ஜெப ஊழியம்! இன்ஸ்டன்ட் போராளி! பல்லிளிக்கும் பகுத்தறிவு!

பால் தினகரன், மோகன் சி லாசரஸ் மாதிரியான ஜெப ஊழியம் செய்தே  கோடிகளில் கொழிக்கும் மோசடிப் பேர்வழிகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் பேசி நீண்ட காலமாகி விட்டது என்று சாணக்யா தளத்தில் இந்த வீடியோவைப் போட்டு எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார்களோ? 



இவர்களுடைய ஜெப ஊழிய லட்சணம், கள்ள தீர்க்க தரிசனம் முதலான பித்தலாட்டங்களை வெறும் இரண்டுநிமிடத்தில் அம்பலப்படுத்துகிற வீடியோ. இதில் மோகன் சி லாசரஸ் ஒருபடி மேலேயே போய் மோடி மட்டும் ஜெயித்துவிட்டால் நான் இயேசுவை ஆராதிப்பதையே  நிறுத்திக் கொள்கிறேன் என்று சவடால் வேறு! ஏதோ ஒருமுறை இருமுறை அல்ல! எப்படிப் பேசினார் என்பதற்கு ஒரு சோறு பதமாக     


இந்த ஜெப ஊழியக் கும்பல்களுடைய மோசடிகளுக்குக் கொஞ்சமும் குறையாதது மே 17 இயக்கம் என்று ஆரம்பித்து திடீர் போராளியாக எல்லாவிஷயங்களிலும் குதிக்க ஆரம்பித்திருக்கும் திருமுருகன் காந்தி என்கிற மோசடிப்போராளி! மாரிதாஸ் இவருடைய மோசடிகளைக் குறித்து ஒரு காணொளி வெளியிடுகிற அளவுக்கு, இங்கே சிலரால் கொழுத்து வளர்த்து விடப்பட்டிருக்கிறார். யார், எதற்காக என்றெல்லாம் ஊகிப்பது ஒன்றும் கடினமான விஷயமா என்ன?  

  
இங்கே வரலாறு தெரியாத நபர்களால் தான் ஊடகங்கள் நடத்தப்படுகின்றன. விளைவு? பொய்யர்கள், தங்களை போராளிகளாக காட்டிக் கொள்கிறார்கள். திராவிடக் காரர்களின் இந்தி எதிர்ப்பை பற்றி - சமுதாயச் சிந்தனை என்கிற பத்திரிகை எழுதி, ஈவெராவையும், கி.வீரமணியையும் சிலாகித்துள்ளது. அந்த சிலாகிப்பை, கி.வீரமணியின் விடுதலை பத்திரிகை, "பிற இதழிலிருந்து - கி.வீரமணியை பாராட்டுவோம்." என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையிலிருந்து:
"இந்தியா என்று, வட நாட்டாருடன் நாம் இணைந்து செயல்படும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தீர்க்கமாக அறிந்திருந்தவர், தந்தை பெரியாராவார். வட நாட்டான், அவன் மொழியைத் திணித்து நம்மை அடிமைப்படுத்துவான் என்பது அவருடைய கருத்து. அதனால் பெரியாரின் திராவிடர் கழகம் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடியது. திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அரசியல் கட்சியும் போராடியது. தி.க.வும், தி.மு.க.வும் இவ்விஷயத்தில் பல தியாகங்களைச் செய்திராவிட்டால் தமிழகம் என்றோ வட நாட்டானுக்கு அடிமைப்பட்டு தமிழும், தமிழனும் அடையாளம் காண முடியாமல் போயிருப்பான்." சமுதாயச் சிந்தனை(2016 ஆகஸ்ட்)
ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதையை முற்றிலும் உணராமல் ஒருவர் எழுத, அது தங்களுக்கு சாதகமான தகவல்களை கொண்டு இருப்பதால் ஈவெராவாதிகள் தங்கள் பத்திரிகையில் போட்டு பெருமை அடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது பாருங்கள் 

- ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதையை உண்மையாக எழுத போகும் நாம், ஈவெராவை அவதூறு செய்தோம் என ஈவெராவாதிகளால் கேவலமாக விமர்சிக்கப்படுவோம். ஆனால் அரைகுறையாக, ஈவெராவின் இந்தி எதிர்ப்பு நிலையை தெரிந்து கொண்டு எழுதிய சமுதாயச் சிந்தனை பத்திரிகையாளர், இவர்கள் பார்வைக்கு ஈவெராவை சரியாக உணர்ந்தவராவர். ஈவெராவின் 1938ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு நிலையை பக்க பக்கமாக எழுதும் ஈவெராவாதிகள், ஈவெராமசாமியின் 1965ம் ஆண்டின் இந்தி மொழி திணிப்பு பற்றி ஏன் எழுதுவதில்லை.
இந்த இடத்தில் ஈவெராவாதிகளின் படுஅயோக்கியத்தனமான கருத்தொன்றை பார்க்கலாம். அது யாதெனில், 1938ல் இந்தி திணிப்பில் ஈடுபட்ட ராஜாஜி, 1965ல் மனம் திருந்தி - இந்தி திணிப்பை எதிர்த்தார் என்பதை சொல்பவர்கள், 1938ல் இந்தி திணிப்பை  எதிர்த்த ஈவெராமசாமி, 1965ல் இந்தி திணிப்பு செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை மட்டும் சொல்லவே மாட்டார்கள். ஆமாம் - ஈவெராமசாமி 1965ல் இந்தி திணிப்பின்போது என்ன செய்து கொண்டிருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் - தி.மு.கக்காரன் என்ன செய்தாலும், அதை எதிர்க்க வேண்டியது தி.கக்காரனின் கடமையாக இருந்தது. அதன்படி, தி.மு.க இந்தி திணிப்பை எதிர்த்ததால் - ஈவெராமசாமி இந்தியை வரவேற்பதில் மும்முரமாய் இருந்தார். ஒரு வேளை, அன்றைக்கு தி.மு.க - இந்தி திணிப்பை எதிர்க்காமல் இருந்திருந்தால், ஈவெராமசாமி இந்தி திணிப்பை எதிர்த்திருப்பார்.
இது தான் ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதை. இந்த லட்சணத்தில் ஈவெராமசாமி, தமிழகத்திற்குள் இந்தியை நுழையவிடாமல் தடுத்தார் என்கிறார்கள் அரைகுறை வரலாற்றாளர்கள். இனி 1965ல் ஈவெராமசாமி இந்தி திணிப்பை வரவேற்ற கதையை பார்ப்போமா? "இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? 

இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? (ஈவெராமசாமி -ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965) வேலைக்காரியோடும் இங்கிலிஷ் பேசுங்க என்று தமிழர்களுக்கு அறிவுரை தந்த ஈவெரா தான் - இந்திக்காரர்களின் ஆங்கில எதிர்ப்பை சிலாகிக்கிறார்.
ஈவெராமசாமியின் கூற்றுப்படி, இந்தியா என்கிற ஒரு நாட்டுக்கு ஒரேஆட்சி மொழி என்பது அவசியம். மேலும் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் - என்று வேறு குறிப்பிடுகிறார்.இந்தியா ஒன்றாக இருக்க இந்தி வேண்டும் என்கிறார். இந்த ஈவெராமசாமி தான், இந்தியை வரவிடாமல் தடுத்தார், இந்திய தேசியத்தை எதிர்த்தார் என்று புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்கள். ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு, இந்தி ஆதரவு என்பதெல்லாம் தமிழின் மீதான அக்கரையினால் அல்ல. அப்போதைய தம் எதிரிகளை எதிர்க்க அல்லது தம் ஆதரவாளர்களை அரவணைக்க என்பதற்காக தானே ஒழிய - வேறு எந்த வெங்காயமும் இல்லை. அதே ஆனந்தவிகடன் பேட்டியை தொடர்ந்து வாசிப்போம்.
சாவி, மணியன் ஆகியோரின் கேள்விக்கு ஈவெராமசாமி அளித்த பதில். மணியன் கேட்கிறார். "மும்மொழித் திட்டப்படி நாம் இந்தி கத்துக்க வேண்டி வரலாம் இல்லையா?" ஈவெராமசாமி "மன்னிக்கனும், மும்மொழித் திட்டம்னா என்ன? கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்க, விளங்கலே..." என்று கேட்க மும்மொழித் திட்டத்தை பற்றி மணியன் விளக்கிச் சொல்கிறார். "உம், சரியா போச்சு, ஏதாவது ஒரு அந்நிய மொழி படிக்கணும்னா அது இந்தி மொழியாவே இருந்துட்டுப் போவட்டுமே. படிக்கணும்னு கட்டாயப் படுத்தறாங்களா?"
மணியன் "இல்லை, கம்பல்ஸரி வந்தால்?" அதற்கு ஈவெராமசாமி "வர்ரப்போ பார்த்துக்கலாமே. அதுக்கு என்ன இப்போ..." என்கிறார். மணியன், "மத்திய சர்க்கார்லே உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்திலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே?" அதற்கு ஈவெராமசாமி, "படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க 'சர்வே' படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிக்கிறது, உனக்கு இதிலே என்ன கஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்திலே நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே... இது லாபம் தானே?" (ஈவெராமசாமி -ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965)
இது தான் ஈவெராமசாமியின் இந்தி எதிர்ப்பு யோக்கியதை. இத்தகைய இந்தி எதிர்ப்பு பின்பக்கத்தை வைத்து இருக்கிற ஈவெராவை தான் இந்தி எதிர்ப்பு போராளி என்று கதை விடுகிறார்கள் கி.வீரமணியிலிருந்து சகல ஈவெராவாதிகளும். அவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா?

