மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!அஞ்சறைப்பெட்டி#2

ஒருவழியாக நாடாளுமன்றத் தேர்தல்  ஏழுகட்டங்களாக திட்டமிடப்பட்டதில் நேற்றுடன் 6 கட்டத்தேர்தல்கள் நடந்து முடிந்து வருகிற ஞாயிறு அன்று 7வது கட்டத் தேர்தலும் பூர்த்தியாகிறது. அதற்கடுத்து 4 நாட்களில் வாக்கு எண்ணிக்கை, வியாழன் மாலைக்குள் பெரும்பாலான முடிவுகள் வெளியாகிவிடும். ஆக, உலகத்திலேயே மிகப் பெரிய தேர்தல் திருவிழா இன்னும் 10 நாட்களில் சிறப்பாக முடிவடைகிறது. இந்த ஒன்றரை மாதத்துக்குள் தான் எத்தனை    ஹேஷ்யங்கள், மூன்றாவது அணிக்கு கனவுகள் என்று எத்தனைவிதமான பரபரப்புச் செய்திகள்!
  
யாரிந்த ராணிப்பேட்டை ரங்கன்? அறியேன்! ஆனால் மிகவும் சுவாரசியமான அலசல்! வாலறுந்ததே நல்லது என வாதாடுகிற நரியின் ரகத்தில் சேர்த்திதான்!தான் நினைத்தபடி நடக்காவிட்டால், இங்கே எல்லோருமே அந்த வாலறுந்த நரி கதைதான் என்பதில் சந்தேகமா? இங்கே முழுதுமாக படிக்கலாம்    
  
மே 21 அன்று டெல்லியில் 21 கட்சிகள் கூடி, அடுத்த அரசு தொடர்பாக ஆலோசிக்கவிருப்பதாக (தேதியும் கட்சிகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பது யாரும் திட்டமிடாமல் தானாக அமைந்தது) வெளியாகியிருக்கும் செய்தியில் தொடர்புடைய 21 பேருமே பிரதமர் கனவுடன் இல்லை என்பது மட்டுமே இப்போதைக்கு இந்தியர்களுக்கான ஒரே ஆறுதல் என்று கட்டுரையாளர் நமக்கு ஆறுதல் சொல்கிற சாக்கில் தனக்கே ஆறுதல் சொல்லி ஆரம்பிக்கிறார். எல்லோருக்கும் ஏற்புடைய ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலம் கருதி முதலிலேயே தான் களத்தில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்.

பிரதமர் பதவிப் போட்டியில் தான் இல்லை என்று ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவும் அறிவித்திருக்கிறார். ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வருவதே சந்தேகம் என்றாகியிருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற ரகசியம் அவருக்குத்தானே முதலில் தெரிந்திருக்க முடியும்? எப்படியோ தனது அரசியல் செல்வாக்குக்கு ஏற்ற முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிடலாம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியும் போட்டியில் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல அவரும் ‘முதல்வர்’ பதவியிலேயே கண் முழுக்கக் கொண்டிருக்கிறார். ஆனால், அன்னாரின் கொள்கையும் அபாரமானது. ஜெகனைப் பொருத்தவரை பாஜக ‘எதிரி’ என்றால் காங்கிரஸ் ‘பங்காளி’; ஆக, மத்தியிலே யார் பிரதமரானாலும் ஆதரித்துவிடுவது என்ற தாராள மனதுடன் இருக்கிறார். நேரத்துக்குத் தகுந்தபடி ஆதரவை மாற்றித்தர அவரால் முடியும்.

அப்படியானால் போட்டியில் இருப்பது யார் யாராம்? மாயாவதி, மம்தா பானெர்ஜி, கே சந்திரசேகர் ராவ் இந்த மூவர் தான் என்று சொல்கிறார்.  


