#செய்திகளில் புலி வால்! பபிதா போகாட்! சீனாதானா!

ன்றைக்கு திங்கட்கிழமை நவராத்ரி இரண்டாவது நாள் சில நல்ல செய்திகளும் வந்திருக்கின்றன. சீனாதானா இன்னும் சிலகாலம் திஹார் சிறையிலேயே பத்திரமாக இருக்கட்டும் என்று டில்லி உயர்நீதி மன்றம் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்கள் நீதிமன்றங்களை ஆட்டிப்படைத்த காலம் மலையேறுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

  
ரியானா சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிஜேபி தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பதில் சில ஆச்சரியங்களும் இருக்கின்றன. டங்கல் என்று  அமீர்கான் இரு ஹரியானா மல்யுத்த வீராங்கனைகளை வைத்துப் படமெடுத்து அவர் கல்லாவை நிரப்பிக் கொண்டது ஞாபகம் இருக்கிறதா? 


ண்களுக்கான வீரவிளையாட்டு என்றே கருதப்பட்ட மல்யுத்தப் பயிற்சியை தனது இருமகள்களுக்கும் கற்பித்ததாக  ஹரியானா மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்  வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே டங்கல் சொன்னது. தனது நான்கு மகள்கள் கீதா, பபிதா குமாரி, ரித்து, சங்கீதா தவிர சகோதரர் மகள்கள் பிரியங்கா, வினேஷ் ஆக போகாட் சகோதரிகள் ஆறுபேரையுமே மல்யுத்த வீராங்கனைகள் ஆக்கிப்  பயிற்சி கொடுத்தார் என்பது அவ்வளவாக வெளியே தெரியாத செய்தி! 


ந்த ஆறு போகாட்  சகோதரிகளில் கீதா, பபிதா , வினேஷ் மூவருமே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தங்கமங்கைகள்! பிரியங்கா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ரித்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றவர். சங்கீதா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர் என்ற தகவலைச் சொல்லிவிட்டு, இப்போது பபிதா போகாட், மற்றும் மல்யுத்தவீரர் யோகேஷ்வர் தத் இருவரும் ஹரியானாவில் பிஜேபி வேட்பாளர்களாகக் களம் இறங்குகிறார்கள் என்று சொன்னால்தான் செயதியை முழுமையாகச் சொன்னோம் என்ற திருப்தியே வருகிறது! 


னக்கு   புலித்தலை, புலிக்கொடி கொடி   காட்டி அரசியல் செய்கிற இந்தக் கட்சியையும் பிடிக்காது, புலி புலி என்று கூவி உண்டியல் குலுக்குகிறவர்களையும் பிடிக்காது என்ற தகவல் இங்கே வரும் நண்பர்களுக்குத் தெரிந்து இருக்கும்! சிவசேனா மட்டும் பிடிக்குமா என்ன? பால்தாக்கரேவின் பேரன் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, தெற்கு மும்பை ஒர்லி சட்டசபைத் தொகுதியில் சிவசேனா வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார் என்கிறது செய்தி. தாக்கரே, வாரிசுகளில் முதல்முறையாகக் களமிறங்குகிறவர் என்பதற்காக,   ஜெயித்தால் முதல்வர் நாற்காலிக்கு அடிபோட்டு , துணை முதல்வர் பெயர்ப் பலகைக்கு செட்டில் ஆகிவிடும்  ரகசியத்திட்டம் ஊருக்கே சிதம்பர வெளிச்சமாய் தெரிகிறதென்பதை சொல்லாமல் இருந்துவிட முடியுமா? 

மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் சூடு பரப்புமா? சும்மா உதார்தானா?

நேற்று முன்தினம் வேலூரில் சிலநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வந்தபோது திமுக அதிமுக புள்ளிகள் போட்டிபோட்டுக் கொண்டு வரவேற்புக் கொடுத்த அதேசமயம், பிஜேபி ஆதரவாளர்கள் பாரத் மாதா கீ  ஜெய் என்று கோஷம் எழுப்பியதற்கு பதிலாக திமுக எம்பி கதிர் ஆனந்தின் ஆதரவாளர்கள் பெரியார் வாழ்க என்று எதிர் கோஷம் எழுப்பினார்களாம்! இங்கே ஆவி உட்பட சில ஊடகங்களில் செய்தியாக வந்ததற்கு மேல் அதை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை!


