இன்று பிடித்தவைகளாக: பார்த்தது கேட்டது படித்தது!

பார்த்ததும் கேட்டதுமாக: திரு. விஜயகுமார் IPS! ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருக்கு ஆலோசகராக இதுவரை செயல்பட்டு வந்தவர், இன்று முதல், ஜம்மு காஷ்மீர், லடாக் என்!று  இரு யூனியன் பிரதேசங்களாக உதயமாவதை ஒட்டி ஆலோசகர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார். அதையும் ஒரு விகாரமான வதந்தீ ஆக்கியவர்கள் தமிழேண்டா கோஷ்டியினர் என்பது தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனந்தவிகடன் அவருடன் ஒரு நேர்காணலை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன்!

திரு விஜயகுமார் ட்வீட்டரில் அந்த வதந்தீகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்பது கொசுறு.       
படித்தது: ஒரு நாளிதழில் தலையங்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நாளிதழின் ஆசிரியரோ, ஆசிரியர் குழுவோ, வாசகருடைய கவனத்துக்கு கொண்டு வருகிற செய்தியின் மீதான பார்வை, அதைப் படிக்கிற வாசகருக்கு ஒரு தெளிவை உண்டாக்குகிற விதத்தில் இருக்கும்  அற்புதமான விஷயம், தமிழில் தினமணி ஒன்றைத் தவிர மற்றைய நாளிதழ்களில் மழுங்கிப்போய்விட்ட  ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில் நேற்றைய தினமணி தலையங்கத்தில் இருந்து ஒரு சில பகுதிகள் 
18 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத் தோ்தலை, பொதுத்தோ்தலை எதிா்கொள்வதுபோல எதிா்கொண்டிருக்க வேண்டும். அதிலும், காஷ்மீரின் தனி அந்தஸ்து அகற்றப்பட்டது, பொருளாதாரத் தேக்கநிலைமை, வேளாண் இடா், வேலையில்லாத் திண்டாட்டம் என்று மத்திய பாஜக அரசின் பலவீனங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டக் காங்கிரஸுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக இந்தத் தோ்தல்களைக் கட்சித் தலைமை அணுகியிருக்க வேண்டும். இரண்டு மாநிலங்களிலும், பாஜக ஆட்சியில் தரப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை என்பதைப் பொது விவாதமாக்கியிருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டது காங்கிரஸ்.
மகாராஷ்டிரத்தைப் பொருத்தவரையில், உள்கட்சிப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி, தோ்தல் பிரசாரத்தைத் தனது கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் விட்டுவிட்டு, கோஷ்டிப் பூசல்களை சமாதானப்படுத்துவதில்தான் தனது நேரத்தைச் செலவழித்தது. பிருத்விராஜ் சவாண், அசோக் சவாண் இவா்களுக்கிடையேயான போட்டி இருந்ததே தவிர, பாஜக - சிவசேனை கூட்டணியை எதிா்கொள்வதில் முனைப்புக் காட்டவில்லை.................
ஜனநாயகத்தில் மாற்றுக் கட்சி இருந்தாக வேண்டும். பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்றுக் கட்சியாகக் காங்கிரஸால் மட்டுமே இருக்க முடியும். சோனியா குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக முடியும். அந்தக் குடும்பம் சற்று விலகி, அதற்கு வழிகோல வேண்டுமே. முழுதும் படிக்க இங்கே 

சற்றே சிரிக்க 


"சரியா எட்டரை மணிக்குப் பிறகு தெலுங்கில பேச ஆரம்பிச்சிடுறார் டாக்டர்'
"சொல்லாதீங்க.ஆளு ஒரு தீவிரத் தமிழ்த்தேசியர்.அதானே?எல்லாம் மன அழுத்தத்தினாலதான் இப்படி நடக்குது"

கருத்துப் படம்  


மீண்டும் சந்திப்போம் 

ஒரு புதன்கிழமை! அரசியல் களம் இன்று!