கடந்த கால அனுபவங்கள், கொடுக்கப் பட்ட விலை எல்லாம் கசப்புதான், அதனால் மூன்றாவது அணியே ஒரு அபத்தச் சடங்கு என முடித்து இருக்கிறார், மாநிலக் கட்சிகளே அபத்தம் தான்! லிங்கில் முழுக்க வாசித்து விடுவது நலம்! 
  

தன்னை ஒரு அறிவுஜீவியாக நினைத்துக் கொண்டு எதையாவது உளறுவது கமல் காசருக்கு வாடிக்கைதான்! இது கூட மந்திரியாக இருந்த நாட்களில் பானாசீனா பொறுப்பே இல்லாமல் உளறியதன் பின்தொடர்ச்சிதான்! இதற்கு எதிர்வினையாக  தமிழிசை பொங்கித் தீர்த்திருக்கிறார்.  
   
    
அடடே! இவங்க சொல்றதையெல்லாம் பதிவில் சேர்த்துவிட்டு #ஓசிச்சோறுவீரமணி என்ன சொல்லியிருக்கார்ன்றதையும் சேர்க்கலேன்னா சரியா இருக்குமா? அந்த புருடா சொன்னதை இன்னொரு புருடா எப்படி செய்தியாகத் தந்திருக்கிறது என்று பார்க்கலாம்!

3-வது அணி உருவாக்கும் முயற்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பின் வலுவிழந்து பாஜகவுக்கு எதிரான ஒரே அணியாக மாறும்
* சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டி
* சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது சரிதான் - கி.வீரமணி..
#KVeeramani
  
அஞ்சறைப்பெட்டி நிறைந்துவிட்டதே! மீண்டும் அடுத்தவாரம் 
சந்திக்கலாம்!
  

2 comments:

  1. கமல் ஹாசனுக்கு அடுத்த படம் வெற்றி பெறணும், விஸ்வரூபம் 1க்குக் கிடைத்த இஸ்லாமிய எதிர்ப்பை மனதில் வைத்து அவங்களுக்கு சாமரம் வீசணும். இவர்லாம் ஒரு அரசியல்வாதின்னு கடை போடுவதை நினைத்தால் கோடை வெயிலுக்கு இன்னும் எரிச்சலாக இருக்கு.

    ஐயோ... இந்த வீரமணி கொசு தொல்லை தாங்கலை... தேர்தலின்போது, அவர் வாயைத் தொறக்கக்கூடாது, எங்கயும் பரப்புரை செய்யக்கூடாது (அந்த கிருஷ்ணன் விவகாரத்துக்கு அப்புறம்) என்று திமுகவிலிருந்து ஸ்டிராங் மெசேஜ் போனபிறகு, ஆள் எங்க ஒளிந்துகொண்டார் என்றே தெரியலை. இப்போ புத்திலிருந்து எட்டிப்பார்க்கிறார் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவின் மெயின் இஷ்யூவே இந்து தமிழ்திசையில் ராணிப்பேட்டை ரங்கனுடைய அலசல் தான்! இடதுசாரிகள், பிரதமர் ரேசில் இல்லையென இன்னொரு வரலாற்றுப்பிழை செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள் என்று மறுகியிருப்பதை பார்த்தபோது, ஒரு பக்கம் சிரிப்பு, மறுபக்கம் பரிதாபமாக இருந்தது. அறிவுஜீவிகள் எல்லாம் மொத்தமாக இன்னொரு தேவே கவுடா மொமண்ட் ரெடியாக இருக்கிறது என்று தீசிஸ் மேலே தீசிஸ் எழுதி முடித்து விட்டார்களாம்! காங்கிரஸ் ஜெயிக்கப்போவதில்லை என்பது நிதரிசனமாகத் தெரிகிறது, பிஜேபிதான் மறுபடியும் என்பதை ஒப்புக்கொள்ளவும் முடியாத ரெண்டுங்கெட்டான் அலசல் இது.

      அப்புறம் கமல் காசர் , வீரமணி எல்லாம் காமெடி வால்யூவுக்காக மட்டுமே இங்கே சேர்ந்து கொண்டவர்கள்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!