சென்னை ஐஐடியில் பட்டமளிப்பு, பரிசுவழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போது உரை நிகழ்த்தினார்.  நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போதுகூட, நாளை சென்னை ஐஐடியில் பேசப் போகிறேன், என்ன பேசலாம் யோசனை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு,   நம்மூர் ஊடாகங்களோ அரசியல் கட்சிகளோ யோசனை எல்லாம் சொல்ல மாட்டார்கள்! ஜனங்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் பிரதமரைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. கறுப்பு பலூன்களைப் பறக்கவிட வைகோவோ, கறுப்புக்கொடி காட்ட திமுக, திக ஆசாமிகள் எவருமே களத்தில் இல்லாவிட்டாலும்   #GoBackModi என்று ட்வீட்டரில் செய்திபோட 200ரூபாய் உபிக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும்சேர்ந்து கொண்டிருப்பதாக  twitter trends இல் தகவல் தெரிகிறது.    புதிய தலைமுறை உட்பட சேனல்கள், மோடி வெறுப்பை முன்னிலைப் படுத்துகிற விவாதங்களை நேற்றிலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்! வைகோ, திமுக, திக, சுபவீ உதிரி  ஆசாமிகள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. புதிய தலைமுறை விவாதத்தில் இன்று காலை கோலாகல ஸ்ரீனிவாஸ் சொன்ன மாதிரி மோடி மீதான பயத்தை வெளிக்காட்டும் மோடி எதிர்ப்பு மோடி எதிர்ப்புக்கெல்லாம் இப்போது அவசியம் இல்லை, தேர்தல்கள் எதுவும் நெருக்கத்தில் இல்லையே!

ஐநா-வில் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்துக்களான விடுதலை புலிகள் தான் காரணம் என்றார், அதே சபையில் நம் பாரத பிரதமர் ஜி தமிழின் தொன்மையை கணியன் பூங்குன்றனார் பாடலை மேற்கோள் காட்டினார். Go Back Modi என்றவர்களை நினைத்தால் தான் பரிதாபம்...
7:05 PM · Sep 28, 2019

ஆனாலும் H ராஜாவுக்கு ட்வீட்டரில் பதில் சொல்வதற்கு நிறையப் பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இந்தக் கீச்சுக்கு வந்திருக்கிற எதிர்க்கீச்சுக்களில் இருந்து தெரிகிறது.


காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவை மீட்கப்போன தமிழ்ப் புலி வைகோவின் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுவை  இன்றைக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, புலி வேஷத்தைக் கலைத்து விட்டது என்பது இப்போதைய செய்தி.
மதிமுகவின் செப்டெம்பர் 15 மாநாட்டுக்கு அழைக்கவேண்டும், இருக்குமிடம் தெரியவில்லை கண்டிபிடித்துத் தாருங்கள் என்பது வைகோவின் மனு, நினைவு இருக்கிறதா? இது விசாரணைக்கு வந்த தேதி இன்று செப்டெம்பர் 30!


டாக்டர் யக்கோவிடமிருந்து ஒருவழியாகத் தமிழ்நாட்டு அரசியல் விடுபட்டுவிட்டது  என்று நினைத்தால், இல்லையாமே! இந்த 32 நிமிட வீடியோவைப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. இதுல வீடியோவுக்கு பாரதி வரிகளைத் தலைப்பாக வேறு வைத்து!

மீண்டும் சந்திப்போம்.                

சண்டேன்னா மூணு! ஆடிட்டர் குருமூர்த்தி! திருமாவளவன்! News 18

தமிழக அரசியலில் நரேந்திர மோடிக்குப் பிறகு மிக அதிகமாக வெறுப்புடன் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது ஆடிட்டர் குருமூர்த்தி, H ராஜா இருவராகத் தான் இருக்கும்! தமிழிசையை மீம்ஸ் போட்டுக் கலாய்த்தார்களே தவிர, அவரை யாரும் சீரியசாக எப்போதும் எடுத்துக் கொள்ளவில்லை! விவரமாக அரசியல் பேசினால் வெறுப்பு வன்மத்தைக் கக்குவதும் கூட  திராவிடங்களின் இயல்புதானே!


