ராகுல் காண்டி! ராமசந்திர குகா! சேகர் குப்தா!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாய் இல்லை! அதுபோல ஒருநாள் எழுதாமல்தான் இருந்துபாரேன் என்று இருக்க நினைத்தவனை இந்த வீடியோவும் ராமச்சந்திர குகாவும் பதிவெழுத வைத்தாயிற்று.


ட்யூப்லைட் ராகுல் காண்டிக்கு மக்களவையில் பேசத் துணிவில்லை! வெளியே நிருபர்களிடம் சவடாலாகப் பேசமட்டும் தெரிகிறதா? எத்தனைநாட்களுக்கு இந்த ஒன்றுக்கும் உதவாத வாரிசை காங்கிரஸ் தூக்கிச் சுமக்கப்போகிறது என்பது காங்கிரஸ்காரன் தலைவிதி! ஆனால் இந்த தேசமும் சேர்ந்து சுமக்க வேண்டும் என்பது ஜனங்களுடைய தலையெழுத்தா என்ன? ராஜதீப் சர்தேசாய் அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பேசும்போது நேரு பெயரை 23 தரம் குறிப்பிட்டுப் பேசிவிட்டாராம்! அதைக்கூட அவருக்காக ராமசந்திர குகா தான் எண்ணிச் சொல்ல வேண்டி இருக்கிறது!  

    
ராமச்சந்திர குகா நேருவின் பரமபக்தர்! மோடி எதிர்ப்பு மிகுந்தவர் என்பதெல்லாம் தெரிந்த செய்தி. சரித்திரம் எழுதுகிறவர் என்பதில் இருக்கும் ஆகப்பெரிய கோளாறே பழைய விஷயங்களிலேயே தேங்கி நின்று விடுகிறார் என்பதுதான்! கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெளியே வந்துவிட வேண்டும்! கடந்தகாலத்திலேயே சிறைப்பட்டுவிடக் கூடாது என்பதே தெரியாதவரிடம், என்னபெரிதாகத் தெரிந்து கொண்டுவிட முடியும்? நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப்பெரியவர் என்றே சொல்லத் தெரிந்தவருக்கு மோடி எதற்காக நேரு எந்தக்காலத்திலோ பேசியதை, மேற்கோள் காட்டவேண்டும்? அதுவும் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்பது புரியவில்லையாமா?

Modi seized on the word “minorities” in the 1950 pact between Nehru and his then Pakistan counterpart Liaquat Ali Khan to defend the exclusion of Muslims from the CAA. “Such a big secular person like Nehru, such a great thinker, such a big visionary; and everything to you, why did he not use then all citizens instead of minorities there? There must have been some reason,” he said, looking towards the Congress benches. என்று டெலிக்ராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ராமசந்திர குகா கறைப்பட்டுக் கொள்வதில், மோடி என்ன தவறு செய்துவிட்டாராம்? நேருவின் அந்தக் கடிதத்தில் முதல் வரியில் “irrespective of religion” என்று சொல்லியிருந்ததாகவும் அதை மோடி செலெக்டிவாக சொல்லாமல் விட்டுவிட்டார் என்று பொங்கியிருக்கிறார்! ஏன் பொங்கிப் பொருமுகிறார் என்பதற்கு மேலே சிவப்பில் காட்டியிருக்கிற கிண்டலான தொனிதான் காரணம்! He then tossed questions at the Opposition. “Was Pandit Nehru communal, I want to know? Did he discriminate between Hindus and Muslims? Did he want a Hindu Rashtra?” Modi asked. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, அங்கே இருந்த காங்கிரஸ் எம்பி ஒருத்தருக்கும் பதில் தெரியவில்லையாமா? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, நேரு , இந்திரா எல்லாம் கடந்தகாலம்! இன்னும் கொஞ்ச காலத்தில் சோனியாவும்! ராகுல் காண்டிக்கு சலாம் வைப்பதா, பப்பி வாத்ராவுக்கு சலாம் வைப்பதா என்றே தெரியாமல் இருக்கிறவர்களுக்கு, ராமசந்திர குகா, நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப் பெரியவர் என்று புலம்புவது கேட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்!

      
ராமசந்திர குகாவுக்கு விசிறிவிட இப்படி ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இன்னும் சோகம்😩😟😟  


சேகர் குப்தா, இந்த 18 நிமிட வீடியோவில், ராமசந்திர குகா மாதிரி சிறுபிள்ளைத்தனமாக எழுதிப் புலம்பவில்லை என்பது முதல் ஆறுதல்! ஆனால் நேருவை மேற்கோள் காட்டியது உட்பட காங்கிரசுக்கும் நாட்டுமக்களுக்கும் நரேந்திரமோடி தனது 100 நிமிட நன்றியுரையில் பேசியதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? சேகர் குப்தா அவருடைய பணியில் விளக்குகிறார். ராமசந்திர குகா தனது மண்டையில் திணித்து வைத்திருக்கிற பழைய குப்பைகளை வெளியே எறியாமல், நடப்பு நிலவரங்களை விமரிசனம் செய்வது சரியாக இறுக்காது. சேகர் குப்தா பேசியதில் தெளிவான விஷயம் இதுவும் தான்!

மீண்டும் சந்திப்போம்.             

4 comments:

  1. sir, Pebington post gandhi kindal panni potta maathri irukku

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்!

      நீங்கள் பாயிண்டை சரியாகப் பிடித்திருக்கிறீர்கள்! அதனால் தான் ராமசந்திர குகாவுக்கு விசிறிவிட என்று எழுதினேன். ஒரிஜினல் காந்தியோ, நேருவோ, ஈவெராவோ எவராய் இருப்பினும் எல்லாக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கமுடியாது. காலாவதியாகிப்போன பழைய நினைப்பிலேயே மிதந்து கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேருவை அடிக்கடி மேற்கோள் காட்டியது கிண்டலுக்காகவே! ஆனால் அதை மிக நாகரீகமாகச் செய்தார். அசட்டு ராமசந்திர குகா டெலிகிராப் நாளிதழில் அரைகுறைக் கட்டுரை ஒன்றை ஆவேசமாக எழுதினார். அசட்டு காங்கிரஸ்காரர்களோ பிரதமர் முதல்நாள் தங்களைக் கிண்டல் செய்து பேசிவிட்டார் என்பதைக் கூட ஒருநாள் தாமதமாகப் புரிந்துகொண்டு மறுநாள் வெள்ளிக்கிழமாய் மக்களவையில் அமளிதுமளி செய்து சபையை ஒத்திவைக்கும்படி ஆயிற்று.

      ட்யூப்லைட்டுகள் என்று பிரதமர் கேலிசெய்ததை மீண்டும் உறுதிப்படுத்திய மாதிரித்தான் ஆனது.

      Delete
    2. sir Raoul speech of asking people to beat Modi seems to be instigating violence cant he be booked for such a crime ?

      Delete
    3. வாருங்கள் சரவணன்!

      இந்திராவின் வாரிசுகளுக்கு நரேந்திர மோடி மட்டுமல்ல, குடும்பத்தைத்தவிர மற்ற எல்லோருமே துச்சம்தான்! 2014 இல் சோனியா ஆரம்பித்துவைத்த மோசமான தனிநபர் தாக்குதலை மகன் மகள் இருவருமே தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதைத்தட்டிக்கேட்க இங்கே எவரும் முன்வரவில்லை, அதற்கென்ன காரணம் என்றும் புரியவில்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!