அரசியல் களம் இன்று! செய்தியும் விமரிசனமுமாக!

கமல் காசர் களத்தில் இறங்கி அடித்து விளையாட ஆரம்பித்திருக்கிறார்! அதுவும் திருவாரூரில்! இறங்கி அல்ல, மேடையேறி அடிக்கிறேன் என்று சொல்கிறார்!
திமுகவை விளாசுவதோடு அதிமுகவையும் சேர்த்தே விளாசுகிறார்!  திமுகவினர் BP எக்குத்தப்பாக எகிறப் போவதும், 200 ரூபாய் திமுகவுக்கு அதிகவேலையும் இப்போதே தெரிகிறது!      

மூக்கு மாத்திரம் இளைக்கிற எக்சர்சைஸ் கிடையாது என்று இன்னொரு நடிகருடைய குழப்பமான அரசியல் பற்றியும் பேசுகிறார்! சுவாரசியம்! விசில் அடித்ததா மய்யம்       என்று இங்கே கேட்பதையும் நேரம் இருந்தால் பாருங்கள்!


நேற்று திருநாவுக்கரசர்! இன்று ரஜனி! மாறிமாறி விஜயகாந்தை வீடுதேடி வந்து சந்தித்ததில் அரசியல் துளிக்கூட இல்லையாம்! நம்பமுடிந்தால் நம்புங்கள்! 
விஜயகாந்த் பழைய நினைப்பிலேயே இருந்தால், அதைவிட தற்கொலை அரசியல் வேறு இருக்க முடியாது!
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜேஸ்வரி ப்ரியா, எத்தனைநாளைக்கு ஊடக வெளிச்சத்தில் இருப்பாரென்று தெரியாது! அதனால் இப்போதே பார்த்துவிடுங்கள்! இவரைப் போலவே பிஜேபியிலிருந்து சிலகாலம் முன்பு விலகி இப்போது TTV தினகரன் கட்சியில் சேர்ந்திருக்கும் ஜெமிலா, இதே மாதிரியான இன்னொரு நபர்! 

இவைகளை விடப் பெரிய காமெடி இங்கே!

இதே விஜயகாந்துக்காக பழம் நழுவிப்  பாலில் விழும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார் கருணாநிதி என்கிற பழைய நிகழ்வு கலீஞர் இடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியுமா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது! 
        

2 comments:

  1. திமுக அதிமுக இரண்டையும் விட பெரிதாகிறது விஜயகாந்த் கட்சி! ராஜேஸ்வரி ப்ரியா, ஜெமிலா ... நான் கேள்விப்பட்டிராத பெயர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பது அரசியலில் சாத்தியமே இல்லை ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!