Oct 21    இரு சட்டசபைத்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் வருவதை ஒட்டி இங்கே சேனல்களில் பிஜேபி அதிமுக உறவில் விரிசலா உரசலா என்றே விவாதங்கள் போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கிற, அது பிஜேபியுடன் தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியிடம் தந்திடிவி ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை நடத்தியிருக்கிறார். ஹரிஹரனுடைய கேள்விகள் சரியாக, கூர்மையாக இருந்ததா, ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய பதில்களை நேர்மையாக, நேரடியாக சொன்னாரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! ரகசியங்களை யாராவது வெளியில் சொல்வார்களா? அதுவும் தந்திடிவியில்? என்று சிரிக்காமல் ஹரிஹரனிடம் கேட்கிறார் என்ற ஒரு இடத்திலேயே சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது! வீடியோ 40 நிமிடம்


காமெராவோடு  மைக் நீட்டப்படுகிற இடங்களைத் தேடிப்  போகிற அரசியல்வாதியாக விசிகவின் திருமாவளவன் மாறி நீண்டகாலமாகிறது என்றாலும், எம்பியான பிறகு ஊடக வெளிச்சத்தில் அடிக்கடி கண்ணில் படுகிறார், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எல்லாவிஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்கிறார் என்பது தமிழக அரசியலுக்கு இப்போது வந்திருக்கிற புதிய சோதனை! அண்மையில்   அமெரிக்காவுக்குப் போன திருமா, முகநூலில் புகைப்படங்களையும்  கலாய்க்கப் படுவதையும் பார்த்த போது, எப்படி இருந்தவர் எப்படி ஆகி விட்டார் என்று பரிதாபம் தான் எழுந்தது. வீடியோ 41 நிமிடம் 


News 18 தமிழ்நாடு  சேனலை நான் அதிகம் பார்ப்பதில்லை. குணசேகரன் நெறியாளராக இருந்து நெறி தவறி நடத்தும் விவாதங்கள் ஒரு முக்கியமான காரணம் . காலத்தின் குரல் நிகழ்ச்சியை இப்போது செந்தில் நடத்துகிறார் என்பதால் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நெறியாளர் கடனே என்று மாரடிக்கிறார்! பங்கேற்கிறவர்கள் எப்போதும்போலக் கூவுகிறார்கள்! வீடியோ 52 நிமிடம்.

இந்த மூன்று விவாதங்களிலும் சில பொதுவான விஷயங்கள் வேறு வேறு விதமான குரல்களில் கிடக்கின்றன. ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினிகாந்தும் முதலாவது மற்றும் மூன்றாவது வீடியோ விவாதங்களின் பிரதானமான பேசுபொருளாக இருப்பது தற்செயல் அல்ல.

இதுதான் தமிழக அரசியலின், ஊடகங்களின்  யோக்கியதை என்பதைத் தனியாகக் கோடிட்டுச் சொல்ல வேண்டியதில்லை! ஆனால் உலகம் போகிற போக்கும் இவர்களுடைய போக்கும் ஒன்றாக இருப்பதே இல்லை!

மீண்டும் சந்திப்போம்.                      

இட்லி வடை பொங்கல்! #45 இரு பிரதமர்கள்! ஐநாவில் சாதித்ததென்ன?

பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருவாரகால அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பியிருக்கிறார். Howdy Modi நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டது முதல் சுமார் 40 நிகழ்ச்சிகளில் பிரதமரும், இருமடங்கு நிகழ்வுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஐநா பொதுசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார்கள்.ஐநா பொதுசபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப்புலவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசியது இந்தப் பயணத்தின் உச்சம்!

