அகர மொகர தகர சிலேட்டெல்லாம்..! அரசியல் இன்று!

திமுக கூட்டணியில் இதர கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளை  இறுதி செய்யப் பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்திருக்கின்றன என்கிறது செய்தி. ஆனால் இந்தத் தேர்தல்களில் குறைந்தது 30 கோடியிலிருந்து 40 கோடிகள் வரை செலவாகும் என்ற செய்திகள், நிறைய யோசனைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.புதிய தலைமுறை சேனலில் அக்கினி பரீட்சை நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் வேறு  என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தென்காசி, நாகப்பட்டினம் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஹிந்து செய்தி சொல்கிறது.    

வேடிக்கை என்னவென்றால் விவாதங்களில் எதிர் பாராதவிதமாக சில ஒப்புதல் வாக்குமூலங்களும்  வந்து விழுவதுதான்! கழகங்களுடைய ராஜதந்திரங்கள் பற்றிய தம்பட்டங்கள் மிக்க கேவலமாக இருக்கின்றன.  

ஆக ..ஆக ...ஆக என்று இசுடாலின் துண்டுச்சீட்டைப் பார்த்தும் கூடத்  தப்பும் தவறுமாகப் பேசுவது கூட, மீம்களில் செமையாகக் கவனிக்கப்படுகிறது என்பது இன்னொரு காமெடி!


கழகங்கள் அப்போதிலிருந்தே அப்படித்தான் என்று நான் சொன்னால் வாக்குவாதம் வரும்! முழுக்க நனைந்த உடன்பருப்பே சொன்னால்......
இது மருத்துவர் ராமதாசு கெடு முடிந்த காமெடி! புரட்சி போராட்டமெல்லாம் வெடிக்காதுங்கோ!
    


அகர மொகர தகர சிலேட்டெல்லாம்......   

புரிந்ததோ புரியலையோ மேலே உள்ள நாலு வார்த்தைகளை 500 முறை இம்போசிஷன் எழுதி அல்லது வாய்விட்டுச் சொல்லிப் பாருங்களேன்!
   

2 comments:

  1. அகர மொகர அவர் நிஜமா சொன்னதா தெரியாது. ஆனால் அதைவிட தப்புத்தப்பாக அவர் பேசியது எல்லாம் வாட்சாப்பில்வந்து கொண்டிருக்கிறது.

    திமுக, அதிமுக இரண்டுமே அளவுக்கதிகமாக கூட்டணிக்கட்சிக்கு இடம் கொடுத்து விட்டார்கள் என்றும், அதிமுக நல்ல முறையில் கூட்டணி சேர்த்து விட்டது என்றும் ஆனால் திமுக கூட்டணிக்கு கட்சித் தலைவர்களை சமாதானப்படுத்துவதில் சூதானமாக நடந்து கொண்டதாகவும் வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு அதிகம் என்றும் கல்கி கணித்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! இசுடாலின்பேசுவதில் நிறையத் தடுமாற்றம் இருப்பது பலமுறை பொதுவெளியில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த மீம் கொஞ்சம் நையாண்டிக்காகப் பகிரப்பட்டது. அடுத்து, கல்கி! நான்வார இதழ்கள் வாசிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தக் கணிப்புக்கு ஒரு உபி சலித்துக் கொள்வதை ஸ்க்ரீன் ஷாட்டாக போட்டிருப்பதிலேயே பதில் இருக்கிறதோ?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!