மண்டே ன்னா ஒண்ணு! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்வலைகள்!

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலீவர் இசுடாலின் பொங்குகிற அளவுக்குப் போயிருப்பது தமிழக அரசியல் களத்துக்கு மிகவும் விசித்திரமானது! அந்த அளவுக்கு சமீப நாட்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது, அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.


அக்னிப் பரீட்சை என்றால் கேள்விகளில் தீப்பொறி பறக்கவேண்டும் இல்லையா? இங்கே கார்த்திகேயன் அமைச்சர் பதில் சொல்வதில் மேற்கொண்டு என்ன கேட்பது எனத்தெரியாமல் பம்முகிறார் என்றால் இது யாருக்கு  அக்னிப் பரீட்சை? கார்த்திகேயனுக்கா? புதிய தறுதலை சேனலுக்கா? வழக்கமான குறுக்கீடுகள், விஷமத்தனமான கேள்விகள் எதுவும் எடுபடாமல் போனதொரு வேடிக்கையான விவாதம்! வீடியோ 37 நிமிடம். வேடிக்கையை ரசித்துத்தான் பாருங்களேன்!

நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
Quote Tweet
PuthiyathalaimuraiTV
@PTTVOnlineNews
·
’அக்னிப் பரீட்சை’ இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  
#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin  

அமைச்சருடைய அக்னிப் பரீட்சை நேர்காணலுக்கு இசுடாலின் இத்தனை கோபமாக ட்வீட்டரில் பொங்குவானேன்? ஊடக எடுபிடிகளுடைய முயற்சி தோற்றுப்போனதால் வந்த ஏமாற்றமா? கோபமா?  

 வீடியோ 9 நிமிடம் 

இப்படி இசுடாலின் பொங்கியதற்கெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொஞ்சம்கூட அசருவதாயில்லை! அவர்பாட்டுக்குத் தன் மனதிற்கு சரி என்று படுவதை வெளிப்படையாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இது நேற்றைக்கு முகநூல் துக்ளக் வாசகர் குழு ஒரு ட்ரஸ்ட் ஆகத் தொடங்கப்பட்ட நிகழ்வில் பங்குகொண்டு பேசியதென்ன என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!

  
வைகுண்டராஜன் சேனல் நியூஸ் 7 மட்டும் இந்த விவகாரத்தை விட்டு விடுமா? பத்திரிகையாளர் மணி முதலில் பொங்குகிறார், அடுத்து விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்! இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தையை அமைச்சர் சொல்லலாமா? திராவிட அரசியலின் வழக்கமான கதைத்தல்களில் இருந்து விலகி ஒரு புதிய பாதையில் பயணிக்கிறதா அதிமுக என்ற முக்கியமான கேள்விக்கு சரியான பதிலை எவராலும் சொல்ல முடியவில்லை என்பது இந்த 55 நிமிட விவாதத்தின் சாரம்.

ஆக, தமிழக அரசியல்களத்தில் புதிய அதிர்வலைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்திவிட்டார்! செக்கு மாடுகள் மாதிரி அய்யா புகழ் அண்ணா புகழ் கருணாநிதி புகழ்  எம்ஜியார் புகழ் அம்மா புகழ் என்றே லாவணி பயாடிக் கொண்டிருந்த திராவிட அரசியல் வேறுபாதையில் பயணிக்குமா? உள்ளது உள்ளபடியே பிரச்சினைகள், இருப்பதைத் துணிச்சலுடன் ஒப்புக்கொள்வது முதல்படி. அதிலிருந்து தீர்வுகள் காண முயற்சிப்பது அடுத்தபடி    

மீண்டும் சந்திப்போம்.      

4 comments:

  1. ராஜேந்திர பாலாஜி பேச்சு வாட்ஸப்பில் வலம் வருவதைப் பார்த்தேன். வந்துவிட்டதோ மாற்றம் ..!

    ReplyDelete
    Replies
    1. ராஜேந்திர பாலாஜியும் ரஜனிகாந்தும் மாற்றம் வந்துகொண்டே இருப்பதற்கான கட்டியக்காரர்களாக இருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது!

      Delete
  2. ராஜேந்திர பாலாஜி பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற ரீதியில். மிக வெளிப்படையாகவும் அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது. இவர் இன்னும் பெரிய நிலைக்கு வரவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      முந்தின பதிலில் சொன்னமாதிரி மாற்றத்துக்கு கட்டியம் சொல்கிறவர்கள் எல்லாம் உயர்ந்த நிலைக்கு வந்ததாக சொல்லிவிட முடியாது. ராஜேந்திர பாலாஜி கழகங்கள் இதுவரை வாய்விட்டுச் சொல்லாத பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதுவரை சரி ஆனால் இவரைப்பின்பற்றி எத்தனைபேர் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!