ஒரு புதன் கிழமை! எங்கே போனது போராளிகள் கூட்டம் ?

A Wednesday ஹிந்திப்படத்தை கமல்ஹாஸன் ரீமேக் செய்து உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்தபோது இங்கே தமிழ் வலைப்பதிவர்கள் ரொம்பவுமே பொங்கித் தீர்த்தார்கள்! கொஞ்ச காலத்துக்குப் பின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் சொல்லிவைத்தாற் போல தங்களுடைய பொங்கல், பதிவுகளை நீக்கிக் கொண்டார்கள்! 127 பதிவர்கள் இப்படிப் பொங்கித் தீர்த்ததாக நண்பர் உண்மைத்தமிழன் தொகுத்து வைத்திருப்பது இங்கே   அங்கே போய்ப் பார்த்தால் பொங்கல்வைத்து அப்புறம் நீக்கிக் கொண்டவர்கள் யார் என்பது தெரியும்! அங்கே வஜ்ரா என்ற பதிவர் சர்வேசன் என்ற பதிவரிடம் எழுப்பியிருந்த கேள்வி முக்கியமான பாயின்டைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைக்கிற மாதிரி


சர்வேசன் ஐயா, இங்கே கொடுக்கப்பட்டுள்ள உன்னைப் போல் ஒருவன் விமர்சனங்களின் அரசியல் நிலைகளின் சர்வே கிடைக்குமா? அதாவது,

எத்தனை வலைப்பதிவர்கள், உன்னைப்போல் ஒருவன் ஒரு இந்து மதவெறிப்படம் என்கிறார்கள்?
எத்தனை வலைப்பதிவர்கள், உன்னைப்போல் ஒருவன் ஒரு செக்குலர்தனமான ரீமேக் என்கிறார்கள்? போன்ற சர்வே நடத்தி அதன் ரிசல்டைப் போடுங்களேன்.

அதேபோலத்தான் .....


பொள்ளாச்சி சம்பவம்! வேதனைப்படவேண்டிய ஒரு சமூக அவலம், ஒரு அரசியல்கட்சியின் தேர்தல் பிரசாரமாக, நான் அப்படித்தான் அரசியல் செய்வேன் என்று திமிராக மாற்றப் படுவதை சகித்துக் கொள்ளப்போகிறோமா? பதிவுகளில் என்ன எழுதுகிறோம் என்ற நிதானமே இல்லாமல், தினத்தந்தி மாதிரி இதையும் ஒரு சம்பவமாகக் கடந்துபோய்விடப் போகிறோமா?

திமுக என்ற சந்தர்ப்பவாதச் சமூகவிரோதக் கூட்டம்:
ஊடக பலத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முந்தைய செய்தியை இன்று நடந்தது போல் பரபரப்பாக்கி வரும் தேர்தலில் முறையற்ற ஆதாரம் தேட முயல்கிறது. இதிலும் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சென்றடையப் பல ரகங்களில் பத்திரிக்கைகள். கேடுகெட்டுப் போன விகடன் ஒரு வகையான வாசகர்களுக்காக;நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் வேறு ஒரு வகைக்காக.
அது எப்படி இது போன்ற விடியோக்கள் நக்கீரனுக்கு மட்டும் கிடைக்கின்றன?
நக்கீரன் வெளியிடும் முன்பே சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நக்கீரன் வெளியிட்டது வேறு விடியோவா?
பொள்ளாச்சி போன்ற சிறிய நகரங்களில் பொதுமக்களுக்குத் தெரியாமல் நூற்றுக் கணக்கில் பெண்கள் தங்க வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் விடியோக்கள் எடுக்கப் பட்டுள்ளன என்பது சாத்தியமா?
தேர்தல் தேதிகளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கிறார்கள். திங்கட்கிழமை நக்கீரன் பொள்ளாச்சி சம்பவத்தை வெளியிடுகிறது. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கிறார், கனிமொழி போராட்டம் நடத்துகிறார். இதில் அதிமுகவைத் தேர்தல் களத்தில் தோற்கடிக்கும் சூழ்ச்சி இல்லை என்றுகூறிவிட முடியுமா? பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் அதிமுகவுக்குப் பலத்த ஆதரவுள்ள இடங்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். 
    