 

பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானும் கூட அமெரிக்காவுக்கு வந்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இந்திய எதிர்ப்பு நிலையில் உள்ள ஊடகங்களிடம் பேசினார். இந்தியப் பிரதமருக்கு அடுத்தபடியாக இம்ரான் கானும் UNGA ஐநா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் தொடங்கி  இங்கே ராகுல் காண்டி பேசுகிற மாதிரியே சுத்தப் பேத்தலாக RSS பற்றியும்  பேசியது இங்கே திமுக மாதிரி மோடி மீதுள்ள பயத்தை மோடி வெறுப்பாகவும் மோடி எதிர்ப்பாகவும் காட்டியது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது!  

  
காங்கிரசுக்காக கூவுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் The Print தளத்தின் சேகர் குப்தா கூட, காஷ்மீரில் நடப்பது, ஆர்டிகிள் 370 abrogation எல்லாம் இந்திய உள்விவகாரம் என்கிற நிலையை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கன்வின்ஸ் செய்து விட்டார் என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் காஷ்மீரில் நடப்பதை உலகநாடுகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என யாரைத் திருப்தி செய்வதற்காகச் சொல்கிறார்? 7 நிமி.


இம்ரான் கான் வெறுப்பு, வன்மத்தைக் கொட்டி ஐநா பொது சபையில் பேசியதற்கு, அங்கேயே இந்தியாவின் சார்பில்  பதில் சொல்கிறார் வெளியுறவுத்துறையில் செயலாளர் விதிஷா மைத்ரா! point by point பதில் சொன்னதிலேயே இம்ரான் கானுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். நான் சொல்ல வருவது என்னவென்று உங்களுக்குப் புரிந்தால் சரி! ஐம்பது நிமிடத்துக்கு மேலேயே அணு ஆயுதப் பூச்சாண்டி காட்டி UNGA வில் பேசினாரே இம்ரான் கான்! அதை யாருமே பொருட்படுத்தவில்லையா?


அல்ஜசீரா சேனல் இருக்கவே இருக்கிறதே! இம்ரான் கானுடைய பேச்சை 6 நிமிடத்திலேயே இங்கே சுருக்கிச் சொல்கிறார்கள்! 


News X சேனலின் ரிஷப் குலாடி இம்ரான் கான் புலம்பலுக்கு 8 நிமிட பதிலடியாகச் சொன்னது கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன மாதிரி இம்ரான் கான் வரவர கார்டூனிஸ்டுகளுக்குப் பிரியமான காமெடிப் பீசாகி வருகிறார் என்பதுதான் விஷயம்!



காஷ்மீர் முஸ்லிம்களை பற்றிக் கவலைப்படுகிறீர்களே இம்ரான்! சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் நிலையைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.    
       

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #அரசியல் இன்று!

சரத் பவார் ஊழல் பேர்வழிதான்! ஆனால் அவர் வட்டத்துக்குள் சிக்குவாரா?  இங்கே இது நண்பர் திருப்பூர் ஜோதிஜியின் கேள்வி! இந்தக் கேள்விக்கான விடை என்னிடம் இல்லைதான்! ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. நடப்புச் செய்திகளில் இருந்து எதையாவது அனுமானிக்க முடிகிறதா என்பதைத் தேட, அந்த இல்லை, ஒரு தடையாக இருந்துவிடுமா என்ன?  



சரத் பவார் தன்னுடைய வீரத்தை வெளிக்காட்டுகிற விதமாக  அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ஆதரவாளர்கள் கூட்டத்துடன் விஜயம் செய்யவிருப்பதாக தற்போதைய செய்திகள் சொல்கின்றன. இதேமாதிரியான ஸ்டன்ட் ஒன்றை இங்கே சென்னையில் திமுக தலீவர் இசுடாலின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குத் தாமாக முன்வந்து ஆஜரான பழைய கதை நினைவிருக்குமானால், இதெல்லாம் புகார்களில் சிக்குகிறவர்கள் வழக்கமாக விடுகிற உதார்கள் தான் என்பது, நடப்பு அரசியலைக் கவனித்து வருகிற எவருக்கும் நன்றாகவே தெரிந்ததுதான்! சமீபத்தில் கர்நாடகா அரசியல்வாதி DK சிவகுமார் கைது செய்யப்பட்டபோது, அவர் கட்சி போராடியதோ இல்லையோ, ஒக்கலிகர் ஜாதி அமைப்பை வைத்து, பொதுச் சொத்துக்களை நாசம் செய்து தங்களுடைய பலத்தைக் காட்ட முயன்றதைக் கூட இந்தப் பக்கங்களில் பேசியிருக்கிறோம்.


