இட்லி வடை பொங்கல்! #40 கொஞ்சம் செய்தித் தூவல்கள்!

அண்ணாமலைச் செட்டியார் பேரன் சிதம்பரத்துக்கு உள்ளூரில் ஆதரவில்லை, தனித்துவிடப்பட்ட செல்லாக்காசு என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஆனால் பானாசீனாவுக்கு ஆதரவு எங்கெங்கிருந்தெல்லாம் வருகிறது என்று கொஞ்சம் பார்க்கலாமா?


படத்தில் சீனாதானாவோடு இருப்பவர் இப்போதைய பாகிஸ்தான் செனேட்டர் (நம்மூர் MP மாதிரி)  ரெஹ்மான் மாலிக்,  புட்டோவின்  பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆசாமி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் எப்போதோ இருந்திருக்கிறார்! சிதம்பரத்துக்கு ஆதரவென்றால் அப்படி ஒரு ஆதரவு! எப்படி என்கிறீர்களா? நேஷன்டாட்காம்,pk செய்திகளின் படி Former minister for interior and Senate’s Standing Committee on Interior Chairman Senator A Rehman Malik has termed the arrest of senior Congress leader and important cabinet member of former Indian prime minister Manmohan Singh P Chidambaram as shocking.  

In a separate interview to Pakistani daily The Nation, Malik claimed “the only fault of Chidambaram was that he had raised voice against Indian PM Narendra Modi’s unilateral decision to revoke Articles 370 and 35A” in Jammu and Kashmir.
He also spoke out against Prime Minister Narendra Modi, alleging he has “given RSS a free hand to carry out the genocide of Muslims” in Kashmir. என்கிறது ZEE செய்தி அதன் முதல் பாரா இன்டெர்வியூ என்ற வார்த்தையில் பாகிஸ்தானிய செய்திக்கான லிங்கும் இருக்கிறது. அதைவிட வருங்கால பிரதமர் அவர்தான் என்றும் சொன்ன தருணம் இருக்கிறதே!   

Yes he has been arrested for raising his voice agst PM Modi for his illegal acts in Kashmir by scraping the sp status of Kashmir.He raised his voice in favour of oppressed Kashmiris .Note it Mr.Chidanbaram is going to be ur next PM.He is capable politician.

Quote Tweet
·
Yeah....but @SenRehmanMalik more worried over #ChidambaramArrested twitter.com/manupubby/stat
1:26 PM · Aug 23, 2019
பாக் பக்கி ஒன்று காசு வாங்காமலேயே கூவுவதை இப்போதுதான் பார்க்கிறேன்! மேலே உள்ள ட்வீட் அதற்கு வந்த பின்னூட்டங்கள் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக! மிளகுத் தூவல் வேண்டுவோர் அங்கேபோய் பார்க்கலாம். ஒரு சாம்பிள்! 


1 more reply

இந்தக்கூத்தையெல்லாம் பார்த்தால் பாகிஸ்தானில் நின்றால் சீனாதானா போட்டியே இல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் ஆகி விடலாம் என்றல்லவா தெரிகிறது! என்ன ஒரு கஷ்டம் என்றால் உருது பேசக் கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!  



அருண் ஜெயிட்லி, 66. சிகிச்சை பலனின்றி AIIMS மருத்துவ மனையில் சிறிது நேரத்துக்கு முன்னால் காலமானார் என்று NDTV மிகவும் வருத்தப்பட்டு செய்திகளில் சொல்லிக் கொண்டு இருக்கிறது. சிதம்பரத்துக்கு ஆதரவாக இருந்த ஒரே மனிதரும் போனபின் சிதம்பரத்துக்காகக் கவலைப்பட இங்கே ஆளே இல்லையா? அதிகாரிகள் எல்லாம் யூஸ்லெஸ்! காற்று எந்தப் பக்கம் வேகமாக வீசுகிறதோ அந்தப்பக்கம் சாய்கிற ஜாதி! 

