சமூகநீதியும் திருக்குவளைச்சோளர்களும் பின்னே மாற்றங்களும்!

பாவம் டி கே ரங்கராஜன்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவரை முந்தைய நாட்களிலேயே கருணாநிதி ஏளனம் செய்ததுண்டு! நேற்று கருணாநிதியின் ராசியான மகள் கனிமொழி முறை! பின்னே, தி மு கழகத்துடன் 2/3 சீட்டுக்காக பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு  வேறென்ன கிடைக்கும்?



தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், டி.கே.எஸ். ரங்கராஜன், பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவரது அருகில் சென்ற கனிமொழி நீங்கள் செய்வது அநியாயம் என்று கோபத்தோடு கூறினார்.

சமூக நீதிக்காக, ராஜ்யசபாவில் கடைசிவரை போராடிய கனிமொழி.. காங்கிரசும் கைவிட்ட சோகம் என்று மூக்கால் அழுகிறது ஒன் இந்தியா தமிழ்! கடைசிவரை போராடினாரென்று கனிமொழியை மூக்கில் விரல் வைத்துக் கொண்டாடுகிறது ஆனந்த விகடன்! 

சமூக நீதிக்கான வரையறை என்ன? மாற்றப்படவே முடியாததா அது? ஒரு நல்ல விவாதம் இங்கே 

    
மாறாதது என்று எதுவுமே இல்லை என்கிற அடிப்படை உண்மை சமூகநீதி என்கிற இடஒதுக்கீட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று இங்கே திராவிடங்கள் தொடர்ந்து வாதம் செய்துகொண்டிருப்பதற்குப் பின்னால் வாக்கு வங்கி இல்லையா? இந்த விவாதத்தில் மிகத்தெளிவாக  நீதிபதி வள்ளிநாயகம் ஒரு ஆறு விஷயங்களைக் குறிப்பிடுவதைக் கொஞ்சம் கவனியுங்கள்! எதிர் பார்த்தபடியே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் இன்றைக்கு வழக்குத் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது.  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சமூகநீதி  இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு அல்ல, சமூகத்தகுதியை மேம்படுத்துவதற்கானது என்கிறார். இந்தவாதம் எவ்வளவு சொத்தையானது என்பதற்கு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வந்தால்தான் சமூகநீதி முழுமையாக நிறைவேறும் என்பது போலச்சொல்வது போகாத ஊருக்கு இல்லாதவழி சொல்கிற மாதிரி இளிக்கிறது.  

ஆனால் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கனிமொழி  தீர்மானம் கொண்டு வந்தபோது வலது கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் மட்டுமே ஆதரவு அளித்தன. வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 154 எம்.பி.க்கள், கனிமொழி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். ஆதரவாக கிடைத்த வாக்குகள் 18 மட்டுமே என்று முடிந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

சமூகநீதியும் திராவிடங்களும் பழமையிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருக்கவே விரும்பினாலும், காலம் மாற்றங்களை நம் மீது திணித்துக் கொண்டே வருகிறது என்பது கண்கூடு! மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத ஒரு சமூகமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு இருந்து விடமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 
*******
முரசொலியோ தி மு கழகமோ பழைய பாணியிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லையே! 



இது ஒரு சாம்பிள் தான்!

*******
திராவிடக் கூட்டாளிகள் மறந்துவிட்டாலும் சமூகநீதி பற்றி பேசும்போது வி பி சிங் தவிர்க்கப்பட முடியாத பேசுபொருளாக வந்து விடுகிறார். சீரியஸ் டாபிக் என்பதால் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பேசுவோம். 

   

நீயா நானா கோபிநாத் பேசியது கொஞ்சம் கேட்டுச் சிரிப்பதற்காக! 

தலைப்பு கொஞ்சம் சூடேற்றி விட்டதோ? 

சூடான தமிழ்ப் பதிவுலகமும் உண்மையைத் தெரிந்து கொள்ள ஐந்து படிகளும்...!

3 comments:

  1. இந்த இடஒதுக்கீடு சமாச்சாரம் ரொம்பக் கஷ்டமான விஷயம் விவாதிப்பதற்கு... எல்லோருக்கும் எது நல்லது என்று தெரிந்தாலும் வெளியில் பேசமாட்டார்கள்!

    கனிமொழியை மற்றவர்கள் கைவிடுவது இருக்கட்டும், இசுடாலினே அவரை மதிப்பதில்லை போலத்தோன்றுகிறதே....

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு விஷயமும் புரிந்துகொள்ளவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பி முயற்சி செய்தால், கடினமானது இல்லையே ஸ்ரீராம்! இட ஒதுக்கீடு ஒரு 50 வருடங்களுக்கு அவசியம் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். எந்தப்பிரிவுக்கு எத்தனை சதவீதம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்கிறபோது, உச்சநீதிமன்றமே இடஒதுக்கீடு விஷயத்தை மாற்றமுடியாதென்று தீர்ப்பளித்ததாக வாதம் செய்வதே அபத்தம். தீர்ப்புக்கள் எப்போதுமே மாற்றி மாற்றி எழுதப்படுபவை என்பது தெரிந்துமே இப்படி வாதம் செய்வது என்னமாதிரியானது?

      வெளிப்படையாக இங்கே மாற்றுக்கருத்துக்களைப் பேசமுடியாத சூழ்நிலையை ஒருகூட்டம் தொடர்ந்து உருவாக்கி வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது.

      Delete
  2. கனிமொழி தன்னுடைய அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி வருகிற மாதிரித்தான் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று தெரியாமலா சொன்னார்கள்?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!