காங்கிரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிற NDTV யின் இந்த 22 நிமிட நிகழ்ச்சியைப் பாருங்கள்! சரத் பவார் மீதான குற்றப் பத்திரிகை  உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மோசடி செய்யப்பட்டதொகை 100 கோடிக்கும் அதிகம் என்பதால் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ED, CBI போன்ற விசாரணை அமைப்புக்களை பிஜேபி அரசு தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்துகிறது என்று இந்த நிகழ்ச்சியில் இவர்களாகவே விசாரித்து இவர்களாகவே ஒரு தீர்ப்பையும் பார்க்கிறவர்கள் தலையில் திணிப்பது NDTV நீண்டநாட்கலாகாவே செய்துவருகிற வேலைதான்! இதன் நிறுவனர் ப்ராணாய ராயும் அவரது மனைவி ராதிகாவும் அமலாக்கத்துறை விசாரணையில் இருப்பது கூட இவர்கள் ஏன் இப்படிக் கூவுகிறார்கள் என்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்!  FirstPost தளத்தில் வெளியாகியிருக்கிற இந்தச் செய்திக்கட்டுரையை ஒருமுறை வாசித்து விடுங்கள்!

திருப்பூர் ஜோதிஜி எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லாதது போலவே, இன்னொரு கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. சோனியாவின் மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா, சீனாதானா, DK சிவகுமார், சரத் பவார் என்று ஊழல்களில் பிரபலமான காங்கிரஸ் ஆசாமிகளின் மீதான குற்றச்சாட்டுக்களின் பொதுவான அம்சம் மணிலாண்டரிங்! கறுப்பை வெளுப்பாக்குவது! இதையெல்லாம் விசாரிக்கிற அளவுக்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வலுவாக இருக்கின்றனவா? நீதிமன்ற நடைமுறைகளில் இருக்கிற சந்து பொந்துகளில் குற்றவாளிகள்  தப்பித்து  விடாத அளவுக்கு முறையான விசாரணை, தடயங்களை சேகரிக்கிற மெக்கானிசம் இருக்கிறதா?  இது இன்று வெள்ளிக்கிழமைக் கேள்வியாக!



இது போன்ற விசயங்களை நீங்க சொல்வது போல காட்சி படுத்துவது அவசியம். சரத்பவார் லாலு போல உள்ளே இருப்பார். வைக்க முடியும்? அவர் லாபியை (சரத்பவார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விலை விற்பனை மற்றும் விலை நிர்ணயித்தல், மகாராஷ்டிரா கிரிக்கெட் தொடர்பான முடிவுகள்) மோடி அரசு 50 சதவிகிதம் தான் அடக்க முடிந்துள்ளது. இன்னமும் உள்ளது. வட்டத்திற்குள் கொண்டு நிறுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?
ReplyDelete
Replies
  1. வாருங்கள் ஜோதிஜி!

    சரத் பவாரை ஒரு கட்டத்துக்குள் அடக்கி வைக்கவேண்டியது நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு மிகவும் நல்லது என்றுதான் நினைக்கிறேன். அரசியலில் எல்லோருடனும் ஒருமாதிரியான் நீக்குப்போக்குடன் நடந்துகொண்டு தன்னுடைய ஊழலை இதுவரை எவரும் கேள்வி கேட்காதபடி சமாளித்து வந்திருக்கிறார் என்பதில் அவரை முழுமையாக expose செய்ய முடியுமா செய்வார்களா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் ஒரு ஆரம்பம் என்று வந்துவிட்டபிறகு, எப்படிப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

    சதீஷ் ஆசார்யாவின் இந்தக் கார்டூனை எதற்காக இங்கே எடுத்துப் போட்டேன் என்று நினைக்கிறீர்கள்?
   