தேர்தல்கள் முடிந்து அரசுகள் அமைவதில் பிரமாதமான சுவாரசியம் என்ன இருக்கப்போகிறது? ஒரு தேவையில்லாத இழுபறி நிலைமையை நீட்டித்துக் கொண்டே போனால் தாங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளலாம் என்று சிவசேனாவுக்கு யார் அரசியல் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியாது! வெட்டி வீராப்புடன் தேர்தல் முடிவுகளை வைத்து தங்களுக்கு சாதகமான முறையில் பிளாக்மெயில் செய்துகொண்டிருப்பதாக மட்டும் தான் தெரிகிறது. 


ஆனால் ஆதித்ய தாக்கரே தான் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற  உத்தவ் தாக்கரேவின் பிடிவாதத்துக்காக எதிர்க் கட்சி வரிசையில் உட்கார சிவசேனா MLA க்களில் சரிபாதிப்பேருக்கு விருப்பமில்லை என்பதால் சிவசேனா உடைந்து 24 + MLAக்கள் பிஜேபிக்குத் தாவுகிற சாத்தியம் இருக்கிறது என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகமான The Print தளமே ஒரு செய்தியில் சொல்கிறது. ஆனால் சரத் பவார் கட்சி ஆசாமி ஒருத்தர் மட்டும்  சிவசேனாவை பிஜேபியின் தலைக்கு மேல் தொங்குகிற கத்தியாக படம் வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.  
एक म्हण आहे, डोक्यावर टांगती... My Artwork #ElectionResults2019 #MaharashtraAssemblyElections #MaharashtraElections2019 #MaharashtraAssemblyPolls
11:31 AM · Oct 29, 2019

சிவசேனாவின் சின்னம் வில் அம்பு! செய்கிற அரசியல் வெட்டி வம்பு! இவர்களை  ஒரு nuisance case என்பதற்கு மேல் கத்தி கித்தி என்றெல்லாம் ஓவர் எஸ்டிமேட் செய்யக் கூடாது என்பதை பிஜேபி அழுத்தமாகக் காட்ட வேண்டிய தருணம் இது.  என்ன செய்யப்போகிறார்கள்? இன்றைக்கு பிஜேபி MLAக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித்தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது என்பதோடு     TOI தற்போதையாக செய்தியாக தேவேந்திர ஃபட்னவிஸ் வருகிற வியாழன் அல்லது  வெள்ளிக்கிழமை அன்று  முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொள்வார்  என்றும்  சொல்கிறது. அதன்படி பார்த்தால் சிவசேனா தன்னுடைய வெட்டி உதார்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, வழிக்குவந்து விடும் என்றல்லவா அர்த்தம் ஆகிறது? ஆனாலும் காங்கிரசின் பிரித்விராஜ் சவுஹானுக்கு இன்னமும் நப்பாசை இருக்கிறதாம்! 


ISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளால் வேட்டையாடப்பட்டதைக் குறித்துக் கொஞ்சம் விளக்கமான 10 நிமிடக் காணொளி. நம்பர் 1 தீர்த்துக் கட்டப்பட்டமாதிரியே இஸ்லாமிய காலிபேட்டின் நம்பர் 2, (அல்லது நம்பர் 2க்களில் ஒருவர்)  அபு ஹசன் அல் முஹாஜிர் என்பவரும்   கொல்லப்பட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன. வெட்ட வெட்டக் களைகள் வளர்வது போல பயங்கரவாதிகளும் ஒருமுறை அல்லது இருமுறை களையெடுக்கப்படுவதால் மட்டும் ஓய்ந்து விடுவதில்லை, இன்னொரு பெயரில் மீண்டும் வருவார்கள் என்பது அனுபவ பாடம். ஒரு பின் லேடன், ஒரு அல் பக்தாதி என்பதோடு முடிந்துவிடுவதில்லை!