என்று KG கள்ளபிரான் முகநூலில் குமுறியிருப்பதில் நியாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 


ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இன்று முற்பகல் ராவுல் பாபா கல்லூரி மாணவிகளுடன் நடத்திய உரையாடல் முழுக்க முழுக்க ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி, அரசியல் இருக்காதென்று சொன்னார்கள்.அதெப்படி  ஒரு கிறித்தவக் கல்லூரி  தேர்தல் நேரத்தில் இத்தனை நடுநிலையாக இருக்க முடியுமாம்? மாலை நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் அரசியல் கூட்டம்! இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், இங்கே பெரும்பாலான கிறித்தவ நிறுவனங்கள், திருச்சபைகள் எல்லாம் சேர்ந்து தேர்தல் நேரத்துத் திருப்பணியைத் தொடங்கி விட்டன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 
 
ராகுல் ..பிரஸ் மீட் வைத்ததும், கேள்விகளுக்கு பதிலளித்ததும் சந்தேகமில்லாமல் பாராட்டுக்கு உரிய அரசியல் கணக்கு.
ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகளிடம் உரையாடியதும், நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதும்.. எதிர்கூட்டணியின் இலக்கை தெளிவுபடுத்துகிறது.
இலங்கையில் போரின் போது லட்சக்கணக்கில் தமிழர்கள் படுகொலையான நிலைக்கு ..காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை என்று கூறிய போது ..
இது போன்றதொரு பதில்.. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சாத்தியப்பட்டிருக்குமா? என்று யோசிக்க வைத்தது. அப்போது பொங்கியவர்கள் , கண்ணீர் விட்டு காட்டியவர்கள் அனைவரும் இன்று..அதே காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் ..இது சாத்தியமாகி இருக்கிறது !!
குறைந்த பட்ச ஊதியம், தொழில்முனைவோரை உருவாக்குவது போன்ற மோடியின் வாக்குறுதிகளை அப்படியே வழிமொழிந்தது.. வேடிக்கை.
மோடியை அகற்றுவதே தங்கள் லட்சியம் என்று கூறியது அபத்தம். நாடு முழுவதும் எதிர் கூட்டணிக்கு மக்களிடம் கூறி வாக்கு கேட்பதற்கு ... வளர்ச்சி குறித்த திட்டங்கள் எதுவுமே சொந்தமாக இல்லை என்பது மீண்டும் தெளிவாகியது.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் கூறும்போதெல்லாம்..சரத் பவார் முதல் ப.சி . வரையிலான காங்கிரசின் விவசாயிகள் குறித்த வரலாறு கண்முன்னே வருகிறது !
கேட்கப்படாத...ஆனால்..கேட்டிருக்க வேண்டிய hard hitting கேள்விகள் :
1. மோடி வேண்டாம் என்கிறீர்கள். பதிலாக உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ? UPA-ன் 10 வருட ஆட்சியின் அவலட்சணங்கள் குறித்து பதில் சொல்லுங்கள் என்கிற கேள்வி கேட்கப் படவேயில்லை.
உங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கிறார்களே என்றும் கேட்கவில்லை.
2. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழருக்காக உருகும் நீங்கள்..காவிரி பிரச்சினையில் ..தமிழகத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்த கர்நாடக காங்கிரஸ் அரசிடமும், காங்கிரஸ் முதல்வராக இருந்த சித்தராமையாவிடமும் காவிரி நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமை குறித்து ஏன் பேசவில்லை ? என்கிற கேள்வி கேட்கப்படவில்லை.
3. பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை சந்திப்பது அராஜகமானது என்று ராகுல் கூறியபோது ...
சுதந்திர இந்தியாவில் 70 வருடங்களுக்கும் மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசியக் கட்சி இருப்பது பெரும் அராஜகம் இல்லையா ? என்கிற எதிர் கேள்வி கேட்கப்படவேயில்லை.
4. ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்போது அது சர்வாதிகாரத்திற்கு இட்டு செல்கிறது என்று கூறியபோது...
கட்சிகளின் கூட்டணி ஆட்சி ..பெரும் பெரும் ஊழல்களை கூட்டாக சேர்ந்து செய்யும் காட்டாட்சிக்கு இட்டுச்சென்ற வரலாறு இருக்கிறதே என்கிற கேள்வி கேட்கப்படவேயில்லை.
ஆக...பிரயோஜனமில்லாத இந்த பிரஸ் மீட் என்பது.. ராகுலுக்கான ..ஒரு கவன ஈர்ப்பு பிரச்சாரம் மட்டுமே.
குறைந்த பட்சமாக ...பா.ம.க டாக்டர் அன்புமணி பிரஸ் மீட்டில் வெளிப்பட்ட ஆவேச & அறச் சீற்ற கேள்விகளில் 1% கூட ..ராகுலின் பிரஸ் மீட்டில் காணப்படவில்லை  