ஆனால் இவர்களை மாதிரியான ஆசாமிகளைக் கட்டம் கட்டுவதற்கு           நம்மாலேயே முடியும்! அடுத்தடுத்த இரு தேர்தல் தோல்விகளில் காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரமே கலகலத்துப்போய், ஆட்டம் அவ்வளவுதான் என்கிற நிலைக்குப் போயாகிவிட்டது. கொள்கையை மறந்துபோன இடதுசாரிகள் செல்வாக்கிழந்து நிற்கிறார்கள்! காங்கிரசின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் போட்ட மாநிலக் கட்சிகள் கூட, அடக்கியே வாசித்தாக வேண்டிய நிலைமை! இவைகளைச் சாதித்தது நம்முடைய வாக்குகள் தான்! யாராலும் நம்.மை அசைக்க முடியாது என்று ஆட்டம் போடுகிறவர் எவராக இருந்தாலும், அவர்களை மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தோற்கடிக்கிற சக்தி மக்களிடமே இன்னமும் இருக்கிறது. போகும் திசை மறந்து போச்சு என்று தடுமாறாமல், ஏதாவது செய்யவேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இன்றைய இளைஞர்களிடம் ஒரு சரியான பாதைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமை.

இதைச் செய்ய முடிந்தால் எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வரும்!

மீண்டும் சந்திப்போம்.                

வரலாறும் முக்கியமே! MM பிறந்தநாள்! The Magician!

ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும்  அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால்,  கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!) என்று இங்கே எழுதி  இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை1 நாம் தமிழர் கட்சி ஆசாமிகள் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்கள்!
  
  
இங்கே இன்றைக்கிருக்கிற  மதுரை பழைய பாண்டியர்களுடைய காலத்து மதுரை அல்ல, நாயக்கர்கள் காலத்து மதுரையின் எச்சம் என்பது கூடத் தெரியாமல் பேசுகிறார் சாட்டை துரைமுருகன்!வரலாற்றைத் திரித்துப் பேசுவது தமிழ் தேசியம் என்பது தெரிந்ததுதானே! உதியஞ்சேரல் பரத காலத்தவனா என்றொரு சிறுநூலைப் பள்ளி நாட்களில் படித்துச் சிரித்ததுண்டு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநூலாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த சப்ஜெக்ட் மீனாட்சி புத்தக  நிலைய வெளியீடாக வந்ததாக நினைவு. காசுக்காகக் கூவுகிற தமிழ்ப்புலவர்களில்   யாரோ ஒருத்தர் சேரமன்னன் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இருபக்கத்துச் சேனைகளுக்கும் சோறு கொடுத்தான் என்று ஒரு பாடலை எழுதிவிட்டுப்போக அதை வைத்து ஒரு வெட்டி ஆராய்ச்சி செய்து தீசிஸ் சமர்ப்பித்து டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் நூலாசிரியர்  என்பது  கொசுறு செய்தி.  பாடல் எழுதியவரின்  சமகாலத்துப் புலவர்களாக அறியப் பட்டவர்களை வைத்து, அந்த சேரமன்னன் பெயரை வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பாரதப்போர் நடந்த காலத்துக்கும் அந்த மன்னனுக்கும் தொடர்பு கிடையாது, வேண்டுமானால் பாரதப் போரில் உயிர்நீத்த இருபக்கத்துக்கும் திதி வேண்டுமானால் கொடுத்து சோற்றுப்பிண்டம் வைத்திருக்கலாம் என்று முடிகிற இந்த ஆராய்ச்சி (?) நூலைப் பற்றிய நினைவு வருகிறது. , 


கூடவே,          தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞையே கிடையாது என்று வேறொரு context இல் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவி நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொன்னதும்  சேர்ந்து நினைவுக்கு வருகிறது!  
                                                            

அட! நம்ம மண்ணு மோகனருக்கு இன்னைக்குப் பொறந்த நாளாமே!  

