தடுமாறும் காங்கிரஸ்-திமுக! முகம் மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கிற அதிரடி முடிவினால் பிஜேபிக்கு நாடெங்கிலும் ஆதரவு கூடி வருவதைக் காங்கிரஸ்காரர்களே நொந்துபோய் ஒப்புக் கொள்கிற மாதிரியான சூழல்! ஆர்டிகிள் 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற J&K Reorganisation Bill 2019 மசோதாவை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம் என்று  காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருபகுதியினர் நினைத்ததையும் நேற்றைக்கு ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பிலேயே பார்க்க முடிந்தது. கூச்சல்  கோஷங்கள் பெயரளவுக்கான எதிர்ப்பு என்றே வாக்கெடுப்பு நடந்ததில் மசோதா அவையில் 2/3 பங்குக்கும் கூடுதலாகவே ஆதரவைப் பெற்று நிறைவேறியதையும் பார்த்தோம்!


வரலாறே தெரியாத, பாடம் எதையும் கற்றுக் கொள்ளத்  தயாராக இல்லாத கூமுட்டைகளால் நிரப்பப் பட்டதுதான் சோனியாG தலைமையில் இருக்கிற இன்றைய காங்கிரஸ் என்பதற்கு  மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி இன்று சபையில் பேசியதே ஒரு நல்ல உதாரணம்! இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்! அருகிலேயே இன்றைய காங்கிரஸ் கட்சியின் முதலாளியம்மா  உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்பதோ எதனால் சௌதுரி பேசியதற்கு அவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது என்பதோ அந்த தற்குறி முதலாளிக்குத் தெரியாது! தெரிந்ததெல்லாம் யாரோடு கூட்டுச் சேர்ந்தால் யாரைக் கவிழ்க்கலாம், யாரோடு கூட்டணி தர்மம் உடன்பாடு  வைத்தால் எத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் என்று மட்டுமே தெரிந்த ஒரு விசித்திரப்பிறவி! வாரிசோ அதற்கும் மேலே! எங்கேயோ பின்வரிசையில்  உட்கார்ந்து ஒரு ட்வீட் போட்டுவிட்டால் வயநாடு தொகுதி MP ஆனதற்குச் சரியாகப்போச்சு!  எம்பியாக்கினது சபைக்கு வந்தும்  பேசாமல்  ட்வீட்டரில் இப்படிப் புலம்புவதற்குத்தானா?  

National integration isn’t furthered by unilaterally tearing apart J&K, imprisoning elected representatives and violating our Constitution. This nation is made by its people, not plots of land. This abuse of executive power has grave implications for our national security.
12:37 PM · Aug 6, 2019Twitter for iPhone



இந்த வீடியோ திமுகவின்  TR பாலு முதுகெலும்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டவிதத்தைச் சொல்கிறது.  இன்றைய அரசியல் காமெடியாக இதைத்தான் சொல்லுவேன்!எதிர்க்க வேண்டும் என்பதற்காக எத்தையாவது வாய்க்கு வந்ததை உளறிவிட்டுப் போக வேண்டியது!  என்ன இருந்தாலும் #தமிழேண்டா இல்லையா? 

  
இந்த 51 நிமிட விவாதத்தில் பானு கோம்ஸ் கொஞ்சம் விஷயம் புரிந்து சில விஷயங்களை சொல்கிறார். புதிய தலைமுறை சேனலுக்கு விஷயம் வேண்டியதில்லை. நாய் எலும்புகடிக்கிற மாதிரி எந்த ஒரு செய்தியையும் கடித்துக் குதறி அரைகுறை விவாதமாக, அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருக்க வேண்டுமென்கிற சேனல் தர்மம் தெரிந்துதான் இவர்கள் நடத்தும் விவாதங்களுக்கு எவரும் பேச வருகிறார்களா?  

காங்கிரஸ் மிக வேகமாக தன்னை தானே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
காஷ்மீரை சரியாக கையாளத் தெரியாமல் விவகாரமாக்கி..அதை மேலும் மேலும் பயங்கரவாத களமாக மாற்றிய கட்சி காங்கிரஸ்.
உண்மை இவ்வாறிருக்க..
இன்று..பாராளுமன்றத்தில் ...சிம்லா ஒப்பந்தம், லாகூர் பயணம் என்றெல்லாம் சுட்டிக் காட்டி.. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உரிமை இல்லையா ? என்பதாக கேள்வி எழுப்பி..மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
முழுமையான அரசியல் தற்கொலை.


70 வருடங்களுக்கு முன்னாடியே ஆனந்தவிகடனில் காஷ்மீர் பற்றி சரியாகக்  கணித்துக் கருத்துப்படம் வரைந்து விட்டார்களாம்! விகடன் தளம் பீற்றிக் கொள்கிறது! அந்த 100 கோடி, அப்புறம் ஒரு 10 கோடி நட்டஈடு கேட்டு திமுக ஓனர் குடும்பத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்களாமே! ஆனந்தவிகடனில் எப்படிச் சமாளித்தார்களாம்? அதைப்பற்றி ஒருவார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!  

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் J&K Reorganisation Bill 2019 மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்! லோக்சபாவிலும் இந்த   மசோதா மூன்றில் இரண்டுபங்கு மெஜாரிடியுடன் நிறைவேறிவிடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்!    
   
மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. பானு கோம்ஸ் நிதானமாக அழகாக தெளிவாக சொல்ல வந்த கருத்தை அற்புதமாக எடுத்து வைக்கின்றார். வியந்து போனேன்.ஆனால் நிச்சயம் கட்சி இவரை பயன்படுத்திக் கொள்ளாது.

    ReplyDelete
    Replies
    1. பானு கோம்ஸ் பிஜேபிக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதால் அவரை பிஜேபி கட்சிக்காரர் என்றே முடிவு செய்து விட்டீர்களா ஜோதிஜி? பிஜேபி கட்சிக்காரர் மாதிரித் தகவல் இல்லையே!

      Delete
    2. நானும் அதையே சொன்னேன். இவரைப் போன்றவர்களை மாநில பிஜபி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளை இவர் போன்றவர்கள் வாரம் ஒரு முறையாவது எதிர் கொண்டு பலவற்றைப் பேச வேண்டும். நிர்மலா சீதாராமன் மத்தியில் கட்சியில் உள்ளே நுழைந்த போது தொடக்கத்தின் கட்சியின் பத்திரிக்கை தொடர்பாளராகத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

      Delete
    3. ஜோதிஜி! நிர்மலா சீதாராமன் கட்சி உறுப்பினராக ஆன பிறகே கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்திருக்கலாம், எனக்குத்தெரியாது. ஆனால் இன்றைக்கு அவர் பிஜேபியின் தலைமையகத்தின் கார்யகர்த்தா /செயலாளர் என்ற முறையில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!