யார் இந்த அல் பக்தாதி? அதென்ன IS, ISIS, ISIL என்று பல பெயர்களில்? இஸ்லாமிய காலிஃபேட் என்பதென்ன? இந்த 27 நிமிட வீடியோவில் சுருக்கமாக விளக்குகிறார் M D   நளபட்! இவர் யாரென்று தெரிந்து கொள்ள விருப்பமா?      

மீண்டும் சந்திப்போம். 
      
   

ஷி ஜின்பிங்கும் பிளாக்செயின் டெக்னாலஜியும்!

இங்கே நேற்றைக்குக் கொஞ்சம் மேம்போக்காக எழுதி விட்டேனோ?  அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட செய்தியை எல்லாம் தாண்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று மத்திய கமிட்டி கூட்டத்துக்கு முன்னாலேயே ஒரு பூகம்பத்தைப் போல ஏகப்பட்ட அதிர்வலைகளை உண்டாக்கி விட்டார் என்று சொல்வதில் கொஞ்சமும் பொய்யில்லை. எங்கெங்கெல்லாம் அது எதிரொலித்திருக்கிறது என்றால்  bitcoin 10000 டாலரைத் தாண்டி விட்டு இப்போது கொஞ்சம் இறங்கி நிதானத்துக்கு வந்திருக்கிறது.  அதே போல blockchain technology நிறுவனங்களுடைய பங்குகள் உச்சத்தை தொட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. கவனித்தீர்களா?      


Xi Jinping, President of the People’s Republic of China and General Secretary of the Communist Party of China, said the country needs to “seize the opportunity” afforded by blockchain technology. Speaking as part of the 18th collective study of the Political Bureau of the Central Committee on Thursday in Beijing, Xi said blockchain technology has a wide array of applications within China, listing topics ranging from financing businesses to mass transit and poverty alleviation. “We must take the blockchain as an important breakthrough for independent innovation of core technologies,” Xi told committee members என்று இங்கே சொல்வது வெறும் அறிவிப்போ வெட்டிப் பேச்சோ இல்லை. சீனா இணையத் தொழில் நுட்பத்தில் ஒரு புலிப்பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதையே இந்தப்பேச்சு காட்டுகிறது. ஆக, சீனா இந்த விஷயத்தில் தெளிவான முன்தயாரிப்பு, ஆராய்ச்சிகளுக்குப் பிறகே சீன அதிபர் அதைக் குறிப்பிட்டு வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.  

More than 500 blockchain projects have been registered with the Chinese government since March.The filings reveal some of the largest Chinese banks and tech companies working with the technology.Several government offices, including courts and tax bureaus, are testing blockchain platforms to execute administrative tasks, the filings show.Chinese president Xi Jinping announced his support for blockchain technology, while Congress passed a cryptography law one day after Xi’s comment. என்று இங்கேயே இன்னொரு செய்தியும் அதை உறுதி செய்கிறது.


அது என்ன blockchain டெக்னாலஜி? நமக்nகெல்லாம் torrent தெரியும் டவுன்லோட் செய்யத் தெரியும், அதன் பின்னணியில் எப்படி ஒரு விஷயம் ஒரே இடத்தில் இல்லாமல் ஏகப்பட்ட  peers, seedersகளிடமிருந்து பகுதிபகுதியாக வந்து சேருகின்றன என்பதைப் பற்றி என்ன ஏது என்று தெரிந்து வைத்திருக்கிறோமா? கிட்டத்தட்ட torrent மாதிரித்தான் என்று blockchain technology என்று எளிமைப்படுத்தி விட முடியாது. கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள.     இணையத்தை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா என்ன? 

இங்கே உள்ளூர்ச் செய்திகளில் ஒன்றையும் ரசிக்கவே முடியவில்லை என்கிற போது எங்கிருந்து என்ன விமரிசனம் எழுதுவதாம் சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.    

மண்டேன்னா ஒண்ணு! டொனால்ட் ட்ரம்ப்! அப்புறம் தான் மற்றவை!