Good News For People Who Love Bad News In a Twist, Netanyahu Wins a Chance to Keep His Job
மறுபடியும் மொதல்ல இருந்தா?  சமீபத்தைய இஸ்ரேல் தேர்தல்களில் பிரதமர் நேத்தன்யாஹூ எதிர்பார்த்தபடி அவருடைய லிகுட் கட்சிக்குப் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் மீண்டும் ஆட்சியமைக்க நேத்தன்யாஹூவுக்கே அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தற்போதைய செய்தி! But by Wednesday, in a surprise twist, Mr. Netanyahu — long called “the magician” for his political survival skills — was back on center stage. President Reuven Rivlin chose him to try to cobble together a coalition, opening the door to a continued shift to the right for Israel and offering a potential political lifeline to Mr. Netanyahu, who faces a looming indictment for corruption என்கிறது நியூயார்க் டைம்ஸ். லிகுட் கட்சியும் ஆதரவுக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமுள்ள 120 இடங்களில் 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஒரு working majority என்பதற்கு இன்னமும் 6 இடங்கள் வேண்டிய நிலையில் நேத்தன்யாஹூ தாக்குப் பிடிப்பாரா? கஷ்டம் தான் ஆனால் அவரால் முடியாதது இல்லை! இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரியான சூழ்நிலைகளை சமாளித்திருக்கிற மந்திரவாதி அவர் என்று ஒரு அரசியல் விஞ்ஞானி சொல்கிறாராம்!
 
Mr. Netanyahu’s chances of success are “not good but not impossible,” said Gadi Wolfsfeld, a political scientist at the Interdisciplinary Center Herzliya. “He’s pulled rabbits out of the hat before.”  
                                                                              
இன்றைக்கு செய்திகளின் ரவுண்டப் போதுமா?

மீண்டும் சந்திப்போம். 

 

ஒரு புதன்கிழமை! சரத் பவார்! தகர உண்டியல்! கிரேட்டா தன்பெர்க்!

சரத் பவார்! மஹாராஷ்ட்ரா அரசியலில், பலமுறை  ஊழல் குற்றச்சாட்டுக்களில் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் இதுவரை அவர்மீது கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப் பட்டது இல்லை. 2015 இல் சுனில் அரோரா என்பவர் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கில், கடந்த மாதம் மும்பை உய்ரநீதிமன்றம் பிறப்பித்திருக்கிற ஒரு உத்தரவால்  சரத் பவார்,அவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் உட்பட பலர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 



கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை வணிகத்தில் சரத் பவாருக்கு இருந்த மிகப்பெரிய ஆதிக்கத்தில், நஷ்டத்தில் இயங்கிய சர்க்கரை ஆலைகளை அடிமட்ட விலைக்கு விற்க வைத்ததில் கூட்டுறவு வங்கிகள் சுமார் 25000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்தன என்கிறார்கள். கிரிக்கெட் சூதாட்டங்களில் இருந்து தாவூத் இப்ராஹிமுடனான நிழல் உலகத் தொடர்புகள் என்று சரத் பவாருடைய ஊழல் சாம்ராஜ்யம் 2Gஸ்பெக்ட்ரம் விவகாரம் வருகிறவரை          கருணாநிதியைவிட மிகப் பெரியதாக இருந்தது என்று சொல்வார்கள். அமலாக்கத்துறை இப்போது இந்தவழக்கைக் கையால் எடுத்திருக்கிறது. 


2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சரத் பவார் அறிவித்தது கூட, பிரதமர் பதவி மீது அதுவரை கண்வைத்திருந்தவர், சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று ஒதுங்கிப்போன நரி கதைதான்! 

