விங் கமாண்டர் அபிநந்தன்! இருவேறு கோணங்கள், கேள்விகள்!

தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானிகளிடம் பிடிபட்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள், இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மூன்று விமானிகளை சிறை பிடித்திருப்பதாகவும் அடித்த தம்பட்டம்  கொஞ்ச நேரம் தான்!அப்புறம் பொய்யாகிப் போனது என்பதை நிறைய நண்பர்கள் இங்கே கவனிக்கத்  தவறுகிறார்கள்! வீண் பதட்டமும் #givepeaceachance என்ற உபதேசங்களும் நிறையக் கிளப்பிவிடப்படுகின்றன!


வேறெந்தத் தருணத்திலும் இங்கே தமிழேண்டா போராளிகளும் இணையதள திமு கழக போராளிகளும் இத்தனை வக்கிரமாக, இந்திய பாகிஸ்தான் உரசல்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைக்கு மிக  நெருக்கமாகப் போய் நான் பார்த்ததில்லை!  கழக இணைய தளக் கூட்டமே அணு ஆயுதப்போர் மூளுமோ? போர்வேண்டாமென்று சொல்லுங்கள் என்று தேவையே இல்லாத அச்சத்தை, விஷத்தை விதைத்துக் கொண்டு வருகிறது என்பது தற்செயலானதுதானா?

அதேநேரம், முன்னெப்போதுமில்லாத அளவுக்கு உலக நாடுகள் ஆதரவை இந்தியா பெற்று வருவதை இவர்கள் வேண்டுமென்றே கவனிக்கத் தவறுகிறார்கள்!  மசூத் ஆசார் விவகாரம், பாகிஸ்தான் சொந்தமண்ணில் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதை அம்பலப் படுத்தி வருகிறது.

ஐ.நா பாதுகாப்புசபையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் முதலான நாடுகள் மசூத் ஆசார் மற்றும் அவன் நடத்தும் ஜெயிஷ் ஏ மொகமது இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளன. வழக்கம் போல சீனா தனது வீட்டோ உரிமையைப் பயன்படுத்தி, இதற்கு முட்டுக்கட்டை போடலாம்! ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து தனிமைப்படுத்தப் படுவதை சீனாவால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? கவிழ்ந்துபோன பாகிஸ்தான் பொருளாதாரத்தை நிமிர்த்தி விடத்தான் முடியுமா? எல்லோருக்கும் தெரிகிற விடைதான்! நம்மூர் திருகல் டேனியல்களுக்கோ, கழகக் கண்மணிகளுக்கோ கண் தெரியாமல் செலெக்டிவ் blindness வந்துவிடும்! 1971 இல் தைவானுக்குப் பதிலாக ஐநா பாதுகாப்புசபையில் இடம்பிடித்த  சீனா முதன்முதலாக தன்னுடைய veto power ஐப் பயன்படுத்தியதே 1972 இல் வங்காளதேசத்தை ஐ.நா  உறுப்புநாடாக ஏற்கக்  கூடாது  என்பதில்தான்! 1965 இந்தோ பாகிஸ்தான் போர் சமயத்திலிருந்தே  சீனாவின்உள்நோக்கம் பாகிஸ்தானைப் பாதுகாப்பது அல்ல! குறி இந்தியா மீது தான் என்பது புரிந்தால் சரி ! 

நான்கு வருடங்களுக்கு முந்தைய வீடியோ இது! எப்படி பாகிஸ்தான் உருவான நாட்களிலிருந்தே மதத்தின் பெயரால் தீவீரவாதிகள், தாலிபான்களை  உருவாக்குகிற பயிற்சிக்கூடங்களை நடத்திவருகிறது என்பதை ஒரு 12 நிமிடக் காணொளியில் சொல்கிறார்கள். தேடினால், பாகிஸ்தான் என்பதே இந்தியவெறுப்பு என்ற ஒற்றைக் கனவில் உதித்த தேசம் என்பதற்கு ஏராளமான சான்று, தரவுகள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன.

பாகிஸ்தானுடன் சமாதானம் உண்மையிலேயே சாத்தியமா? பயங்கரவாதத்தின் விஷப்பல்லை பிடுங்க நம்மால் முடியுமா?

