வெறுப்பு அரசியல்! தங்கள் குற்றங்களிலிருந்து திசை திருப்பவே!

நம்மூர் அரசியல் களத்தில் வெறுப்பு அரசியல் மட்டுமே மிகவம் தூக்கலாக இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இங்கே இந்த இளைஞர் கொஞ்சம் எளிமையாக எடுத்துச் சொல்கிற காணொளியில் இன்று தான் பார்த்தேன். அரசியலை எப்படிப் பார்க்கப் பழகவேண்டும்? நம்மில் பலருக்கும் அது பிடிபடுவதே இல்லை! அதனால்தான், இங்கே அரசியல்வாதிகள் ஆளுக்காள் அம்பாரம் அம்பாரமாய்க் காதுல பூ சுற்றி விட்டுப் போக நாமும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா என்ன?!
   
மாரிதாஸ்! இந்த ஜனவரியில் பேசியது. இவருடைய முகநூல் பகிர்வுகளை நண்பர்கள் சிலர் கூகிள் பிளஸ்சில் பகிர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறேன். அதைத்தாண்டி அதிகம் அறிந்ததில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் இவரும் ஒரு மதுரைக்காரர் என்பதே தெரிய வந்தது. நிறையவே சிந்திக்க வைக்கிற பேச்சு என்பதில் சந்தேகமே இல்லை. இவர் ஒரு புத்தகமும் எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருப்பதை (ஒருவருடத்துக்கு முந்தையது)  யூட்யூப் தளம் கூடவே எடுத்துக் கொடுக்கிறது. கே டி ராகவன் , நம்மூர் அரசியலில் இந்த வெறுப்பரசியலின் பங்கென்ன என்று இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டே பேசுகிறார்.
என்ன ஒரே பிஜேபி ஆதரவுச் செய்திகளாகவே இருக்கிறதே என்று சலித்துக் கொள்கிறீர்களா?திமுகவின் அரசியல் சேட்டைகள் எப்படி என்பதையும் 
அவர்கள் சேனலிலேயே பார்த்துவிடலாம்!  

மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்!  


   
     

1 comment:

  1. மரியதாஸ் பேச்சு நல்ல அறிமுகம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!