ஆட்டுவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ராகுல் காண்டியின் தலைமையில் இரண்டாம் முறையும் தேர்தல்களில் பரிதாபமாகத் தோற்று எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் காங்கிரஸ் கட்சியில் நடந்து கொண்டிருக்கிற தொடர் நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும். அந்தக் கொடுமையைக் காணச் சகிக்கவில்லையா? அசாதுதீன் ஒவைசி மாதிரிச் சில்லறைகள் கூடக் காங்கிரசை எப்படிக் குத்திக் கிழிக்கிறார்கள் என்று பார்த்தால் கூடப் போதும்!
ராஜஸ்தான் முஸ்லிம்களை காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வரைக் கண்டனம் செய்து சொல்கிறார். என்ன நடந்ததாம்?
பசுக்காவலர்களால் கொல்லப்பட்டார் என்று காங்கிரசும் கூட்டாளிகளும் ஆட்சிக்கு வருமுன் தம்பட்டமடித்து, ஆட்சிக்கு வந்தபிறகு அந்த பெஹ்லு கான் என்பவர் மாடுதிருடர் தான் என்று ராஜஸ்தான் காவல்துறை சார்ஜ்ஷீட் போட்டிருக்கிறது அவர் மகன்களையும் மாடுதிருடிய குற்றத்திற்காக குற்றப் பத்திரிகையில் சேர்த்திருக்கிறார்கள் என்பதில் தான் ஒவைசி இப்படிக் கொந்தளித்திருக்கிறார்.
இறந்தவர் மீதும்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிற புத்திசாலித்தனம் காங்கிரஸ்காரனுக்கு மட்டும்தான் இருக்கும் போல! அசோக் கெலாட் இறந்தவர் மீது குற்றப்பத்திரிகையா, இல்லையே என்று சமாளித்தது எடுபடவில்லை என்பது இந்தக் கார்டூனை விடப் பெரிய சோகம்! ஒவைசி வேறு இடையே புகுந்து குத்துகிறார்!
நுஸ்ரத் ஜஹான் ஜெயின்! 29 வயதே ஆகும் இந்த இளம்பெண் மேற்கு வங்கத்தில் ஒரு சினிமா நட்சத்திரம். அதற்குமுன்னால் மாடலிங் செய்திருக்கிறார். இன்றைக்கு பஷீர்ஹாட் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் முறை எம்பியும் கூட! நிகில் ஜெயின் என்கிற ஹிந்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு சற்றுத்தாமதமாக எம்பியாகப் பதவியேற்றுக் கொண்டவர். அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள்!
இந்தப் பதினாறு நிமிட வீடியோவைப் பார்க்கப் பொறுமை இருக்கிறவர்கள் பார்த்துவிட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்! தனிப்பதிவாகவே விவாதிக்கலாம்!
எது பொருளோ அதைப்பேசுவோம்! இந்தப்பக்கங்களில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய செய்திகளாகக் கொஞ்சம் பார்த்துக் கொண்டுவருகிறோம் . அமெரிக்காவுடன் ஆன இந்திய உறவுகள் குறித்து கரண் தாப்பர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த நவ் தேஜ் சர்னா, ஹிந்து நாளிதழின் வர்கீஸ் ஜார்ஜ் இருவருடன் விவாதிக்கிறார். 27 நிமிடங்கள் தான்! பார்க்க நேரமிருப்பவர்கள் பாருங்கள்!
மீண்டும் சந்திப்போம்.