இந்தக்கேள்விகளை இருவேறுகோணங்களில் இருந்து பார்க்கிற பார்வைகளாக! ஒன்று ப்ரம்ம செலானி சொல்வது போல Unless India is willing to take the battle to Pakistan’s terror masters, the latter will continue employing their terrorist proxies against it

இன்னொன்று TOI செய்தி ‘Non-military’ raid: How India and Pakistan differ இது செய்தியின் தலைப்பு. 

இரண்டையும் பார்த்துவிட்டு ஒரு கருத்து அல்லது கேள்வி இயல்பாகவே வரும் அல்லவா? இங்கே வந்து சொல்லலாம் அல்லவா!  

         



3 comments:

  1. நம்ம அரசியல்ல, பாகிஸ்தானைப் பற்றிச் சொன்னாலே இங்குள்ள இஸ்லாமிய வாக்குகள் போயிடும் என்று நினைக்கறாங்க.

    கம்யூனிஸ்டுகள் எப்போதுமே 'இந்திய தேசம்' என்பதிலெல்லாம் அவ்வளவாகத் தலையிடாது. அவங்க கம்யூனிச சித்தாந்தம், சீனா, ரஷ்யா என்றுதான் சிந்திப்பாங்க.

    அதிருக்கட்டும்... ஊடகங்கள், எல்லா தீவிரவாதிகளும் அழிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் அளந்துவிடுவது, செய்தியைச் சொல்லவா இல்லை நெகடிவ் செய்திகளா?

    போர் என்ற ஒன்றை வார்த்தையில் நாம் பாகிஸ்தானை அதன் தீவிரவாதத்தை வேரறுக்க முடியாது. அமைதியாக, ஆனால் அந்த நாட்டிற்கு எந்த விதமான சலுகைகளும் போகாத அளவுதான் செய்யமுடியும். பாகிஸ்தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுது என்று சொல்லிக்கொண்டே நம்முடைய நோட்டடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்பது என்பது மாதிரியான ப.சிதம்பரம்/காங்கிரஸ் கொள்கைகளை பாஜக செய்யாதவரை நல்லதுதான்.

    இன்னொன்று, போர், விமானத்தை வீழ்த்தினேன் என்றெல்லாம் யாரும் தங்கள் கட்சியின் சாதனையாகச் சொல்லக்கூடாது. சொன்னால், அது அரசியலாக்கப்படும். பின்னடைவு ஏற்படும்போது கட்சியின் பின்னடைவாக மாறும். அரசியல்வாதிகள், அதிலும் பாஜக, இதைப்பற்றிப் பேசாமல் இருந்தாலே போதும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன்!

      இங்கே வாக்கு அரசியலைப் பற்றி பேசவே இல்லை! கடைசி எட்டு வரிகளில் இரண்டுவிதமாகப் பார்க்கிற விதத்தை சுட்டி கொடுத்துச் சொல்லியிருந்தேன்.ப்ரம்ம செலானி 2001 இல் வாஜ்பாய் கோட்டை விட்டது என்று கொஞ்சம் சொல்கிறார். அதைத் தொட்டுப் பேசுவதென்றால் பிரிவினைக்கான குரல் எழுந்த நாட்களில் இருந்தே கோளாறுகளின் ஊற்றுக்கண்களைக் கண்டுபிடிக்க முடியும். பாகிஸ்தான் வரலாறு கொஞ்சம் அயற்சி தரக்கூடியது. அதைக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல், இன்றைய பிரச்சினை ஒன்றைவைத்து மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

      அடுத்து TOI செய்தி! செவ்வாய், புதன் இரண்டுநாட்களிலும் escalate ஆன போர் மாதிரி ஆனால் போர் இல்லாத தாக்குதல்களில் உள்ள வார்த்தை விளையாட்டைப் பற்றிப் பேசுகிற மேலோட்டமான செய்திக்கட்டுரை.

      கொஞ்சம்வாசித்துவிட்டு வாருங்கள்! பேசுவோம்!

      Delete
    2. ஒரு ஜனநாயக நாடாக இருப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கலே யார் யார், என்ன, எப்படி சந்தர்ப்பத்தில் பேசக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்க முடியாமல் இருப்பதுதான்! இந்தப் பக்கங்களிலேயே on the rule of the road அல்லது மாதொரு பாகன் என்று தேடிப் பார்த்தால், சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதல்ல, கடமைகளை உணர்ந்து சுயகட்டுப்பாட்டுடன் இருப்பது என்று பலதுறை சொல்லியிருக்கிற பதிவுகள் கிடைக்கும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!