புதன்கிழமை! படத்தில் ஹீரோ! நிஜத்தில்....?

யாத்ரா! மம்மூட்டி படமா? YS ஜெகன் தேர்தல் பிரசாரமா?  இப்படி ஒரு திரைப்படத்தின் அரசியலை இரண்டுவாரங்களுக்கு முன்னால் ஒரு பதிவில் அலசி இருந்தது நினைவிருக்கிறதா? படத்தயாரிப்பாளர்கள் YS ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள்! பாக்ஸ் ஆபீசில் சொதப்பல் என்றாலும், சொந்த ரிலீஸ் என்பதால் தயாரிப்பாளர்களே நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்கிறது Mirchi9 தெலுகு சினிமா தளம்!

தெலுகு சினிமாவின் கடவுளாகவே இருந்த NT ராமராவ் அரசியலுக்கு வந்தார். தெலுகு ஆத்ம கௌரவம் கோசம் என்று தெலுகுதேசம் கட்சியை ஆரம்பித்தார். ஹீரோ அவர் என்றால் வில்லன் யார்? இந்தியாவின் வில்லன் கட்சியான காங்கிரசைத் தவிர, யாராக இருக்க முடியும்? காங்கிரசை எதிர்த்தே அவருடைய அரசியல் இருந்தது. இப்போது அதற்கென்ன என்கிறீர்களா?

NT ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா, தெலுகு சினிமா ரசிகர்களால் பாலையா என்று கொண்டாடப் படுகிறவர், தனது சொந்தத்தயாரிப்பில், தந்தையின் கதையை இரண்டு பகுதிகளாக NTR கதாநாயகுடு என்று தெலுகு சினிமாவின் தேவுடா ஆனதையும், அடுத்து NTR மகாநாயகுடு என்று இந்திரா, ராஜீவை எதிர்த்து அரசியல்நாயகன் ஆனதையும் படமாக்கி  ஜனவரியில் முதல்பாகமும் இந்தமாதம்  14 இல் அடுத்த பாகமுமாக வெளியானதில் பாக்ஸ் ஆபீசில் முதல் பாகம் டீசண்ட் வசூலும், இரண்டாம் பாகம் பரிதாபமாக அடிவாங்கியதுமாக ஆனதில் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் எதிரிகளுக்கு ஏக மகிழ்ச்சியாம்!  The movie has stirred a lot of interest in the trade before its release and registered Record Pre-Release Business. The losses now are like never before in the past.


Prasanth Facts என்ற யூட்யூப் சேனலில் NTR கதையை திரைப்படம் சொல்லாத விஷயங்களோடும் கொஞ்சம் சொல்வதை மேலே பார்த்தீர்கள், இல்லையா? NTR Mahanayakudu received decent reviews, but the audience seems to have rejected the film. Now, Balakrishna, who is clueless about the shockingly-underwhelming response to the film, has decided to set up a meet with his fans என்கிறது இந்தியா டுடே! ரசிகர்களிடம் கேட்டென்ன பயன்? NTR இமேஜை சந்திரபாபு நாயுடுவுக்காகப் பயன்படுத்த முடியாதபடி, மாமனாரைக் கவிழ்த்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்ட கதை மட்டுமல்லாமல், NTR அரசியல் பிம்பமே காங்கிரசுக்கு எதிராக இருந்ததில்தான் என்பதும், நாயுடு தன்னுடைய சௌகரியத்துக்கேற்றபடி காங்கிரசுடனும்  கூட்டுக்காகத்  தொங்கியவர் என்பதும் சேர்ந்து கொண்டு இடிக்கிறதே!


YSR காங்கிரஸ்காரர்களுக்குக் கொண்டாட்டமாக இருப்பதில் ஆச்சரியமில்லை! கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையாக இங்கே அரசியலில் நடந்துகொண்டிருப்பது புரிகிறதா?  

    

இரண்டு படங்ளையும் பார்த்தபிறகு, இனிமேல் சினிமா கவர்ச்சி ஒன்றை வைத்து மட்டும் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது, முதல்வர் ஆசையெல்லாம் நடக்காது என்ற நல்லசேதிதான் என்கண்களுக்குத் தெரிகிறது! 