இவர் இப்படி பத்திரிகையாளர்களை ராவுல் பாபா சந்தித்த விதத்தைச் சொன்னால் முதல் பின்னூட்டமாக இந்த பிரெஸ் மீட் யோக்கியதை என்ன என்று
 
அந்த இருபது கேள்விகள் மட்டும் தான்! முன்னரே தயாரிக்கப்பட்டு கொடுத்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்த ராகுல் காந்தி! வெளிவந்த உண்மை! #GoBackRahul - கதிர் #GoBackPappu
KATHIRNEWS.COM
ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இன்று 3000 மாணவியருடன் உரையாடினார். இந்த உரையாடல்களில் எல்லா கே...
 
பொங்கல் வைக்கவேண்டியது யாருக்கு, எப்போது, எப்படி என்று புதிதாகத்தான் சொல்ல வேண்டுமா என்ன?  

முந்தைய பதிவுகள், முந்தைய வருடங்கள் என்று எப்படிப் பார்த்தாலும், தேசீய அளவில் காங்கிரசும் இங்கே மாநில அளவில் தி மு கழகமும் மீண்டும் தலையெடுக்க முடியாத படி தோற்கடிக்கப்படவேண்டும் என்ற நிலை உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதே சொல்லும்!
        

2 comments:

  1. 'ஏன் கேட்கப்படவேயில்லை?'-- என்ற கேள்விகள் மிகவும் அர்த்தபூர்வமானவை..

    அதே போல் ஏன் தங்கள் சாதனைகளைப் பற்றி பி.ஜே.பி.காரர்கள் புள்ளி விவர ஆதாரங்களோடு பேச மாட்டேன் என்கிறார்கள் என்பதும் புரியாத புதிர்.
    எல்லோருமே இப்படி தெளிவில்லாத அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி?..
    குறைந்தபட்சம் காங்கிரஸ்--பி.ஜே.பி. யாவது எதிர் எதிர் நிற்கிற மாதிரி தேர்தல் களம் காண முயற்சிக்க வேண்டும். அது தான் அகில இந்தியக் கட்சிகளுக்கு அழகு.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு worthy opponent ஆக இருக்கும் தகுதி, வலிமை இரண்டையும் காங்கிரஸ் இழந்து வெகுகாலமாகிவிட்டதே ஜீவி சார்! பிஜேபி மெல்ல மெல்ல காங்கிரஸ் மாதிரி ஆகிக் கொண்டுவருவதில், ஒரு புதியசக்திதான் opponent ஆக வளரவேண்டும். முரண்பாடுகள் நிச்சயம் ஒரு மாற்றை, மாற்றத்தைக் கொண்டு வரும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!