சண்டேன்னா மூணு! மாரிதாஸ்! ஹம்சா பின் லேடன்! எண்ணெய்க்கொழுப்பு!

மாரிதாஸ் அவர்பாட்டுக்கு என்னமோ எழுதிக்கொண்டு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டு அரசியலைக் கொஞ்சம் விமரிசனம் செய்துகொண்டிருந்தார். அதை இங்கே எத்தனை பேர் வவனித்தார்களோ, தெரியாது! ஆனால் 200 ரூபாய் இணைய உபிக்கள் உபயத்தில், அவதூறுகளும் புகார்களுமாக எல்லாமாகச் சேர்ந்து  மாரிதாஸ்  பெயரும்,  சொன்ன விஷயங்களும் அவரே எதிர்பார்க்காத அளவுக்குப் பிரபலமாக ஆக்கப் பட்டிருப்பது ஒரு விசித்திரம்!


சிலமாதங்களுக்கு முன்னால் அரக்கோணம்  திமுக எம்பியும் மதுபான ஆலைகள் உரிமையாளருமான ஜெகத்ரட்சகன், ஒரு சிங்கப்பூர் நிறுவனம் வழியாக இலங்கையில் 3.85 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்த தகவல்கள் கசிந்தன. அன்றைய தின  பரபரப்புச் செய்தியானதைத் தாண்டி, அதைப்பற்றி  யாருமே அலட்டிக் கொள்ளவில்லை என்பதில் இங்கே ஊழல் என்பது  ஒரு டீக்கடை அரட்டை அல்லது மேடைக்கூச்சல், ஊடகங்களில் ஏதோ ஒரு ஓரத்தில் செய்தியாக மிகச்சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ஆனதால் தானோ? வீடியோ 21  நிமிடம்.



Zero Dark Thirty! செப்டெம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் தேடுதல் வேட்டைக்கு ஆளான சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட தருணங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்.  வேறு சில படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம், அமெரிக்கா மீதான தாக்குதல்களின் பின்னணியில் இருந்த ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த போதே அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்டதை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டபடம் என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்!      ஒசாமா   பின் லேடனுடைய அல் கொய்தா இயக்கத்தின் தலைமையைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வந்தாலும் நேற்று சனிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப், ஒசாமாவின் மகனும் அல்கொய்தா இயக்கத்தின் முக்கியத்தலைவருமான ஹம்சா பின் லேடன் அமெரிக்க பயங்கரவாத எதிரப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்திருப்பது இன்றைய முக்கியச் செய்தியாகி இருக்கிறது. ஒசாமா         போலவே அவரது மகன் ஹம்சாவும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் (AFPAK)  ஏரியாவில்  வைத்தே கொல்லப்பட்டிருப்பதாக சொல்லியிருப்பது  முக்கியமானது.


சவூதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய  ஆராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டிரோன்களை வைத்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் இன்னொரு முக்கியமான செய்தி. கிட்டத்தட்ட எழுபதுலட்சம் பாரல்கள் தீயில் நாசமாகி இருக்கலாம்  என்று சொல்கிறார்கள்.


அமெரிக்கா வழக்கம்போல ஈரான் மீது பழியைப் போட்டு அறிக்கை விட்டிருக்கிறது.  ஏமனில் சவூதி அரேபியா நடத்தி வரும் போர், ஹௌதிகள், ஈரான் இதில் எப்படிக் கைவரிசை காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் அரபுநாடுகளின் அரசியலை முதலில் தெரிந்து கொண்டாக வேண்டும். சவூதிகளுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிற அமீரகத்துக்கும் இடையிலான அரசியலும் இதில் சேர்ந்து கொள்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் எண்ணெய்க்கொழுப்பு அரசியல், நீயாநானா ஆதிக்கப் போட்டி தான்!  இந்த எண்ணெய்க்கொழுப்பு அரசியல், வஹாபியிசம், சன்னி ஷியா இஸ்லாமிய அரசியல் இவைகளை வருகிற நாட்களில் கொஞ்சம் தொடர்ந்து பார்க்கலாமா? என்ன சொல்கிறீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.
          

6 comments:

  1. Replies
    1. டபுள் ஓகே சொன்னதுக்கு மிகவும் நன்றி துரை செல்வராஜூ சார்!

      Delete
  2. Maridhas video was very informative! ஊழலை இவ்வளவு வெளிப்படையாக திமுகா செய்வதும், கொஞ்சமும் சொரணையே இல்லாமல் வாக்காளர்கள் ஓட்டு போட்டு பதவிக்கு கொண்டுவருவதும்.. என்ன சொல்ல? அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலே போவது அங்கிருந்து வீழ்வதற்கு தான் என்று மனதை தேத்திக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!
      ஊழல்கள், தில்லுமுல்லு, அடாவடி செய்வது கழகங்களின் மரபணுக்களிலேயே இருப்பது தெரிந்த விஷயம் தான்! ஆனால் வெளிப்படையானது தகவல்கள் கசிந்த பின்னாடியும் கூட அவைமீது எந்த நடவடிக்கையும் இல்லாமலிருப்பது இந்தியச் சட்டங்களின் போதாமையா? அப்படிச் சட்டங்களின் கண்களில் மண்ணைத்தூவியும் கூட இன்னமும் கீழே விழாமலிருப்பது ஆடிட்டர்களுடைய, வழக்கறிஞர்களுடைய சாமர்த்தியமா?

      அதைவிட, நமது ஜனங்கள் எங்கேயோ மழைபெய்கிறது என்பதுபோல இவைகளைக் கடந்து போவது ஜனநாயகத்தில் ஒரு மிகப்பெரிய பலவீனம் இல்லையா?

      Delete
  3. Hello Sir, i am silent reader of your blogs and quiet interesting to see your analysis and concern over the country. It is true that we people are not bothered about all these corruption! By the way i could see your video of Maridhass.. i have been hearing about his video ... who is this person and how come he is so boldly putting videos on political parties without getting any issues ?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்! எனக்கும் சிறிது காலத்துக்கு முன்வரை யார் இந்த மாரிதாஸ் என்பது தெரியாது. யூட்யூப், முகநூல் பகிர்வுகளில் இருந்து இவர் ஒரு கல்லூரி ஆசிரியர், மதுரைக்காரர் என்றும் நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. ஒருசில பகிர்வுகள், வீடியோக்களை இங்கேயும் அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்களுக்காகப் பகிர்ந்ததுண்டு. இவருடைய விமரிசனத்தைத் தாங்கிக்க கொள்ள முடியாமல் திமுகவினர் போலீஸ் புகார் முதல் வழக்கமான உருட்டல்கள் மிரட்டல்கள் என்று போனதில் நாடு முழுக்க யார் இவர் என்று தேடும் அளவுக்குப் பிரபலப் படுத்தப் பட்டிருக்கிறார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!