ஒரு இத்தாலியப் பெண்மணி நாடாளக்கூடாதென்று சிலவருடங்களுக்கு முன்னால் Ex சபாநாயகர்    PA சங்மாவுடன் சேர்ந்து காங்கிரசிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP)  ஆரம்பித்ததும், அதே இத்தாலியப்பெண்மணியின் குடும்பக் கம்பெனியாகிப் போன காங்கிரசோடு இன்று  கூட்டுச் சேர்ந்து அரசியல் நடத்திவருவதும் ஜனங்கள்  மறந்து போன பழைய கதைதான்!  பழம்தின்று கொட்டைபோட்ட இந்திய ஊழல் அரசியல்வாதிகளுக்கே உரிய தெனாவட்டில் மகாராஷ்டிரா டில்லிக்குத் தலைவணங்காது என்றும்  தன்னை யாராவது சிறைக்கு அனுப்ப திட்டமிட்டால் அதை தான் வரவேற்பதாகவும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்திருக்கிறார். பண மோசடி வழக்கில் தன் பெயரையும் தனது உறவினர் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் சிறைக்கு செல்லவும் தயார் என சரத் பவார் சொன்னதாக தற்போதைய செய்திகள் சொல்கின்றன. 


இங்கே கழகங்களுடன் சேர்ந்து xxx திங்கப்போவதற்கு முன்னால். கம்யூனிஸ்ட் என்று  சொல்லிக்கொண்டவர்களுக்கு நிறைய மரியாதை இருந்தது! தேர்தல் அரசியலே போதும் என்று ரெண்டு சீட்டுக்காக கழகங்களோடு ஒட்டி உறவாடினால் கிடைப்பது வேறே!



ஐ நாவில் மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு சுற்றுசூழல் சீரழிந்து கொண்டிருக்கும் போது..அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு என்ன ஒரு தைரியம் ?! என்று உணர்ச்சி கரமாக கேள்வி எழுப்பிய Greta Thurnberg ஸ்வீடனை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி .
மேலும்.. இவரோடு சேர்த்து 15 பள்ளி மாணவ மாணவிகள் .. பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்டினா, துருக்கி , ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் மீது ஐ.நா.வில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதில் மேலோட்டமாக தெரியும் உணர்ச்சிகளையும், பரபரப்புகளையும் தாண்டி பார்த்தால்.. உலக நாடுகளின் Convention on the Rights of the Child [ CRC ] ஒப்பந்தத்தில்.. சுற்றுசூழலுக்கு பெரும் கேடுகளை விளைவிக்கும் சீனா கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் கையெழுத்திடவில்லை.
அதனால்...உலக மக்களின் கவனம் பெற்றதை தாண்டி .. உடனடி பலனோ..பெரிதான பலனோ ஒன்றும் இருக்காது.
அமைதிக்கு மலாலா ஒரு brand ஆக உருவாக்கப் பட்டது போல...இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Greta-வும் சுற்றுசூழலுக்கான brand-ஆக உருவாக்கப் பட்டு, நோபெலை கொடுத்து ivory tower-க்குள் அடைக்கப் பட்டிருப்பார்.
சுற்றுசூழல் பழைய வழியிலேயே நகரும்.
இப் பிரச்சினையில்..இன்னொரு கோணமாக...சுற்றுசூழல் குறித்த பெரும் பீதி திட்டமிட்டு பரப்பப் படுகிறது என்று ஆய்வுக்கட்டுரைகளாகவும், அறிவியல் கட்டுரைகளாகவும் ஏராளம் காணக் கிடைக்கின்றன. துறை பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் பலரும் எதிரெதிர் அணியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு வழக்கம் போல குழப்பமும், அதனால் ஏற்படும் எரிச்சலும் மட்டுமே மிச்சம். 

Swedish teenage climate activist Greta Thunberg was named on Wednesday as one of four winners of the 2019 Right Livelihood Award, known as Sweden's alternative Nobel Prize. Ms. Thunberg shares the award with Brazilian indigenous leader Davi Kopenawa of the Yanomami people, Chinese women's rights lawyer Guo Jianmei and Western Sahara human rights defender Aminatou Haidar.

இந்தச்சிறுமிக்கு இப்போதே விருது கொடுத்துவிட்டார்கள் என்பது இப்போதைய செய்தி  வாயை மூட ஒரு விருது, அப்படித்தானா?  

புதன்கிழமைச் செய்திகளாக உலகம் போகிற போக்கைக் கொஞ்சம் பார்த்தோம்! மீண்டும் சந்திப்போம்.