ஏய்ப்பதில் கலைஞன்! அரசியல் களம் இன்று!

எதுபொருளோ அதைப்பேசுவதை விட்டுவிட்டு வெறும் அக்கப்போர்களில் மட்டும் கவனத்தைத் திருப்புவது நக்சல் குறுங்குழுக்கள், லிபரல்கள் என்று சொல்லிக் கொள்கிற கும்பல் மற்றும் காசுக்காகக் கூவுகிற ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகிற திரித்தல் வேலை. இதை இந்தப்பக்கங்களில் தொடர்ந்து சொல்லி வருவதை நண்பர்கள் நினைவு வைத்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். பிரகாஷ் ராஜ் கூட ஒருவித நக்சல் குறுங்குழு ஆதரவாளர் போலத்தான், தன் அரசியல் மேதாவித் தனத்தை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார் என்பதால் அவருடைய ஆம் ஆத்மி கட்சிப்பாசம், கேசரிவாலு உளறுவதை அப்படியே ஆதரிப்பதென்பது ஆச்சரியமான விஷயம் இல்லை.


பிரகாஷ் ராஜ் உளறலுக்கு ஊடகங்கள் இந்த அளவு முக்கிய இடம் கொடுத்து இருக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. நல்ல நடிகன் இங்கே ஏமாற்றுவதில் கலீஞன் ஆக  இருப்பது ஒன்றும் புதிதல்ல.

கூட்டணி சீட் பேரம் முடிகிற வரை பொறுமையாக இருந்து விட்டு ரிசல்ட் வர இரண்டு வாரங்களே இருக்கும்நிலையில் விசிகவின் திருமாவளவன், திமுகவுடனான கூட்டு நீடித்து நிலைக்கக்  கூடியதல்ல என்ற ரீதியில் பேசியிருப்பது எதைக் காட்டுகிறதாம்?

ஏய்ப்பதில் கலீஞன்!  ஆக இருப்பது திமுகவின் ஏகபோகச்  சொத்தல்ல! தாங்களும் அந்தக்   கலையில் தேர்ந்து விட்டோம் என்று திருமா சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்துப் பட்டது போதும் என்று பட்டறிவில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாமா?  

எனக்கென்னவோ தங்களுடைய ரிசல்ட் என்னவாக இருக்கும் என்கிற களயதார்த்தம் விடுதலைச் சிறுத்தைகளுக்குப் புரிந்து விட்டதன் வெளிப்பாடு இது என்றுதான் தோன்றுகிறது.  

  
அடுத்துவரும் ஆட்சியில் திருமா மத்திய அமைச்சர் என்று திமுகவின் வெட்டி அலப்பறை தமிழன் பிரசன்னா பேசியது வீண்தானா? இசுடாலினுடைய விருப்பத்துக்கு மாறாகப் பேசி விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்பது உங்கள் உரிமை. 


அமைச்சர் ஜெயக்குமார் பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்து ஆடுகிறார்!   

மீண்டும் சந்திப்போம் .

6 comments:

  1. இந்தத் தடவை வி.சிக்கு திமுக நன்றாகவே 'ஆப்பு' வைத்திருந்தார்கள். ஒரு கட்சியையே மதிக்காமல், எங்க சின்னத்துல போட்டிபோட்டா தொகுதிக்கு 20 கோடி செலவு செய்யறேன். இல்லைன, நீயே செலவைப் பார்த்துக்க என்ற வெடிகுண்டு போட்டதில் அரண்ட திருமா, தனக்கு தனிச் சின்னமும், தன் கட்சியின் இன்னொருவருக்கு உதயசூரியன் சின்னமும் என்ற கோமாளி வேஷம் போட்டது நல்ல நகைச்சுவைச் சித்திரம். ஜெ.வின் தயவால் சட்டமன்றத்தில் வென்றுவிட்டு, ரிசல்ட் வந்த உடனேயே திமுகவை ஆதரித்த அந்த 'துரோக' குணத்திற்கு நன்றாக ஸ்டாலின் மருந்துகட்டிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு ஒரு பின்னூட்டம் எழுதினேன். இப்போது பார்த்தால் காக்காய் தூக்கிக் கொண்டு போயிருக்கிறது!

      Delete
  2. இந்த 'தமிழன் பிரசன்னா'தானே, கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இருந்தபோது, பத்திரிகை/தொலைக்காட்சி முன்னால் 'ஒப்பாரி' பாடி, எரிச்சலுற்ற ஸ்டாலின், 'குடும்ப உறுப்பினர்கள் நாங்களே இன்னும் நடிக்க ஆரம்பிக்கலை..நீ என்ன ஓவர் சீன் போடற..இந்தப் பக்கமே உன்னைப் பார்க்கக்கூடாது' என்று எச்சரித்து விரட்டியடிக்கப்பட்டவர்?

    ReplyDelete
  3. தேர்தலில் திமுக வென்றதும், 'பத்திரிகைகள் திரித்து வெளியிட்டுவிட்டன. நாங்கள் சொன்ன சொல் தவறமாட்டோம்..எப்போதும் இந்துத்துவாவை எதிர்ப்போம். திராவிடத்தை ஆதரிப்போம்" என்று திருமா சொல்லாமலா இருப்பார்? அதையும் பார்க்கத்தானே போகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. திமுக வென்றால் தானே? அந்தக் கந்தாயத்தை மே 23 இல் கொள்ளலாம் நெல்லை!

      இப்போது திமுகவிடமிருந்து விலகிநிற்பதான ஒரு சிக்னலை திருமா கொடுக்கிறாராம்? TOI பேட்டி எழுப்பும் கேள்வி அதுதானே?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!