பிரதமர் நரேந்திர மோடி இந்த வருட சுதந்திர தினத்தன்று அறிவித்தபடியே, ஜெனெரல் பிபின் ராவத், முப்படைகளின் ஒருங்கிணைந்த தலைவராக (Chief of Defence Staff) ஆக இன்று பொறுப்பேற்றிருக்கிறார். ராணுவத்தளபதியாக இன்று ஓய்வு பெறுகிற நிலையில் ஜெனெரல் பிபின் ராவத் அடுத்த மூன்றேகால் வருடங்களுக்கு முப்படைகளையும் ஒருங்கிணைக்கிற தலைமைப் பொறுப்பில் இருப்பார்.
ரிபப்லிக் டிவியின் நேற்றைய விவாதத்தில் பிபின் ராவத்தின் நியமனம் பாகிஸ்தானிகளுக்கு கலக்கம் தருகிற மாதிரி இருந்ததாகச் சொல்கிறார்கள். பாக்கிகளுக்கு எப்படி இருந்ததோ தெரியாது, நம்மூர் சோனியா காங்கிரஸ்காரர்களுக்கு செந்தட்டி தடவிய மாதிரி எரிகிறதாம்! ஒரு காங்கிரஸ்காரர் ஜனாதிபதி பிபின் ராவத்தைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்கிறார். காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி வரிசையாக 4 ட்வீட்களில் காங்கிரசின் எரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து உறுதியாகிக் கொண்டே வருகிறது! காங்கிரஸ் எதை எதிர்த்தாலும், அது இந்த நாட்டுக்கு மிக நல்லது என்பது தான் அது!
நம் நாட்டில் இப்போது தரைப்படை விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர். ஆனால், போர்க்காலங்கள், அவசர நேரத்தில் இந்த மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த, வழிநடத்தத் தலைமைத் தளபதி என்று இல்லை, இதற்கான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. இது கார்கில் போரின்போது உணரப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கடந்த 24 ம் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த புதிய தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது. பிபின் ராவத் தலைமைத் தளபதியாக என்ன செய்வார் என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இப்படிக் கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சிவகங்கைச் சின்னப்பையன் என்று சொன்னவர் செத்துப் போய்விட்டார். ஆனாலும் அந்த சின்னப் பையன் இமேஜை இன்றும் மறக்காமல் குத்திக் காட்டுகிறார்களே! என்ன செய்ய?!
சதீஷ் ஆசார்யா என்ன சொல்ல வருகிறார்? D K சிவகுமார் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமக்கிறார் என்றா?
நெல்லை கண்ணன் என்கிற காங்கிரஸ் கிறுக்கன் என்னதான் அப்படிப் பேசிவிட்டாராம்? எனக்கும் ஆரம்பத்தில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. முதல் 5 நிமிடங்களுக்குள்ளாகவே வன்மமும் விஷமமும் வெளியே கொட்டப்படுகிறது. காங்கிரஸ்காரன் என்றால் தெரிந்தே பாவங்களைச் செய்கிறவன்தானா?
இந்தமாதிரி கிறுக்கர்களை ச.ட்டமும் காவல்துறையும் என்ன செய்யப்போகிறது? அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து விடும் தவறைத் தொடர்ந்து செய்யப் போகிறோமா?
மீண்டும் சந்திப்போம்.