Ravanan Menaka என்ற முகநூல் IDயில் கீழே உள்ள பக்கம் photo copy ஆக வெளியிடப்பட்டிருக்கிறது. எந்தப் புத்தகம் யார் எழுதி யாரால் வெளியிடப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
    
சிலவருடங்களுக்கு முன்னால் மங்களம் என்கிற மலையாள இதழ் சீனாதானாவின் சில்லறைத்தனங்களைப் பற்றி scoop நியூஸாக வெளியிட்டதை சால்வை அழகர் விலைகொடுத்து வாங்கி விட்ட மாதிரி ஒரு தகவலும் உண்டு. கேரளாவில் அந்தச் செய்தி பரபரப்பாக இருந்தநேரத்தில் பானாசீனாவின் செல்வாக்கில் பயந்து தமிழக ஊடகங்கள் அதுபற்றி மூச்சே விடவில்லை என்பதுதான் இங்கே மீடியாவின் யோக்கியதையாக இன்னமும் தொடர்கிறது.    அதுபோக அரசல் புரசலாக பலருடனான அவரது தொடர்புவட்டம் ஏற்கெனெவே தெரிந்தது தான் என்பதால் இந்தப்பக்கச் செய்தி எந்தவொரு அதிர்ச்சியையும் தரவில்லை.

     
சிக்கிக் கொண்டாரா  சீனாதானா? ரங்கராஜ் பாண்டேவின் பார்வையோடு, இந்தப்பதிவை முடித்துக் கொள்ளலாம்! வீடியோ 25 நிமிடம் 

மீண்டும் சந்திப்போம்.
       

7 comments:

  1. இந்த மஞ்சள் செய்தி எனக்கு வாட்ஸாப்பிலும் வந்தது. நான் இதுவரை அறியாத பசியின் மறுபக்கம்?

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் பதிவுகளில் முழுசாய்ப்படிக்க வேணுமென்பது ஸ்ரீராம்! நீளமாய் இருந்தால் படிக்கமாட்டேன் வீடியோ இருந்தால் பார்க்க மாட்டேன் என்றிருந்தால் செய்திகளின் வேரைப்பிடித்துப் பார்ப்பதெப்படி? சொல்லுங்களேன்!

      Delete
    2. ஸ்ரீராம்! சந்தடி சாக்கில் இந்தப்பக்கங்களையும் ஒரு மஞ்சப் பத்திரிகை ரேஞ்சுக்கு கீழே இறக்கி விடவில்லையே!

      https://consenttobenothing.blogspot.com/2019/06/blog-post_43.html இங்கே எழுதியது இது.

      //தெலங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் செய்துவந்த தொடர்சொதப்பல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தது எப்படி நிர்வாகம், மேலாண்மை குறித்த பேச்சாகவும் மாறியது என்பதில் என்னுடைய பங்கை விட , என்னுடன் உரையாட வந்த நண்பர்களுடைய பங்கே அதிகம்! ஒரு அர்த்தமுள்ள உரையாடல் நிகழ்ந்த அற்புதமான தருணம் அது என்றே சொல்லுவேன்! இந்தப்பக்கங்களில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்பதில் இங்கே வரும் நண்பர்களுடைய பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்பதை ஒரு நினைவூட்டலாக! ஒரு அன்பான வேண்டுகோளாகவும்!//

      மீண்டும் சந்திப்போம்.

      Delete
  2. இந்த ப.சிதம்பரம்தானே, பாகிஸ்தான் சரியா இந்திய ரூபாய் கள்ளநோட்டுகளை அடிப்பதில்லை என்று நினைத்து பழைய நோட்டடிக்கிற மெஷின்லாம் சல்லிசா பாகிஸ்தானுக்கு அனுப்பியவர்

    ReplyDelete
    Replies
    1. அதே சீனாதானா தான்! அதிலென்ன சந்தேகம்?! :-))))

      Delete
  3. காலம் ஏதோவொரு சமயத்தில் குப்பைகளை சல்லடை போட்டு சலித்து விடும். அடையாளம் காட்டி விடும்.

    ReplyDelete
    Replies
    1. சீனாதானா வெறும் குப்பைதான் என்று தெரிந்துகொள்வதற்கே நமக்கு 50 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே! இதில் காலத்தை வம்புக்கிழுப்பானேன்!!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!