சீரியசாகவே போய்க்கொண்டிருந்தால் எப்பூடி? கொஞ்சம் சிரிக்க மேட்டர் எதுனாச்சும் வேண்டாமா?


மீண்டும் சந்திப்போம். 


10 comments:

  1. இந்த வியாபாரிகளைப் பற்றி ஏதாவது கோபத்தில் ஏடாகூடமாக எழுதிடப்போறேன். இவங்கள்லாம் வெட்டிப் பசங்க என்பது என் அபிப்ராயம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி வம்பர்களை வெறுமனே வெட்டிப்பசங்க என்று ஒதுக்கிவிட்டுப்போய்விட முடியாதே நெ.த சார்!
      மகஇக கோவன் முதற்கொண்டு திமுகாந்தி சுபவீ வேல்முருகன் திருமா என்று பலவகைகளில் திமுகழகத்தின் பாதுகாவலர்கள் மாதிரி வெளியே தெரிந்தாலும் பின்னிருந்து இயக்குவது வேறுசக்திகள், வேறு அஜெண்டா என்றிருக்கையில் எப்படிக் கண்டும் காணாமல் போய்விட முடியும்?

      Delete
  2. குட்டிப் பசங்க....
    மட்டிப் பசங்க...

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்லிவிட முடியாதே துரை செல்வராஜூ சார்! குட்டியோ மட்டியோ மொத்தத்தில் நச்சைக் கலப்பவர்கள்! எப்படிச் சும்மா இருக்க முடியும்?

      Delete
  3. இவர்கள் மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள்? தேவன் சொன்னார் என்று சொன்னால் இவர்கள் நம்பி விடுவார்கள்! ஒருவேளை மோடி தோற்றிருந்தால் இவர்கள் எப்படி துள்ளி இருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! யோசித்துப் பார்த்து ....? அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்பதல்லவா முக்கியம்!

      Delete
  4. compassion international என்ற 'பொது நல' நிறுவனம் 48 வருடங்களாக இந்தியாவில் 'ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக' பல பில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கி வந்தது. இரண்டு வருடத்துக்கு முன் நம் வருமான வரித்துறை அந்த பணம் எங்கு போகிறது என்று ஆராயும்போது 75% நன்கொடை மதமாற்றத்துக்காக செலவழித்து வந்தது என்று கண்டுபிடித்தது. உங்கள் நோக்கம் இப்படி இருக்கும்போது, religious organization என்று register செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்திய உடன் , அப்படி செய்தால் வரும் நன்கொடை பாதிக்கும் (மற்ற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்) என்று நாட்டை விட்டே வெளியேறியது.

    மோடி அரசு எரிவதை எடுப்பதால் கொதிப்பது அடங்கும் என்று செயல்படுகிறது. அதனால் இவர்களுக்கு வலிக்கிறது! எப்பாடு பட்டாவது மோடியை தோற்கடிக்க பிரயத்தனம் செய்தார்கள்!

    ReplyDelete
    Replies
    1. NGO போர்வையில் கிறித்தவம் செய்கிற தகிடுதத்தங்கள் மட்டுமல்ல, லட்யன்ஸ் கும்பல் செய்கிற மாய்மாலங்கள் எல்லாம் அடிபட்டுப் போனதை சகித்துக் கொள்ளமுடியாமல்தான் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், பந்து! தூத்துக்குடியில் ஏவுகணைத்தளம் அமைக்க எதிர்ப்பு என்ற விஷயத்தை அங்கே கிறித்தவப்பாதிரிகள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது இப்போதைய புதுசு!

      Delete
  5. இவர்கள் புதிது புதிதாக தொலைக்காட்சிகளை ஆரம்பித்தபோதும், சனாதன தர்மத்தைக் காப்பியடித்து சில சடங்குகளைக் கடைபிடிக்கத் தொடங்கியபோது அவற்றை நகைப்புக்குரியதாக அலட்சிய படுத்தியதால் ஏற்பட்ட வினை. மதமாற்றம் ஒரு தொற்று நோய் என்பதை உணர வேண்டிய காலம் இது.

    ReplyDelete
    Replies
    1. மதமாற்றங்களைக் குறித்த சாதாரண ஜனங்களின் விட்டேற்றியான மனோபாவம் மாறாதவரை இந்தப் பிரச்சினை தொடரத்தான் செய்யும்! அதை மாற்ற தனிநபராக, குழுக்களாக, இயக்கமாக என்ன செய்யப்போகிறோம்?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!