அதுவும் தமிழர்களைவிட சினிமாப பைத்தியங்களான ஆந்திர, தெலங்கானா ஜனங்களே அசட்டை செய்து, நிராகரித்திருக்கிறார்கள் என்பது நிச்சயமாக நல்ல செய்திதான்! இல்லையா, பின்னே!!
  

                         

6 comments:

  1. //அதுவும் தமிழர்களைவிட சினிமாப பைத்தியங்களான ஆந்திர, தெலங்கானா ஜனங்களே // அப்படி ஒன்றும் தெரியவில்லை. சினிமா பைத்தியங்களாக இருக்கலாம். ஆனாலும் சினிமா வேறு அரசியல் வேறு என்று தெளிவானவர்கள். ஒரு ntr தவிர வேறு யாரும் சினிமா மூலம் வரமுடியவில்லையே. சிரஞ்சீவிக்கு இருந்த புகழ் கிட்ட தட்ட ntr க்கு சமமானது. அவர் கட்சியே காணாமல் போய்விட்டதே.

    நமக்கு தான் சினிமா வேறு அரசியல் வேறு என்ற தெளிவில்லை!

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லையே பந்து!

      என்ன நம்பிக்கையில் பாலகிருஷ்ணா சொந்தத்தயாரிப்பாக தந்தையின் கதையை இரண்டு பகுதிகளாக ஒரு மாத இடைவெளிக்குள் அடுத்தடுத்து வெளியிட்டாராம்? அதுவும் லக்ஷ்மி பார்வதியோடு திருமணம் நடந்த கதையைக் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, பசவதாரகத்தோடு (முதல்மனைவி, பாலகிருஷ்ணாவின் தாய்) காதல் ததும்பிய சரித்திரமாக மட்டும் glorify செய்தார்களாம்?

      செய்தியோடு கொடுத்திருந்த சில சுட்டிகளிலும் பார்த்திருந்தால் முதல்பாகம் டீசெண்டான வசூல், ஆனால் இரண்டாம் பாகம் utter flop ஆனதற்கான காரணம் எதுவாக இருக்கலாம் என்பதில் உங்களுக்கே ஒரு அபிப்பிராயம் வந்திருக்கலாமோ?

      யாத்ரா படம், NTR படம் இரண்டுமே அரசியல் பிரசாரத்துக்காகத்தான்! இரண்டுமே தோற்றிருக்கின்றனவா, ஆந்திர வாக்காளர்கள் நீங்கள் சொல்வதுபோல , சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாகத்தான் பார்க்கிறார்களா என்பதை வருகிற தேர்தல் முடிவுகளில் தான் பகுத்துப் பார்க்க வேண்டும்!

      Delete
    2. சினிமா ஒரு துறை; அரசியலும் இன்னொரு துறை. அவ்வளவு தான்.

      சினிமாவின் நோக்கம் நல்ல கருத்துக்களைப் பரப்புவதும் பார்ப்பவரை மகிழ்விப்பதும் ஆகும்.

      நல்ல அரசியலின் நோக்கம் நாட்டுக்கு நன்மைகள் பயக்கவும், எளிய மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துவதும்
      ஆகும்.

      ஒரு துறையில் திறமை வாயந்தவர்கள் இன்னொரு துறையிலும் தடம் பதிக்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

      தேசம் சார்ந்த எல்லா விஷயங்களிலும் நன்மைகள் குவிந்து நாடு
      செழிக்கட்டும் என்பது தான் நம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




      Delete
    3. இங்கே எல்லாத்துறைகளும் கூடு(ம்)துறையாக சம்பாதிப்பது என்றாகிவிட்டதே ஜீவி சார்!

      Delete
  2. எல்லாத்துக்கும் இனம் கண்டு கொள்ளக் கூடிய ஒரு கண்டுபிடிப்பு இருக்கும் இல்லையா?

    சம்பாதிக்க விரும்பாதவர்களை கண்டு கொள்வது எப்படி?..

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! இரண்டு வலைப்பதிவுகளிலும் யார் யாரை ஏன் நிராகரிக்கவேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறேனே! அதற்கு மேலும் என்ன கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்? நீங்களே சொல்லுங்களேன்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!