ஒரு புதன் கிழமை! இருவேறு செய்திகள்!

இன்றைக்கு இந்தப்பக்கங்களில் எழுதுவதற்கு ஒருநாள் விடுமுறை தரலாமே என்றிருந்தவனை முடிவை மாற்றிக் கொள்ள வைத்தது இந்தத் தொலைக்காட்சி விவாதமும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெயரில் வெளியான ஒரு அறிக்கையும்!

  
தோற்றுவிடுவோம் என்பது தெரிந்தே இங்கே சிலபல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் தொடர்ந்து பழிசொல்கிற போக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமான அரசியல் என்ற கேள்வியை  இங்கே வரும்  நண்பர்கள் எழுப்பிக் கொள்வதற்கு உதவியாக இந்தத் தொலைகாட்சி விவாதம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு விசேஷமான அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அரசியல்கட்சிகள்மீது சுயேட்சையாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டே சில  அரசியல்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீதும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் தொடர்ந்து சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன. அவநம்பிக்கையை வளர்ப்பதில் அமளிதுமளியில் இறங்கவும் திட்டமிடுகின்றன. 

இந்த அரசியல் கட்சியில் எவராவது, தேர்தல் முறைகளில் உள்ள கோளாறுகளை சரிசெய்யவும், தேவையான சீர்திருத்தம் செய்வதற்கும் யோசனையோ ஆதரவோ தெரிவித்தது உண்டா? அப்படியானால் இவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்கக் வேண்டாமா?

  • தலைவர் திரு. அவர்கள் பெயரில் #போலியான_அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

    விஷமிகள் பரப்பி எத்தனைபேர் பார்த்தார்களோ தெரியாது! நுணலும் தன்வாயால் கெடும் என்கிற கதையாக த.நா காங். தலீவர் தன்னுடைய ட்வீட்டினாலேயே நிறையப்பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் என்பதாவது மேதாவிகளுக்குப் புரியுமோ என்னவோ? 

    கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் போகாத கட்சி காங்கிரஸ் என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகவே தெரியுமே!

    மீண்டும் சந்திப்போம்.  

    2 comments:

    1. அந்த fake அறிக்கையை நானும் பார்த்தேன்.

      அது சரி...

      வாட்ஸாப்பில் ஒரு வீடியோ அனுப்பினால் பார்க்க மாட்டீர்களோ?!!!!

      ReplyDelete
      Replies
      1. இந்த வாட்ஸப் என் போனில் இன்ஸ்டால் ஆகியிருப்பதே எனக்கு சமீபத்தில் தான் தெரியும் ஸ்ரீராம்! என்னுடைய ஞானம் அவ்வளவுதான்! வீடியோவை இப்போதுதான் பார்த்தேன்!

        Delete

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!