நேற்றைக்கு ISIS இன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப்படையினரால் வேட்டையாடப்பட்ட செய்திதான்  தீபாவளிக் கொண்டாட்டமாக, மிகவும் முக்கியமானதாக இருந்ததென்று கூட சொல்லலாம்! சதா செய்திகளிலேயே வாழ்கிற ஒருவனுக்கு வேறெது அத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்க முடியும்? கொஞ்சம் சொல்லுங்கள்!  நேற்றிரவே  டொனால்ட் ட்ரம்ப்  அபு பக்கர் அல் பக்தாதி, ஒரு நாயைப் போல பயத்துடனும் கோழைத்தனத்துடனும் மரணத்தைச் சந்தித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டதை நேரலையில் பார்த்து விட்டாலும் கூட நண்பர்களுக்காக இங்கே ஒரு சுருக்கமான  8 நிமிட வீடியோ!
   
  
1. "He died after running into a dead-end tunnel, whimpering and crying and screaming all the way."
2. "The thug who tried so hard to intimidate others spent his last moments in utter fear, in total panic and dread, terrified of the American forces bearing down on him." இப்படி டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பேசியதில் இருந்து 41 வாக்கியங்களை மேற்கோள் காட்டி CNN விமரிசித்திருந்தது டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க ஊடகங்களுக்கு இருக்கிற வெறுப்பரசியல்!  ஆனால் கொஞ்சம் substance இருக்கிற வெறுப்பரசியல் என்பதையும் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட வேண்டும்!


அபு பக்கர் அல் பக்தாதியின் மரணம் மத்திய கிழக்கில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த 4 நிமிட வீடியோவில் விவாதிக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்புக்கு இது அரசியல் ரீதியான ஒரு வெற்றியாக இருக்கலாம்! ஆனால் தகுதி நீக்கம் (impeachment) செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க எந்தவிதத்திலும் உதவாது என்று கறுவுகிறது இன்னொரு CNN analysis! அது ஒரு பக்கம் என்றால் பிரிட்டனின் The Independent நாளிதழில் As long as Trump is in power, Baghdadi's death will not necessarily make the world a safer place- Donald Trump took obscene personal credit for the death, yet has put Isis back in business by his withdrawal of American forces from Syria என்று தலைப்பிட்டு இந்த விஷயத்தை விமரிசிக்கிறது. 


சிவசேனா தன்னுடைய சீனியர் நாட்டாமையைக் காட்டுவதில் மிகவும் முனைப்பாக இருக்கிறது என்பதில் காங்கிரசுக்கு இன்னும் கொஞ்சம் நப்பாசை! பிஜேபியை உதறிவிட்டு வந்தால் சிவசேனா தலைமையில் ஆட்சியை ஆதரிக்கத் தயார் என்று நூல்விட்டுப் பார்க்கிறதாம்! 


ஹரியானாவில் இதே நூல் அறுந்துபோய், பிஜேபியின்  மனோகர்லால் கட்டார் நேற்றைக்குப் பதவிப் பிரமாணமும் செய்துகொண்டு விட்டார். ஆனால் மஹாராஷ்டிராவில் மந்திரிசபை பதவியேற்க  நவம்பர் 2, அல்லது 3 தேதி ஆகலாம் என்கிறது இன்றைய செய்தி. காங்கிரசின் சஞ்சய் நிருபம் ட்வீட்டரில் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள் 


Instead of doing futile exercise,we must introspect why the party has lost 2 percentage of votes as compared to 2014 assembly election.We are down from 17 % to 15 % this time as total polled votes are concerned. As party we have come down to the 4th number from 3rd in the state.

அனுபவசாலியான சரத் பவார், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிற எண்ணமே இல்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார். ஆனாலும் காங்கிரசுக்கு நப்பாசை இன்னமும் இருக்கிறது. சிவசேனாவை சமாளிக்க  பிஜேபி என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் வெளிப்படையாகத் தெரியவில்லை. 

மீண்டும் சந்திப்போம்.